Now,
as it is undeniable that the curative principle in medicines is not in itself
perceptible, and as in pure experiments with medicines conducted by the most
accurate observers, nothing can be observed that can constitute them medicines
or remedies except that power of causing distinct alterations in the state of
health of the human body, and particularly in that of the healthy individual,
and of exciting in him various definite morbid symptoms; so it follows that
when medicines act as remedies, they can only bring their curative property
into play by means of this their power of altering man's state of health by the
production of peculiar symptoms; and that, therefore, we have only to rely on
the morbid phenomena which the medicines produce in the healthy body as the sole
possible revelation of their in-dwelling curative power, in order to learn what
disease-producing power, and at the same time what disease-curing power, each
individual medicine possesses.
மருந்துகளிலுள்ள நோயைக்குணபடுத்தும் பண்புகூறுகள் , தானாகவே உணரக்கூடியத் தன்மையற்றது என்பது இப்போது மறுக்கமுடியாதவாறு புலனாகும். செம்மையான அல்லது வழுவாததன்மையுடைய உற்றுநோக்குபவரால், மருந்துகளைத் தூய்மையான செய்முறையின் மூலம் ஆய்வு செய்யும்போது அவைகளால் மனித உடலின்
ஆரோக்கிய நிலைமையில் தெளிவான மாற்றங்களை
ஏற்படுத்தும் அவற்றின் ஆற்றலையும், பல வகைப்பட்ட உறுதியான
நோய்க்குறிகளை கிளர்ந்தெழுமாறுச் செய்யும் ஆற்றலையும் தவிர, அவைகள் மருந்துப்
பொருள்களாகவோ அல்லது நோய்களைக் குணபடுத்தும் பொருளாகவோ ஆவதைக் கவனித்து அறிய முடியாது. எனவே மருந்துகள், நோய்களை தீர்க்க
உபயோகமாகின்றன என்றால் ஆரோக்கியமான நிலைமையில் தனித்தன்மையான அறிகுறிகளை உருவாக்கி, அதாவது நோய்க்குறிகளை உண்டு செய்யும் சக்தி அதற்கு
இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து
கொள்ளலாம். ஆகவே நாம் மருந்துகளின் உள்ளுறைந்திருக்கும் குணமாக்கும் ஆற்றலை அறிந்து
கொள்வதற்கு , ஆரோக்கிய நிலைமையில் அதனுடைய நோய் உண்டாக்கும் ஆற்றலைக்
கொண்டும், அம்மருந்தின் நோயைக் குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டே நாம்
முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு தனித்தனி மருந்தில் இருக்கும் நோயை
உருவாக்கும் ஆற்றல்
எது என்பதையும், அதே சமயத்தில் அதனுடைய நோய் தணிக்கும் ஆற்றல்
எது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment