ஆர்கனான் மணிமொழி-74
Among chronic diseases we must
still, alas!, reckon those so commonly met with, artificially produced in
allopathic treatment by the prolonged use of violent heroic medicines in large
and increasing doses, by the abuse of calomel, corrosive sublimate, mercurial
ointment, nitrate of silver, iodine and its ointments, opium, valerian,
cinchona bark and quinine, foxglove, prussic acid, sulphur and sulphuric acid,
perennial purgatives-73, venesections, shedding streams of blood, leeches,
issues, setons, etc., whereby the vital energy is sometimes weakened to an
unmerciful extent, sometimes, if it do not succumb, gradually abnormally
deranged (by each substance in a peculiar manner) in such a way that, in order
to maintain life against these inimical and destructive attacks, it must
produce a revolution in the organism, and either deprive some part of its
irritability and sensibility, or exalt these to an excessive degree, cause
dilatation or contraction, relaxation or induration or even total destruction
of certain parts, and develop faulty organic alterations here and there in the
interior or the exterior (cripple the body internally or externally), in order
to preserve the organism from complete destruction of the life by the ever -
renewed, hostile assaults of such destructive forces.74
Fn 73: The only possible case of
plethora shows itself with the healthy woman, several days before her monthly
period, with a feeling of a certain fullness of womb and breasts, but without
inflammation.
Fn-74 : Among all imaginable methods
for the relief of sickness, no greater allopathic, irrational or inappropriate
one can be thought of than this Brousseauic, debilitating treatment by means of
venesection and hunger diet, which for many years has spread over a large part
of the earth. No intelligent man can see in it anything medical, or medically
helpful, whereas real medicines, even if chosen blindly and administered to a
patient, may at times prove of benefit in a given case of sickness because they
may accidentally have been homoeopathic to the case. But from venesection,
healthy common sense can expect nothing more than certain lessening and
shortening of life. It is a sorrowful and wholly groundless fallacy that most
and indeed all diseases depend on local inflammation. Even for true local
inflammation, the most certain and quickest cure is found in medicines capable
of taking away dynamically the arterial irritation upon which the inflammation
is based and this without the least loss of fluids and strength. Local
venesections, even from the affected part, only tend to increase renewed
inflammation of these parts. And precisely so it is generally inappropriate,
aye, murderous to take away many pounds of blood from the veins in inflammatory
fevers, when a few appropriate medicines would dispel this irritated arterial
state, driving the hitherto quiet blood together with the disease in a few
hours without the least loss of fluids and strength. Such great loss of blood
is evidently irreplaceable for the remaining continuance of life, since the
organs intended by the Creator for bloodmaking have thereby become so weakened
that while they may manufacture blood in the same quantity but not again of the
same good quality. And how impossible is it for this imagined plethora to have
been produced in such remarkable rapidity and so to drain it off by frequent
venesections when yet an hour before the pulse of this heated patient (before
the fever and chill stage) was so quiet. No man, no sick person has ever too
much blood or too much strength. On the contrary, every sick man lacks
strength, otherwise his vital energy would have prevented the development of
the disease. Thus it is irrational and cruel to add to this weakened patient, a
greater, indeed the most serious source of debility that can be imagined. It is
a murderous malpractice irrational and cruel based on a wholly groundless and
absurd theory instead of taking away his disease which is ever dynamic and only
to be removed by dynamic potencies.
ஆர்கனான் மணிமொழி-74
§ 74
மிக மோசமான நீடித்த வியாதிகள் பெரும்பாலும் திறமையற்ற அலோபதி மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது
தான். அதற்கு எடுத்துக்காட்டு இரத்தத்தை
வெளியேற்றுவதன் மூலம் சோர்வூட்டும் அலோபதி
மருத்துவச் சிகிச்சை ( மருத்துவர் பிரௌஸ்ஸே- BROUSSEAU) முறை ஆகும்.
நாள்பட்ட அல்லது நீண்டகால நோய்களைப் பொறுத்தவரை , ஐயோ!,
அலோபதி மருத்துவ முறையில்
உற்பத்தி செய்யப்படும் , கடுமையான வீரியத்தன்மை கொண்ட மருந்துகளை, நீண்ட காலமாக பெரிய மற்றும்
அதிகரிக்கும் அளவுகளில் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் செயற்கை நோய்கள் மிகவும் கொடுமையானவை
. அதாவது,
இரசகற்பூரம் ( ஒரு வகைக் கழிச்சலை
ஏற்படுத்தும் மருந்து) , அரிக்கும்
பதங்கம் ( ஆவி உறைபடிவு) , பாதரசக் களிம்புகள் , வெள்ளி வெடியுப்பு , கரையம்
(IODINE) மற்றும் அதன் களிம்புகள், அபினி (OPIUM)
, சடாமல்லி (valerian) , சிங்கோனா மரப்பட்டை (CHINA) மற்றும் கொய்னா , கையுறை போன்ற ஊதாநிற செடி
வகை பூக்கள் (DIGITALIS) , அடர்ந்த நீலவண்ண (நீலிக) அமிலம், கந்தகம் மற்றும் கந்தக அமிலம் , தொடர்ந்து
பயன்படுத்தப்படும் பேதி மருந்து -73 போன்ற
மருந்துகளை தவறாக பயன்படுத்துவத்துடன் , அசுத்த இரத்தக்குழாயை அறுத்து இரத்தத்தை வெளியேற்றுதல் , இரத்தத்தை கொட்டச்
செய்தல் , அட்டைப்பூச்சிகளை வைத்து இரத்தத்தை உறிஞ்சுதல் , உச்சிக்குழி மூட தரும் சிகிச்சைகள் , ஊடிழைமம் (உடல்
திரவதைக் கசிய வைக்க உடலில் துவாரமிட்டு திரி போன்ற மருந்துக் கயிற்றினை உடலில்
சொருகும் முறை ) முதலிய சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இவற்றால் சில நேரங்களில் உயிராற்றல்
ஈவுஇரக்கமற்ற வகையில் பலவீனமாகிறது
, சில நேரங்களில், உயிராற்றல் அவ்வாறு ஒடுங்கிப்போய்விடவில்லை என்றால்,
படிப்படியாக இயல்புக்கு மாறான
நிலைக்கு (ஒவ்வொரு மருந்தின் விசித்திரமான இயல்புக்குத் தகுந்தவாறு ) திசை
திருப்பப்படுகிறது. அந்த வகையில்,
பகையானதும் மற்றும் அழிவைத் தருவதாகவும்
உள்ள இந்தத் தாக்குதலிலிருந்து உயிரைப் பேணி
பாதுகாத்துக் கொள்ள தகுந்தவாறு , அது உயிரி அல்லது உறுப்பமைவில் ஒரு புரட்சியை உருவாக்க வேண்டியதாகிறது. அதனால்
உறுப்பமைவின் சில பகுதிகளுக்கு எரிச்சலையும்
மற்றும் உணர்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது , அல்லது இவை
அதிகப்படியான அளவிற்கு தூண்டப்படுகிறது ,
எனவே அந்த உறுப்பமைவில் , விரிவாதல்
அல்லது சுருக்கம், நெகிழ்வு அல்லது
இறுக்கம் அல்லது உறுப்பின் சில பகுதிகளை முற்றாக அழித்தல், மற்றும்
உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இங்கும் அங்குமாக உறுப்புப்பகுதியில்
ஏற்படும் சில தவறான மாற்றங்கள் (உடலை உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ
முடக்குவது) உருவாகின்றன. மேன்மேலும் தொடரும்
இந்த தீங்கு செய்யக்கூடிய ஆற்றல்களின்-74 , பகையான தாக்கங்களால் உயிரி அல்லது உறுப்பமைவிற்கு முழுமையான அழிவு
ஏற்படாமல் காப்பதற்காக அங்கு இத்தகைய மாற்றங்கள் உண்டாகின்றன.
அடிக்குறிப்பு-73:
மிக
ஆரோக்கியமான ஒரு பெண்ணிற்கு , மாதவிடாய்
ஏற்படும் காலத்திற்கு பல நாட்களுக்கு
முன்னர் குருதி மிகைப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது . அப்போது அவரது கருப்பையிலும்
மற்றும் மார்பகங்களிலும் கனமான நிறைந்திருக்கும் உணர்வு இருக்கும் , ஆனால்
அழற்சி (அல்லது வீக்கம்) எதுவும் இருக்காது .
அடிக்குறிப்பு-74:
நோயின் நிவாரணத்திற்கான
நம்பப்படும் கற்பனைக்குரிய அனைத்து மருத்துவ முறைகளிலும், குருதிவடிப்பு , பட்டினி
போடுதல் போன்றவற்றின் மூலம் உலகம்
முழுவதும் பல ஆண்டுகளாக பரவி , சோர்வை
(தளர்ச்சி) உண்டாக்கும் பிரௌஸ்ஸே ( BROUSSEAU) மருத்துவ முறையைப் போல
பகுத்தறிவற்ற அல்லது பொருத்தமற்ற சிகிச்சை இந்த மாபெரும் அலோபதி மருத்துவ
சிகிச்சை முறையில் கூட காண முடியாது.
இந்த பிரௌஸ்ஸேவின் மருத்துவமுறையில் மருந்துகளினாலோ அல்லது அவரது மருத்துவ முறையினாலோ
நன்மை ஏற்படுவதாக எந்தவொரு புத்திசாலித்தனமான
மனிதராலும் எதையும் பார்க்க முடியாது,
அதே சமயம் உண்மையான மருந்துகள், கண்மூடித்தனமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு
நோயாளிக்கு கொடுக்கப்பட்டாலும் கூட, தற்செயலான முறையில் அங்கு ஹோமியோபதி
முறைப்பட்டதாக அமைந்து , அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு நன்மை விளைவிப்பதாக சில நேரங்களில் நிரூபிக்கக்கூடும், ஆனால் , குருதிவடிப்பினால் உயிர் வாழ்க்கை உறுதியாகக் குறைவதும் ,
சுருங்குவதும் அன்றி வேறு எந்த நன்மையையும் ஏற்படாது என்பதை ஆரோக்கியமான
மனநிலையில் உள்ளவர்கள் மனக்கண்ணால் உணரக்கூடும்.
பெரும்பாலான நோய்களும் மற்றும்
அனைத்து நோய்களும் அந்தந்த இடத்திற்குரிய (நோய் தாக்கிய இடம்) வீக்கம் அல்லது அழற்சியைப் பொறுத்தது என்று நினைப்பது ஒரு வருந்தத்தக்க மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற
பொய்யாகும். உண்மையாகவே , ஒருவருக்கு நோய் தாக்கிய இடத்தில் அழற்சி
உருவாகியிருந்தாலும் , அவரின் இயக்கநிலையில் செயலாற்றி அந்த அழற்சிக்கு
அடித்தளமாக உள்ள பகுதியில் இருக்கும் இரத்தக்குழாயின் (தமனி ) எரிச்சலை நீக்குவதோடு ,
உயிர் வாழ்க்கைக்கு தேவையான நீர்ப்பொருளும் (இரத்தம்) மற்றும் வலிமையும் சிறிதும் இழக்காமல் செய்து , உறுதியாகவும் மற்றும் மிகவிரைவாகவும்
நலப்படுத்துதற்கு உரிய ஆற்றல் வாய்ந்த மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, ஏன் பாதிக்கப்பட்ட
உறுப்பிலிருந்து கூட, மேற்கொள்ளப்படும் குருதிவடிப்பு அந்த பகுதிகளின்
