Monday, 22 March 2021

மணிமொழி- § 151

 

§ 151. Important diseases have a number of symptoms.

§ 151

 

But if the patient complain of a few violent sufferings, the physician will usually find, on investigation, several other symptoms besides, although of a slighter character, which furnish a complete picture of the disease.

 

§ 151. முக்கியமான நோய்களுக்கு பல அறிகுறிகள் உள்ளன.

 

மணிமொழி- § 151

 

ஆனால் ஒரு நோயாளி  சில கடுமையான துன்பங்களைப் பற்றி முறையீடு  செய்தால், மருத்துவர்  அவரது விசாரணையில், மேலும் வேறு பல அறிகுறிகளைக் கண்டுபிடிப்பார்.  அவைகள்  ஒரு மெல்லிய தன்மை கொண்டதாக இருந்தாலும், அந்த நோயின் முழுமையான உருவப்படத்தை கொடுக்கிறது.

மணிமொழி- § 150

 

§ 150. Slight ailments.

§ 150

If a patient complain of one or more trivial symptoms, that have been only observed a short time previously, the physician should not regard this as a fully developed disease but requires serious medical aid. A slight alteration in the diet and regimen will usually suffice to dispel such an indisposition.

 

 

§ 150 இலகுவான  வியாதிகள்

 

மணிமொழி- § 150

ஒரு நோயாளியால்  முறையீடு செய்யப்பட்ட  ,  ஏற்கனவே  மிகக் குறுகியகாலத்திற்கு  உணரப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அற்பமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் இதை நன்கு முற்றிய நோயாகவோ தீவிர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாகவோ கருதக்கூடாது. உணவு முறைகளிலும் , உணவு திட்ட முறைகளிலும் (பத்தியம்) மேற்கொள்ளும் ஒரு சிறிய அளவிலான மாற்றமே இத்தகைய மனநிலையைப் போக்குவதற்கு சாதாரணமாகவே போதுமானதாக இருக்கும்.

மணிமொழி- § 149

 

§ 149. The homoeopathic cure of a disease that has occurred quickly is quickly effected ; that of chronic diseases, however, demands proportionately more time. NOTE. - Difference between pure homoeopathists and the mongrel sect.

 

§ 149

 

Diseases of long standing (and especially such as are of a complicated character) require for their cure a proportionately longer time. More especially do the chronic medicinal dyscrasia so often produced by allopathic bungling along with the natural disease left uncured by it, require a much longer time for their recovery; often, indeed, are they incurable, in consequence of the shameful robbery of the patient's strength and juices (venesections, purgatives, etc.), on account of long continued use of large doses of violently acting remedies given on the basis of empty, false theories for alleged usefulness in cases of disease appearing similar, also in prescribing unsuitable mineral baths, etc., the principal feat performed by allopathy in its so-called methods of treatment.

 

§ 149- விரைவாக ஏற்பட்ட ஒரு நோய் ஹோமியோபதி முறையில்  விரைவில் நலமாக்கப்படுகிறது ; அதேபோன்று , நாள்பட்ட நோய்களுக்கு விகிதாசாரமாக அதிக நாட்கள்  தேவைப்படுகிறது. குறிப்பு. - தூய ஹோமியோபதியர்களுக்கும் கலப்பு மருந்து பயன்படுத்துவோர்  பிரிவிற்கும் உள்ள வேறுபாடு.

 

மணிமொழி- § 149

 

 

மிக நீண்டகால நோய்களை  (குறிப்பாக சிக்கலான தன்மை வாய்ந்தவை )  நலப்படுத்துவதற்கு  அவைகளின் தன்மைக்கு ஏற்ப  விகிதாசாரமாக நீண்ட காலம்  தேவைப்படுகிறது.  மிகவும் குறிப்பாக அலோபதி மருத்துவத்தின்  மூலம் அடிக்கடி ஏற்பட்ட ,  நாள்பட்ட ,  இரத்தக் கூறுகள் மாறுப்பட்டதின் விளைவாக உண்டான நோய்கள்    இயற்கை நோய்களுடன் சேர்ந்து  நலப்படுத்த முடியாமல் போய் விடுகின்ன்றன . இவைகளை  நலப்படுத்துவதற்கு இன்னும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கின்றன  . நோயாளிகளின் வலிமையையும் மற்றும் நலக்கூறுகளையும் வெட்கப்படும் அளவிற்கு கொள்ளையடிப்பதின் மூலம் ( பழங்கால முறையான இரத்தத்தை வெளியேற்றுதல், மலமிளக்கி மருந்துகளை தருதல் போன்றவைகள் ), இது போன்ற நலப்படுத்தும் முறைகளில்  மிகவும் முக்கியமான அருஞ்செயல் என்று   அலோபதி மருத்துவத்தால் செய்யப்படுகின்ற  பொருத்தமற்ற கனிமக்குளியல்களை பரிந்துரைப்பது மூலமாகவும் , மிக நீண்டகாலமாக,  தொடர்ந்து அளவுக்கு அதிகமான அளவில் கடுமையாக செயல்படும் மருந்துகளை  அதாவது  ஒத்த நோய்களுக்கு பயனுள்ளதாக விவாதிக்கப்படுகின்ற (ஆணித்தரமாக நம்புகின்ற)  மருந்துகளைத் தருவதன் மூலமாகவும் அந்த நோய்கள்  உண்மையிலேயே அடிக்கடி நலப்படுத்த முடியாதவைகளாக இருக்கின்றன.  

