Friday, 15 November 2019

ஆர்கனான் மணிமொழி-57

§ 57

In order to carry into practice this antipathic method, the ordinary physician gives, for a single troublesome symptom from among the many other symptoms of the disease which he passes by unheeded, a medicine concerning which it is known that it produces the exact opposite of the morbid symptom sought to be subdued, from which, agreeably to the fifteen - centuries - old traditional rule of the antiquated medical school (contraria contrariis) he can expect the speediest (palliative) relief. He gives large doses of opium for pains of all sorts, because this drug soon benumbs the sensibility, and administers the same remedy for diarrhoeas, because it speedily puts a stop to the peristaltic motion of the intestinal canal and makes it insensible; and also for sleeplessness, because opium rapidly produces a stupefied, comatose sleep; he gives purgatives when the patient has suffered long from constipation and costiveness; he causes the burnt hand to be plunged into cold water, which, from its low degree of temperature, seems instantaneously to remove the burning pain, as if by magic; he puts the patient who complains of chilliness and deficiency of vital heat into warm baths, which warm him immediately; he makes him who is suffering from prolonged debility drink wine, whereby he is instantly enlivened and refreshed; and in like manner he employs other opposite (antipathic) remedial means, but he has very few besides those just mentioned, as it is only of very few substances that some peculiar (primary) action is known to the ordinary medical school.


நோயின் குறிகளுக்கு நேர் எதிரான மருந்துகளைக் கொண்ட அலோபதி மருத்துவமுறையில் சிகிச்சை அளிப்பதற்கு  , ஒவ்வொரு நோயிலும் உள்ள  பல குறிகளில் ஏராளமான குறிகளைப் புறக்கணித்துவிட்டு , அதிக வேதனையைத் தரும் ஒரே ஒரு குறியை மட்டும் இலக்காக வைத்து , அதற்கு நேர் எதிரான செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் குணமுள்ள மருந்தைக் கொடுக்கிறார்கள் இந்த சாதாரண மருத்துவர்கள் . அதனால், பதினைந்து நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வரும் மூலாதாரமான விதிகளைக் கொண்ட இந்த பழமையான அலோபதி சிகிச்சையினால் (  எதிருக்கு எதிர்  மருத்துவம்) நோய்க்குறிகள் மிக விரைவில் நீங்குமென்று (  வலி தணிக்கும் மருத்துவ முறை)  அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உடல் உணர்ச்சிகளைச் விரைவாக மழுங்கச் செய்யும் சக்தி ஒபியத்திற்கு இருப்பதைக் தெரிந்து கொண்டு அவர் (அலோபதி மருத்துவர்)  எல்லாவித வலிகளுக்கும் அம்மருந்தை அதிக அளவுகளில் கொடுக்கிறார், அதே மருந்தையே வயிற்றுப்போக்கிற்கும் (பேதி) கொடுக்கிறார் , ஏனென்றால் குடலின் இயற்கையான முன்னோக்கிச் தள்ளும் சக்தியை மிக விரைவில் போக்கடித்து அதன் உணர்ச்சியை அடக்கும் குணம் அம்மருந்திற்கு இருப்பதே காரணம்; மற்றும் தூக்கம் இல்லாதவர்களுக்கும் ஓபியம் கொடுக்கப்படுகிறது, ஏனென்றால் ஓபியம் கொடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் நோயாளிக்கு  உணர்வு மழுக்கம் ஏற்படுகிறது , அதனால் நோயாளி மயக்கமான தூக்கத்திற்குச் செல்கிறார்; மேலும் அவர்கள் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் மற்றும் மலத்தை வெளியேற்ற இயலாதவர்களுக்கு பேதி  மருந்தைத் தருகிறார்கள், நெருப்பினால் சூடுபட்ட கையைக் குளிர்ந்த தண்ணீரில் வைக்கச் சொல்கிறார், அந்த, குளிர்ந்த தண்ணீரின் தட்பவெட்ப அளவு குறைவாக இருப்பதால் , கையை வைத்தவுடனே மாயாஜாலம் போல் உடனடியாக அந்த எரிச்சல் வலி நீங்கிகிறது; உடல்  சில்லென்று  குளிர்ச்சியாக இருப்பதாகவும்  மற்றும் தேவையான சூடும் இல்லை என்றும் முறையீடு  செய்யும் நோயாளிகளை , அவர் சூடான தண்ணீரில் குளிக்கச் சொல்கிறார் , அதனால் நோயாளிகளுக்கு உடனடியாக உடலில் சூடு உண்டாகிறது;  நீண்ட நாட்களாக உடல் பலவீனமாக   ( தளர்ச்சி) இருந்து வரும் நோயாளிக்கு  ஒயினை  (திராட்சைச் சாராயம்) உட்கொள்ளச்  சொல்கிறார், ஒயினைக் குடித்தவுடனே அந்த நோயாளிக்கு விறுவிறுப்பாகவும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உணர்ச்சியும் ஏற்படுகிறது; மற்றும் இவைகளை போன்றே பல நோய்களுக்கு அவற்றிற்கு  எதிரான மருந்துகளையே (நேர் எதிர் குணமுள்ள மருந்துகள்) கொடுக்கிறார், இங்கு கூறப்பட்டவைகளைத் தவிர , தனிச்சிறப்பான ( முக்கியமான ) ஒரு சில மருந்துப் பொருள்களையே அந்த சாதாரண மருத்துவர்கள் ( அலோபதியர்கள்) உபயோகப்படுத்துகின்றனர்

