Wednesday, 26 August 2015

ஆர்கனான் மணிமொழி-31



The inimical forces, partly psychical, partly physical, to which our terrestrial existence is exposed, which are termed morbific noxious agents, do not possess the power of morbidly deranging the health of man unconditionally1; but we are made ill by them only when our organism is sufficiently disposed and susceptible to attack of the morbific cause that may be present, and to be altered in its health, deranged and made to undergo abnormal sensations and functions - hence they do not produce disease in every one nor at all times.

Foot Note-1 : When I call a disease a derangement of man's state of health, I am far from wishing thereby to give a hyperphysical explanation of the internal nature of disease generally or of any case of disease in particular. It is only intended by this expression to intimate, what it can be proved diseases are not and cannot be, that they are not mechanical or chemical alterations of material substance of the body, and not dependant on a material morbific substance, but that they are merely spirit-like (conceptual) dynamic derangements of the life.

ஓரளவிற்கு மனதையும், ஓரளவிற்கு உடலையும் தாக்கக்கூடிய நச்சுத்தன்மை  வாய்ந்த இயக்கி ( பொருள்கள்) என்று அழைக்கப்படும் தீங்கு விளைவிக்கிற  ஆற்றல்கள் இந்தப் பூவுலகில் வாழ்கிற வாழ்வு (பிரபஞசம்) முழுவதும் சூழ்ந்திருக்கின்றன. ஆயினும் நிபந்தனையற்ற வகையில்1 அவை மனித உடலின் ஆரோக்கியத்தை தாக்கி கெடுப்பதில்லை. அங்கு காணப்படும் நோய்க் காரணங்களின் தாக்கத்திற்கு எளிதில் ஆட்படுமாறும், ஆரோக்கிய நிலையில் மாற்றம் உண்டாகுமாறும் நமது உயிர்பொருள் உள்ள போது தான் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயல்புநிலைக்கு மாறான உணர்வுநிலைகளும் , செயல்பாடுகளும் உண்டாகுகின்றன. ஆகவே தான் அவை ( தீங்கு விளைவிக்கிற ஆற்றல்கள் ) எல்லோருக்கும் அல்லது எல்லா வேளையிலும் நோய்பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அடிக்குறிப்பு -1


மனிதனுடைய ஆரோக்கிய நிலையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவை, நோய் என்று நான் (ஹானிமன்) அழைப்பது பொதுவான நோயிலும் அல்லது குறிப்பிட்ட வேறு வகையான நோயிலும் உள்ளார்ந்து காணப்படும் இயற்கை கடந்த ஒரு விளக்கத்தைக் கூறும் விருப்பத்தினால் இல்லை . நோய்கள் என்று நிருபிக்கப்பட்டவை என்னவென்றால்; உடலில் இயந்திரங்களால் ஆக்கப்படுகிற அல்லது வேதியல் சார்ந்த பருப்பொருளினால் ஏற்படுகின்ற மாற்றங்களோ அல்ல,  அவை நோய்களாக இருக்கவும் முடியாது என்பதையும் , பருப்பொருள் சார்பான நோய்ப்பொருள்கள் அல்ல என்பதையும் , அவை ஆவிவடிவான உயிரியின் ( கருத்தளவான), இயக்கந்சார்ந்த கோளாறுகளே என்பதையும் உணர்த்தும் எண்ணத்துடன் தான் நான் ( ஹானிமன் ) அப்படிக்  கூறுகின்றேன்.

No comments:

Post a Comment