 

மணிமொழி- § 148

 

 

§ 148. Explanation of how a homoeopathic cure is probably effected.

 

§ 148

 

The natural disease is never to be considered as a noxious material situated somewhere within the interior or exterior of man (§ 11-13) but as one produced by an inimical spirit-like (conceptual) agency which, like a kind of infection (note to § 11) disturbs in its instinctive existence of the spirit-like (conceptual) principle of life within the organism torturing it as an evil spirit and compelling it to produce certain ailments and disorders in the regular course of its life. These are known as symptoms (disease). If, now, the influence of this inimical agency that not only caused but strives to continue this disorder, be taken away as is done when the physician administers an artificial potency, capable of altering the life principle in the most similar manner (a homoeopathic medicine) which exceeds in energy even in the smallest dose the similar natural disease (§§ 33, 279), then the influence of the original noxious morbid agent on the life principle is lost during the action of this stronger similar artificial disease. Thence the evil no longer exists for the life principle - it is destroyed. If, as has been said, the selected homoeopathic remedy is administered properly, then the acute natural disease which is to be overruled if recently developed, will disappear imperceptibly in a few hours.

 

An older, more chronic disease will yield somewhat later together with all traces of discomfort, by the use of several doses of the same more highly potentized remedy or after careful selection-108  of one or another more similar homoeopathic medicine. Health, recovery, follow in imperceptible, often rapid transitions. The life principle is freed again and capable of resuming the life of the organism in health as before and strength returns.

 

 

Foot Note-108 :  But this laborious, sometimes very laborious, search for and selection of the homoeopathic remedy most suitable in every respect to each morbid state, is an operation which, notwithstanding all the admirable books for facilitating it, still demands the study of the original sources themselves, and at the same time a great amount of circumspection and serious deliberation, which have their best rewards in the consciousness of having faithfully discharged our duty. How could his laborious, care-demanding task, by which alone the best way of curing diseases is rendered possible, please the gentlemen of the new mongrel sect, who assume the honorable name of homoeopathists, and even seem to employ medicines in form and appearance homoeopathic, but determined upon by them anyhow (quidquid in buccam venit- whatever comes into mouth), and who, when the unsuitable remedy does not immediately give relief, in place of laying the blame on their unpardonable ignorance and laxity in performing the most and important and serious of all human affairs, ascribe it to homoeopathy, which they accuse of great imperfection (if the truth be told, its imperfection consists in this, that the most suitable homoeopathic remedy for each morbid condition does not spontaneously fly into their mouths like roasted pigeons, without any trouble on their own part). They know, however, from frequent practice, how to make up for the inefficiency of the scarcely half homoeopathic remedy by the employment of allopathic means, that come much more handy to them, among which one or more dozens of leeches applied to the affected part, or little harmless venesections to the extent of eight ounces, and so forth, play an important part; and should the patient, in spite of all this, recover, they extol their venesections, leeches, etc., alleging that, had it not been for these, the patient would not have been pulled through, and they give us to understand, in no doubtful language, that these operations, derived without much exercise of genius from the pernicious routine of the old school, in reality contributed the best share towards the cure. But if the patient die under the treatment, as not unfrequently happens, they seek to console the friends by saying that they themselves were witnesses that everything conceivable had been done for the lamented deceased. Who would do this frivolous and pernicious tribe the honour to call them, after the name of the very laborious but salutary art, homoeopathic physicians? May the just recompense await them, that, when taken ill, they may be treated in the same manner!

 

 

§ 148- ஹோமியோபதி நலமாக்கல் எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான விளக்கம்.

