§ 149. The homoeopathic cure of a
disease that has occurred quickly is quickly effected ; that of chronic
diseases, however, demands proportionately more time. NOTE. - Difference
between pure homoeopathists and the mongrel sect.
Diseases
of long standing (and especially such as are of a complicated character)
require for their cure a proportionately longer time. More especially do the
chronic medicinal dyscrasia so often produced by allopathic bungling along with
the natural disease left uncured by it, require a much longer time for their
recovery; often, indeed, are they incurable, in consequence of the shameful
robbery of the patient's strength and juices (venesections, purgatives, etc.),
on account of long continued use of large doses of violently acting remedies
given on the basis of empty, false theories for alleged usefulness in cases of
disease appearing similar, also in prescribing unsuitable mineral baths, etc.,
the principal feat performed by allopathy in its so-called methods of
treatment.
§ 149- விரைவாக ஏற்பட்ட
ஒரு நோய் ஹோமியோபதி முறையில் விரைவில்
நலமாக்கப்படுகிறது ; அதேபோன்று , நாள்பட்ட நோய்களுக்கு விகிதாசாரமாக அதிக
நாட்கள் தேவைப்படுகிறது. குறிப்பு. - தூய
ஹோமியோபதியர்களுக்கும் கலப்பு மருந்து பயன்படுத்துவோர் பிரிவிற்கும் உள்ள வேறுபாடு.
மணிமொழி- § 149
மிக
நீண்டகால நோய்களை (குறிப்பாக சிக்கலான தன்மை
வாய்ந்தவை ) நலப்படுத்துவதற்கு அவைகளின் தன்மைக்கு ஏற்ப விகிதாசாரமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது. மிகவும் குறிப்பாக அலோபதி மருத்துவத்தின் மூலம் அடிக்கடி ஏற்பட்ட , நாள்பட்ட ,
இரத்தக் கூறுகள் மாறுப்பட்டதின் விளைவாக உண்டான நோய்கள் இயற்கை நோய்களுடன் சேர்ந்து நலப்படுத்த முடியாமல் போய் விடுகின்ன்றன . இவைகளை நலப்படுத்துவதற்கு இன்னும் அதிக நாட்கள் எடுத்துக்
கொள்கின்றன . நோயாளிகளின் வலிமையையும் மற்றும் நலக்கூறுகளையும்
வெட்கப்படும் அளவிற்கு கொள்ளையடிப்பதின் மூலம் ( பழங்கால முறையான இரத்தத்தை
வெளியேற்றுதல், மலமிளக்கி மருந்துகளை தருதல் போன்றவைகள் ), இது போன்ற நலப்படுத்தும்
முறைகளில் மிகவும் முக்கியமான அருஞ்செயல்
என்று அலோபதி மருத்துவத்தால்
செய்யப்படுகின்ற பொருத்தமற்ற
கனிமக்குளியல்களை பரிந்துரைப்பது மூலமாகவும் , மிக நீண்டகாலமாக, தொடர்ந்து அளவுக்கு அதிகமான அளவில் கடுமையாக
செயல்படும் மருந்துகளை அதாவது ஒத்த நோய்களுக்கு பயனுள்ளதாக
விவாதிக்கப்படுகின்ற (ஆணித்தரமாக நம்புகின்ற)
மருந்துகளைத் தருவதன் மூலமாகவும் அந்த நோய்கள் உண்மையிலேயே அடிக்கடி நலப்படுத்த முடியாதவைகளாக
இருக்கின்றன.
No comments:
Post a Comment