Thursday, 20 August 2015

ஆர்கனான் மணிமொழி-26


This depends on the following homoeopathic law of nature which was sometimes, indeed, vaguely surmised but not hitherto fully recognized, and to which is due every real cure that has ever taken place:


A weaker dynamic affection is permanently extinguished in the living organism by a stronger one, if the latter (whilst differing in kind) is very similar to the former in its manifestations.1


Foot Note-1: Thus are cured both physical affections and moral maladies. How is it that in the early dawn the brilliant Jupiter vanishes from the gaze of the beholder? By a stronger very similar power acting on his optic nerve, the brightness of approaching day! - In situations replete with foetid odors, wherewith is it usual to soothe effectually the offended olfactory nerves? With snuff, that affects the sense of smell in a similar but stronger manner! No music, no sugared cake, which act on the nerves of other senses, can cure this olfactory disgust. How does the soldier cunningly stifle the piteous cries of him who runs the gauntlet from the ears of the compassionate bystanders? By the shrill notes of the fife commingled with the roll of the noisy drum! And the distant roar of the enemy's cannon that inspires his army with fear? By the loud boom of the big drum! For neither the one nor the other would the distribution of a brilliant piece of uniform nor a reprimand to the regiment suffice. In like manner, mourning and sorrow will be effaced from the mind by the account of another and still greater cause for sorrow happening to another, even though it be a mere fiction. The injurious consequences of too great joy will be removed by drinking coffee, which produces an excessive joyous state of mind. Nations like the Germans, who have for centuries been gradually sinking deeper and deeper in soulless apathy and degrading serfdom, must first be trodden still deeper in the dust by the Western Conqueror, until their situation became intolerable; their mean opinion of themselves was thereby over-strained and removed; they again became alive to their dignity as men, and then, for the first time, they raised their heads as Germans.

இயற்கை விதிகளுக்குப் பொருந்தியும் , சில நேரங்களில் தெளிவற்ற ஊகமதிப்பிடுகளிலும் , இந் நேரம்வரை முழுமையாக ஏற்றுக் கொள்ளபடாததும், ஒவ்வொரு உண்மையான நலமாக்கலை நிகழ்த்துவதுமான ஹோமியோபதி மருத்துவம் கீழ்காணும் விதிமுறைகளை சார்ந்திருக்கிறது;

உயிருள்ள ஒரு உடலில் வலிமை குன்றிய நிலையில் இருக்கும்  இயக்க ஆற்றலை, அதற்கு மிகவும் ஒத்த வெளிப்பாடுகளைக் கொண்ட வலிமை மிக்க ஒரு பாதிப்பு   ( மாறுபட்ட தன்மையில் ) அவ் உயிரோட்டப்பாதிப்பில் இருந்து நிலையாக அழித்து நீக்குகிறது1.

அடிக்குறிப்பு 1 : உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மனதில் தோன்றும் நோய்கள் ஆகிய இரண்டு வகையான நோய்களும் இவ்வாறு தான் நலபடுத்தப்படுகின்றன. அதிகாலை விடியலின் போது , மிகப் பிரகாசமாக இருக்கும் வியாழன் கோள் ( சூரியனிலிருந்து வரிசை முறையில் ஐந்தாவதாக உள்ள கோள் ) பார்ப்பவர்களின் கண்களிலிருந்து எப்படி மறைகிறது? பொழுது விடிகின்ற போது வெளிப்படும் அதற்கு ஒத்த வலிமையான வெளிச்சத்திற்கு பார்பவர்களின் பார்வை நரம்பு ஆட்படுவதால் தானே இவ்வாறு நிகழுகிறது!. முடைநாற்றம் ( புழுங்கிய வாசம்)  நிறைந்துள்ள சூழ்நிலையில் ஒருவருடைய முகர்வு நரம்புகளில் தூண்டப்படும் கொடிய நாற்றத்தின் தீவிரத்தைப் போக்குவது எப்படி? அதைப் போன்ற ஆனால் மிகவும் வலிமையான மூக்குப்பொடியை முகர்வதால் அவரது முகர்வு உணர்வில் ஏற்படும் பாதிப்பினால் தானே!. அவ்வாறு இல்லாமல் வேறு உணர்வு புலன்களில் செயலாற்றுகின்ற இசையினாலோ, இனிப்புசுவை கொண்ட அப்பத்தினாலோ முகர்வு உணர்வில் ஏற்பட்டுள்ள இந்த வெறுப்புணர்வை போக்க முடியாது. உடம்பில்  கவசத்தை அணிந்து கொண்டு போருக்குச் செல்லும் படைவீரனின் உள்ளத்தில் தோன்றும் வருந்தத்தக்க   துன்ப ஒலியை தன்னருகில் இருப்பவர்களின் காதுகளில் விழாதவாறு தந்திரமாக மூடி மறைத்துக் கொள்வது எப்படி?. படைத்துறைஇசைக்குழல்வாசி எழுப்பும் காதைத்துளைக்கும் கீச்சொலியுடன் சேர்ந்து பேரோசை எழுப்பும் போர்முரசின் ஓசையினால் தானே! தொலைவில் உள்ள எதிரிகளின்  பீரங்கி முழக்கத்தால் தமது படைவீரர்களை பயப்படாமல் இருக்குமாறு செய்வது எப்படி?. பெரிய முரசத்தின் மூலம் எழுப்பும் இடி முழக்கத்தினால் தானே!. இப்படிச் செய்யாமல் அப்படை வீரர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த சீருடைகளை வழங்குவதும் அல்லது அவர்களுக்கு பணிமுறைக் கண்டனம் தெரிவிப்பதும் அவர்களது அச்சத்தைப் போக்குவதற்கு போதுமானவை ஆகாது.  இத்தகைய முறையிலேயே ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இறப்பும் , துன்பமும்  துடைக்கப்படுவது, வேறு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக கற்பனைக் கதை சொல்லியாவது நம்பச் செய்வது தானே!. பொங்கியெழும் (அதிக ) மகிழ்ச்சியினால் ஏற்படும் தீமையை அத்தகைய மகிழ்ச்சி உணர்வை மனதில் உண்டாக்கும் காபியைக் குடிப்பதால் தான் போக்கப்படுகிறது. ஜெர்மானிய நாட்டு மக்கள் , சில நூற்றாண்டுகளாக படிப்படியாக தாழ்வு நிலைமை அடைந்து அடிமை  நிலையில் இருந்தபோது , மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பினால் மேலும் தாங்கமுடியாத அளவிற்கு தாழ்ச்சியடைந்து புழுதியில் மூழ்கிய போது தான்.  அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த  சிறுமையான எண்ணம் அளவிற்கு அதிகமாகி பின்னர் அவர்களின் கடும் முயற்சியினால் அந்த நிலை நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு தான் தாங்களும் மதிப்பு வாய்ந்த மனிதர்களே என்ற உணர்வுடன் நாங்கள் ஜெர்மானியர்கள் என்று தலை நிமிர்ந்து எழுச்சி பெற்றனர்.   
   

No comments:

Post a Comment