Monday 22 March 2021

மணிமொழி- § 148

 

 

§ 148. Explanation of how a homoeopathic cure is probably effected.

 

§ 148

 

The natural disease is never to be considered as a noxious material situated somewhere within the interior or exterior of man (§ 11-13) but as one produced by an inimical spirit-like (conceptual) agency which, like a kind of infection (note to § 11) disturbs in its instinctive existence of the spirit-like (conceptual) principle of life within the organism torturing it as an evil spirit and compelling it to produce certain ailments and disorders in the regular course of its life. These are known as symptoms (disease). If, now, the influence of this inimical agency that not only caused but strives to continue this disorder, be taken away as is done when the physician administers an artificial potency, capable of altering the life principle in the most similar manner (a homoeopathic medicine) which exceeds in energy even in the smallest dose the similar natural disease (§§ 33, 279), then the influence of the original noxious morbid agent on the life principle is lost during the action of this stronger similar artificial disease. Thence the evil no longer exists for the life principle - it is destroyed. If, as has been said, the selected homoeopathic remedy is administered properly, then the acute natural disease which is to be overruled if recently developed, will disappear imperceptibly in a few hours.

 

An older, more chronic disease will yield somewhat later together with all traces of discomfort, by the use of several doses of the same more highly potentized remedy or after careful selection-108  of one or another more similar homoeopathic medicine. Health, recovery, follow in imperceptible, often rapid transitions. The life principle is freed again and capable of resuming the life of the organism in health as before and strength returns.

 

 

Foot Note-108 :  But this laborious, sometimes very laborious, search for and selection of the homoeopathic remedy most suitable in every respect to each morbid state, is an operation which, notwithstanding all the admirable books for facilitating it, still demands the study of the original sources themselves, and at the same time a great amount of circumspection and serious deliberation, which have their best rewards in the consciousness of having faithfully discharged our duty. How could his laborious, care-demanding task, by which alone the best way of curing diseases is rendered possible, please the gentlemen of the new mongrel sect, who assume the honorable name of homoeopathists, and even seem to employ medicines in form and appearance homoeopathic, but determined upon by them anyhow (quidquid in buccam venit- whatever comes into mouth), and who, when the unsuitable remedy does not immediately give relief, in place of laying the blame on their unpardonable ignorance and laxity in performing the most and important and serious of all human affairs, ascribe it to homoeopathy, which they accuse of great imperfection (if the truth be told, its imperfection consists in this, that the most suitable homoeopathic remedy for each morbid condition does not spontaneously fly into their mouths like roasted pigeons, without any trouble on their own part). They know, however, from frequent practice, how to make up for the inefficiency of the scarcely half homoeopathic remedy by the employment of allopathic means, that come much more handy to them, among which one or more dozens of leeches applied to the affected part, or little harmless venesections to the extent of eight ounces, and so forth, play an important part; and should the patient, in spite of all this, recover, they extol their venesections, leeches, etc., alleging that, had it not been for these, the patient would not have been pulled through, and they give us to understand, in no doubtful language, that these operations, derived without much exercise of genius from the pernicious routine of the old school, in reality contributed the best share towards the cure. But if the patient die under the treatment, as not unfrequently happens, they seek to console the friends by saying that they themselves were witnesses that everything conceivable had been done for the lamented deceased. Who would do this frivolous and pernicious tribe the honour to call them, after the name of the very laborious but salutary art, homoeopathic physicians? May the just recompense await them, that, when taken ill, they may be treated in the same manner!

 

 

§ 148- ஹோமியோபதி நலமாக்கல் எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான விளக்கம்.

 

மணிமொழி- § 148

 