 

மணிமொழி- § 148

 

இயற்கை நோய்  மனிதனின் அகத்திலோ  புறத்திலோ (§ 11-13) எங்கோ அமைந்திருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களால் உருவாகிறது என்று கருதமுடியாது , ஆனால் இது ஒரு வகையான தொற்று சார்ந்த பகையான கண்ணுக்குப் புலப்படாத ( கருத்தளவில்) ஒரு முகமையால் உண்டாகிறது , அது வாழ்க்கையின் கண்ணுக்குப் புலப்படாத விதிகளை தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களின்  உள்ளார்ந்த இருப்பின் மூலம் தொந்தரவு செய்கிறது. உயிரினத்தின் உறுப்பமைவில், கண்ணுக்குப் புலப்படாத தீய சக்தி , அதனுடைய வழக்கமான நடைமுறை வாழ்வில்  சில நோய்களையும் ஒழுங்கீனங்களையும் உருவாக்குவதற்கு நிர்பந்தம் செய்கிறது . இவைகளே அறிகுறிகள் (நோய் ) என்று கருதப்படுகிறது. இப்பொழுது , பகைமையான முகமையின் தாக்கத்தால் நோய் ஏற்பட்டது மட்டுமல்லாமல் இந்த ஒழுங்கீனங்களை தொடர்ந்திருக்கவும்   முயற்சி செய்தால் , மிகவும் ஒத்த முறையில் ( ஒரு ஹோமியோபதி மருந்து) ,  ஒத்த இயற்கை நோயை விட மிகக் குறைந்த மருந்தளவிலேயே ஆற்றல் மிகுந்திருப்பதால் வாழ்க்கை விதியை மாற்றும் ஆற்றல் வாய்ந்த மருந்தினை    செயற்கையான வீரியத்தில் ஒரு மருத்துவர் தரும் போது அந்த ஒழுங்கீனமான நோய்கள்  இல்லாமல் போய் விடுகிறது (§§ 33, 279). பிறகு வாழ்க்கை விதிகளில்,  மூலமுதலான தீங்குவிளைவிக்கின்ற நோய்முகவர்களின் தாக்கம் , இத்தகைய வலிமைவாய்ந்த ஒத்த செயற்கை நோயின் செயல்பாட்டின் போது இல்லாமல் போகிறது.  அதிலிருந்து , அந்த தீமை வாழ்க்கை விதிகளுக்குள் இருப்பதில்லை - அது அளிக்கப்பட்டு விடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருந்தினை  , முன்னர் கூறியபடி சிறப்பான முறையில் தந்தால் சமீபத்தில் தோன்றிய எந்த  தீவிர இயற்கை  நோய் நீக்கப்பட  வேண்டுமோ அது புலன்களால் அறியமுடியாதபடி சிலமணி நேரங்களிலேயே காணாமல் போய்விடும்.

ஒரு பழைய , வெகு  நாட்பட்ட நோய்க்கு   ,  ஒத்த  மருந்தை மிக உயர்ந்த வீரியத்தில் பலமுறை தரும் போது அல்லது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒத்த ஹோமியோபதி மருந்தை கவனத்துடன் தேர்ந்தெடுத்து- 108 கொடுத்த பிறகு அனைத்து விதமான அசௌகரியங்களின் தடயங்களுடன்  சற்றே நாள்பட்டு குணமாகும். ஆரோக்கியமும் , நலம் மீள்தலும்   , துரித மாற்றங்களுக்குப் பிறகு கண்ணுக்குப்புலப்படாத வகையில் பின்தொடருகிறது .   உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூறு நோயநிலையிலிருந்து மீண்டும் விடுவிக்கப்படுகிறது. உயிரியின் வாழ்வு முன்பு இருந்தது போல் ஆரோக்கியத்தில் மீண்டும் இயங்கும் சக்தியையும்  வலிமையையும் திரும்பப் பெறுகிறது.

 

அடிக்குறிப்பு-108:

 

