ஆர்கனான் மணிமொழி-69
§ 69
In the
antipathic (palliative) mode of treatment, however precisely the reverse of
this takes place. The medicinal symptom which the physician opposes to the
disease symptom (for example, the insensibility and stupefaction caused by
opium in its primary action to acute pain) is certainly not alien, not
allopathic of the latter; there is a manifest relation of the medicinal symptom
to the disease symptom, but it is the reverse of what should be; it is here
intended that the annihilation of the disease symptom shall be effected by an
opposite medicinal symptom, which is nevertheless impossible. No doubt the
antipathically chosen medicine touches precisely the same diseased point in the
organism as the homoeopathic medicine chosen on account of the similar affection
it produces; but the former covers the opposite symptom of the disease only as
an opposite, and makes it unobservable to our life principle for a short time
only, so that in the first period of the action of the antagonistic palliative
the vital force perceives nothing disagreeable from either if the two (neither
from the disease symptom nor from the medicinal symptom), as they seem both to
have mutually removed and dynamically neutralized one another as it were (for
example, the stupefying power of opium does this to the pain). In the first
minutes the vital force feels quite well, and perceives neither the
stupefaction of the opium nor the pain of the disease. But as the antagonistic
medicinal symptom cannot (as in the homoeopathic treatment) occupy the place of
the morbid derangement present in the organism in the sensation of the life
principle as a similar, stronger (artificial) disease, and cannot, therefore,
like a homoeopathic medicine, affect the vital force with a similar artificial
disease, so as to be able to step into the place of the original natural morbid
derangement, the palliative medicine must, as a thing totally differing from,
and the opposite of the disease derangement, leave the latter uneradicated; it
renders it, as before said, by a semblance of dynamic neutralization,68 at first unfelt by the vital force, but,
like every medicinal disease, it is soon spontaneously extinguished, and not
only leaves the disease behind, just as it was, but compels the vital force (as
it must, like all palliatives, be given in large doses in order to effect the
apparent removal) to produce an opposite condition (§§ 63,64) to this
palliative medicine, the reverse of the medicinal action, consequently the
analogue of the still present, undestroyed, natural morbid derangement, which
is necessarily strengthened and increased-69
by this addition (reaction against the palliative) produced by the vital force.
The
disease symptom (this single part of the disease) consequently becomes worse
after the term of the action of the palliative has expired; worse in proportion
to the magnitude of the dose of the palliative. Accordingly (to keep to
the same example) the larger the dose of opium given to allay the pain, so much
the more does the pain increase beyond its original intensity as soon as the opium has exhausted its action.70
FN 68 In the living human being no permanent
neutralization of contrary or antagonistic sensations can take place, as
happens with substances of opposite qualities in the chemical laboratory,
where, for instance, sulphuric acid and potash unite to form a perfectly
different substance, a neutral salt, which is now no longer either acid or
alkali, and is not decomposed even by heat. Such amalgamations and thorough
combinations to form something permanently neutral and indifferent do not, as
has been said, ever take place with respect to synamic impressions of an
antagonistic nature in our sensific apparatus. Only a semblance of
neutralization and mutual removal occurs in such cases at first, but the
antagonistic sensations do not permanently remove one another. The tears of the
mourner will be dried for but a short time by a laughable play; the jokes are,
however, soon forgotten, and his tears then flow still more abundantly than
before.
FN 69 Plain as this proposition is, it has been
misunderstood, and in opposition to it some have asserted that the
palliative in its secondary action, would then be similar to the disease
present, must be capable of curing just as well as a homoeopathic medicine does
by its primary action. But they did not reflect that the secondary action
is not a product of the medicine, but invariably of the antagonistically acting
vital force of the organism; that therefore this secondary action resulting
from the vital force on the employment of a palliative is a state similar to
the symptoms of the disease which the palliative left uneradicated, and which
the reaction of the vital force against the palliative consequently increased
still more.
FN 70 As when
in a dark dungeon, where the prisoner could with difficulty recognize objects
close to him, alcohol is suddenly lighted, everything is instantly illuminated
in a most consolatory manner to the unhappy wretch; but when it is
extinguished, the brighter the flame was previously the blacker is the night
which now envelopes him, and renders everything about him much more difficult
to be seen than before.
