Friday, 27 March 2020

ஆர்கனான் மணிமொழி-75




These inroads on human health effected by the allopathic non-healing art (more particularly in recent times) are of all chronic diseases the most deplorable, the most incurable; and I regret to add that it is apparently impossible to discover or to hit upon any remedies for their cure when they have reached any considerable height.


ஆர்கனான் மணிமொழி-75

அலோபதி  மருத்துவச் சிகிச்சையின் மூலம்  உறுதியாக நலமாக்க  முடியாது.


நீடிக்கும் வகை நோய்களிலே, நலப்படுத்தும் ஆற்றல் இல்லாத அலோபதி மருத்துவச் சிகிச்சையின் மூலம்  ( குறிப்பாக சமீப காலங்களில் உண்டாக்கப்படடவை) மனிதர்களின் உடல்நலத்தில் உள்ளார்ந்து புகுத்தப்படும் விளைவுகள் அனைத்தும் மிகவும்  துயரம் தரத்தக்கதாகவும் , பெரும்பாலும் குணப்படுத்த முடியாததாகவும் இருக்கிறது. மற்றும் அது ஓரளவிற்கு மேல் முற்றி விட்டால் அவற்றை நீக்கக்கூடிய மருந்துகளைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது என்பதையும் இங்கே நான் (ஹானிமன்) வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

Wednesday, 25 March 2020

இன்ஃப்ளூயன்சியம்


INFLUENZIUM
(INFLU)




ஆசியாவில் பரவிய சளிக்காய்ச்சலின் (INFLUENZA) கிருமியிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது (நோசோடு =NOSODE). பல ஹோமியோபதி  மருத்துவர்கள்,  இந்த இன்ஃப்ளூயன்ஸா நோசோடை  உலகம் முழுவதும் பரவுகின்ற  கொள்ளைநோய் அல்லது பெருவாரியாக பரவுகின்ற நோய்களை குணப்படுத்த , வழக்கமான கொடுக்கும் பாப்டிசியா (BAPT) மருந்திற்குப் பதிலாக  பயன் படுத்துகிறார்கள்.


இம்மருந்தை  12C  வீரியம் அல்லது 30C  வது வீரியத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இதை  மீண்டும் மீண்டும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது, அதிக விகிதாசாரத்தில் நோய்வாய்ப்பட்ட பல நோயாளிகளைக்  கட்டுப்படுத்த போதுமானதாக இருக்கும் (DR.J.H.CLARKE). ஒரு குடும்பத்தில் "சளி" (COLDS) தோன்றும் போது பாதிக்கப்படாத அனைவருக்கும்  ஆர்சனிக்கம் ஆல்பம் (ARS) மருந்தை 3C  வீரியத்தில் தினமும் மூன்று முறை கொடுக்கலாம் , பாதிக்கப்பட்ட  நோயாளிக்கு  இன்ஃப்ளூயன்ஸாவை 30C வீரியத்தில்  ஒரு  மணி நேரத்திற்கு ஒருமுறை  அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ளலாம். இது பொதுவாக தொல்லைகள்  பரவுவதைத் தடுக்கிறது மற்றும் "சளி", அல்லது சளிக்காய்ச்சல்  என்று,  எந்த வகையாக  நோயாக இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது .

இன்ஃப்ளூயன்ஸா மருந்து நோயாளிகளின்  உடலுக்குள் மறைந்திருக்கும் பழைய தொல்லைகளை வெளிக்கொணரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் இது வெவ்வேறு நோயாளிகளிடத்தில்  எல்லையற்ற வடிவங்களை எடுக்கிறது, ஆனால்,  எல்லா  நோயாளிகளையும் இம்மருந்து குணப்படுத்தும் என்று எதிர்பார்க்கமுடியாது  என்கிறார் மருத்துவர்J.H. கிளார்க். 


மனக்குறிகள் (MIND):

அவநம்பிக்கை (APATHY) மற்றும் கவனமின்மை (INDIFFERENCE). மனம் சோர்ந்துவிடுதல் அல்லது மந்தம் (BRAIN DULLNESS)  . மூளைக் களைத்துபோகுதல் (BRAIN FATIGUE).  சளிக்காய்ச்சலுக்குப் பிந்தைய மனஅழுத்த நரம்புமண்டலக்கோளாறுக்கு (POST-INFLUENZA DEPRESSIVE NEUROSIS)  இது மிகச் சிறந்த மருந்து. பலவீனமான நினைவாற்றல் ( DR. ROBIN MURPHY).


தனிச்சிறப்புப் பண்புக்குறிகள் (CHARACTERISTICS):

Ø  இரத்தத்தில் வெள்ளையணுக்கள் குறைதல் (LEUCOPENIA) , கூடவே ஒற்றை உட்கரு அணுமிகைப்பு இருக்கும் (MONONEUCLEOSIS).

Ø  கண்கள் கனமாக இருக்கும் மற்றும் கண்களை அசைக்கும் போது கூச்சம் ஏற்படும். கண்களில் விறைப்பு. சளிக்காய்ச்சலின் (INFLUENZA) போது இமைப்படல அழற்சி ஏற்படும். கண்இமைஅழற்சி (BLEPHARITIS).

Ø  மூளைக்காய்ச்சல் (MENINIGITIS) . மூளை அழற்சி (ENCEPHALITIS) , கூடவே வாந்தியும் இருக்கும். சளிக்காய்ச்சலில் தலைவலி.

Ø  இதயம் சார்ந்த நரம்பு மண்டலக் கோளாறு. இதய பலவீனம். குறைந்த இரத்த அழுத்தம்.

Ø  கால்களுக்கு செல்லக்கூடிய இரத்தநாளங்களில் மற்றும் தமனியில் இரத்தத்தேக்கம். அசுத்த இரத்தக்குழாய் வீங்கி , முறுக்கிக்கொண்டு , முண்டுமுடுச்சுடன் காணப்படும்  (VARICOSE VEINS) மற்றும் புண்கள் ஏற்படும் . 

Ø  வலி தரும் வறண்ட இருமல் . மூச்சுக்குழாய் ஈளைநோய் (BRONCHIAL ASTHMA). மூச்சுக்குழாய் அழற்சி (BRONCHITIS).  சளிக்காய்ச்சல் இருக்கும் போது , மூச்சுக்கிளைக்குழாய்களில் ஆரம்பித்து சுவாசகோசங்களில் திட்டு திட்டாக சிற்சில இடங்களில் வேக்காடு ஏற்பட்டு அப்பகுதிகள் கெட்டியாகி விடுதல் (BRONCHOPNEUMONIA).