Thursday, 14 November 2019

ஆர்கனான் மணிமொழி-56


§ 56

By means of this palliative (antipathic, enantiopathic) method, introduced according to Galen's teaching Contraria contrariis for seventeen centuries, the physicians hitherto could hope to win confidence while they deluded with almost instantaneous amelioration. But how fundamentally unhelpful and hurtful this method of treatment is (in diseases not running a rapid course) we shall see in what follows. It is certainly the only one of the modes of treatment adopted by the allopaths that had any manifest relation to a portion of the sufferings caused by the natural disease; but what kind of relation? Of a truth the very one (the exact contrary of the right one) that ought carefully to be avoided if we would not delude and make a mockery of the patient affected with a chronic disease1.

1 A third mode of employing medicines in diseases has been attempted to be created by means of Isopathy, as it is called - that is to say, a method of curing a given disease by the same contagious principle that produces it. But even granting this could be done, yet, after all, seeing that the virus is given to the patient highly potentized, and consequently, in an altered condition, the cure is effected only by opposing a simillimum to a simillimum.

To attempt to cure by means of the very same morbific potency (per Idem) contradicts all normal human understanding and hence all experience. Those who first brought Isopathy to notice, probably thought of the benefit which mankind received from cowpox vaccination by which the vaccinated individual is protected against future cowpox infection and as it were cured in advance. But both, cowpox and smallpox are only similar, in no way the same disease. In many respects they differ, namely in the more rapid course and mildness of cowpox and especially in this, that is never contagious to man by more nearness. Universal vaccination put an end to all epidemics of that deadly fearful smallpox to such an extent that the present generation does no longer possess a clear conception of the former frightful smallpox plague.

Moreover, in this way, undoubtedly, certain diseases peculiar to animals may give us remedies and thus happily enlarge our stock of homoeopathic remedies.
But to use a human morbific matter (a Psorin taken from the itch in man) as a remedy for the same itch or for evils arisen therefrom is - ?

Nothing can result from this but trouble and aggravation of the disease.


பதினேழாம் நூற்றாண்டில் மருத்துவர் கல்லன் என்பவர்   "எதிருக்கு எதிர் " என்ற கோட்பாட்டின்படி கற்பித்த வலி தணிக்கும் மருத்துவ முறையை  ( நேர் எதிர் குறிகளையுடைய  , நோயின் குணத்திற்கு எதிரான குணமுள்ள மருந்துகளை பயன்படுத்துதல்) அறிமுகம் செய்தார், இந்த மருத்துவ முறையால் நோய்கள்  ஏறத்தாழ உடனடியாக குறைவதை சுட்டிக்காட்டி மக்களின் நம்பிக்கையை வெல்லலாம் என்று அம் மருத்துவர்கள் இது நாள் வரை நம்புகிறார்கள். ஆனால் மருத்துவ சிகிச்சை (விரைந்து பாதிப்பை உண்டாக்காத நோய்களில்) அடிப்படையாகவே எவ்வாறு உதவவில்லை மற்றும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை  நாம் அடுத்துப் பார்க்கலாம். அலோபதி மருத்துவர்களால் கடைபிடிக்கப்படும்  இந்த ஒரே உறுதியான  மருத்துவ முறையால் இயற்கை நோயினால் வெளிப்படும்  துன்பங்களுடன் தொடர்பு இல்லாததாக இருக்கிறது; ஆனால் எந்த வகையான தொடர்பு இருக்கிறது? உண்மை என்னவென்றால் ( சரியானவற்றிற்கு நேர் எதிராக இருக்கிறது) நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை ஏமாற்றி வஞ்சிப்பதாக இருப்பதால் கவனமான முறையில் விலக்கி வைக்கப்பட வேண்டியதாக  இருக்கிறது-1.


அடிக்குறிப்பு-1:


நோய்களைக் குணப்படுத்த மூன்றாவது மருத்துவமாக இருப்பது அதேபொருள் மருத்துவம் (எடுத்துக்காட்டாக:நோய்க்கழிவுகளைக் கொண்டு நோயைக் குணப்படுத்துதல்) என்று அழைக்கப்படுவதாகும், அதாவது , ஒரு குறிப்பிட்ட நோயின் போது , அந்நோயினால் உண்டாக்கப்படும் நோய்த்தொற்றுப் பொருளைக் கொண்டே அந்நோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறை என்பதாகும்.  ஆனால், இப்படிச் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டாலும், எனினும், மொத்தத்தில் எப்படியிருந்தாலும், அந்த நச்சு நுண்ணுயிரியை மிக நுண்மையாக வீரியப்படுத்தி அந்த நோயாளிக்கு கொடுக்கும் போது , அதன் விளைவாக , இயல்புத்தன்மைக்கு மாறாக ஏற்பட்டிருக்கும் மாறுபட்டநிலைக்கு ஒத்தவகையான மருந்தைக் கொடுத்து அந்த ஒத்தநோயைக் நலமாக்குவதே இங்கு நிகழ்கிறது.