ஆர்கனான் மணிமொழி-69
எதிர்நிலையான மருத்துவச் சிகிச்சை முறையினால்
தீமைகள் ஏற்படுவது எப்படி? ஏன்?
எனினும்,
நோயிற்கு நேர் எதிரான மருந்துகளைக் கொடுக்கும் (நோய்த் தணிவிப்பு) சிகிச்சை
முறையில் மேலுள்ளதற்கு நேர் எதிரான செயல் நடைபெறுகிறது. நோய்க் குறியை
எதிர்ப்பதற்காக மருத்துவர் உபயோகிக்கும்
மருந்தின் குறி (உதாரணமாக அபினியின் முதல்
நிலை செயல்பாட்டில் தோன்றும்
உணர்ச்சியிழத்தல் மயக்கம் ஆகிய குறிகளைக் கொண்டு கடுமையான வலியை எதிர்ப்பது)
நிச்சயமாக
அன்னியமானது அல்ல, முழுமையான நிலையில்
அலோபதி முறைப்பட்டதாகவும் இல்லை ; நோய் அறிகுறிக்கும் மருந்தின்
அறிகுறிக்கும் இடையே தெளிவாக
வெளிப்படும் உறவுநிலை காணப்படுகிறது ,
ஆனால் அது என்னவாக இருக்க வேண்டும் என்பதன் தலைகீழ் முறையிலே அமைந்துள்ளது ; இங்கு
நோயின் அறிகுறியை
நிர்மூலமாக்குவதற்கு மருந்தின்
எதிரான அறிகுறியைப் பயன்படுத்துவதாக இங்கு கருதப்படுகிறது, இருப்பினும் இது
சாத்தியமற்றது. நோயிற்கு
நேர் எதிரான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட
இம் மருந்தும் , ஒத்திருக்கும் ஹோமியோபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மருந்தைப்போலவே உயிரியின்
அதே நோயுற்ற புள்ளியைத் துல்லியமாகத் தொடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எதிர்நிலையான மருந்து நோய்க் குறிக்கு எதிராக வேலை செய்து அந்த
நோய்க்குறியை சிறிது நேரம் மறைத்து வைக்கிறது. மருந்தின் முதல் நிலை செயல்பாடு நடைபெறும் காலத்தில் நோய்க்குறியும் மருந்தின்
குறியும் ஒன்றையொன்று அடக்கிவிட்டது போல் தோன்றுவதால் நமது உயிரின் தனித்தன்மை
வாய்ந்த ஆற்றல் ( VITAL PRINCIPLE) அதனை உணர முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே , எதிரான (நோயிற்கு) நோய்தணிவிப்பு முறையின்
முதற்கட்டச் செயல்பாட்டின் போது ( நோயிலிருந்து தோன்றிய குறிகள் அல்லது மருந்திலிருந்து தோன்றிய
குறிகள் ஆகிய ) இரண்டின் குறிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத எதையும் உயிராற்றல்
காண்பதில்லை. ஏனெனில் , அவை இரண்டும்
ஒன்றோடு ஒன்று ஒத்துக்கொண்டு நீங்கி விடுகிறது மற்றும் இயக்கமான நிலையில்
சரிக்கட்டி (சமன்படுத்தி) விடுவதாகத் தெரிகிறது ( உதாரணமாக , உணர்விழக்கச்
செய்யும் அபினியின் ஆற்றலே -வலியையும் போக்குகிறது) . முதல் சில நிமிடங்களில் எல்லாம் நன்றாக இருப்பதாக
உயிராற்றல் உணர்கிறது, மேலும் அது அபினியால் ஏற்பட்ட உணர்விழப்பையோ அல்லது நோயின் வலியையோ உணரவில்லை. ஆனால் எதிர்க்குணமுள்ள மருந்துக்கு (ஹோமியோபதி மருத்துவத்தைப்
போன்று ) இயற்கை நோயை விரட்டி விட்டு உயிராற்றலை
தாக்கும் குணம் அதற்கு இல்லை. முதலில் நோய்க் குறியை அடக்குவது போல் வேலை
செய்து முடிவில் அதை நீக்க முடியாமல் நோயிற்கு நேர் எதிரான மருந்து உடலைவிட்டு வெளியேற்றப்படுகிறது.
எனவே, ஹோமியோபதி மருந்தின் செயல்பாடு அமைவதை போல்
இங்கு ஒத்துள்ள செயற்கை நோயை உண்டாக்க முடிவதில்லை. எனவே அது மூலமானதும்,
இயற்கையானதும் ஆகிய அந்த நோய்ச்சிதைவு என்னும் இடத்தைப்பெறும் முயற்சியுடன் , அந்த
நோய்ச்சிதைவுக்கு முற்றிலும் வேறுபட்டதாகவும் , எதிரான ஒன்றாகவும் அமைந்தும் ,
அங்குள்ள நோயை அழிக்க முடியாமலும், அதை முன்னர் கூறியவாறு அதே நிலையில்
இருக்குமாறு செய்தும் இயக்கமுறைப்பட்ட சமனப்படுத்துதலுக்கு ஒத்தநிலையில்
செயலாற்றுகிறது-68.
இந்த நிலையை முதலில் உயிராற்றலால் உணர முடிவதில்லை
, ஆனால், ஒவ்வொரு மருந்தினால் தோற்றுவிக்கப்படும்
நோய் விரைவில் தன்னிச்சையாக
அழிக்கப்படுவதைப் போலவே , அம்மருந்தின்
செயல்பாடும் உடனடியாக அழிக்கப்பட்டு , அங்கே அந்த இயற்கை நோய் அப்படியே
எஞ்சியிருக்குமாறு விடப்படுகிறது, ஆனால்
அது உயிராற்றலை ( நோய்த்தணிவிப்பு மருந்துகளை அதிகமான அளவில் கொடுத்து நோய் நீங்கி
விட்டது போன்ற நிலை ஏற்படுவது போன்று ) அந்த நோய்த்தணிவிப்பு மருந்தின் செயலைப் பின்னுக்குத் தள்ளி அதற்கு
எதிரான செயலை உருவாக்கத் தூண்டுகிறது(§§ 63,64), இதன்
விளைவாக, அழிக்கப்படாத, இயற்கையான
நோயின் சீரழிவு அங்கே அப்படியே
தங்குவதோடு , உயிராற்றலின் செயலுக்கு
ஏற்றவாறு மேலும் ஒன்று கூடி (நோய்த்தணிவிப்பு மருந்திற்கு எதிரான எதிர்வினை) , அங்கு அழிக்கப்படாமல்
இருக்கும் இயற்கை நோயும் பலம் பெற்று
மேலும் அதிகரித்து விடுகிறது-69. அந்த நோய்த்தணிவிப்பு மருந்தின்
செயல்பாட்டுக் காலம் முடிவடைந்தவுடன் நோயின்
அறிகுறி (நோயின் இந்த ஒற்றை பகுதி) இன்னும் மோசமாகிறது. இவ்வாறு மோசமடைவது அந்த நோய்த்தணிவிப்பு மருந்தின் அளவிற்கு பொருத்தமாக அமைந்த
பரிமாணத்திற்கு தகுந்தவாறு இருக்கிறது.
அதன்படி
(அதே எடுத்துக்காட்டுக்கு ஏற்ப ) வலியைக் குறைக்க ம் அபினி மருந்தை எந்த அளவிற்கு
கொடுத்துமோ அந்த அளவுப் பெருக்கத்திற்கு
ஏற்றவாறு அபினியின் செயல்பாடு
முடிவடைந்தவுடன் , அந்த வலி அதன் மூலமுதலான
தீவிரத்தை காட்டிலும் இன்னும் அதிகரித்து விடுகிறது-70.