இயற்கை நோய்  மனிதனின் அகத்திலோ  புறத்திலோ (§ 11-13) எங்கோ அமைந்திருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களால் உருவாகிறது என்று கருதமுடியாது , ஆனால் இது ஒரு வகையான தொற்று சார்ந்த பகையான கண்ணுக்குப் புலப்படாத ( கருத்தளவில்) ஒரு முகமையால் உண்டாகிறது , அது வாழ்க்கையின் கண்ணுக்குப் புலப்படாத விதிகளை தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களின்  உள்ளார்ந்த இருப்பின் மூலம் தொந்தரவு செய்கிறது. உயிரினத்தின் உறுப்பமைவில், கண்ணுக்குப் புலப்படாத தீய சக்தி , அதனுடைய வழக்கமான நடைமுறை வாழ்வில்  சில நோய்களையும் ஒழுங்கீனங்களையும் உருவாக்குவதற்கு நிர்பந்தம் செய்கிறது . இவைகளே அறிகுறிகள் (நோய் ) என்று கருதப்படுகிறது. இப்பொழுது , பகைமையான முகமையின் தாக்கத்தால் நோய் ஏற்பட்டது மட்டுமல்லாமல் இந்த ஒழுங்கீனங்களை தொடர்ந்திருக்கவும்   முயற்சி செய்தால் , மிகவும் ஒத்த முறையில் ( ஒரு ஹோமியோபதி மருந்து) ,  ஒத்த இயற்கை நோயை விட மிகக் குறைந்த மருந்தளவிலேயே ஆற்றல் மிகுந்திருப்பதால் வாழ்க்கை விதியை மாற்றும் ஆற்றல் வாய்ந்த மருந்தினை    செயற்கையான வீரியத்தில் ஒரு மருத்துவர் தரும் போது அந்த ஒழுங்கீனமான நோய்கள்  இல்லாமல் போய் விடுகிறது (§§ 33, 279). பிறகு வாழ்க்கை விதிகளில்,  மூலமுதலான தீங்குவிளைவிக்கின்ற நோய்முகவர்களின் தாக்கம் , இத்தகைய வலிமைவாய்ந்த ஒத்த செயற்கை நோயின் செயல்பாட்டின் போது இல்லாமல் போகிறது.  அதிலிருந்து , அந்த தீமை வாழ்க்கை விதிகளுக்குள் இருப்பதில்லை - அது அளிக்கப்பட்டு விடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருந்தினை  , முன்னர் கூறியபடி சிறப்பான முறையில் தந்தால் சமீபத்தில் தோன்றிய எந்த  தீவிர இயற்கை  நோய் நீக்கப்பட  வேண்டுமோ அது புலன்களால் அறியமுடியாதபடி சிலமணி நேரங்களிலேயே காணாமல் போய்விடும்.

ஒரு பழைய , வெகு  நாட்பட்ட நோய்க்கு   ,  ஒத்த  மருந்தை மிக உயர்ந்த வீரியத்தில் பலமுறை தரும் போது அல்லது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒத்த ஹோமியோபதி மருந்தை கவனத்துடன் தேர்ந்தெடுத்து- 108 கொடுத்த பிறகு அனைத்து விதமான அசௌகரியங்களின் தடயங்களுடன்  சற்றே நாள்பட்டு குணமாகும். ஆரோக்கியமும் , நலம் மீள்தலும்   , துரித மாற்றங்களுக்குப் பிறகு கண்ணுக்குப்புலப்படாத வகையில் பின்தொடருகிறது .   உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூறு நோயநிலையிலிருந்து மீண்டும் விடுவிக்கப்படுகிறது. உயிரியின் வாழ்வு முன்பு இருந்தது போல் ஆரோக்கியத்தில் மீண்டும் இயங்கும் சக்தியையும்  வலிமையையும் திரும்பப் பெறுகிறது.

 

அடிக்குறிப்பு-108:

 