அதே நோய்ப்பொருள் வீரியத்தையே ( அப்பொருளையே) கொடுத்து அந்நோயைக் குணப்படுத்த முயற்சி செய்வது என்பது  மனிதர்களின் பொதுவான புரிதலுக்கும்  மற்றும் எல்லா வகையான பட்டறிவிற்கும் முரண்பட்டதாக உள்ளது. யார் முதன்முதலாக அதேபொருள் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார்களோ அவர்கள், மாட்டம்மை கொப்பளத்திலிருந்து  (கோமாரி நோய்)  தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட மனிதர்கள் ,எதிர்காலத்தில் அந்த நோயின் தொற்றுக்கு ஆட்படாமல் பாதுகாக்கப்படுவதாகவும் , அதனால் நோய்வருவதற்கு முன்பே அந்நோய்  குணமாக்கப்படுவதாகவும் அநேகமாக எண்ணினார்கள். ஆனால் , மாட்டம்மை   (கோமாரி நோய்)  மற்றும் பெரியம்மை ஆகிய இரண்டு நோய்களும் ஒத்த தன்மையுடையவைகள் மட்டுமே  தவிர, அவை ஒரே நோய் ஆகாது. அவை பலவகையில் ஒன்றில் இருந்து மற்றவை வேறுபட்டவையாக இருக்கிறது, அதாவது மிக விரைவாக பரவக்கூடியதும் , மென்மையான தன்மையுடையதுமான மாட்டம்மை அல்லது கோமாரி நோய்  மிக அருகில் இருக்கும் மனிதர்களுக்கு ஒருபோதும் தொற்றி பரவாதது ஆகும். பெரியம்மை நோயில் இருந்து பெறப்பட்ட மருந்தை  உலகம் முழுவதும் தடுப்பு மருந்தாக  பயன்படுத்தியதால் பேரச்சத்தை தரக்கூடியதாகவும் பெருவாரியாக பரவக்கூடியதாகவும் இருந்த அப்பெரியம்மை முடிவுக்கு வந்துவிட்டது என்பதால்  தற்கால தலைமுறையினர்  கடந்த காலத்தில் பயத்தைத் தரக்கூடியதாக இருந்த பெரியம்மையைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.  

மேலும் , இதே மாதிரி, விலங்குகளைத் தாக்கும்  சில வினோதமான நோயிலிருந்தும்  சில மருந்துகள் சந்தேகமில்லாமல் நமக்கு கிடைத்திருக்கிறது மற்றும் அம்மருந்துகள் நமது பெட்டகத்தில்  உள்ள  ஹோமியோபதி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மகிழ்ச்சி தருகிறது.

ஆனால், மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட நோய்ப்பொருள் ( மனிதனைத் தாக்கிய சொறிநோயில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து- சோரினம் ) அதே மனிதனுக்கு அதே சொறிநோயிற்கு மருந்தாகுமா அல்லது அதிலிருந்து தீமைகள் உண்டாகுமா?.

அவற்றில் இருந்து எந்த விளைவும் ஏற்படாது ஆனால் தொல்லையும்  மற்றும் நோய் அதிகரிக்கவும் செய்யும்.


Saturday, 9 November 2019

ஆர்கனான் மணிமொழி-55



Soon, however, the public became convinced that the sufferings of the sick increased and heightened with the introduction of every one of these systems and methods of cure if followed exactly. Long ago these allopathic physicians would have been left had it not been for the palliative relief obtained at times from empirically discovered remedies whose almost instantaneous flattering action is apparent to the patient and this to some extent served to keep up their credit.


ஆனாலும், இந்த மருத்துவ முறைமைகளையும் மற்றும் நலமாக்கும் வழிமுறைகளையும் அப்படியே பின்பற்றுவதால் நோயாளிகளின் துன்பங்கள் அதிகரிக்கின்றன  மற்றும்  உச்சநிலைக்கு செல்கிறது  என்பதைப் பொதுமக்கள் விரைவிலேயே உறுதியாக உணர்ந்து கொண்டனர்.  செயலறிவு முறையால் கண்டுபிடிக்கப்பட்ட சில மருந்துகள் நோயாளிகளின் வலியை தனிப்பதாகவும் , அவர்களின் துன்பத்தை உடனடியாக குறைப்பதாகவும் இருப்பதை நோயாளிகள் எளிதில் உணரத்தக்க வகையில் இருந்ததால்  , அலோபதி மருத்துவர்களின் மதிப்பு ஓரளவிற்கு கூடி ஆதரவு கிடைத்தது. இல்லையென்றால் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே மருத்துவத் துறையை விட்டு வெளியேறி இருப்பார்கள்.

