Monday, 23 March 2020

ஆர்கனான் மணிமொழி-70


ஆர்கனான் மணிமொழி-70
§ 70

From what has been already adduced we cannot fail to draw the following inferences:

That everything of a really morbid character and which ought to be cured that the physician can discover in diseases consists solely of the sufferings of the patient, and the sensible alterations in his health, in a word, solely of the totality of the symptoms, by means of which the disease demands the medicine requisite for its relief; while, on the other hand, every internal cause attributed to it, every occult quality or imaginary material morbific principle, is nothing but an idle dream;

That this derangement of the state of health, which we term disease, can only be converted into health by another revolution effected in the state of health by means of medicines, whose sole curative power, consequently, can only consist in altering man's state of health - that is to say, in a peculiar excitation of morbid symptoms, and is learned with most distinctness and purity by testing them on the healthy body;

That, according to all experience, a natural disease can never be cured by medicines that possess the power of producing in the healthy individual an alien morbid state (dissimilar morbid symptoms) differing from that of the disease to be cured (never, therefore, by an allopathic mode of treatment), and that even in nature no cure ever takes place in which an inherent disease is removed, annihilated and cured by the addition of another disease dissimilar to it, be the new one ever so strong;

That, moreover, all experience proves that, by means of medicines which have a tendency to produce in the healthy individual an artificial morbid symptom, antagonistic to the single symptom of disease sought to be cured, the cure of a long-standing affection will never be effected, but merely a very transient alleviation, always follows by its aggravation; and that, in a word, this antipathic and merely palliative treatment in long-standing diseases of a serious character is absolutely inefficacious;

That, however, the third and only other possible mode of treatment (the homoeopathic), in which there is employed for the totality of the symptoms of a natural disease a medicine capable of producing the most similar symptoms possible in the healthy individual, given in suitable dose, is the only efficacious remedial method whereby diseases, which are purely dynamic deranging irritations of the vital force, are overpowered, and being thus easily, perfectly and permanently extinguished, must necessarily cease to exist. This is brought about by means of the stronger similar deranging irritation of the homoeopathic medicine in the sensation of the life principle. - and for this mode of procedure we have the example of unfettered Nature herself, when to an old disease there is added a new one similar to the first, whereby the new one is rapidly and forever annihilated and cured.

ஆர்கனான் மணிமொழி-70

ஹோமியோபதி நலமாக்கல் முறை பற்றிய சிறிய விளக்கம்.

இதுவரை கூறப்பட்ட அனைத்து விபரங்களிலிருந்து நாம் தவறாமல் பின்வரும் அனுமானங்களுக்கு வந்தாக வேண்டும்.

நோய்களில், மருத்துவர்  கண்டறியக்கூடிய எல்லாவற்றையும் , அதாவது குணப்படுத்த வேண்டியதாக உள்ள அனைத்தும் நோயாளியின் உண்மையான நோய்த் தன்மையாகும், அது   நோயாளியின் முழுத்   துன்பங்களையும்  உள்ளடக்கியதாகவும் , மற்றும்  அவரது  நலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டுபவையாகவும் இருக்கிறது, ஒரே  வார்த்தையில் கூறவேண்டுமென்றால்,  அவரது  ஒட்டுமொத்தக் குறிகளாகும்,   அதாவது , நோய் அதன் நிவாரணத்திற்கு தேவையான மருந்தைக் கோருகிறது என்பதாகும்; அதே நேரத்தில், மறுபுறம், அதற்குக் கூறப்படும் ஒவ்வொரு உள்  காரணமும், ஒவ்வொரு மறைந்திருக்கும் காரணமும்  அல்லது கற்பனை சார்ந்து கூறப்படும்  நோய்க் கொள்கையும் ஆகிய எல்லாமே நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு பயனற்றக்  கனவைத் தவிர வேறில்லை.

எனவே, நாம் நோய் என்று சொல்லும் ஆரோக்கிய நிலையின் ஒழுங்குழைவு அல்லது சீர்குலைவை , உடலின் ஆரோக்கிய  நிலையில் நிருபிக்கப்பட்ட மருந்துகளின் மூலம் மற்றொரு அடிப்படை மாறுபாடு ஏற்படுத்துவதன் வழியாக மட்டுமே இந்த நோய் நிலையை ஆரோக்கிய நிலையாக மாற்றி அமைக்க முடியும். ஆனால் அம்மருந்துப் பொருள்களின் குணமாக்கும் ஆற்றல் என்பது  , மனிதர்களின்  உடல்நலத்தில் அவை தோற்றுவிக்கும் மாற்றத்தை , அதாவது தனித்தன்மையுடன் கிளர்ந்து எழுகிற நோய்க்குறிகளைப் பொறுத்தே அமைகிறது என்பதை ஆரோக்கியமான மனிதர்களுக்கு அம்மருந்தை கொடுத்து  தனிச்சிறப்பாகவும் , தூயமுறையிலும் ஆய்வு செய்வதன் வழியாக அவர்களிடத்தில் வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு நாம் கற்றுக் கொள்ளமுடியும்.

