INFLUENZIUM
(INFLU)
ஆசியாவில் பரவிய சளிக்காய்ச்சலின்
(INFLUENZA) கிருமியிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது (நோசோடு =NOSODE).
பல ஹோமியோபதி மருத்துவர்கள், இந்த இன்ஃப்ளூயன்ஸா நோசோடை உலகம் முழுவதும் பரவுகின்ற கொள்ளைநோய் அல்லது பெருவாரியாக பரவுகின்ற நோய்களை
குணப்படுத்த , வழக்கமான கொடுக்கும் பாப்டிசியா (BAPT) மருந்திற்குப் பதிலாக பயன் படுத்துகிறார்கள்.
இம்மருந்தை 12C வீரியம்
அல்லது 30C வது வீரியத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு
இரண்டு மணி நேரத்திற்கும் இதை மீண்டும் மீண்டும்
கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது, அதிக விகிதாசாரத்தில் நோய்வாய்ப்பட்ட பல நோயாளிகளைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்கும்
(DR.J.H.CLARKE). ஒரு குடும்பத்தில் "சளி" (COLDS) தோன்றும் போது பாதிக்கப்படாத
அனைவருக்கும் ஆர்சனிக்கம் ஆல்பம் (ARS) மருந்தை
3C வீரியத்தில் தினமும் மூன்று முறை கொடுக்கலாம்
, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இன்ஃப்ளூயன்ஸாவை 30C வீரியத்தில் ஒரு மணி
நேரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மணி நேரத்திற்கு
ஒரு முறை எடுத்து கொள்ளலாம். இது பொதுவாக தொல்லைகள் பரவுவதைத் தடுக்கிறது மற்றும் "சளி",
அல்லது சளிக்காய்ச்சல் என்று, எந்த வகையாக
நோயாக இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது .
இன்ஃப்ளூயன்ஸா மருந்து
நோயாளிகளின் உடலுக்குள் மறைந்திருக்கும் பழைய
தொல்லைகளை வெளிக்கொணரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் இது வெவ்வேறு நோயாளிகளிடத்தில் எல்லையற்ற வடிவங்களை எடுக்கிறது, ஆனால், எல்லா நோயாளிகளையும்
இம்மருந்து குணப்படுத்தும் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார் மருத்துவர்J.H. கிளார்க்.
மனக்குறிகள்
(MIND):
அவநம்பிக்கை (APATHY)
மற்றும் கவனமின்மை (INDIFFERENCE). மனம் சோர்ந்துவிடுதல் அல்லது மந்தம் (BRAIN
DULLNESS) . மூளைக் களைத்துபோகுதல் (BRAIN
FATIGUE). சளிக்காய்ச்சலுக்குப் பிந்தைய மனஅழுத்த
நரம்புமண்டலக்கோளாறுக்கு (POST-INFLUENZA DEPRESSIVE NEUROSIS) இது மிகச் சிறந்த மருந்து. பலவீனமான நினைவாற்றல்
( DR. ROBIN MURPHY).
தனிச்சிறப்புப்
பண்புக்குறிகள் (CHARACTERISTICS):
Ø இரத்தத்தில் வெள்ளையணுக்கள்
குறைதல் (LEUCOPENIA) , கூடவே ஒற்றை உட்கரு அணுமிகைப்பு இருக்கும்
(MONONEUCLEOSIS).
Ø கண்கள் கனமாக இருக்கும்
மற்றும் கண்களை அசைக்கும் போது கூச்சம் ஏற்படும். கண்களில் விறைப்பு. சளிக்காய்ச்சலின்
(INFLUENZA) போது இமைப்படல அழற்சி ஏற்படும். கண்இமைஅழற்சி (BLEPHARITIS).
Ø மூளைக்காய்ச்சல்
(MENINIGITIS) . மூளை அழற்சி (ENCEPHALITIS) , கூடவே வாந்தியும் இருக்கும். சளிக்காய்ச்சலில்
தலைவலி.
