ஆர்கனான் மணிமொழி-73
§ 73
As regards acute diseases, they are
either of such a kind as attack human beings individually, the exciting cause
being injurious influences to which they were particularly exposed. Excesses in
food, or an insufficient supply of it, severe physical impression, chills, over
heatings, dissipation, strains, etc., or physical irritations, mental emotions,
and the like, are exciting causes of such acute febrile affections; in reality,
however, they are generally only a transient explosion of latent psora, which spontaneously
returns to its dormant state if the acute diseases were not of too violent a
character and were soon quelled. Or they are of such a kind as attack several
persons at the same time, here and there (sporadically), by means of meteoric
or telluric influences and injurious agents, the susceptibility for being
morbidly affected by which is possessed by only a few persons at one time.
Allied to these are those diseases in which many persons are attacked with very
similar sufferings from the same cause (epidemically); these diseases generally
become infectious (contagious) when they prevail among thickly congregated
masses of human beings. Thence arise fevers-71,
in each instance of a peculiar nature, and, because the cases of disease have
an identical origin, they set up in all those they affect an identical morbid
process, which when left to itself terminates in a moderate period of time in
death or recovery. The calamities of war, inundations and famine are not
infrequently their exciting causes and producers - sometimes they are peculiar
acute miasms which recur in the same manner (hence known by some traditional
name), which either attack persons but once in a lifetime, as the smallpox,
measles, whooping-cough, the ancient, smooth, bright red scarlet fever-72 of Sydenham, the mumps, etc.,
or such as recur frequently in pretty much the same manner, the plague of the
Levant, the yellow fever of the sea-coast, the Asiatic cholera, etc.
FN-71 : The homoeopathic physician,
who does not entertain the foregone conclusion devised by the ordinary school
(who have fixed upon a few names of such fevers, besides which mighty nature
dare not produce any others, so as to admit of their treating these disease
according to some fixed method), does not acknowledge the names gaol fever,
bilious fever, typhus fever, putrid fever, nervous fever or mucous fever, but
treats them each according to their several peculiarities.
FN-72: Subsequently to the year 1801 a kind of pupura
miliaris (roodvonk), which came from the West, was by physicians confounded
with the scarlet fever, notwithstanding that they exhibited totally different
symptoms, that the latter found its prophylatic and curative remedy in
belladonna, the former in aconite, and that the former was generally merely
sporadic, while the latter was invariable epidemic. Of late years it seems as
if the two occasionally joined to form an eruptive fever of a peculiar kind,
for which neither the one nor the other remedy, alone, will be found to be
exactly homoeopathic.
ஆர்கனான் மணிமொழி-73
§ 73
தனி மனிதர்களைத் தாக்கும் திடீர்
அல்லது தீவிர நோய் என்பது இங்கும் அங்கும் நிகழ்கிற ஒன்றாகவும் , தொற்றுநோய் அல்லது பெருவாரியாக பரவுகின்ற
நோயாகவும் , தீவிர மியாசத்தைச் கொண்டுள்ளது.
திடீர் வகை அல்லது கடுமையான நோய்களைப் பொறுத்தவரை, அவை மனிதர்களை
தனித்தனியாக தாக்குகிறது , குறிப்பாக
நோயிற்கு ஆட்படும் தன்மையுள்ளவர்களுக்கு , தூண்டும் காரணிகளாக தீங்கு
விளைவிக்கும் தாக்கங்கள் இருக்கிறது. ஒரு
வகையில் அளவு மீறிய உணவை உட்கொள்ளுதல் , போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, கடுமையான
உடல் வேதனைகள், குளிரில் அடிபடுதல், அதிகச் சூடுள்ள இடங்களில் அல்லது வெய்யிலில்
வேலை செய்தல், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை , உழைப்பினால் ஏற்பட்ட களைப்பு போன்ற
சிலவும். அல்லது அல்லது உடல் எரிச்சல், மன உணர்ச்சிகள் மற்றும் அவற்றைப் போன்ற காரணங்களும், தூண்டும்
காரணிகளாக இருந்து கடுமையான காய்ச்சல் போன்ற திடீர் நோய்களை உருவாக்குகின்றன .