நோய் நிலையின் ஒவ்வொரு இயல்புக்கும் ஏற்ற வகையில்  எல்லா  விதத்திலும் மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தைத்  தேடுவதற்கும்   மற்றும் தேர்ந்தெடுப்பதற்கும்  மிகுந்த நீடித்த உழைப்பும் , சில நேரங்களில் மிகவும் அதிகமான உழைப்பும்  தேவைப்படுகிறது  , அந்தப்பணியை எளிதாக செயல்படுத்துவதற்கு  ஏராளமான அரிய அல்லது போற்றும்படியான  புத்தகங்கள் இருந்த போதிலும் (மருந்துகாண் ஏடுகள் மற்றும் மருந்தியல் களஞ்சியம் ) கூட , அவற்றிற்கு மூலமுதலான ஆதாரங்களையும் (மருந்து நிரூபணங்கள் பற்றிய அறிக்கைகள் ) படிக்கவேண்டிய தேவை இன்னும் உள்ளது , அதே நேரத்தில் ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வும்  மற்றும் தீவிரமாக ஆழ்ந்து ஆய்வு செய்வதும் தேவைப்படுகிறது , அவ்வாறு செய்வதால் நமது  கடமையை மிகச் சரியாக செய்து முடித்த மனநிறைவும் ஏற்படுகிறது  . நோய்களை  நலப்படுத்துவதற்கான உரிய ஒரே சிறந்த வழியாக இருப்பதும் , மிகுந்த  உழைப்பும் ,  கவனிக்கும் பணி தேவைப்படுவதுமான இந்த நலமாக்கும் செயலை   , ஹோமியோபதியர்கள் என்ற மதிப்பு வாய்ந்த  பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் ஆயினும் , தோற்றத்தில் ஹோமியோபதி மருந்துகளைப் போலவே உள்ள மருந்துகளை, ஏதோ ஒரு முறையில் பயன்படுத்துபவர்களாக (வாயின் வழியாக எடுத்துக் கொள்ளும் என்னவாயினும் ) இருக்கும் இந்த கண்ணியமான புதிய  கலப்பினப்பிரிவினரால் எவ்வாறு நலப்படுத்த  முடியும்.  மற்றும், பொருத்தமற்ற அம்மருந்துகள்  உடனடியாக நிவாரணம் அளிக்காதபோது, அனைத்து மனிதர்களைப் பற்றிய பெரும்பாலான மற்றும்  மிக முக்கியமான மற்றும் தீவிரமான செயல்களைச் செய்வதில் அவர்களின்  மன்னிக்க முடியாத அறியாமை மற்றும் சோம்பலின்  மீது பழியைப் போடுவதற்குப் பதிலாக, ஹோமியோபதி மருத்துவமுறை  இன்னும் பேரளவில்  குறைபாடு உள்ளதாக (  நிறைவுறாத நிலையில்) இருப்பதாக  குற்றம் சாட்டுகிறார்கள் ( உண்மையைக் கூறுவதாக இருந்தால் , இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் ஒவ்வொரு நோயுற்ற நிலைக்கும் மிகவும் பொருத்தமான சரியான ஹோமியோபதி  மருந்து  தானாக  எந்தவிதமான முயற்சியுமின்றி,   வறுத்த புறாக்கறி தன்னிச்சையாக பறந்து வந்து வாயில் விழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்). இருந்த போதிலும் , அவர்கள், தங்களுடைய மருத்துவப் பயிற்சியில்  அடிக்கடி அலோபதி வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம்  அரைகுறையாக   ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்திய தங்களுடைய  திறனற்ற தன்மையை எவ்வாறு ஈடுசெய்வது என்பது அவர்களுக்குத் தெரியும், அவை அவர்களுக்கு மிகவும் எளிது. அவற்றில் ஒன்றாக , பாதிக்கப்பட்ட உடற்பகுதியில்  ஒன்று அல்லது அதிக எண்ணிக்கையில்  அட்டைப்பூச்சிகளை விட்டு இரத்தத்தை உறிஞ்சவிடுதல்  , அல்லது குறைந்த அளவான தீமை என்று கூறி குருதிவடிப்பு செய்தல் (இரத்தக்குழாயில் சிறுசிறு துளைகள் இட்டு  அசுத்த இரத்தக்குழாயைக் கிழித்து எட்டு அவுன்ஸ் அளவிற்கு இரத்தத்தை வெளியேற்றுதல்) போன்றவைகளும்  , மற்றும் சிலவும்  ,  ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன; நோயாளி, இவற்றையெல்லாம் மீறி, நோயிலிருந்து மீண்டுழுந்துவிட்டால்   , அவர்கள் தங்களுடைய குருதிவடிப்பு செய்தல் , அட்டைவிடுதல்  போன்ற செயல்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள், அவ்வாறு செய்திருக்காவிட்டால் , அந்த நோயாளி மீட்சி பெற்றிருக்க மாட்டார் என்றும் அடித்துக் கூறுகின்றனர் , மேலும் ,  தனிச்சிறப்புத்தன்மை அதிகளவில் பயன்படுத்தப்படாமல்  தீங்கு விளைவிக்கிற   பழைய மருத்துவப்  பள்ளியின்  இது போன்ற நடவடிக்கைகள் தான் நோயாளி நலம் பெறுவதற்கு உண்மையான முறையில் பெரும்பங்காற்றின என்று சிறிதும்  சந்தேகத்திற்கு இடமில்லாத மொழியில்  கூறி நமக்கு  புரிய வைக்கவும் முயல்கிறார்கள். ஆனால்,  அவ்வப்போது காணப்படுவது போல, சிகிச்சையில் இருக்கும் போது  நோயாளி இறந்துவிட்டால், வருத்தத்துக்குரிய இறந்துபோனவருக்காக தங்கள் அறிந்த வகையில் என்னென்ன செய்யமுடியுமோ  அவ்வளவும்  செய்யப்பட்டுள்ளன என்பதற்கு அவர்களே சாட்சிகள் என்று கூறி வருத்தத்தில் இருக்கும்  உறவினர்களை  ஆறுதல்படுத்த முற்படுகிறார்கள். மிகவும் அற்பமான , தீங்கினை மட்டுமே விளைவிக்கிற இந்த இனத்தவரை   , மிகுந்த உழைப்பிற்கும் , நல்ல விளைவுகளை உருவாக்குகிற ஹோமியோபதி மருத்துவக்கலையின் பெயரால் அமைந்த  மதிக்கத்தக்க ஹோமியோபதி மருத்துவர்கள் என்று  யார் தான்  அழைப்பார்கள்? அவர்களுடைய இச்செயலுக்கு   , அவர்கள் நோய்வாய்ப்படும் போது  , அதற்குரிய கைம்மாறு காத்திருக்கிறது, அவர்களுக்கும்  அதே வகையான   தீங்கிழைக்கும் மருத்துவச் சிகிச்சையே கிடைக்கட்டும்!.