நோயற்ற ஒருவர் உடலில் நீக்கப்படவேண்டிய இயற்கை நோயின் குறிகளுக்கு மாறான நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள (ஒத்த தன்மையில்லாத நோய்க்குறிகள்   ) மருந்துகளால், அந்த இயற்கை  நோயை மருத்துவரால் ஒருபோதும்  குணம் செய்ய முடியாது என்பதை எல்லா பட்டறிவுகளும் காட்டுகின்றன (ஆகவே , அலோபதி மருத்துவச் சிகிச்சையின் அடிப்படையில் நோய்கள் ஒருபோதும் குணமாவதில்லை) . மற்றும் , புதிதாகத் (இரண்டாவதாகத்) தரப்படும் ஹோமியோபதி மருந்து அது  எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும்,  முதலாவதாகத் தோன்றிய நோயுடன் (குறிகளில்) ஒற்றுமையுள்ளதாக இல்லா விட்டால், அதனால் நோயாளியின் உடலில் உள்ளார்ந்து நிலைத்திருக்கும் முதல் நோயை முற்றிலும் நீக்கவோ , அழிக்கவோ அல்லது குணம் செய்யவோ அந்த  ஹோமியோபதி மருந்தினால் முடியாது என்பதை இயற்கையில் நாம் காண்கிறோம்.


நலமான நிலையில் உள்ள ஒருவரிடம் செயற்கையான நோய்க்குறிகளை உண்டாக்கும் மருந்துகளைக் கொண்டு நீண்டகாலமாக உள்ள ஒரு நோய் நிலையில் , நீக்கப்படவேண்டிய நோயின் குறிகளில் ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அக்குறிக்கு நேர் எதிரான மருந்தினைக் கொடுக்கும் போது , நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அந்த  நோயை எக்காலத்திலும் குணம் செய்ய முடியவே முடியாது. அத்தருணங்களில்  நோய் சிறிது காலம் தான் அடங்கி இருக்கும், பிறகு தவறாமல் கடுமையான அளவில் திரும்பிவரவே செய்யும் . சுருக்கமாக கூறுவது என்னவென்றால் தற்காலிகமாக  நோய்த் தணிவிப்பைத் தரும்  ஆற்றலற்ற  மருத்துவ சிகிச்சையினால்,  நீண்டகாலமாக நிலைத்திருக்கும் நோய்களுக்கு எந்த பயனும் விளையாது என்பதை எல்லாப் பட்டறிவுகளும் நிருபிக்கிறது.


இயற்கையான நோயின் ஒட்டுமொத்தக் குறிகளுக்கும் ஓத்திருக்கிற குறிகளை நலம் வாய்ந்த மனிதரிடம் எந்த மருந்து தோற்றுவிக்கிறதோ, அம்மருந்தைப் பொருத்தமான மருந்தளவில் தருவதால் நோயாளிக்கு நலத்தைத் தரும் மிகவும் பயனுள்ளதாக உள்ள ஒரே மருத்துவ முறையே, மூன்றாவதாக வரும் சரியான மருத்துவச்சிகிச்சை முறையாகும் ( ஹோமியோபதி ). இம்மருத்துவம், இயக்கநிலையில் உள்ள உயிராற்றலில்  உறுத்தல்களை உண்டாக்கும் நோய்களை அடக்கி ஆள்வதால் , அந்நோய்கள்  எளிதாகவும், முழுமையாகவும் மற்றும் நிரந்தரமாகவும் அழிக்கப்பட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றது. இது,  ஹோமியோபதி மருந்துகளின் மூலம் உயிரின் தனித்தன்மை வாய்ந்த ஆற்றலின் (life principle) விளைவாக  உணர்வு நிலையில் வலிமைமிக்கதாகவும் , ஒத்துள்ளதாகவும் உள்ள உறுத்தல்களை உண்டாக்கி நலப்படுத்துகிறது. இந்த நடைமுறைக்கு, தடையற்ற இயற்கையின் எடுத்துக்காட்டு நம்மிடம் உள்ளது, ஏற்கனவே இருக்கின்ற ஒரு இயற்கையான ஒரு பழைய நோயுடன்  ,  அதை ஒத்திருக்கும்  புதிய நோய்  சேரும் போது,  அப்புதிய நோயை விரைவாகவும்  நிலையாகவும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டு குணம் உண்டாக்குவதைக் காணமுடிகிறது.





No comments:

Post a Comment