Ø  திடீரெண்டு ஏற்பட்ட  அல்லது நாட்பட்ட மண்டைச்சளி.  மூக்கு-தொண்டையழற்சி (RHINO-PHARYNGITIS). சளிக்காய்ச்சலின் போது மூக்கிலிருந்து நீர்க்கொட்டுதல். நெற்றி எலும்புப்புழை அழற்சி (SINUSITIS). மூக்கினுள் தசைவளர்ச்சி.

Ø  சீரணமண்டல பாதையில் வலி. பலவீனத்தைத்தரும் வயிற்றுப்போக்கு.

Ø  தொண்டையழற்சி. நாட்பட்ட குரல்வளை அழற்சி  . குழந்தைகளுக்கு , கேட்க பொறுக்காத அளவிற்கு குரல்வளை அழற்சி  இருக்கும். சளிக்காய்ச்சலின் போது குரல்வளை அழற்சி .

தொல்லைகள் கூடுதல்:

குளிர்ச்சியான, பனிபடர்ந்த மற்றும் ஈரமான பருவ காலங்களில் தொல்லைகள் அதிகரிக்கும். குறிப்பாக மோசமான பருவநிலையில் வாதநோய் வலிகள் அதிகமாகும்.

தொல்லைகள் குறைதல்:

குளிச்சியினால் தொல்லைகள் குறையும்;  குறிப்பாக வலிகள் குறையும்.


வீரியங்கள்:

இம்மருந்தை  12C  வீரியம் அல்லது 30C  வது வீரியத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இதை  மீண்டும் மீண்டும் கொடுக்கலாம். அதேபோல் , பத்து உருண்டைகளை எடுத்து ஆறு அவுன்ஸ் தண்ணீரில் கலந்தும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.

ஒத்த மருந்துகள்  (RELATED) : GELS., OSCILLOC., MIM-P., GALPH., LUF-OP.

இணக்கமான மருந்துகள் (COMPATIBLE): GELS., CIMIC., ARS., BELL., BRY., HEP., MERC.

கருத்துக்கள் (REMARKS): சளிக்காய்ச்சலுக்கு இதை தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம் (ARS., ARS-I., NUX-V).


இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:


1.   A Dictionary of Practical Materia Medica- Dr.J.H.CLARKE.
2.   Lotus Materia Medica- Dr. Robin Murphy.
3.   Complete Dynamics Online Repertory.
4.       மருத்துவக் கலைச் சொற்கள்- மருத்துவர். சாமி சண்முகம்.
5.       மருத்துவச் சொல் அகராதி  - மருத்துவர். கி.அம்பலவாணன்.


Monday, 23 March 2020

ஆர்கனான் மணிமொழி-74


ஆர்கனான் மணிமொழி-74


Among chronic diseases we must still, alas!, reckon those so commonly met with, artificially produced in allopathic treatment by the prolonged use of violent heroic medicines in large and increasing doses, by the abuse of calomel, corrosive sublimate, mercurial ointment, nitrate of silver, iodine and its ointments, opium, valerian, cinchona bark and quinine, foxglove, prussic acid, sulphur and sulphuric acid, perennial purgatives-73, venesections, shedding streams of blood, leeches, issues, setons, etc., whereby the vital energy is sometimes weakened to an unmerciful extent, sometimes, if it do not succumb, gradually abnormally deranged (by each substance in a peculiar manner) in such a way that, in order to maintain life against these inimical and destructive attacks, it must produce a revolution in the organism, and either deprive some part of its irritability and sensibility, or exalt these to an excessive degree, cause dilatation or contraction, relaxation or induration or even total destruction of certain parts, and develop faulty organic alterations here and there in the interior or the exterior (cripple the body internally or externally), in order to preserve the organism from complete destruction of the life by the ever - renewed, hostile assaults of such destructive forces.74


Fn 73: The only possible case of plethora shows itself with the healthy woman, several days before her monthly period, with a feeling of a certain fullness of womb and breasts, but without inflammation.


Fn-74 : Among all imaginable methods for the relief of sickness, no greater allopathic, irrational or inappropriate one can be thought of than this Brousseauic, debilitating treatment by means of venesection and hunger diet, which for many years has spread over a large part of the earth. No intelligent man can see in it anything medical, or medically helpful, whereas real medicines, even if chosen blindly and administered to a patient, may at times prove of benefit in a given case of sickness because they may accidentally have been homoeopathic to the case. But from venesection, healthy common sense can expect nothing more than certain lessening and shortening of life. It is a sorrowful and wholly groundless fallacy that most and indeed all diseases depend on local inflammation. Even for true local inflammation, the most certain and quickest cure is found in medicines capable of taking away dynamically the arterial irritation upon which the inflammation is based and this without the least loss of fluids and strength. Local venesections, even from the affected part, only tend to increase renewed inflammation of these parts. And precisely so it is generally inappropriate, aye, murderous to take away many pounds of blood from the veins in inflammatory fevers, when a few appropriate medicines would dispel this irritated arterial state, driving the hitherto quiet blood together with the disease in a few hours without the least loss of fluids and strength. Such great loss of blood is evidently irreplaceable for the remaining continuance of life, since the organs intended by the Creator for bloodmaking have thereby become so weakened that while they may manufacture blood in the same quantity but not again of the same good quality. And how impossible is it for this imagined plethora to have been produced in such remarkable rapidity and so to drain it off by frequent venesections when yet an hour before the pulse of this heated patient (before the fever and chill stage) was so quiet. No man, no sick person has ever too much blood or too much strength. On the contrary, every sick man lacks strength, otherwise his vital energy would have prevented the development of the disease. Thus it is irrational and cruel to add to this weakened patient, a greater, indeed the most serious source of debility that can be imagined. It is a murderous malpractice irrational and cruel based on a wholly groundless and absurd theory instead of taking away his disease which is ever dynamic and only to be removed by dynamic potencies.


ஆர்கனான் மணிமொழி-74
§ 74


மிக மோசமான  நீடித்த வியாதிகள்  பெரும்பாலும் திறமையற்ற  அலோபதி மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது தான்.  அதற்கு எடுத்துக்காட்டு இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம்  சோர்வூட்டும் அலோபதி மருத்துவச் சிகிச்சை ( மருத்துவர் பிரௌஸ்ஸே- BROUSSEAU) முறை ஆகும்.