 

 

 

மணிமொழி- § 147

 

§ 147. The medicine most homoeopathically corresponding is the most suitable, is the specific remedy.

 

§ 147

 

Whichever of these medicines that have been investigated as to their power of altering man's health we find to contain in the symptoms observed from its use the greatest similarity to the totality of the symptoms of a given natural disease, this medicine will and must be the most suitable, the most certain homoeopathic remedy for the disease; in it is found the specific remedy of this case of disease.

 

§ 147. ஹோமியோபதிரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தே சரியானது, அதுவே குறிப்பிட்ட மருந்தாகும்.

 

 

மணிமொழி- § 147

 

 

எந்தந்த மருந்துகள் மனிதனின் ஆரோக்கியத்தில் மாற்றங்களை உண்டாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறதோ அத்தகைய மருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதனுடைய உபயோகத்திலிருந்து பெறப்படும்  அறிகுறிகள் அங்கே இருக்கும் இயற்கை நோய்களின் மொத்த அறிகுறிகளின் மிகச் சிறந்த ஒத்தத்தன்மையை உள்ளடக்கி இருக்கிறது. இந்த மருந்து மிகவும் சரியானதாக இருக்கும், இருக்க வேண்டும். இது நோய்க்கான மிகவும் உறுதியான ஹோமியோபதி மருந்தாக இருக்கும் , இந்த நோய்க்கான  விசேஷமான மருந்தாகவும் இது காணப்படும் .

மணிமொழி- § 146

 

§ 146. The most appropriate therapeutic employment of medicines known in their pure effects.

§ 146

 

The third point of the business of a true physician relates to the judicious employment of the artificial morbific agents (medicines) that have been proved on healthy individuals to ascertain their pure action in order to effect the homoeopathic cure of natural diseases.

 

§ 146. மிகவும்  பொருத்தமான நலப்படுத்தும்  முறையில் மருந்துகளைப் பயன்படுத்தும்  போது அவைகளின்  தூய விளைவு தெரியும் .

 

 

மணிமொழி- § 146

 

 

ஆரோக்கியமான மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயற்கை நோய்க்கூறுகளின் தூய செயல்பாட்டினை தெரிந்து கொண்டு இயற்கை நோய்களின் ஹோமியோபதி நலத்தைப் பெறுவதற்கு விவேகமான முறையில் செயற்கை நோயை உருவாக்கும் முகவர்களை  ( மருந்துகள்) பயன்படுத்துவது உண்மையான மருத்துவரின் தொழிரீதியான பணியில் மூன்றாவது அம்சமாகும்.

 

Thursday, 11 February 2021

மணிமொழி- § 145

 

§ 145

 

Of a truth, it is only by a very considerable store of medicines accurately known in respect of these their pure modes of action in altering the health of man, that we can be placed in a position to discover a homoeopathic remedy, a suitable artificial (curative) morbific analogue for each of the infinitely numerous morbid states in nature, for every malady in the world-106. In the meantime, even now - thanks to the truthful character of the symptoms, and to the abundance of disease elements which every one of the powerful medicinal substances has already shown in its action on the healthy body - but few disease remain, for which a tolerably suitable homoeopathic remedy may not be met with among those now proved as to their pure action-107 which, without much disturbance, restores health in a gentle, sure and permanent manner - infinitely more surely and safely than can be effected by all the general and special therapeutics of the old allopathic medical art with its unknown composite remedies, which do but alter and aggravate but cannot cure chronic diseases, and rather retard than promote recovery from acute diseases and frequently endanger life.

 

Foot Note-106:  At first, about forty years ago, I was the only person who made the provings of the pure powers of medicines the most important of his occupations. Since then I have been assisted in this by some young men, who instituted experiments on themselves, and whose observations I have critically revised. Following these some genuine work of this kind was done by a few others. But what shall we not be able to effect in the way of curing in the whole extent of the infinitely large domain of disease, when numbers of accurate and trustworthy observers shall have rendered their services in enriching this, the only true materia medica, by careful experiments on themselves! The healing art will then come near the mathematical sciences in certainty.

 Foot Note-107:  See the second note to §109.

 

மணிமொழி- § 145

 

 

உண்மையாகவே,  மனிதனின் ஆரோக்கியத்தில்   மாற்றங்களை  ஏற்படுத்தும் மருந்துகளின் தூய செயல்பாட்டினை   அறிந்திருக்கும் போது மட்டுமே , நம்மிடையே இருக்கும் மிகவும் போதுமான அளவிலான மருந்துக் களஞ்சியத்திலிருந்து ஒரு ஹோமியோபதி மருந்தை கண்டுபிடிக்கும் நிலையில் நாம் இருக்க முடியும். இந்த மருந்து இயற்கையின் ஒவ்வொரு எல்லையற்ற எண்ணிலடங்கா நோய்க்கூறுகளுக்கும்  , உலகில் உள்ள ஒவ்வொரு நோய்க்கும்-106 ஏற்ற ஒரு சரியான செயற்கையான ( நலம் தரக்கூடிய) நோய்க்கூறுகளை கொண்டதாக இருக்கும்.  இதற்கிடையில், இப்போது கூட - அறிகுறிகளின் உண்மையான  இயல்புகளுக்கும் , ஏராளமான நோய்க்கூறுகளுக்கும்   மற்றும்  ஆற்றல் வாய்ந்த  மருந்துப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான உடலில் அதனுடைய செயல்பாட்டினை  ஏற்கனவே காண்பித்திருப்பதற்கும் நன்றி.  இப்பொழுது நிரூபணம் செய்யப்பட்ட மருந்துகளின் தூய செயல்பாடு-107 மிகவும் தொந்தரவு இல்லாமல், ஆரோக்கியத்தை ஒரு மென்மையான, உறுதியான மற்றும் நிரந்தரமான  முறையில் மீட்டெடுக்கிறது , ஆனால் சில நோய்கள் எஞ்சியுள்ளன, - எஞ்சியிருக்கின்ற சில நோய்களுக்காக நாம் தேர்ந்தெடுத்த பொறுக்கத்தக்க , பொருத்தமான ஹோமியோபதி மருந்துகளில் இத்தகைய செயல்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். பழைய அலோபதி ( ஆங்கில )  மருத்துவக்கலையில், அறிந்திராத கலப்பு மருந்துக்கலவைகளின் மூலம் பொதுவான மற்றும் விசேஷ நோய்தீர்க்கும் வகையில்  மிகவும் நிச்சயமாக பாதுகாப்பாக ஆரோக்கியத்தை மீட்டெடுக்க காலவரம்பின்றி மருந்தளிக்கிறார்கள்  . அது நோயை மாற்றவும் அதிகரிக்கவும் செய்யும் , ஆனால் அம்மருந்துகளால் நீண்டகால நோய்களை நலமாக்க முடியாது ; மற்றும் தீவிர நோய்களிலிருந்து ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்குப் பதிலாக , மீண்டும் உருவாக்கி அடிக்கடி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது .

 

 

அடிக்குறிப்பு-106:

 

முதலில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவரின் மிக முக்கியமான பணியான,  மருந்துகளின் தூய ஆற்றலை நிரூபணம் செய்வதற்கு   நான் ஒருவன் மட்டுமே இருந்தேன் ,  அதன்பின்பு இந்தப்பணியில்  எனக்கு சில இளைஞர்கள் உதவி செய்தனர், அவர்கள்தங்களுக்குத்  தாங்களே சோதனைகளை மேற்கொண்டனர், மற்றும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை நான் விமர்சன ரீதியாக திருத்தியுள்ளேன். இவற்றைத் தொடர்ந்து இந்த வகையில்  சில நேர்மையான  பணிகளை  இன்னும் சிலரால் செய்யப்பட்டன. ஆனால்,   எண்ணற்ற துல்லிதமான மற்றும் நம்பகமான பரிசோதனையாளர்கள்  , இந்த மருந்து நிரூபணத்தை வளப்படுத்துவதில் தங்கள் சேவைகளை வழங்கியிருக்கும் போது, தங்களைத் தாங்களே  கவனமாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுவதன்  மூலம் உருவான  உண்மையான மருந்தியல் களஞ்சியம் இருக்கும் போது   , எல்லையற்ற பெரிய அளவிலான நோய்களை  முழு அளவிலும் குணப்படுத்தும் வழியில் நாம் செய்ய இயலாதது தான் என்ன ? இதன்  மூலம் நலமாக்கும்  கலை உறுதியாக  கணித அறிவியலுக்கு அருகில் வரும்.

 

அடிக்குறிப்பு-107:

மணிமொழி- 109  இன் இரண்டாவது அடிக்குறிப்பை பார்க்கவும் (அடிக்குறிப்பு-93).

மணிமொழி- § 144

 

 

§ 144

 

From such a materia medica everything that is conjectural, all that is mere assertion or imaginary should be strictly excluded; everything should be the pure language of nature carefully and honestly interrogated.

 

மணிமொழி- § 144

 

 

அத்தகைய ஒரு மருந்தியல் களஞ்சியத்திலிருந்து  , ஊகத்துக்கிடமான  எல்லாவற்றையும், வெறும் வலியுறுத்தல் அல்லது கற்பனையான  அனைத்தையும்  கண்டிப்பாக விலக்கப்பட வேண்டும்; அனைத்தும்  இயற்கையின் தூய மொழியில்  , கவனமாகவும் நேர்மையாகவும் வினவப்பட்டதாக இருக்க  வேண்டும் .

 

மணிமொழி- § 143

 

§ 143-145. Only from such investigations of the pure effects of medicines on healthy persons can a real materia medica be formed.

 

§ 143

If we have thus tested on the healthy individual a considerable number of simple medicines and carefully and faithfully registered all the disease elements and symptoms they are capable of developing as artificial disease-producers, then only have we a true materia medica - a collection of real, pure, reliable-105 modes of action of simple medicinal substances, a volume of the book of nature, wherein is recorded a considerable array of the peculiar changes of the health and symptoms ascertained to belong to each of the powerful medicines, as they were revealed to the attention of the observer, in which the likeness of the (homoeopathic) disease elements of many natural diseases to be hereafter cured by them are present, which, in a word, contain artificial morbid states, that furnish for the similar natural morbid states the only true, homoeopathic, that is to say, specific, therapeutic instruments for effecting their certain and permanent cure.

Foot Note-105:          Latterly it has been the habit to entrust the proving of medicines to unknown persons at a distance, who were paid for their work, and the formation so obtained was printed. But by so doing, the work which is of all others the most important, which is to form the basis of the only true healing art, and which demands the greatest moral certainty and trustworthiness seems to me, I regret to say, to become doubtful and uncertain in its results and to lose all value.

 

§ 143-145. ஆரோக்கியமான மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் மூலம் கிடைக்கும் மருந்தின் தூய்மையான விளைவுகளிலிருந்தே ஒரு   உண்மையான மருந்தியல் களஞ்சியம்  உருவாக்க முடியும்.

 

மணிமொழி- § 143

 