Friday, 8 November 2019

ஆர்கனான் மணிமொழி-54


§ 54

The allopathic method of treatment utilized many things against disease, but usually only improper ones (alloea) and ruled for ages in different forms called systems. Every one of these, following each other from time to time and differing greatly each from the other, honored itself with the name of Rational Medicine1.

Every builder of such a system cherished the haughty estimation of himself that he was able to penetrate into the inner nature of life of the healthy as well as of the sick and clearly to recognize it and accordingly gave the prescription which noxious matter2 should be banished from the sick man, and how to banish it in order to restore him to health, all this according to empty assumptions and arbitrary suppositions without honestly questioning nature and listening without prejudice to the voice of experience. Diseases were held to be conditions that reappeared pretty much in the same manner. Most systems gave, therefore, names to their imagined disease pictures and classified them, every system differently. To medicines were ascribed actions which were supposed to cure these abnormal conditions. (Hence the numerous text books on Materia Medica.3)

1 As if the establishment of a science, based only on observation of nature and pure experiment and experience idle speculation and scholastic vaporings could have a place.

2 Up to the most recent times what is curable in sickness was supposed to be material that had to be removed since no one could conceive of a dynamic effect (§ 11 note) of morbific agencies, such as medicines exercise upon the life of the animal organism.

3 To fill the measure of self infatuation to overflowing here were mixed (very learnedly) constantly more, indeed, many different medicines in so-called prescriptions to be administered in frequent and large doses and thereby the precious, easily-destroyed human life was endangered in the hands of these perverted ones. Especially so with seton, venesection, emetics, purgatives, plasters, fontanelles and cauterization.


அலோபதி மருத்துவமுறையில் நோய்களுக்கு எதிராக பல பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அது வழக்கமாக தகுதியற்ற (தவறான)  ஒன்றாக இருக்கிறது (மாறுபட்ட ஒன்று)  மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில்  பின்பற்றப்பட்டு ஒரு மருத்துவ அமைப்பு முறையாக  அழைக்கப்படுகிறது. இம்மருத்துவத்தில் உள்ள ஒவ்வொன்றும் , காலத்திற்குத் தகுந்தவாறு  ஒன்று தொட்டு ஒன்று உருவாகியும்  ஒன்றிற்கு ஒன்று பெரிதும் வேறுபட்டவைகளாகவும்  இருந்து கொண்டு , தனக்குத் தானே பகுத்தறிவின் அடிப்படையிலமைந்த மருத்துவம்-1 என்று கௌரவப்படுத்திக்கொள்கிறது

இந்த மருத்துவ முறைமையை கட்டமைத்த ஒவ்வொரு மருத்துவரும் ,தாங்கள்  நலமாக இருப்பவர் , நோயுற்றவர் ஆகியோருடைய வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்து முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்றவாறு மருந்து பரிந்துரைப்பதாக  தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் , அம்மருத்துவக் குறிப்புகள்   மூலம் கொடுக்கப்பட்ட மருந்துகள்  நச்சுத்தன்மை வாய்ந்தவையென்றும் -2 நோயுற்றவர் தன் நலத்தை மீட்க வேண்டுமென்றால் அவைகள் அந்த நோயுற்ற மனிதனிடமிருந்து கட்டாயமாக விலக்கத்தக்கவையும் இருக்கிறது . அம்மருத்துவரின் இச்செயல்கள் எல்லாம் வெறுமையான அனுமானமாகவும் (நினைத்தல்) மற்றும் இயற்கையிடம் நேர்மையாக கேள்விகள் எழுப்பி அறிந்துகொள்ளாமல்  தன்னிச்சையான ஊகமுடிவாகவும், மற்றும் பட்டறிவின் குரலைக் கேளாமல் முற்சார்பு முடிவுகளினால் உண்டானவை இருக்கிறது  . மேலும், நோய்கள் ஒரே  மாதிரியாக திரும்பத் திரும்ப தோன்றும் தன்மை படைத்தவை    என்றும் கருதப்பட்டது. அதனால்,   ஆகையால்,  அவர்கள் கொடுத்த பல முறைமைகளில், நோயின்  வடிவங்கள் பற்றி அவர்கள் கற்பனை செய்து கொண்டதற்கு ஏற்றவாறு,  ஒவ்வொரு மாறுபட்ட  முறைமையிலும் , நோய்களுக்கு  வெவ்வேறாக  பெயரிட்டு அழைத்தும்   , வெவேறாக வகைப்படுத்தியும் கொண்டார்கள். இம்மருந்துகளின் செயல்கள் நோயாளிகளின் இயற்கைக்கு மாறான நிலைகளை நலப்படுத்துகிறது என்று மிகைப்படுத்தி கூறுகிறார்கள். ( எனவே இம்மருந்துகள் பற்றிய எண்ணற்ற பாடப் புத்தகங்கள் தோன்றின-3).

