Monday, 23 March 2020

ஆர்கனான் மணிமொழி-72


ஆர்கனானின் இரண்டாம்  பகுதி

ஆர்கனான் மணிமொழி-72


With respect to the first point, the following will serve as a general preliminary view. The disease to which man is liable are either rapid morbid processes of the abnormally deranged vital force, which have a tendency to finish their course more or less quickly, but always in a moderate time - these are termed acute diseases; - or they are diseases of such a character that, with small, often imperceptible beginnings, dynamically derange the living organism, each in its own peculiar manner, and cause it gradually to deviate from the healthy condition, in such a way that the automatic life energy, called vital force, whose office is to preserve the health, only opposes to them at the commencement and during their progress imperfect, unsuitable, useless resistance, but is unable of itself to extinguish them, but must helplessly suffer (them to spread and) itself to be ever more and more abnormally deranged, until at length the organism is destroyed; these are termed chronic diseases. They are caused by infection with a chronic miasm.


தீவிர (அல்லது திடீர்) மற்றும் நாட்பட்ட (அல்லது நீண்டகால) நோய்கள் பற்றிய பொதுவான மதிப்பீடு.



முதல் செய்தி கூறுபாட்டைப் ( மணிமொழி-71  )  பொறுத்தவரை, பின்வருபவை பொதுவான பூர்வாங்கமான  கோட்பாடாக இருக்கிறது.

உயிராற்றல் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவதால் நோய்க்குறிகள் மிக வேகமாய்த் தோன்றி,  ஒரு சில நாட்களில் ஏறத்தாழ விரைவாக அல்லது குறைந்த நாட்களில் மறைந்து விடுகின்றன, ஆனால் எப்போதும் மிதமான காலஅளவை எடுத்துக் கொள்கிறது, அதனால் அவை தீவிர அல்லது கடுமையான (அல்லது திடீர் / உடனடி ) நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.  அல்லது  சில நோய்களின் ஆரம்பம் சிறிய அளவிலும்  , பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாத தொடக்கங்களுடன், உயிர் வாழும் உயிரியின் இயக்கநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி  ஒவ்வொன்றும் தனித்துவமான முறையில் இருக்கும்  வகையில் மாற்றியமைத்து , ஆரோக்கிய நிலைமையில் படிப்படியாக மாறுதல்கள் தோன்றும்படிச் செய்கிறது. அதனால்  தானே இயங்குகிற  உயிர்ப்புச்சக்தி , அதாவது உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள உயிராற்றல் , நோயின் ஆரம்பத்திலும் மற்றும் அது அதிகரித்து   முன்னேறும் காலத்திலும் அதனை எதிர்க்க முற்படுகிறது. ஆனாலும் அந்த எதிர்ப்பு  ஒழுங்காகவும் , பொருத்தமில்லாததாகவும்   ,  பயனற்றதாகவும்  இருப்பதால்  அந்த நோயை வெளியேற்ற முடியாமல்  இருந்து விடுகிறது. அதனால்  நோயைப் போக்கச் சக்தியற்று ( எனவே நோய் பரவச்  செய்யுமாறு) , தானே அதன் பிடியில் சிக்கி  மேலும் மேலும் இயற்கைக்கு மாறான வகையில் குழம்பிப்போய் , அது நீடித்து  இறுதியில் உயிரியே (அல்லது உறுப்பமைவு ) அழிந்து விடுகிறது. இதுவே நாட்பட்ட அல்லது நீண்டகால நோய்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நோய்களுக்கு  நாட்பட்ட மியாசங்களின் ( சோரா, சைக்கோசிஸ் மற்றும் சிபிலிஸ்)  தொற்று காரணமாக இருக்கிறது. 


No comments:

Post a Comment