நோய் நிலையின் ஒவ்வொரு இயல்புக்கும் ஏற்ற வகையில்  எல்லா  விதத்திலும் மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தைத்  தேடுவதற்கும்   மற்றும் தேர்ந்தெடுப்பதற்கும்  மிகுந்த நீடித்த உழைப்பும் , சில நேரங்களில் மிகவும் அதிகமான உழைப்பும்  தேவைப்படுகிறது  , அந்தப்பணியை எளிதாக செயல்படுத்துவதற்கு  ஏராளமான அரிய அல்லது போற்றும்படியான  புத்தகங்கள் இருந்த போதிலும் (மருந்துகாண் ஏடுகள் மற்றும் மருந்தியல் களஞ்சியம் ) கூட , அவற்றிற்கு மூலமுதலான ஆதாரங்களையும் (மருந்து நிரூபணங்கள் பற்றிய அறிக்கைகள் ) படிக்கவேண்டிய தேவை இன்னும் உள்ளது , அதே நேரத்தில் ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வும்  மற்றும் தீவிரமாக ஆழ்ந்து ஆய்வு செய்வதும் தேவைப்படுகிறது , அவ்வாறு செய்வதால் நமது  கடமையை மிகச் சரியாக செய்து முடித்த மனநிறைவும் ஏற்படுகிறது  . நோய்களை  நலப்படுத்துவதற்கான உரிய ஒரே சிறந்த வழியாக இருப்பதும் , மிகுந்த  உழைப்பும் ,  கவனிக்கும் பணி தேவைப்படுவதுமான இந்த நலமாக்கும் செயலை   , ஹோமியோபதியர்கள் என்ற மதிப்பு வாய்ந்த  பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் ஆயினும் , தோற்றத்தில் ஹோமியோபதி மருந்துகளைப் போலவே உள்ள மருந்துகளை, ஏதோ ஒரு முறையில் பயன்படுத்துபவர்களாக (வாயின் வழியாக எடுத்துக் கொள்ளும் என்னவாயினும் ) இருக்கும் இந்த கண்ணியமான புதிய  கலப்பினப்பிரிவினரால் எவ்வாறு நலப்படுத்த  முடியும்.  மற்றும், பொருத்தமற்ற அம்மருந்துகள்  உடனடியாக நிவாரணம் அளிக்காதபோது, அனைத்து மனிதர்களைப் பற்றிய பெரும்பாலான மற்றும்  மிக முக்கியமான மற்றும் தீவிரமான செயல்களைச் செய்வதில் அவர்களின்  மன்னிக்க முடியாத அறியாமை மற்றும் சோம்பலின்  மீது பழியைப் போடுவதற்குப் பதிலாக, ஹோமியோபதி மருத்துவமுறை  இன்னும் பேரளவில்  குறைபாடு உள்ளதாக (  நிறைவுறாத நிலையில்) இருப்பதாக  குற்றம் சாட்டுகிறார்கள் ( உண்மையைக் கூறுவதாக இருந்தால் , இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் ஒவ்வொரு நோயுற்ற நிலைக்கும் மிகவும் பொருத்தமான சரியான ஹோமியோபதி  மருந்து  தானாக  எந்தவிதமான முயற்சியுமின்றி,   வறுத்த புறாக்கறி தன்னிச்சையாக பறந்து வந்து வாயில் விழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்). இருந்த போதிலும் , அவர்கள், தங்களுடைய மருத்துவப் பயிற்சியில்  அடிக்கடி அலோபதி வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம்  அரைகுறையாக   ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்திய தங்களுடைய  திறனற்ற தன்மையை எவ்வாறு ஈடுசெய்வது என்பது அவர்களுக்குத் தெரியும், அவை அவர்களுக்கு மிகவும் எளிது. அவற்றில் ஒன்றாக , பாதிக்கப்பட்ட உடற்பகுதியில்  ஒன்று அல்லது அதிக எண்ணிக்கையில்  அட்டைப்பூச்சிகளை விட்டு இரத்தத்தை உறிஞ்சவிடுதல்  , அல்லது குறைந்த அளவான தீமை என்று கூறி குருதிவடிப்பு செய்தல் (இரத்தக்குழாயில் சிறுசிறு துளைகள் இட்டு  அசுத்த இரத்தக்குழாயைக் கிழித்து எட்டு அவுன்ஸ் அளவிற்கு இரத்தத்தை வெளியேற்றுதல்) போன்றவைகளும்  , மற்றும் சிலவும்  ,  ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன; நோயாளி, இவற்றையெல்லாம் மீறி, நோயிலிருந்து மீண்டுழுந்துவிட்டால்   , அவர்கள் தங்களுடைய குருதிவடிப்பு செய்தல் , அட்டைவிடுதல்  போன்ற செயல்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள், அவ்வாறு செய்திருக்காவிட்டால் , அந்த நோயாளி மீட்சி பெற்றிருக்க மாட்டார் என்றும் அடித்துக் கூறுகின்றனர் , மேலும் ,  தனிச்சிறப்புத்தன்மை அதிகளவில் பயன்படுத்தப்படாமல்  தீங்கு விளைவிக்கிற   பழைய மருத்துவப்  பள்ளியின்  இது போன்ற நடவடிக்கைகள் தான் நோயாளி நலம் பெறுவதற்கு உண்மையான முறையில் பெரும்பங்காற்றின என்று சிறிதும்  சந்தேகத்திற்கு இடமில்லாத மொழியில்  கூறி நமக்கு  புரிய வைக்கவும் முயல்கிறார்கள். ஆனால்,  அவ்வப்போது காணப்படுவது போல, சிகிச்சையில் இருக்கும் போது  நோயாளி இறந்துவிட்டால், வருத்தத்துக்குரிய இறந்துபோனவருக்காக தங்கள் அறிந்த வகையில் என்னென்ன செய்யமுடியுமோ  அவ்வளவும்  செய்யப்பட்டுள்ளன என்பதற்கு அவர்களே சாட்சிகள் என்று கூறி வருத்தத்தில் இருக்கும்  உறவினர்களை  ஆறுதல்படுத்த முற்படுகிறார்கள். மிகவும் அற்பமான , தீங்கினை மட்டுமே விளைவிக்கிற இந்த இனத்தவரை   , மிகுந்த உழைப்பிற்கும் , நல்ல விளைவுகளை உருவாக்குகிற ஹோமியோபதி மருத்துவக்கலையின் பெயரால் அமைந்த  மதிக்கத்தக்க ஹோமியோபதி மருத்துவர்கள் என்று  யார் தான்  அழைப்பார்கள்? அவர்களுடைய இச்செயலுக்கு   , அவர்கள் நோய்வாய்ப்படும் போது  , அதற்குரிய கைம்மாறு காத்திருக்கிறது, அவர்களுக்கும்  அதே வகையான   தீங்கிழைக்கும் மருத்துவச் சிகிச்சையே கிடைக்கட்டும்!.

 

 

 

No comments:

Post a Comment