நாள்பட்ட அல்லது நீண்டகால  நோய்களைப் பொறுத்தவரை  , ஐயோ!,   அலோபதி மருத்துவ முறையில்   உற்பத்தி செய்யப்படும் , கடுமையான வீரியத்தன்மை கொண்ட  மருந்துகளை, நீண்ட காலமாக பெரிய மற்றும் அதிகரிக்கும் அளவுகளில் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் செயற்கை நோய்கள் மிகவும் கொடுமையானவை . அதாவது,  இரசகற்பூரம் ( ஒரு வகைக்  கழிச்சலை ஏற்படுத்தும் மருந்து)  , அரிக்கும் பதங்கம் ( ஆவி உறைபடிவு) , பாதரசக் களிம்புகள் , வெள்ளி வெடியுப்பு , கரையம் (IODINE)  மற்றும் அதன் களிம்புகள், அபினி (OPIUM) ,  சடாமல்லி (valerian) , சிங்கோனா மரப்பட்டை (CHINA) மற்றும் கொய்னா , கையுறை போன்ற ஊதாநிற செடி வகை பூக்கள் (DIGITALIS) , அடர்ந்த நீலவண்ண (நீலிக) அமிலம், கந்தகம்  மற்றும் கந்தக அமிலம் , தொடர்ந்து பயன்படுத்தப்படும்  பேதி மருந்து  -73 போன்ற மருந்துகளை தவறாக பயன்படுத்துவத்துடன் , அசுத்த இரத்தக்குழாயை அறுத்து இரத்தத்தை வெளியேற்றுதல் , இரத்தத்தை கொட்டச் செய்தல் , அட்டைப்பூச்சிகளை வைத்து இரத்தத்தை உறிஞ்சுதல் ,  உச்சிக்குழி மூட தரும் சிகிச்சைகள் , ஊடிழைமம் (உடல் திரவதைக் கசிய வைக்க உடலில் துவாரமிட்டு திரி போன்ற மருந்துக் கயிற்றினை உடலில் சொருகும் முறை ) முதலிய சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இவற்றால்  சில நேரங்களில் உயிராற்றல் ஈவுஇரக்கமற்ற  வகையில்  பலவீனமாகிறது  , சில நேரங்களில், உயிராற்றல் அவ்வாறு ஒடுங்கிப்போய்விடவில்லை என்றால், படிப்படியாக  இயல்புக்கு மாறான நிலைக்கு  (ஒவ்வொரு மருந்தின்  விசித்திரமான இயல்புக்குத் தகுந்தவாறு ) திசை திருப்பப்படுகிறது. அந்த வகையில்,  பகையானதும்  மற்றும் அழிவைத் தருவதாகவும் உள்ள இந்தத் தாக்குதலிலிருந்து  உயிரைப் பேணி பாதுகாத்துக் கொள்ள தகுந்தவாறு , அது உயிரி அல்லது உறுப்பமைவில்  ஒரு புரட்சியை உருவாக்க வேண்டியதாகிறது. அதனால் உறுப்பமைவின் சில பகுதிகளுக்கு எரிச்சலையும்  மற்றும் உணர்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது , அல்லது இவை அதிகப்படியான அளவிற்கு தூண்டப்படுகிறது ,  எனவே அந்த உறுப்பமைவில் , விரிவாதல் அல்லது சுருக்கம், நெகிழ்வு  அல்லது இறுக்கம்  அல்லது உறுப்பின்  சில பகுதிகளை முற்றாக அழித்தல், மற்றும் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இங்கும் அங்குமாக உறுப்புப்பகுதியில் ஏற்படும் சில தவறான மாற்றங்கள் (உடலை உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ முடக்குவது) உருவாகின்றன. மேன்மேலும் தொடரும்  இந்த  தீங்கு செய்யக்கூடிய  ஆற்றல்களின்-74   , பகையான தாக்கங்களால்  உயிரி அல்லது உறுப்பமைவிற்கு முழுமையான அழிவு ஏற்படாமல் காப்பதற்காக அங்கு இத்தகைய மாற்றங்கள் உண்டாகின்றன.

அடிக்குறிப்பு-73:


மிக ஆரோக்கியமான ஒரு பெண்ணிற்கு   , மாதவிடாய் ஏற்படும்  காலத்திற்கு பல நாட்களுக்கு முன்னர் குருதி மிகைப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது . அப்போது அவரது  கருப்பையிலும்  மற்றும் மார்பகங்களிலும் கனமான நிறைந்திருக்கும் உணர்வு இருக்கும் , ஆனால் அழற்சி (அல்லது வீக்கம்) எதுவும் இருக்காது .


அடிக்குறிப்பு-74:


நோயின் நிவாரணத்திற்கான நம்பப்படும் கற்பனைக்குரிய அனைத்து மருத்துவ முறைகளிலும், குருதிவடிப்பு , பட்டினி போடுதல்  போன்றவற்றின் மூலம் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக பரவி ,  சோர்வை   (தளர்ச்சி) உண்டாக்கும்   பிரௌஸ்ஸே ( BROUSSEAU) மருத்துவ  முறையைப் போல  பகுத்தறிவற்ற அல்லது பொருத்தமற்ற சிகிச்சை இந்த மாபெரும் அலோபதி மருத்துவ சிகிச்சை முறையில் கூட காண  முடியாது. இந்த பிரௌஸ்ஸேவின் மருத்துவமுறையில் மருந்துகளினாலோ அல்லது அவரது மருத்துவ முறையினாலோ நன்மை ஏற்படுவதாக எந்தவொரு  புத்திசாலித்தனமான மனிதராலும்  எதையும் பார்க்க முடியாது, அதே சமயம் உண்மையான மருந்துகள், கண்மூடித்தனமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு நோயாளிக்கு கொடுக்கப்பட்டாலும் கூட, தற்செயலான முறையில் அங்கு ஹோமியோபதி முறைப்பட்டதாக அமைந்து , அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு   நன்மை விளைவிப்பதாக சில நேரங்களில்  நிரூபிக்கக்கூடும், ஆனால் , குருதிவடிப்பினால் உயிர் வாழ்க்கை உறுதியாகக் குறைவதும் , சுருங்குவதும் அன்றி வேறு எந்த நன்மையையும் ஏற்படாது என்பதை ஆரோக்கியமான மனநிலையில் உள்ளவர்கள் மனக்கண்ணால் உணரக்கூடும்.   பெரும்பாலான  நோய்களும் மற்றும் அனைத்து நோய்களும் அந்தந்த இடத்திற்குரிய (நோய் தாக்கிய இடம்) வீக்கம் அல்லது  அழற்சியைப் பொறுத்தது என்று நினைப்பது  ஒரு வருந்தத்தக்க மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற பொய்யாகும். உண்மையாகவே , ஒருவருக்கு நோய் தாக்கிய இடத்தில் அழற்சி உருவாகியிருந்தாலும் ,  அவரின்  இயக்கநிலையில் செயலாற்றி அந்த அழற்சிக்கு அடித்தளமாக உள்ள பகுதியில் இருக்கும் இரத்தக்குழாயின்  (தமனி ) எரிச்சலை நீக்குவதோடு  ,  உயிர் வாழ்க்கைக்கு தேவையான நீர்ப்பொருளும்   (இரத்தம்) மற்றும் வலிமையும் சிறிதும் இழக்காமல்  செய்து , உறுதியாகவும் மற்றும் மிகவிரைவாகவும் நலப்படுத்துதற்கு உரிய ஆற்றல் வாய்ந்த மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்ட  பகுதியிலிருந்து, ஏன் பாதிக்கப்பட்ட உறுப்பிலிருந்து  கூட,  மேற்கொள்ளப்படும் குருதிவடிப்பு அந்த  பகுதிகளின்  அழற்சியைப் புதுப்பித்து மேலும் அதிகரிக்கவே செய்கின்றன . பொதுவாக அழற்சி தாக்கிய காய்ச்சலில் இதுபோன்று இரத்தக்குழாயிலிருந்து பல எடையளவு இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சையானது தகுதியற்றது , எக்காலத்திற்கும் பொருந்தாது , கொலைபாதகச் செயலுக்கு நிகரானது.  ஆனால் மிகப்பொருத்தமான சில  மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, சில மணி நேரங்களிலேயே கூட இந்த இரத்தக்குழாய் அழற்சி நிலையைப்  போக்கி , சரியான இரத்தத்தைச் செலுத்தி நோயின் அடிப்படை தீங்குகளை நீக்கி முழுப்பலமடையச் செய்கிறது. இது போன்ற மிக அதிக அளவு இரத்த இழப்புகள் மனிதனின் எஞ்சிய வாழ்க்கையில்  ஈடுசெய்யஇயலாது  என்பதை தெளிவாக அறிய முடிகிறது, ஏனென்றால் , அவ்வாறு குருதிவடிப்பு செய்யப்பட்ட பின்பு இரத்தத்தை உருவாக்குவதற்கு படைப்பாளரால் கொடுக்கப்பட்ட  உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்துவிடுகின்றன என்றாலும்  அவை இழந்த அளவு இரத்தத்தை அதே அளவில்  உற்பத்தி செய்யலாம், ஆனால் மீண்டும்  அதே  அளவு  நல்ல தரத்தில் இருக்காது. இந்த சூடான நோயாளியின் நாடித்துடிப்பு   ( காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படுவதற்கு  முன்பிருந்த நிலை )   ஒரு மணி நேரத்திற்கு முன்பு மிக அமைதியாக இருந்தது.  அங்கு கற்பனைத் தோற்றமாக உள்ள    அக்குருதிமிகைப்பு அவ்வளவு விரைவாக அங்கு ஏற்பட்டுவிட்டது என்பதும் , எனவே , அடிக்கடி குருதிவடிப்புச் செய்யவேண்டும் என்பதும் நடக்கக்கூடாத செயலாகும்.  எந்த ஒரு  மனிதனும்  , எந்தவொரு நோயாளியும்  ஒருபோதும்  அளவுக்கு அதிகமாக இரத்தத்தையோ , பலத்தையோ பெற்றிருக்கவில்லை, அதற்க்கு மாறாக, ஒவ்வொரு நோயுற்ற மனிதனும்  வலிமை குன்றியவராக இருக்கிறார்.  இல்லையெனில் அவனுடைய உயிராற்றல்  நோயின் வளர்ச்சியைத் தடுத்திருக்கும். ஆகவே, ஏற்கனவே  பலவீனமான நோயாளியை இன்னும் கூடுதலாக வலிமை இலக்குமாறு  செய்து மிகக் கடுமையான தளர்ச்சியை உண்டாக்குவது உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியாத    ,   பகுத்தறிவற்ற மற்றும்  கொடூரமான செயலாகும். எந்தவித அடிப்படை தத்துவமும் இல்லாத , இதுபோன்ற பொருத்தமற்ற முறைகள் என்பது தவறான, ஒழுங்கீனமான கொலைபாதக மற்றும் பகுத்தறிவுக்கு பொருந்தாத சிகிச்சை முறையாகும். இயக்கநிலையில்  உள்ள அந்நோயை , இயக்க ஆற்றல் கொண்ட  மருந்தின் அளவுகளால் நீக்காமல் , எந்தவித அடிப்படை தத்துவமும் இல்லாத ,  அபத்தமான இதுபோன்ற பொருத்தமற்ற கொள்கைகைப் பின்பற்றி சிகிச்சை செய்வது ,   பகுத்தறிவுக்கு பொருந்தாத  , கொடூரமான   மற்றும் கொலைபாதகச் செயலைச் செய்யும் ஒழுங்கற்ற மருத்துவ  முறையாகும்.

ஆர்கனான் மணிமொழி-73


ஆர்கனான் மணிமொழி-73
§ 73


As regards acute diseases, they are either of such a kind as attack human beings individually, the exciting cause being injurious influences to which they were particularly exposed. Excesses in food, or an insufficient supply of it, severe physical impression, chills, over heatings, dissipation, strains, etc., or physical irritations, mental emotions, and the like, are exciting causes of such acute febrile affections; in reality, however, they are generally only a transient explosion of latent psora, which spontaneously returns to its dormant state if the acute diseases were not of too violent a character and were soon quelled. Or they are of such a kind as attack several persons at the same time, here and there (sporadically), by means of meteoric or telluric influences and injurious agents, the susceptibility for being morbidly affected by which is possessed by only a few persons at one time. Allied to these are those diseases in which many persons are attacked with very similar sufferings from the same cause (epidemically); these diseases generally become infectious (contagious) when they prevail among thickly congregated masses of human beings. Thence arise fevers-71, in each instance of a peculiar nature, and, because the cases of disease have an identical origin, they set up in all those they affect an identical morbid process, which when left to itself terminates in a moderate period of time in death or recovery. The calamities of war, inundations and famine are not infrequently their exciting causes and producers - sometimes they are peculiar acute miasms which recur in the same manner (hence known by some traditional name), which either attack persons but once in a lifetime, as the smallpox, measles, whooping-cough, the ancient, smooth, bright red scarlet fever-72 of Sydenham, the mumps, etc., or such as recur frequently in pretty much the same manner, the plague of the Levant, the yellow fever of the sea-coast, the Asiatic cholera, etc.