அடிக்குறிப்பு-1: இயற்கையை ஆராய்ந்து அறிந்தும் ,மற்றும் பரிசோதனை செய்தும்  மற்றும் பட்டறிவையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் நிறுவனத்தில் , பயனற்ற ஊகங்களுக்கும்  மற்றும் கல்விச் செருக்கோடு கூடிய நிலையற்ற வாதங்களுக்கும் இடம் இருக்கும் என்பதைப் போன்றதாகும்.

அடிக்குறிப்பு-2:  நோய்ப்பொருள்களின் ஆற்றல் மிகுந்த விளைவுகளை யாரும் புரிந்து கொள்ள முடியாததால் , விலங்கு உயிரினங்களின் மீது அம்மருந்துகளை சோதித்துப் பார்த்து , அவ்விலங்கினுள் உள்ள நலப்படுத்த வேண்டிய நோய்ப்பருப்பொருளை  நீக்கினால் மட்டுமே நோயாளியை நலப்படுத்த முடியும் என்ற கருத்து சமீப காலங்களில் காணப்படுகிறது.

அடிக்குறிப்பு-3: நெறி தவறிய மனதையுடைய இந்த மருத்துவர்கள் , தங்களுக்கு உள்ள அறிவற்ற மோகத்தை நிறைவு செய்வதற்காக ( கற்றவர்களுக்குரிய) மிகவும் மாறுபட்ட பல மருந்துகளைக் கலந்து, மருத்துவக்குறிப்பு என்ற பெயரில் கொடுத்து , அவற்றை அடிக்கடியும் மிகுதியான(தாராளமான)  அளவிலும் கொடுத்து , அதனால் விலைமதிப்பற்றதும் , எளிதாக அழிக்கக்கூடியதுமான மனித உயிரை அவர்கள் பேரிடருக்கு உள்ளாக்குகிறார்கள். குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், ஊடிழைமம் , இரத்தநாளத்தை துளையிடுதல் அல்லது வெட்டுதல், வாந்தியெடுக்கும் மருந்துகளைக் கொடுத்தல், மலம் இளக்கிகள், பற்றுப்போடும் மருந்துகள், உச்சிக்குழித்தேய்ப்புகள் மற்றும் சூடு போடுதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். 

Monday, 4 November 2019

ஆர்கனான் மணிமொழி-53



The true mild cures take place only according to the homoeopathic method, which, as we have found (§§ 7-25) by experience and deduction, is unquestionably the proper one by which through art the quickest, most certain and most permanent cures are obtained since this healing art rests upon an eternal infallible law of nature.

The pure homoeopathic healing art is the only correct method, the one possible to human art, the straightest way to cure, as certain as that there is but one straight line between two given points.



உண்மையான  கனிவான   நலமாக்கல் என்பது  ஹோமியோபதி மருத்துவத்தில்  மட்டுமே நிகழ்கின்றன என்பதை நமது பட்டறிவு மற்றும் ஊகித்து உணர்தல் மூலம் கண்டறிந்து உள்ளோம் (  மணிமொழி 7-25) , இந்த  கலை,  நோய்களை விரைவாகவும் , மிகவும் உறுதியாகவும்  மற்றும் மிகவும் நிரந்தரமாகவும் கேள்விக்கு இடமில்லாதவாறு நலமாக்குகிறது , ஏனெனில் இம் மருத்துவக்கலையே அழிவற்றதும், குற்றமற்றதுமான இயற்கைச் விதிகளை ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஒரே நேர் கோடு தான் இருக்க முடியும் என்பது போல், மனிதர்களை நலமாக்குவதற்கு சாத்தியமான கலையாகவும், நேரிடையாக  நலத்தை மீட்டுத் தருவதற்கும்  தூய ஹோமியோபதி   கலை மட்டுமே   சரியான வழிமுறை ஆகும்.

ஆர்கனான் மணிமொழி-52


§ 52

There are but two principle methods of cure: the one based only on accurate observation of nature, on careful experimentation and pure experience, the homoeopathic (before we never designedly used) and a second which does not do this, the heteropathic or allopathic. Each opposes the other, and only he who does not know either can hold the delusion that they can ever approach each other or even become united, or to make himself so ridiculous as to practice at one time homoeopathically at another allopathically, according to the pleasure of the patient; a practice which may be called criminal treason against divine homoeopathy.


நோயாளிகளை  நலமாக்குவதற்கு இரண்டு முதன்மையான மருத்துவமுறைகள் இருக்கின்றன: முதலாவது இயற்கையை மிகச் சரியாக கூர்ந்து கவனித்தும், கவனமான செய்முறை ஆய்வுகள்  மற்றும் தூய பட்டறிவு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ( இதற்கு முன்பு வடிவமைத்து பயன்படுத்தப்படாத) ஹோமியோபதி மருத்துவமுறை. மற்றும் இரண்டாவது, மேற்கண்ட செயலைச் செய்யாத , நோய்குறிகளுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளைக்  கொண்ட மருத்துவமுறை அல்லது அலோபதி மருத்துவமுறை ஆகும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை, இவ்விரண்டு மருத்துவ முறைகளையும் தனித்தனியாகவோ அல்லது இரண்டையும் ஒன்றாக இணைத்தோ அல்லது நோயாளியின் விருப்பதிற்கிணங்கி ஒருமுறை ஹோமியோபதி மருத்துவமும் மற்றொரு முறை அலோபதி மருத்துவமும் பயன்படுத்தலாம் என்ற பிரமைக்குள்  இருக்கும் மருத்துவர் தம்மைத்தாமே ஏளனத்திற்கு ஆளாக்கிக் கொள்பவராகவும் , இம்மருத்துவ முறைகளில் ஒன்றையும் அறியாதவரும் ஆவார்: இத்தகைய மருத்துவப் பயிற்சி செய்வோர் புனிதமான ஹோமியோபதி மருத்துவத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோக ( கீழறுப்பு வேலை) குற்ற செயல் புரிந்தவர் ஆகிறார்.


