§ 143-145. Only from such investigations
of the pure effects of medicines on healthy persons can a real materia medica
be formed.
If
we have thus tested on the healthy individual a considerable number of simple
medicines and carefully and faithfully registered all the disease elements and
symptoms they are capable of developing as artificial disease-producers, then
only have we a true materia medica - a collection of real, pure, reliable-105
modes of action of simple medicinal substances, a volume of the book of nature,
wherein is recorded a considerable array of the peculiar changes of the health
and symptoms ascertained to belong to each of the powerful medicines, as they
were revealed to the attention of the observer, in which the likeness of the
(homoeopathic) disease elements of many natural diseases to be hereafter cured
by them are present, which, in a word, contain artificial morbid states, that
furnish for the similar natural morbid states the only true, homoeopathic, that
is to say, specific, therapeutic instruments for effecting their certain and
permanent cure.
Foot
Note-105: Latterly it has been
the habit to entrust the proving of medicines to unknown persons at a distance,
who were paid for their work, and the formation so obtained was printed. But by
so doing, the work which is of all others the most important, which is to form
the basis of the only true healing art, and which demands the greatest moral
certainty and trustworthiness seems to me, I regret to say, to become doubtful
and uncertain in its results and to lose all value.
§ 143-145. ஆரோக்கியமான மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும்
பரிசோதனைகளின் மூலம் கிடைக்கும் மருந்தின் தூய்மையான விளைவுகளிலிருந்தே ஒரு உண்மையான மருந்தியல் களஞ்சியம் உருவாக்க முடியும்.
மணிமொழி- § 143
இவ்வாறாக
ஒரு ஆரோக்கியமான மனிதரின் மீது எளிய மருந்துகளை கணிசமான எண்ணிக்கையில் பரிசோதனை
செய்யும் போதும், மற்றும் அந்த
மருந்துக்கே உரிய செயற்கை நோய்களை உருவாக்கும் திறனையும் மற்றும்
அனைத்து நோய் கூறுகளையும் அறிகுறிகளையும் கவனமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் போதும் மட்டும் தான் நம்மால்
ஒரு உண்மையான, தூய , நம்பத் தகுந்த
மருந்தியல் களஞ்சியத்தைப் பெற முடியும் -
இந்த மருந்தியல் களஞ்சியம் எளிய
மருந்துப் பொருட்களின் உண்மையான ,
தூய்மையான, நம்பத் தகுந்த -105 தொகுப்பாக இருக்க வேண்டும் , இந்த தொகுப்பு என்பது , ஆரோக்கியத்தில் ஏற்படும் விசித்திரமான
மாற்றங்களையும் , ஒவ்வொரு ஆற்றல் வாய்ந்த மருந்துகளுக்கே உரிய, அந்த மருந்துகளின்
மூலம் பெறப்பட்ட அறிகுறிகளையும் போதுமான
அளவிற்கு பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவைகள் அனைத்தும்
பரிசோதகரின் கவனத்திற்கு கொணரப்பட்டதாகும் , இதில் இனிமேல் நலப்படுத்த வேண்டிய பல இயற்கை நோய்க்கூறுகளை ஒத்துள்ள நோய்களையும் (ஹோமியோபதி
முறைப்படி ) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சுருக்கமாக
கூறுவதாக இருந்தால் , செயற்கை நோயுற்ற நிலைகளையும் , அதே போன்ற இயற்கை நோயுற்ற நிலைகளையும் அது
கொண்டிருக்க வேண்டும் , அதாவது, உண்மையான,
விசேஷமான, உறுதியான மற்றும் ,
நிரந்தரமான நலத்தைத்
தரக்கூடிய ஹோமியோபதி சிகிச்சை முறைகளைக்
கொண்டதாக இருக்க வேண்டும் .
அடிக்குறிப்பு-105
பின்னர் , அறிமுகமில்லாத , தொழில்ரீதியாக ஊதியம் அளிக்கப்பட்ட மனிதர்களிடம் மருந்துகளைப்
பரிசோதிப்பது நாளடைவில் பழக்கமாகி விட்டது. அவர்களிடமிருந்து பெறப்பட்டத் தகவல்கள்
அச்சேற்றப்பட்டன. ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், மற்ற அனைத்திலும் மிக முக்கியமான,
ஒரே உண்மையான, நலப்படுத்தும் கலையின் அடிப்படையை உருவாக்குவதும், மிகப்
பெரிய தார்மீக உறுதியையும் நம்பகத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டியதுமான அந்த நூல்
அதன் விளைவுகளில் சந்தேகத்துக்கு
உரியதாகவும் உறுதியற்றதாகவும் , அனைத்து மதிப்பையும் இழந்ததாகவும் உருவாகி விடுகிறது என்று நான் வருத்தத்துடன் கூறுகிறேன்.
No comments:
Post a Comment