FN-71 : The homoeopathic physician, who does not entertain the foregone conclusion devised by the ordinary school (who have fixed upon a few names of such fevers, besides which mighty nature dare not produce any others, so as to admit of their treating these disease according to some fixed method), does not acknowledge the names gaol fever, bilious fever, typhus fever, putrid fever, nervous fever or mucous fever, but treats them each according to their several peculiarities.


FN-72:  Subsequently to the year 1801 a kind of pupura miliaris (roodvonk), which came from the West, was by physicians confounded with the scarlet fever, notwithstanding that they exhibited totally different symptoms, that the latter found its prophylatic and curative remedy in belladonna, the former in aconite, and that the former was generally merely sporadic, while the latter was invariable epidemic. Of late years it seems as if the two occasionally joined to form an eruptive fever of a peculiar kind, for which neither the one nor the other remedy, alone, will be found to be exactly homoeopathic.


ஆர்கனான் மணிமொழி-73

§ 73


தனி  மனிதர்களைத் தாக்கும் திடீர் அல்லது தீவிர நோய் என்பது இங்கும் அங்கும் நிகழ்கிற ஒன்றாகவும்  , தொற்றுநோய் அல்லது பெருவாரியாக பரவுகின்ற நோயாகவும் , தீவிர மியாசத்தைச் கொண்டுள்ளது.


திடீர் வகை அல்லது கடுமையான நோய்களைப் பொறுத்தவரை, அவை மனிதர்களை தனித்தனியாக தாக்குகிறது , குறிப்பாக  நோயிற்கு ஆட்படும் தன்மையுள்ளவர்களுக்கு , தூண்டும் காரணிகளாக தீங்கு விளைவிக்கும் தாக்கங்கள் இருக்கிறது.  ஒரு வகையில் அளவு மீறிய உணவை உட்கொள்ளுதல் , போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, கடுமையான உடல் வேதனைகள், குளிரில் அடிபடுதல், அதிகச் சூடுள்ள இடங்களில் அல்லது வெய்யிலில் வேலை செய்தல், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை , உழைப்பினால் ஏற்பட்ட களைப்பு போன்ற சிலவும். அல்லது அல்லது உடல் எரிச்சல், மன உணர்ச்சிகள் மற்றும்  அவற்றைப் போன்ற காரணங்களும், தூண்டும் காரணிகளாக இருந்து கடுமையான காய்ச்சல் போன்ற திடீர் நோய்களை உருவாக்குகின்றன . இருப்பினும், உண்மையில்,  உடலின் உடபுறத்தே உறங்கிக் கிடக்கும் சோரா எனப்படும் விஷ நோய்க்கூறு விழித்துக்கொண்டது தான் மூல காரணமாகும். இந்தத் திடீர் வகை நோய் மிகக் கடுமையானதாக இல்லாத போதும்  அல்லது விரைவிலே ஒடுக்கப்படுகின்ற போதும் அந்த  சோரா விஷ நோய்க்கூறு பழையபடி செயலற்றுக் கிடைக்கும் நிலைக்குத் திரும்புகிறது. அல்லது அந்நோய்கள்  ஒரே நேரத்தில் பல நபர்களைத் தாக்குவது போன்றவையாகவும் , இங்கேயும் அங்கேயும் (அவ்வப்போது நிகழ்கின்ற), காற்றுமண்டலச் சூழ்நிலைசார்ந்த அல்லது   புவி சார்ந்த  மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள்கள்  மூலம், நோய் ஏற்புத்தன்மைக்கு உள்ளாகும்   ஒரு சில நபர்களுக்கு  ஒரே சமயத்தில் தாக்கும் நோயாகும். இவற்றுடன் தொடர்புடைய பல நோய்கள் ஒரே நேரத்தில் ஒரே வகைப்பட்ட நோய்த்துன்பங்களுடனும்,    மிகவும் ஒத்த காரணத்தைக் கொண்டவையாகவும் ( தொற்றிப்பரவும் முறையில்)  தாக்கப்படுகின்றன; இந்த நோய்கள் பொதுவாக மனிதர்களின் கூட்டம் பெருந்திரளாக உள்ள அடர்த்தியான இடங்களில் இவை  தொற்றுநோயாக (தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக்கூடிய ) மாறுகின்றன, இத்தகைய ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு விசித்திரமான இயல்புடைய   காய்ச்சல் -71 உண்டாக்குகின்றன, ஏனென்றால் , இந்த  நோய்களின் வகைகள்  ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படும் எல்லோரும்  ஒரே மாதிரியான நோயுற்ற விளைவுகளை உருவாக்குகின்றன , இதை மருத்துவம் செய்யாமல் விட்டுவிட்டால் அந்த நோய்  ஒரு மிதமான காலத்தில் தானாகவே அழிந்துவிடுகிறது   அல்லது நோயாளி உடல்நலத்திற்குத் திரும்புகிறார். யுத்தங்களின் பாதிப்பு , வெள்ளப்பெருக்கு  மற்றும் பஞ்சம் ஆகியவற்றின் பேரழிவுகள் போன்ற நிகழ்வுகள்  நோய் மிகுவிப்பு காரணியாகவும்  ,  சில நேரங்களில் அவை விசித்திரமான கடுமையான (தீவிர)  நோய்களை உருவாக்க காரணமாகவும்  இருக்கின்றன, அவை ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன  (எனவே சில பாரம்பரிய பெயர்களால் அறியப்படுகின்றன),  ஆனால் அந்நோய்கள்   மனிதர்களின்  வாழ்நாளில்,  ஒரு முறை தான் தாக்குபவைகளாக இருக்கின்றன  , அவை, பெரியம்மை, தட்டம்மை, கக்குவான் இருமல், சிடன்ஹாமின் (Sydenham) பண்டைய, மென்மையான, பிரகாசமான சிவந்த செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் -72, புட்டாளம்மை  போன்றவை ஆகும் , அல்லது அடிக்கடியும்,  பெரும்பாலும் ஒரே இயல்புடன் மீண்டும் மீண்டும் தோன்றுபவையாகவும் உள்ள  லெவண்டின் (Levant ) நகரத்தின்  பிளேக் என்னும் கொள்ளைநோய் , கடற்கரை ஓரங்களில்  தோன்றும் மஞ்சள் காய்ச்சல்,  ஆசிய கண்டத்தின்   வாந்திபேதி போன்ற நோய்களாகும்.



