Monday, 23 March 2020

ஆர்கனான் மணிமொழி-71


ஆர்கனான் மணிமொழி-71
§ 71

As it is now no longer a matter of doubt that the diseases of mankind consist merely of groups of certain symptoms, and may be annihilated and transformed into health by medicinal substances, but only by such as are capable of artificially producing similar morbid symptoms (and such is the process in all genuine cures), hence the operation of curing is comprised in the three following points:

I. How is the physician to ascertain what is necessary to be known in order to cure the disease?

II. How is he to gain a knowledge of the instruments adapted for the cure of the natural disease, the pathogenetic powers of the medicines?

III. What is the most suitable method of employing these artificial morbific agents (medicines) for the cure of natural disease?


நலமாக்கலுக்குத் தேவையான மூன்று செய்திக்கூறுகள் : நோய்கள் பற்றிய புலனாய்வு- மருந்துகளின் விளைவு பற்றிய புலனாய்வு மற்றும் மருந்துகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துதல்.



இப்போது மனிதகுலத்தினைப் பாதிக்கும் நோய்கள் குறிப்பிட்ட சில அறிகுறிகளின் தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ளன என்பதில் எந்தச் சந்தேகம் இல்லை, மேலும் அவை மருந்துப் பொருட்களால் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டு ஆரோக்கியமான நிலைக்கு மாற்றப்படலாம், ஆனால் அம்மருந்துகள் அந்த இயற்கை நோயுடன் ஓத்திருக்கிற செயற்கையான  ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்  (மற்றும் எல்லா உண்மையான குணப்படுத்துதல்களிலும் இதுதான் செயல்முறை), எனவே குணப்படுத்தும் செயல்பாடு என்பது பின்வரும் மூன்று செய்திக்கூறுகளில் அடங்கும்:


I. நோயைக் குணப்படுத்த எதனை அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது?


II. இயற்கையான நோயைக் குணப்படுத்துவதற்குத் தேவையான   கருவிகளைப் (மருந்துகளின்) பற்றிய, அதாவது நோயை உருவாக்கும் மருந்துகளின் ஆற்றலைப் பற்றிய அறிவை எவ்வாறு வளர்த்துக் கொள்வது ?


III இயற்கை நோயைக் குணப்படுத்த இந்த செயற்கையான வழியில் நோய்க்குறிகளை தோற்றுவிக்கும் முகவர்களை (மருந்துகள்) பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வழிமுறை எது?


No comments:

Post a Comment