Sunday, 3 November 2019

ஆர்கனான் மணிமொழி-51


§ 51

This therapeutic law is rendered obvious to all intelligent minds by these instances, and they are amply sufficient for this end. But, on the other hand, see what advantages man has over crude Nature in her happy-go-lucky operations. How many thousands more of homoeopathic morbific agents has not man at his disposal for the relief of his suffering fellow-creatures in the medicinal substances universally distributed throughout creation! . In them he has producers of disease of all possible varieties of action, for all the innumerable, for all conceivable and inconceivable natural diseases, to which they can render homoeopathic aid - morbific agents (medicinal substances), whose power, when their remedial employment is completed, being overcome by the vital force, disappears spontaneously without requiring a second course of treatment for its extirpation, like the itch - artificial morbific agents, which the physician can attenuate, subdivide and potentize almost to an infinite extent, and the dose of which he can diminish to such a degree that they shall remain only slightly stronger than the similar natural disease they are employed to cure; so that in this incomparable method of cure, there is no necessity for any violent attack upon the organism for the eradication of even an inveterate disease of old standing; the cure by this method takes place by only a gentle, imperceptible and yet often rapid transition from the tormenting natural disease to the desired state of permanent health.


இந்த  உதாரணங்கள் மூலம் ,   அறிவுத்திறம்  வாய்ந்த (விவேகமுள்ள) அனைவருக்கும் (ஹோமியோபதி மருத்துவர்கள்)  இந்த  நோய்நீக்கற் கலைசார்ந்த விதிகள் தெளிவாக புலப்படக் கூடியது என்பதால்,  இதுபற்றி கூறியது தேவைக்கேற்ற வகையில்   போதுமானது  ஆகும்.  ஆனால் , மறுபுறம் சோம்பல் வாழ்வுடைய வருவது வரட்டும் என்றிருக்கிற  முரட்டுத்தனமான இயல்பு தன்மையால் (அலோபதி மருத்துவத்தில்) ,  என்ன  நன்மைகள்  மனிதனுக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள். இயற்கை படைப்பின் நெடுகிலும்  உள்ள மருத்துவப் பொருட்கள் மூலம் எத்தனை ஆயிரக்கணக்கில் வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி நோய் பொருள்கள் ( மருந்துகள் )  நமக்குக் கிடைத்திருக்கிறது அது மனிதனுக்கு மட்டுமல்லாமல் உடன்படைக்கப்பட்ட உயிரினங்களுக்கும் அவைகளின்  துன்பத்திலிருந்து தீர்வுகாண மருந்தாகப் பயன்படுகிறது. அவை, பலதிறப்பட்ட நோய் வகைகளின் செயல்பாடுகளைக் கொண்டதாகவும் , கணக்கில்    அடங்காததாகவும் , எண்ணிப்பார்க்கக் கூடியதாகவும் மற்றும்  எண்ணிப்பார்க்கமுடியாத  இயற்கை நோய்களுக்கு ஹோமியோபதி முறைப்படி நலப்படுத்த உதவும் நோய்ப்பொருளாகவும் ( மருந்துப் பொருள்கள்  )  இருக்கிறது, அவற்றின் ஆற்றலை மருந்தாகப் பயன்படுத்தும் செயல் நிறைவடையும் போது , உயிராற்றலின் விளைவால் (நோய்கள்) முறியடிக்கப்பட்டு , அவற்றை வேரோடு அழிப்பதற்கு இரண்டாவது மருத்துவ நடவடிக்கை தேவைப்படாமலும் , சொறி சிரங்கு போன்ற நோய்கள்  அங்கிருந்து நீக்கப்பட்டு விடுகின்றன. ஹோமியோபதி மருத்துவர் இந்த செயற்கை நோய்ப்பொருளை மெல்லியதாக்கி, ஒன்றை பல பாகங்களாகப் பிரித்து , எல்லையற்ற அளவிற்கு வீரியப்படுத்தி , நலப்படுத்த வேண்டிய ஒத்த இயற்கை நோய்த்தன்மையை விட சிறிது அதிக ஆற்றல் மிகுந்த மருந்தாக தயாரித்துக் கொடுக்கிறார். இம்மாதிரியான நிகரற்ற (அல்லது ஒப்பற்ற) அல்லது ஒப்பிடமுடியாத நலமாக்கும் வழிமுறை , உடலில் நீண்ட காலமாக நீடித்து தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நோய்களை வெளியேற்றி நலப்படுத்தும் போது எந்த பயங்கரமான விளைவுகளைத் தருவதில்லை. இத்தகைய முறையினால் ( ஹோமியோபதி) ஏற்படும் நலமாக்கல் மென்மையாகவும், கண்ணுக்குப்புலப்படாமலும் மற்றும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இயற்கை நோயில் விரைந்து மாற்றத்தை ஏற்படுத்தி  நாம் விரும்பும் நிரந்தரமான நலத்தைத் தருகிறது.