அடிக்குறிப்பு-71:


சாதாரண மருத்துவப் பள்ளியை (அலோபதி) சேர்ந்தவர்கள்  (அத்தகைய காய்ச்சல்களுக்கு நிலையான  சில பெயர்களை சூட்டுவதைப்போலவும் , இது தவிர வலிமைமிக்க இயற்கை  வேறுவகையான சாய்ச்சல்களை உண்டாக்க முடியாது என்றும் , இதனால் அக்காய்ச்சலுக்கு  சிகிச்சையளிக்க   சில நிலையான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுவது போல் ), ஒரு ஹோமியோபதி மருத்துவர் அவ்வாறான முடிவுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்.  எனவே அவர்,  சிறைச்சாலையில்  தொற்று நோயாயிருந்து வந்த கடுமையான குடற்க்காய்ச்சல், பித்த காய்ச்சல், நச்சுக்   காய்ச்சல்,கெடுதலான (படு மோசமான) காய்ச்சல், நரம்பு காய்ச்சல் அல்லது சளி காய்ச்சல் என்ற பெயர்களில் நோய்களாக அழைப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால் அவற்றில் காணப்படும் பல்வேறான  தனித்தன்மைகளுக்கு தகுந்தவாறு மருத்துவம் செய்வார் .



அடிக்குறிப்பு-72:

அடுத்து,   1801 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மேற்கு நாடுகளில் இருந்து வந்த " மக்காசோளம் போன்ற எழுச்சியுடன் தோலுக்கு அடியில் இரத்தம் திட்டு திட்டாக சேரும் " ஒரு வகையான காய்ச்சலை [ pupura miliaris (roodvonk)]  , செம்புள்ளிக்  காய்ச்சளுடன் சேர்த்து குழப்பி கொள்கிறார்கள். அவ்விரு நோய்களும் வெவ்வேறு வகையான ,  மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தாலும், பிந்தைய நோயான செம்புள்ளிக் காய்ச்சலைக் குணமாக்குவதற்கும் மற்றும் அதன் நோய் தடுப்பு மருந்தாகவும் பெல்லடோனா இருக்கிறது , ஆனால் முதல் வகையான காய்ச்சலுக்கு அகோனைட் சிறந்த மருந்தாக இருக்கிறது, மற்றும் முந்தைய நோய் பொதுவாக அரிதாகவே (அவ்வப்போது) நிகழ்வதாக இருந்தது, மாறாக பிந்தைய நோய்  தொற்றிப்பரவும் தொற்றுநோயாகும். பிற்காலத்தில் ,  அவ்விரு நோய்களும்,  சில சமயங்களில் ஒன்றாகச் சேர்ந்து  ஒரு புதிய விசித்திரமான தோல்சினைப்புக்  காய்ச்சலாகப் பரவுவது காணப்பட்டது. , அப்போது அந்த இரண்டு  மருந்துகளில்  ஏதாவது ஒன்று அல்லது மற்றொன்று மட்டுமே   அந்தநோய்க்  குறிகளின் அடிப்படையில் தகுந்த  ஹோமியோபதி மருந்தாக இருக்கிறது.


ஆர்கனான் மணிமொழி-72


ஆர்கனானின் இரண்டாம்  பகுதி

ஆர்கனான் மணிமொழி-72


With respect to the first point, the following will serve as a general preliminary view. The disease to which man is liable are either rapid morbid processes of the abnormally deranged vital force, which have a tendency to finish their course more or less quickly, but always in a moderate time - these are termed acute diseases; - or they are diseases of such a character that, with small, often imperceptible beginnings, dynamically derange the living organism, each in its own peculiar manner, and cause it gradually to deviate from the healthy condition, in such a way that the automatic life energy, called vital force, whose office is to preserve the health, only opposes to them at the commencement and during their progress imperfect, unsuitable, useless resistance, but is unable of itself to extinguish them, but must helplessly suffer (them to spread and) itself to be ever more and more abnormally deranged, until at length the organism is destroyed; these are termed chronic diseases. They are caused by infection with a chronic miasm.


தீவிர (அல்லது திடீர்) மற்றும் நாட்பட்ட (அல்லது நீண்டகால) நோய்கள் பற்றிய பொதுவான மதிப்பீடு.



முதல் செய்தி கூறுபாட்டைப் ( மணிமொழி-71  )  பொறுத்தவரை, பின்வருபவை பொதுவான பூர்வாங்கமான  கோட்பாடாக இருக்கிறது.

உயிராற்றல் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவதால் நோய்க்குறிகள் மிக வேகமாய்த் தோன்றி,  ஒரு சில நாட்களில் ஏறத்தாழ விரைவாக அல்லது குறைந்த நாட்களில் மறைந்து விடுகின்றன, ஆனால் எப்போதும் மிதமான காலஅளவை எடுத்துக் கொள்கிறது, அதனால் அவை தீவிர அல்லது கடுமையான (அல்லது திடீர் / உடனடி ) நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.  அல்லது  சில நோய்களின் ஆரம்பம் சிறிய அளவிலும்  , பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாத தொடக்கங்களுடன், உயிர் வாழும் உயிரியின் இயக்கநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி  ஒவ்வொன்றும் தனித்துவமான முறையில் இருக்கும்  வகையில் மாற்றியமைத்து , ஆரோக்கிய நிலைமையில் படிப்படியாக மாறுதல்கள் தோன்றும்படிச் செய்கிறது. அதனால்  தானே இயங்குகிற  உயிர்ப்புச்சக்தி , அதாவது உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள உயிராற்றல் , நோயின் ஆரம்பத்திலும் மற்றும் அது அதிகரித்து   முன்னேறும் காலத்திலும் அதனை எதிர்க்க முற்படுகிறது. ஆனாலும் அந்த எதிர்ப்பு  ஒழுங்காகவும் , பொருத்தமில்லாததாகவும்   ,  பயனற்றதாகவும்  இருப்பதால்  அந்த நோயை வெளியேற்ற முடியாமல்  இருந்து விடுகிறது. அதனால்  நோயைப் போக்கச் சக்தியற்று ( எனவே நோய் பரவச்  செய்யுமாறு) , தானே அதன் பிடியில் சிக்கி  மேலும் மேலும் இயற்கைக்கு மாறான வகையில் குழம்பிப்போய் , அது நீடித்து  இறுதியில் உயிரியே (அல்லது உறுப்பமைவு ) அழிந்து விடுகிறது. இதுவே நாட்பட்ட அல்லது நீண்டகால நோய்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நோய்களுக்கு  நாட்பட்ட மியாசங்களின் ( சோரா, சைக்கோசிஸ் மற்றும் சிபிலிஸ்)  தொற்று காரணமாக இருக்கிறது. 