அழற்சியைப் புதுப்பித்து மேலும் அதிகரிக்கவே செய்கின்றன . பொதுவாக அழற்சி
தாக்கிய காய்ச்சலில் இதுபோன்று இரத்தக்குழாயிலிருந்து பல எடையளவு இரத்தத்தை
வெளியேற்றும் சிகிச்சையானது தகுதியற்றது , எக்காலத்திற்கும் பொருந்தாது ,
கொலைபாதகச் செயலுக்கு நிகரானது. ஆனால் மிகப்பொருத்தமான
சில மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, சில
மணி நேரங்களிலேயே கூட இந்த இரத்தக்குழாய் அழற்சி நிலையைப் போக்கி , சரியான இரத்தத்தைச் செலுத்தி நோயின்
அடிப்படை தீங்குகளை நீக்கி முழுப்பலமடையச் செய்கிறது. இது போன்ற மிக அதிக அளவு
இரத்த இழப்புகள் மனிதனின் எஞ்சிய
வாழ்க்கையில் ஈடுசெய்யஇயலாது என்பதை தெளிவாக அறிய முடிகிறது, ஏனென்றால் , அவ்வாறு
குருதிவடிப்பு செய்யப்பட்ட பின்பு இரத்தத்தை உருவாக்குவதற்கு படைப்பாளரால்
கொடுக்கப்பட்ட உறுப்புகள் மிகவும்
பலவீனமடைந்துவிடுகின்றன என்றாலும் அவை இழந்த
அளவு இரத்தத்தை அதே அளவில் உற்பத்தி செய்யலாம்,
ஆனால் மீண்டும் அதே அளவு நல்ல
தரத்தில் இருக்காது. இந்த சூடான நோயாளியின்
நாடித்துடிப்பு ( காய்ச்சல் மற்றும்
குளிர் ஏற்படுவதற்கு முன்பிருந்த நிலை
) ஒரு மணி நேரத்திற்கு முன்பு மிக
அமைதியாக இருந்தது. அங்கு கற்பனைத்
தோற்றமாக உள்ள அக்குருதிமிகைப்பு
அவ்வளவு விரைவாக அங்கு ஏற்பட்டுவிட்டது என்பதும் , எனவே , அடிக்கடி
குருதிவடிப்புச் செய்யவேண்டும் என்பதும் நடக்கக்கூடாத செயலாகும். எந்த ஒரு
மனிதனும் , எந்தவொரு
நோயாளியும் ஒருபோதும் அளவுக்கு அதிகமாக இரத்தத்தையோ , பலத்தையோ
பெற்றிருக்கவில்லை, அதற்க்கு மாறாக, ஒவ்வொரு நோயுற்ற மனிதனும் வலிமை குன்றியவராக இருக்கிறார். இல்லையெனில் அவனுடைய உயிராற்றல் நோயின் வளர்ச்சியைத் தடுத்திருக்கும். ஆகவே, ஏற்கனவே பலவீனமான நோயாளியை
இன்னும் கூடுதலாக வலிமை இலக்குமாறு செய்து
மிகக் கடுமையான தளர்ச்சியை உண்டாக்குவது உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியாத ,
பகுத்தறிவற்ற மற்றும் கொடூரமான
செயலாகும். எந்தவித அடிப்படை தத்துவமும் இல்லாத , இதுபோன்ற
பொருத்தமற்ற முறைகள் என்பது தவறான, ஒழுங்கீனமான கொலைபாதக மற்றும் பகுத்தறிவுக்கு
பொருந்தாத சிகிச்சை முறையாகும். இயக்கநிலையில் உள்ள அந்நோயை , இயக்க ஆற்றல் கொண்ட மருந்தின் அளவுகளால் நீக்காமல் , எந்தவித
அடிப்படை தத்துவமும் இல்லாத , அபத்தமான
இதுபோன்ற பொருத்தமற்ற கொள்கைகைப் பின்பற்றி சிகிச்சை செய்வது , பகுத்தறிவுக்கு பொருந்தாத , கொடூரமான
மற்றும் கொலைபாதகச் செயலைச் செய்யும் ஒழுங்கற்ற மருத்துவ முறையாகும்.
No comments:
Post a Comment