இவ்வாறாக ஒரு ஆரோக்கியமான மனிதரின் மீது எளிய மருந்துகளை கணிசமான எண்ணிக்கையில் பரிசோதனை செய்யும் போதும், மற்றும்  அந்த மருந்துக்கே உரிய செயற்கை நோய்களை உருவாக்கும் திறனையும்   மற்றும்  அனைத்து நோய் கூறுகளையும் அறிகுறிகளையும் கவனமாகவும் நேர்மையாகவும்  பதிவு செய்யும் போதும் மட்டும் தான் நம்மால் ஒரு உண்மையான,  தூய , நம்பத் தகுந்த மருந்தியல் களஞ்சியத்தைப் பெற முடியும்  - இந்த மருந்தியல் களஞ்சியம்  எளிய மருந்துப்  பொருட்களின் உண்மையான , தூய்மையான, நம்பத் தகுந்த  -105  தொகுப்பாக இருக்க வேண்டும் , இந்த தொகுப்பு என்பது , ஆரோக்கியத்தில் ஏற்படும் விசித்திரமான மாற்றங்களையும் , ஒவ்வொரு ஆற்றல் வாய்ந்த மருந்துகளுக்கே உரிய, அந்த மருந்துகளின் மூலம்  பெறப்பட்ட அறிகுறிகளையும் போதுமான அளவிற்கு பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவைகள் அனைத்தும் பரிசோதகரின் கவனத்திற்கு கொணரப்பட்டதாகும் , இதில் இனிமேல் நலப்படுத்த  வேண்டிய பல இயற்கை நோய்க்கூறுகளை   ஒத்துள்ள நோய்களையும் (ஹோமியோபதி முறைப்படி  )  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சுருக்கமாக கூறுவதாக இருந்தால்   ,  செயற்கை நோயுற்ற நிலைகளையும் ,  அதே போன்ற இயற்கை நோயுற்ற நிலைகளையும்   அது  கொண்டிருக்க வேண்டும் ,  அதாவது, உண்மையான, விசேஷமான, உறுதியான மற்றும் ,  நிரந்தரமான  நலத்தைத் தரக்கூடிய  ஹோமியோபதி சிகிச்சை முறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் .

 

அடிக்குறிப்பு-105

 

பின்னர் , அறிமுகமில்லாத , தொழில்ரீதியாக ஊதியம்  அளிக்கப்பட்ட மனிதர்களிடம் மருந்துகளைப் பரிசோதிப்பது நாளடைவில் பழக்கமாகி விட்டது. அவர்களிடமிருந்து பெறப்பட்டத் தகவல்கள் அச்சேற்றப்பட்டன. ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், மற்ற அனைத்திலும் மிக முக்கியமான, ஒரே உண்மையான,  நலப்படுத்தும்  கலையின் அடிப்படையை உருவாக்குவதும், மிகப் பெரிய தார்மீக உறுதியையும் நம்பகத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டியதுமான அந்த நூல்  அதன் விளைவுகளில் சந்தேகத்துக்கு உரியதாகவும் உறுதியற்றதாகவும் , அனைத்து மதிப்பையும் இழந்ததாகவும்  உருவாகி விடுகிறது என்று  நான் வருத்தத்துடன் கூறுகிறேன்.

மணிமொழி-142

 

§ 142. The investigation of the pure effects of medicines in diseases is difficult.

 

§ 142

 

 

But how some symptoms-104 of the simple medicine employed for a curative purpose can be distinguished amongst the symptoms of the original malady, even in diseases, especially in those of a chronic character that usually remain unaltered, is a subject appertaining to the higher art of judgement, and must be left exclusively to masters in observation.

 

 

Foot Note-104:  Symptoms which, during the whole course of the disease, might have been observed only a long time previously, or never before, consequently new ones, belonging to the medicine.

 

§ 142 -நோய்களில் மருந்துகளின் தூய்மையான விளைவுகளை ஆராய்வது கடினம்

 

மணிமொழி-142

 

 

ஆனால் ,  நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக ஒரு எளிய மருந்து பயன்படுத்தும் போது தோன்றும்  சில அறிகுறிகளை -104 , எவ்வாறு மூலமுதலான நோயின்  அறிகுறிகளிலிருந்து , குறிப்பாக எந்த மாற்றத்திற்கும் உட்படாத நாட்பட்ட நோய்களின் அறிகுறிகளிலிருந்து  எவ்வாறு வேறுபடுத்த முடியும் என்பதை பரிசோதனையை மேற்கொள்ளும் மருத்துவரின் முழுமையான முடிவுக்கே விட்டுவிட வேண்டும், அவருடைய தீர்ப்பே உயர்ந்த மருத்துவக் கலை ஆகும்.

 

 

அடிக்குறிப்பு-104:

 

நோயின் முழுப் போக்கின் போது , நீண்ட காலத்திற்கு முன்பாகவோ  , அல்லது இதற்கு முன்னர் எப்போதும் இல்லாமலோ , புதியதாக தோன்றிய விளைவுகளின் ஒன்றாகவோ  கண்டுபிடிக்கப்பட்ட அறிகுறிகள் அந்த  மருந்தைச் சேர்ந்தவை.