ஆர்கனான் மணிமொழி-71


ஆர்கனான் மணிமொழி-71
§ 71

As it is now no longer a matter of doubt that the diseases of mankind consist merely of groups of certain symptoms, and may be annihilated and transformed into health by medicinal substances, but only by such as are capable of artificially producing similar morbid symptoms (and such is the process in all genuine cures), hence the operation of curing is comprised in the three following points:

I. How is the physician to ascertain what is necessary to be known in order to cure the disease?

II. How is he to gain a knowledge of the instruments adapted for the cure of the natural disease, the pathogenetic powers of the medicines?

III. What is the most suitable method of employing these artificial morbific agents (medicines) for the cure of natural disease?


நலமாக்கலுக்குத் தேவையான மூன்று செய்திக்கூறுகள் : நோய்கள் பற்றிய புலனாய்வு- மருந்துகளின் விளைவு பற்றிய புலனாய்வு மற்றும் மருந்துகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துதல்.



இப்போது மனிதகுலத்தினைப் பாதிக்கும் நோய்கள் குறிப்பிட்ட சில அறிகுறிகளின் தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ளன என்பதில் எந்தச் சந்தேகம் இல்லை, மேலும் அவை மருந்துப் பொருட்களால் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டு ஆரோக்கியமான நிலைக்கு மாற்றப்படலாம், ஆனால் அம்மருந்துகள் அந்த இயற்கை நோயுடன் ஓத்திருக்கிற செயற்கையான  ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்  (மற்றும் எல்லா உண்மையான குணப்படுத்துதல்களிலும் இதுதான் செயல்முறை), எனவே குணப்படுத்தும் செயல்பாடு என்பது பின்வரும் மூன்று செய்திக்கூறுகளில் அடங்கும்:


I. நோயைக் குணப்படுத்த எதனை அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது?


II. இயற்கையான நோயைக் குணப்படுத்துவதற்குத் தேவையான   கருவிகளைப் (மருந்துகளின்) பற்றிய, அதாவது நோயை உருவாக்கும் மருந்துகளின் ஆற்றலைப் பற்றிய அறிவை எவ்வாறு வளர்த்துக் கொள்வது ?


III இயற்கை நோயைக் குணப்படுத்த இந்த செயற்கையான வழியில் நோய்க்குறிகளை தோற்றுவிக்கும் முகவர்களை (மருந்துகள்) பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வழிமுறை எது?


ஆர்கனான் மணிமொழி-70


ஆர்கனான் மணிமொழி-70
§ 70

From what has been already adduced we cannot fail to draw the following inferences:

That everything of a really morbid character and which ought to be cured that the physician can discover in diseases consists solely of the sufferings of the patient, and the sensible alterations in his health, in a word, solely of the totality of the symptoms, by means of which the disease demands the medicine requisite for its relief; while, on the other hand, every internal cause attributed to it, every occult quality or imaginary material morbific principle, is nothing but an idle dream;

That this derangement of the state of health, which we term disease, can only be converted into health by another revolution effected in the state of health by means of medicines, whose sole curative power, consequently, can only consist in altering man's state of health - that is to say, in a peculiar excitation of morbid symptoms, and is learned with most distinctness and purity by testing them on the healthy body;

That, according to all experience, a natural disease can never be cured by medicines that possess the power of producing in the healthy individual an alien morbid state (dissimilar morbid symptoms) differing from that of the disease to be cured (never, therefore, by an allopathic mode of treatment), and that even in nature no cure ever takes place in which an inherent disease is removed, annihilated and cured by the addition of another disease dissimilar to it, be the new one ever so strong;

That, moreover, all experience proves that, by means of medicines which have a tendency to produce in the healthy individual an artificial morbid symptom, antagonistic to the single symptom of disease sought to be cured, the cure of a long-standing affection will never be effected, but merely a very transient alleviation, always follows by its aggravation; and that, in a word, this antipathic and merely palliative treatment in long-standing diseases of a serious character is absolutely inefficacious;

That, however, the third and only other possible mode of treatment (the homoeopathic), in which there is employed for the totality of the symptoms of a natural disease a medicine capable of producing the most similar symptoms possible in the healthy individual, given in suitable dose, is the only efficacious remedial method whereby diseases, which are purely dynamic deranging irritations of the vital force, are overpowered, and being thus easily, perfectly and permanently extinguished, must necessarily cease to exist. This is brought about by means of the stronger similar deranging irritation of the homoeopathic medicine in the sensation of the life principle. - and for this mode of procedure we have the example of unfettered Nature herself, when to an old disease there is added a new one similar to the first, whereby the new one is rapidly and forever annihilated and cured.

ஆர்கனான் மணிமொழி-70

ஹோமியோபதி நலமாக்கல் முறை பற்றிய சிறிய விளக்கம்.

இதுவரை கூறப்பட்ட அனைத்து விபரங்களிலிருந்து நாம் தவறாமல் பின்வரும் அனுமானங்களுக்கு வந்தாக வேண்டும்.