இருப்பினும், உண்மையில், உடலின்
உடபுறத்தே உறங்கிக் கிடக்கும் சோரா எனப்படும் விஷ நோய்க்கூறு விழித்துக்கொண்டது
தான் மூல காரணமாகும். இந்தத் திடீர் வகை நோய் மிகக் கடுமையானதாக இல்லாத
போதும் அல்லது விரைவிலே ஒடுக்கப்படுகின்ற
போதும் அந்த சோரா விஷ நோய்க்கூறு பழையபடி
செயலற்றுக் கிடைக்கும் நிலைக்குத் திரும்புகிறது. அல்லது
அந்நோய்கள் ஒரே நேரத்தில் பல நபர்களைத்
தாக்குவது போன்றவையாகவும் , இங்கேயும் அங்கேயும் (அவ்வப்போது நிகழ்கின்ற),
காற்றுமண்டலச் சூழ்நிலைசார்ந்த அல்லது
புவி சார்ந்த மற்றும் தீங்கு
விளைவிக்கும் பொருள்கள் மூலம், நோய்
ஏற்புத்தன்மைக்கு உள்ளாகும் ஒரு சில
நபர்களுக்கு ஒரே சமயத்தில் தாக்கும்
நோயாகும். இவற்றுடன் தொடர்புடைய பல நோய்கள் ஒரே நேரத்தில் ஒரே
வகைப்பட்ட நோய்த்துன்பங்களுடனும்,
மிகவும் ஒத்த காரணத்தைக் கொண்டவையாகவும் ( தொற்றிப்பரவும் முறையில்) தாக்கப்படுகின்றன; இந்த நோய்கள் பொதுவாக
மனிதர்களின் கூட்டம் பெருந்திரளாக உள்ள அடர்த்தியான இடங்களில் இவை தொற்றுநோயாக (தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக்கூடிய
) மாறுகின்றன, இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு விசித்திரமான
இயல்புடைய காய்ச்சல் -71
உண்டாக்குகின்றன, ஏனென்றால் , இந்த
நோய்களின் வகைகள் ஒரே மாதிரியான
தோற்றத்தைக் கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படும் எல்லோரும் ஒரே மாதிரியான நோயுற்ற விளைவுகளை
உருவாக்குகின்றன , இதை மருத்துவம் செய்யாமல் விட்டுவிட்டால் அந்த நோய் ஒரு மிதமான காலத்தில் தானாகவே
அழிந்துவிடுகிறது அல்லது நோயாளி
உடல்நலத்திற்குத் திரும்புகிறார். யுத்தங்களின்
பாதிப்பு , வெள்ளப்பெருக்கு மற்றும்
பஞ்சம் ஆகியவற்றின் பேரழிவுகள் போன்ற நிகழ்வுகள்
நோய் மிகுவிப்பு காரணியாகவும்
, சில நேரங்களில் அவை விசித்திரமான
கடுமையான (தீவிர) நோய்களை உருவாக்க
காரணமாகவும் இருக்கின்றன, அவை ஒரே
மாதிரியாக மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன
(எனவே சில பாரம்பரிய பெயர்களால் அறியப்படுகின்றன), ஆனால் அந்நோய்கள் மனிதர்களின்
வாழ்நாளில், ஒரு முறை தான்
தாக்குபவைகளாக இருக்கின்றன , அவை, பெரியம்மை, தட்டம்மை, கக்குவான் இருமல், சிடன்ஹாமின் (Sydenham) பண்டைய, மென்மையான, பிரகாசமான சிவந்த செம்புள்ளி நச்சுக்காய்ச்சல்
-72, புட்டாளம்மை போன்றவை ஆகும் ,
அல்லது அடிக்கடியும், பெரும்பாலும் ஒரே
இயல்புடன் மீண்டும் மீண்டும் தோன்றுபவையாகவும் உள்ள லெவண்டின் (Levant ) நகரத்தின் பிளேக் என்னும் கொள்ளைநோய் , கடற்கரை
ஓரங்களில் தோன்றும் மஞ்சள்
காய்ச்சல், ஆசிய கண்டத்தின் வாந்திபேதி போன்ற நோய்களாகும்.
அடிக்குறிப்பு-71:
சாதாரண மருத்துவப் பள்ளியை (அலோபதி) சேர்ந்தவர்கள் (அத்தகைய காய்ச்சல்களுக்கு நிலையான சில பெயர்களை சூட்டுவதைப்போலவும் , இது தவிர
வலிமைமிக்க இயற்கை வேறுவகையான
சாய்ச்சல்களை உண்டாக்க முடியாது என்றும் , இதனால் அக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சில நிலையான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று கருதுவது போல் ), ஒரு ஹோமியோபதி மருத்துவர் அவ்வாறான முடிவுகளை
ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே அவர், சிறைச்சாலையில் தொற்று நோயாயிருந்து வந்த கடுமையான குடற்க்காய்ச்சல்,
பித்த காய்ச்சல், நச்சுக்
காய்ச்சல்,கெடுதலான (படு மோசமான) காய்ச்சல், நரம்பு காய்ச்சல் அல்லது சளி
காய்ச்சல் என்ற பெயர்களில் நோய்களாக அழைப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால்
அவற்றில் காணப்படும் பல்வேறான
தனித்தன்மைகளுக்கு தகுந்தவாறு மருத்துவம் செய்வார் .
அடிக்குறிப்பு-72:
அடுத்து, 1801 ஆம் ஆண்டிற்குப்
பிறகு, மேற்கு நாடுகளில் இருந்து வந்த " மக்காசோளம் போன்ற எழுச்சியுடன்
தோலுக்கு அடியில் இரத்தம் திட்டு திட்டாக சேரும் " ஒரு வகையான காய்ச்சலை [ pupura
miliaris (roodvonk)] , செம்புள்ளிக் காய்ச்சளுடன் சேர்த்து குழப்பி கொள்கிறார்கள்.
அவ்விரு நோய்களும் வெவ்வேறு வகையான ,
மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தாலும், பிந்தைய நோயான
செம்புள்ளிக் காய்ச்சலைக் குணமாக்குவதற்கும் மற்றும் அதன் நோய் தடுப்பு
மருந்தாகவும் பெல்லடோனா இருக்கிறது , ஆனால் முதல்
வகையான காய்ச்சலுக்கு அகோனைட் சிறந்த மருந்தாக இருக்கிறது, மற்றும் முந்தைய நோய் பொதுவாக அரிதாகவே (அவ்வப்போது) நிகழ்வதாக இருந்தது,
மாறாக பிந்தைய நோய் தொற்றிப்பரவும்
தொற்றுநோயாகும். பிற்காலத்தில் ,
அவ்விரு நோய்களும், சில சமயங்களில்
ஒன்றாகச் சேர்ந்து ஒரு புதிய விசித்திரமான
தோல்சினைப்புக் காய்ச்சலாகப் பரவுவது
காணப்பட்டது. , அப்போது அந்த இரண்டு
மருந்துகளில் ஏதாவது ஒன்று அல்லது
மற்றொன்று மட்டுமே அந்தநோய்க் குறிகளின் அடிப்படையில் தகுந்த ஹோமியோபதி மருந்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment