Monday, 22 March 2021

மணிமொழி- § 153

 

§ 153. What kind of symptoms ought one chiefly to attend to in the choice of a remedy?

§ 153

 

In this search for a homoeopathic specific remedy, that is to say, in this comparison of the collective symptoms of the natural disease with the list of symptoms of known medicines, in order to find among these an artificial morbific agent corresponding by similarity to the disease to be cured, the more striking, singular, uncommon and peculiar (characteristic) signs and symptoms-109  of the case of disease are chiefly and most solely to be kept in view; for it is more particularly these that very similar ones in the list of symptoms of the selected medicine must correspond to, in order to constitute it the most suitable for effecting the cure. The more general and undefined symptoms: loss of appetite, headache, debility, restless sleep, discomfort, and so forth, demand but little attention when of that vague and indefinite character, if they cannot be more accurately described, as symptoms of such a general nature are observed in almost every disease and from almost every drug.

 

 

Foot Note-109 : Dr. Von Bonninghausen, by the publication of the characteristic symptoms of homoeopathic medicines and his repertory has rendered a great service to Homoeopathy as well as Dr. J.H.G. Jahr in his handbook of principal symptoms.

 

 

§ 153. ஒரு ஹோமியோபதி மருந்தைத்  தேர்ந்தெடுப்பதில் ஒருவர் என்ன வகையான அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்?

 

மணிமொழி- § 153

 

 

 

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தைத் தேடும் போது ,  அதாவது, அந்த இயற்கை நோயின் முழுமொத்தமான அறிகுறிகளோடு   நாம் அறிந்துவைத்துள்ள  மருந்துகளின் அறிகுறிகளின் பட்டியலுடன் ஒப்பிட்டுப்பார்த்து , அவற்றிலிருந்து நலமாக்க வேண்டிய நோயுடன் ஓத்திருக்கிற அதற்குச் சமமான  ஒரு செயற்கை நோய்ப்பொருளை  கண்டுபிடிப்பதற்கு  , குறிப்பிட்ட அந்த நோயில் காணப்படக்கூடிய  மிகவும் முனைப்பான , தனியான , வழக்கத்திற்கு மாறான  மற்றும் விசித்திரமான (சிறப்பியல்பு அல்லது தனிசிறப்புப்பண்பு) குறிகளையும்  மற்றும் அறிகுறிகளையும்  -109 முதன்மையாகவும்  மற்றும் அவற்றை மட்டிலுமே  கவனத்திற் கொள்ளவேண்டும் ; ஏனென்றால் மிகவும் குறிப்பாக ,தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் அறிகுறிகளின் பட்டியலிலிருந்து மிகவும் ஓத்திருக்கிற குறி  ஒன்றே அந்த   செயற்கை நோயின் குறிகளோடு கட்டாயம்  பொருந்தியிருக்க வேண்டும் . மிகவும் பொதுவான  மற்றும் வரையறுக்கப்படாத அறிகுறிகள், உதாரணமாக பசியின்மை, தலைவலி, தளர்ச்சி , அமைதியற்ற தூக்கம், அசௌகரியம் , மற்றும் இது போன்றவைகள், மிகவும் குறைவான கவனத்தையே ஈர்க்கின்றன.  ஏனென்றால் , தெளிவற்ற மற்றும் காலவரையற்ற தன்மை கொண்டதாகவும் , பொதுவான தன்மையுடைய மிகவும் துல்லிதமாக விவரிக்கமுடியாத  அறிகுறிகளாக இவைகள்  இருப்பதாலும் , பெரும்பாலும் ஒவ்வொரு நோயிலும் மற்றும் ஒவ்வொரு மருந்திலும் இத்தகைய அறிகுறிகள் தென்படுகின்றன.

 

 

அடிக்குறிப்பு-109:

 

மருத்துவர் வான் போயின்னிங்ஹாசன் (1785-1864)  வெளியிட்டுள்ள  "ஹோமியோபதி மருந்துகளின் சிறப்பியல்பு அறிகுறிகள்" மற்றும்  "மருந்துகாண் ஏடு " என்ற   நூல்கள்  மூலமாகவும் அதேபோல்   மருத்துவர்  ஜே.எச்.ஜி. ஜார் (1800-1875) வெளியிட்டுள்ள  "முக்கிய அறிகுறிகளின் கையேடு" என்ற  நூல் மூலமும்  ஹோமியோபதிக்கு சிறந்த சேவையைச் செய்துள்ளார்கள் .

No comments:

Post a Comment