நோய்களில், மருத்துவர்  கண்டறியக்கூடிய எல்லாவற்றையும் , அதாவது குணப்படுத்த வேண்டியதாக உள்ள அனைத்தும் நோயாளியின் உண்மையான நோய்த் தன்மையாகும், அது   நோயாளியின் முழுத்   துன்பங்களையும்  உள்ளடக்கியதாகவும் , மற்றும்  அவரது  நலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டுபவையாகவும் இருக்கிறது, ஒரே  வார்த்தையில் கூறவேண்டுமென்றால்,  அவரது  ஒட்டுமொத்தக் குறிகளாகும்,   அதாவது , நோய் அதன் நிவாரணத்திற்கு தேவையான மருந்தைக் கோருகிறது என்பதாகும்; அதே நேரத்தில், மறுபுறம், அதற்குக் கூறப்படும் ஒவ்வொரு உள்  காரணமும், ஒவ்வொரு மறைந்திருக்கும் காரணமும்  அல்லது கற்பனை சார்ந்து கூறப்படும்  நோய்க் கொள்கையும் ஆகிய எல்லாமே நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு பயனற்றக்  கனவைத் தவிர வேறில்லை.

எனவே, நாம் நோய் என்று சொல்லும் ஆரோக்கிய நிலையின் ஒழுங்குழைவு அல்லது சீர்குலைவை , உடலின் ஆரோக்கிய  நிலையில் நிருபிக்கப்பட்ட மருந்துகளின் மூலம் மற்றொரு அடிப்படை மாறுபாடு ஏற்படுத்துவதன் வழியாக மட்டுமே இந்த நோய் நிலையை ஆரோக்கிய நிலையாக மாற்றி அமைக்க முடியும். ஆனால் அம்மருந்துப் பொருள்களின் குணமாக்கும் ஆற்றல் என்பது  , மனிதர்களின்  உடல்நலத்தில் அவை தோற்றுவிக்கும் மாற்றத்தை , அதாவது தனித்தன்மையுடன் கிளர்ந்து எழுகிற நோய்க்குறிகளைப் பொறுத்தே அமைகிறது என்பதை ஆரோக்கியமான மனிதர்களுக்கு அம்மருந்தை கொடுத்து  தனிச்சிறப்பாகவும் , தூயமுறையிலும் ஆய்வு செய்வதன் வழியாக அவர்களிடத்தில் வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு நாம் கற்றுக் கொள்ளமுடியும்.

நோயற்ற ஒருவர் உடலில் நீக்கப்படவேண்டிய இயற்கை நோயின் குறிகளுக்கு மாறான நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள (ஒத்த தன்மையில்லாத நோய்க்குறிகள்   ) மருந்துகளால், அந்த இயற்கை  நோயை மருத்துவரால் ஒருபோதும்  குணம் செய்ய முடியாது என்பதை எல்லா பட்டறிவுகளும் காட்டுகின்றன (ஆகவே , அலோபதி மருத்துவச் சிகிச்சையின் அடிப்படையில் நோய்கள் ஒருபோதும் குணமாவதில்லை) . மற்றும் , புதிதாகத் (இரண்டாவதாகத்) தரப்படும் ஹோமியோபதி மருந்து அது  எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும்,  முதலாவதாகத் தோன்றிய நோயுடன் (குறிகளில்) ஒற்றுமையுள்ளதாக இல்லா விட்டால், அதனால் நோயாளியின் உடலில் உள்ளார்ந்து நிலைத்திருக்கும் முதல் நோயை முற்றிலும் நீக்கவோ , அழிக்கவோ அல்லது குணம் செய்யவோ அந்த  ஹோமியோபதி மருந்தினால் முடியாது என்பதை இயற்கையில் நாம் காண்கிறோம்.


நலமான நிலையில் உள்ள ஒருவரிடம் செயற்கையான நோய்க்குறிகளை உண்டாக்கும் மருந்துகளைக் கொண்டு நீண்டகாலமாக உள்ள ஒரு நோய் நிலையில் , நீக்கப்படவேண்டிய நோயின் குறிகளில் ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அக்குறிக்கு நேர் எதிரான மருந்தினைக் கொடுக்கும் போது , நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அந்த  நோயை எக்காலத்திலும் குணம் செய்ய முடியவே முடியாது. அத்தருணங்களில்  நோய் சிறிது காலம் தான் அடங்கி இருக்கும், பிறகு தவறாமல் கடுமையான அளவில் திரும்பிவரவே செய்யும் . சுருக்கமாக கூறுவது என்னவென்றால் தற்காலிகமாக  நோய்த் தணிவிப்பைத் தரும்  ஆற்றலற்ற  மருத்துவ சிகிச்சையினால்,  நீண்டகாலமாக நிலைத்திருக்கும் நோய்களுக்கு எந்த பயனும் விளையாது என்பதை எல்லாப் பட்டறிவுகளும் நிருபிக்கிறது.


இயற்கையான நோயின் ஒட்டுமொத்தக் குறிகளுக்கும் ஓத்திருக்கிற குறிகளை நலம் வாய்ந்த மனிதரிடம் எந்த மருந்து தோற்றுவிக்கிறதோ, அம்மருந்தைப் பொருத்தமான மருந்தளவில் தருவதால் நோயாளிக்கு நலத்தைத் தரும் மிகவும் பயனுள்ளதாக உள்ள ஒரே மருத்துவ முறையே, மூன்றாவதாக வரும் சரியான மருத்துவச்சிகிச்சை முறையாகும் ( ஹோமியோபதி ). இம்மருத்துவம், இயக்கநிலையில் உள்ள உயிராற்றலில்  உறுத்தல்களை உண்டாக்கும் நோய்களை அடக்கி ஆள்வதால் , அந்நோய்கள்  எளிதாகவும், முழுமையாகவும் மற்றும் நிரந்தரமாகவும் அழிக்கப்பட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றது. இது,  ஹோமியோபதி மருந்துகளின் மூலம் உயிரின் தனித்தன்மை வாய்ந்த ஆற்றலின் (life principle) விளைவாக  உணர்வு நிலையில் வலிமைமிக்கதாகவும் , ஒத்துள்ளதாகவும் உள்ள உறுத்தல்களை உண்டாக்கி நலப்படுத்துகிறது. இந்த நடைமுறைக்கு, தடையற்ற இயற்கையின் எடுத்துக்காட்டு நம்மிடம் உள்ளது, ஏற்கனவே இருக்கின்ற ஒரு இயற்கையான ஒரு பழைய நோயுடன்  ,  அதை ஒத்திருக்கும்  புதிய நோய்  சேரும் போது,  அப்புதிய நோயை விரைவாகவும்  நிலையாகவும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டு குணம் உண்டாக்குவதைக் காணமுடிகிறது.