Thursday, 31 October 2019

ஆர்கனான் மணிமொழி-50


§ 50

Mighty Nature herself has, as we see, at her command, as instruments for effecting homoeopathic cures, little besides the miasmatic diseases of constant character, (the itch) measles and smallpox1, morbific agents which2, as remedies, are either more dangerous to life and more to be dreaded than the disease they are to cure, they themselves require curing, in order to be eradicated in their turn - both circumstances that make their employment, as homoeopathic remedies, difficult, uncertain and dangerous. And how few diseases are there to which man is subject that find their similar remedy in smallpox, measles or itch! Hence, in the course of nature, very few maladies can be cured by these uncertain and hazardous homoeopathic remedies, and the cure by their instrumentality is also attended with danger and much difficulty, for this reason that the doses of these morbific powers cannot be diminished according to circumstances, as doses of medicine can; but the patient afflicted with an analogous malady of long standing must be subjected to the entire dangerous and tedious disease, to the entire disease of smallpox, measles (or itch), which in its turn has to be cured. And yet, as is seen, we can point to some striking homoeopathic cures effected by this lucky concurrence, all so many incontrovertible proofs of the great, the sole therapeutic law of nature that obtains in them: Cure by symptoms similarity!

1 And the exanthematous contagious principle present in the cow-pox lymph.
2 Namely, small-pox and measles.


எல்லாம் வல்ல இயற்கை அன்னை  , நாம் அறிந்த வகையில் , தமது அளப்பரிய அதிகாரத்தினால் ஹோமியோபதி விதிப்படி  நலமாக்கும் ஆற்றல் வாய்ந்த கருவியாக இருக்கிறது. இது நீங்கலாக , பரம்பரை வழியாக வரும் நிலையான மரபுகூற்சார்ந்த நோய்கள் ( சொறி , சிரங்கு) 1 , மணல்வாரி அம்மை ,  பெரியம்மை போன்ற நோய்களை உண்டாக்குகிற இயற்றிகளை (MORBIFIC AGENTS)2 மருந்துப் பொருளாகப் பயன்படுத்தும் போது, அவை அந்நோய்களை நலப்படுத்துவதைவிட அதன் விளைவுகள்  உயிருக்கு மிகவும் பேராபத்தை விளைவிப்பதாகவும்  மற்றும்  பேரச்சத்தைத் தருவதாகவும் இருக்கிறது, அல்லது அந்த நோய்களை அம்மருந்துப் பொருள்களால் குணமாக்கிய பின்னர் ஏற்படும் அதே தன்மை வாய்ந்த ( சொறி, சிரங்கு போன்ற ) புதியவற்றையும் அதே வரிசையில் ஒழித்துக்கட்டி நலமாக்கப்பட வேண்டியவையாக இருக்கிறது- இந்த இரண்டு சூழ்நிலையிலும் அவைகளை ஹோமியோபதி மருந்துகளாக பயன்படுத்துவதற்கு கடினமாகவும் , உறுதியற்றதாகவும் மற்றும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. மற்றும்  இப்படிப்பட்ட  சில நோய்கள்  இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ,  பெரியம்மை, மணல்வாரி அம்மை,  மற்றும் சொறி, சிரங்கு  நோய்களில் இருப்பது போன்ற ஒத்த மருந்துகளை   மனிதன் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, இயற்கையின் வழியாக சென்றாலும்  கூட, இத்தகைய உறுதியற்ற மற்றும் அபாயகரமான நோய்ப்பொருளினால் தயாரிக்கப்பட்ட ஹோமியோபதி மருந்துகளைக்  கொண்டு மிக சில நோய்களைத் தான் நலமாக்க முடியும். அவ்வாறு அவற்றைப் பயன்படுத்தி நலப்படுத்தும் போது ஏற்படும் துணைப்பொருள்கள் மிகவும் ஆபத்தானதாகவும் மற்றும் சிரமத்தைத் தருவதாகவும்  இருக்கிறது. இந்தக் காரணத்திற்க்காக நோயை உண்டாக்குகிற ஆற்றலையுடைய மருந்தின் அளவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு குறைத்துக் கொள்ளவும் இயலாது, மருந்துகளினால் நலப்படுத்தவும் முடியும், ஆனால் நீண்ட காலமாக ஆபத்தான மற்றும் மனச்சோர்வு தருகிற நோய்களினால்  பாதிக்கப்பட்டிருந்த துயரரின்  ஒத்த நோய்த்தன்மைக்கு தகுந்த , அதாவது பெரியம்மை, மணல்வாரி அம்மை ( அல்லது சொறி , சிரங்கு) ஆகிய முழுமையான நோய்களையும்  உண்டாக்க கூடியதாகவும் , பின்னர் அவற்றினால் ஏற்படும் பின்விளைவுகளை நலமாக்கவும் வேண்டும். இது வரையிலும், நாம் பார்த்தவரை, சில அதிர்ஷ்டமான நிகழ்வுகளால்  குறிப்பிட்டுக் கூறும்படியான சில ஹோமியோபதி நலமாக்கலும் நிகழ்ந்துள்ளது, அத்தகைய உயர்ந்த , மறுக்கமுடியாத ஆதாரங்களினால் , இயற்கையின் முழுமையான நலமாக்கல் விதி அவைகளிருந்து பெறப்பட்டுள்ளது.  இது வரையிலும், நாம் பார்த்தவரை, சில அதிர்ஷ்டமான நிகழ்வுகளால்  குறிப்பிட்டுக் கூறும்படியான சில ஹோமியோபதி நலமாக்கலும் நிகழ்ந்துள்ளது, அத்தகைய உயர்ந்த , மறுக்கமுடியாத ஆதாரங்களினால் , இயற்கையின் முழுமையான நலமாக்கல் விதி அவைகளிருந்து பெறப்பட்டுள்ளது: குறிகளின் ஒத்திருக்கும் தன்மையினாலேயே நலப்படுத்த முடியும் !.