அடிக்குறிப்பு-68:
வேதியியல்
ஆய்வகத்தில் எதிர் எதிரான பண்புகளைக் கொண்ட
இரு பொருள்களுடன் நிகழும் மாற்றத்தைப் போல , உயிருள்ள மனிதர்களிடத்தில்
அதிர் எதிரான அல்லது முரண்பட்ட உணர்வுநிலைகள் ஒன்றோடு ஒன்று சமணப்படுத்திக்
கொள்வதில்லை. உதாரணமாக,
கந்தக அமிலம் மற்றும் சாம்பல் உப்பு ஆகிய
இரண்டும் ஒன்றிணைந்து முற்றிலும் மாறுபட்ட
ஒரு பொருளை, நடுநிலையான உப்பை
உருவாக்குகின்றன, இது இப்போது
அமிலமும் அல்ல அல்லது காரமும் அல்ல, மேலும் வெப்பத்தால் கூட சிதைவுற்று
அழிவதில்லை. இவ்வாறு
இரண்டு பொருள்கள் ஒன்றாகக் கலந்து முற்றிலும் வேறு ஒரு பொருளாக நிலையான மாற்றத்தை
அடைவதை போல, நமது உணர்வுசார்ந்த புலன்களில் முரண்பட்ட இயல்புகள் இயக்கநிலையில்
ஒன்றாக கலந்து விடுவதில்லை. நடுநிலைப்படுத்தல் மற்றும் பரஸ்பர அகற்றுதல்
ஆகியவற்றின் ஒற்றுமை மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளில் முதலில் நிகழ்கிறது, ஆனால்
முரண்பாடான உணர்வுகள் ஒருவருக்கொருவர் நிரந்தரமாக அகற்றாது. எடுத்துக்காட்டாக,
துக்கப்படுபவரின் (இறப்பின் மூலம்) கண்ணீர் , நகைச்சுவை நாடகம் , நகைச்சுவைகள் போன்றவற்றினால் விரைவில் மறந்துவிடுகின்றன, ஆனால் அந்த நகைசுவை
உணர்வு சிறிது நேரத்தில் மறைந்தவுடன் ,
அவரது கண்ணீர் மேலும் அதிகரித்து முன்பை விட இன்னும் அதிகமாகப்
பெருகுகிறது.
அடிக்குறிப்பு-69:
இந்த தெளிவான
ஆய்வுரை , தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு,
அதற்கு எதிராக சிலர் ,நோய்த்தணிவிப்பு மருந்து அதன் இரண்டாம் நிலை செயல்பாட்டின் போது அப்போது
இருக்கும் நோய்க்கு ஒத்ததாக இருக்கிறது , எனவே
ஹோமியோபதி மருத்துவம் அதன் முதல் நிலை செயற்ப்பாட்டில் குணப்படுத்தும்
திறன் கொண்டதாக இருப்பது போல் நோய்த்தணிவிப்பு மருந்துகளும் வல்லமை கொண்டதாக
இருக்கிறது என்று கூறி உண்மைக்கு எதிரான ஒரு நிலையை உறுதிப்படுத்தப்
பார்க்கின்றனர். ஆனால், இரண்டாம் நிலை செயல்பாடு என்பது மருந்தினால் உண்டாக்கப்படுவது அல்ல ,
அது உயிரியில் உள்ள உயிராற்றலின்
முரண்பாட்டுச் செயலின் விளைவே என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை ;
ஆகையால், ஒரு நோய்தணிவிப்பு மருந்தைப் பயன்படுத்திய போது உயிராற்றலின்
விளைவாக உண்டாகும் இந்த இரண்டாம் நிலை செயல்பாடு என்பது அம்மருந்து
அந்நோயில் நலமாக்காமல் விட்டுவிட்ட
நோயின் அறிகுறிகளுக்கு ஒத்துள்ள ஒரு நிலை ஆகும். அதனால் அந்த
நோய்த்தணிவிப்பு மருந்துகளுக்கு எதிரான
உயிராற்றலின் எதிர்வினையால் அந்த
நோய் இன்னும் அதிகமாக அதிகரித்தது.
அடிக்குறிப்பு-70:
ஒரு இருண்ட
நிலவறையில், சிறை வைக்கப்பட்டுள்ள கைதி
தனக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை
அடையாளம் காண்பதில் சிரமம் கொள்கிறார் . அப்போது சாராயத்தினால் எரியும் விளக்கை
ஏற்றும் போது, அங்கு பளிச்சென்று வெளிச்சம் பரவும் ,அதனால் மகிழ்ச்சியற்ற முறையில்
வாழும் அந்த துர்பாக்கியனுக்கு ஆறுதல் ஏற்படுகிறது. ஆனால் அது அணைக்கப்படும் போது, முன்பு
பிரகாசமான சுடர் இருந்த அளவிற்கு ,
இப்போது அவரை இரவுப்பொழுதின் இருள்
சூழ்ந்து கொள்கிறது , அதனால் அவர் முன்பு பொருள்களை பார்க்கக்கூடிய
அளவுக்கும் கூட இப்போது பார்க்க முடியாத கடின நிலை ஏற்பட்டு விடுகிறது.
No comments:
Post a Comment