Ø இதயம் சார்ந்த நரம்பு
மண்டலக் கோளாறு. இதய பலவீனம். குறைந்த இரத்த அழுத்தம்.
Ø கால்களுக்கு செல்லக்கூடிய
இரத்தநாளங்களில் மற்றும் தமனியில் இரத்தத்தேக்கம். அசுத்த இரத்தக்குழாய் வீங்கி , முறுக்கிக்கொண்டு
, முண்டுமுடுச்சுடன் காணப்படும் (VARICOSE
VEINS) மற்றும் புண்கள் ஏற்படும் .
Ø வலி தரும் வறண்ட இருமல்
. மூச்சுக்குழாய் ஈளைநோய் (BRONCHIAL ASTHMA). மூச்சுக்குழாய் அழற்சி (BRONCHITIS). சளிக்காய்ச்சல் இருக்கும் போது , மூச்சுக்கிளைக்குழாய்களில்
ஆரம்பித்து சுவாசகோசங்களில் திட்டு திட்டாக சிற்சில இடங்களில் வேக்காடு ஏற்பட்டு அப்பகுதிகள்
கெட்டியாகி விடுதல் (BRONCHOPNEUMONIA).
Ø திடீரெண்டு ஏற்பட்ட அல்லது நாட்பட்ட மண்டைச்சளி. மூக்கு-தொண்டையழற்சி (RHINO-PHARYNGITIS). சளிக்காய்ச்சலின்
போது மூக்கிலிருந்து நீர்க்கொட்டுதல். நெற்றி எலும்புப்புழை அழற்சி (SINUSITIS).
மூக்கினுள்
தசைவளர்ச்சி.
Ø சீரணமண்டல பாதையில்
வலி. பலவீனத்தைத்தரும் வயிற்றுப்போக்கு.
Ø தொண்டையழற்சி. நாட்பட்ட
குரல்வளை அழற்சி . குழந்தைகளுக்கு , கேட்க
பொறுக்காத அளவிற்கு குரல்வளை அழற்சி இருக்கும்.
சளிக்காய்ச்சலின்
போது குரல்வளை அழற்சி .
தொல்லைகள்
கூடுதல்:
குளிர்ச்சியான, பனிபடர்ந்த
மற்றும் ஈரமான பருவ காலங்களில் தொல்லைகள் அதிகரிக்கும். குறிப்பாக மோசமான பருவநிலையில்
வாதநோய் வலிகள் அதிகமாகும்.
தொல்லைகள்
குறைதல்:
குளிச்சியினால் தொல்லைகள்
குறையும்; குறிப்பாக வலிகள் குறையும்.
வீரியங்கள்:
இம்மருந்தை 12C வீரியம்
அல்லது 30C வது வீரியத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு
இரண்டு மணி நேரத்திற்கும் இதை மீண்டும் மீண்டும்
கொடுக்கலாம். அதேபோல் , பத்து உருண்டைகளை எடுத்து ஆறு அவுன்ஸ் தண்ணீரில் கலந்தும் ஒரு
மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.
ஒத்த
மருந்துகள் (RELATED) : GELS.,
OSCILLOC., MIM-P., GALPH., LUF-OP.
இணக்கமான
மருந்துகள் (COMPATIBLE): GELS., CIMIC., ARS., BELL., BRY., HEP., MERC.
கருத்துக்கள்
(REMARKS): சளிக்காய்ச்சலுக்கு
இதை தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம் (ARS., ARS-I., NUX-V).
இக்கட்டுரை
எழுத உதவிய நூல்கள்:
1.
A Dictionary of Practical Materia Medica-
Dr.J.H.CLARKE.
2.
Lotus Materia Medica- Dr. Robin Murphy.
3.
Complete Dynamics Online Repertory.
4.
மருத்துவக்
கலைச் சொற்கள்- மருத்துவர். சாமி சண்முகம்.
5.
மருத்துவச்
சொல் அகராதி - மருத்துவர். கி.அம்பலவாணன்.
No comments:
Post a Comment