அடிக்குறிப்பு-1: மாட்டம்மை கொப்பளத்திலிருந்து  வெளிப்படும் சீழ்நீரில் உள்ள தொற்றுமூலப்பொருளும் இதோடு சேர்ந்தது.

அடிக்குறிப்பு-2 : அதாவது, பெரியம்மை மற்றும் மணல்வாரி அம்மை நோய்கள்.


ஆர்கனான் மணிமொழி-49




We should have been able to meet with many more real, natural homoeopathic cures of this kind if, on the one hand, the attention of observers had been more directed to them, and, on the other hand, if nature had not been so deficient in helpful homoeopathic diseases.


ஒரு  புறம் , கூர்ந்து நோக்குபவரின் கவனம் ஹோமியோபதி விதிகளின் மீது  இன்னும் அதிகமாக செலுத்தப்பட்டிருந்தாலும், மறுபுறம் ,  இயற்கையானது ஹோமியோபதி விதிகளின் வழியில் நோய்களை குணமாக்க உதவுவதில் இவ்வளவு குறை வைக்காமல் இருந்திருந்தாலும் , நாம்  இன்னும் அதிகமான , உண்மையான , இயற்கையான ஹோமியோபதி நலமாக்கலை காண நேர்ந்திருக்கும்.

Monday, 7 October 2019

ஸ்ட்ராமோனியம்


ஸ்ட்ராமோனியம்
STRAMONIUM (STRAM)
பிரிவு: தாவரம்
நிரூபணம் செய்தவர் :  மரு.ஹானிமன்





1.    முன்னுரை (Introduction) :

 இம்மருந்து சோலனேசியா ( SOLANACEAE) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது . தமிழில் ஊமத்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இத்தாவரம் வளர்கிறது. மொத்தம் 25  வகை ஊமத்தை உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் இரண்டு வகை ஊமத்தை (FASTUOSA & ALBA) உள்ளது. இத்தாவரத்தில் வெடியக்கலப்புடைய வேதியல் மூலப்பொருள்(ALKALOID  ) இருப்பதால்  மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது.  இந்த நச்சுத்தன்மை முதலில் மூளையையும் பிறகு மற்ற உறுப்புகளையும் தாக்குகிறது.

இந்த ஊமத்தையில் ஹயோசியாமைன் (hyoscyamine) மற்றும் அட்ரோபின் (atropine) என்ற இரண்டு வகை நச்சுப்பொருள்கள் சேர்ந்திருப்பதாக பேராசிரியர். லேண்டன்பர்க் (PROF. LANDENBURG) குறிப்பிடுகிறார். இம்மருந்து முற்றிய ஊமத்தை விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.  கசப்பு மற்றும் காரத்தன்மை உடையது.


ஸ்ட்ராமோனியம் மனதிலும் , உடலிலும் மிக்க கடுமையான(violent) நோய்குறிகளை உண்டாக்குகிறது. “ஸ்ட்ராமோனியம் ஒரு பூகம்பத்தைப் போலவே கடுமைக்குணம் பொருந்தி இருக்கிறது” என்று மரு. J.T. கெண்ட் குறிப்பிடுகிறார்.

ஸ்ட்ராமோனியம் மனித உடலில் கீழ்காணும் மூன்று நிலைகளில் செயலாற்றுகிறது என்று விளக்குகிறார் மரு. என்.எம். சௌத்திரி (N.M.CHOUDHIRI).

முதல் நிலை: பிதற்றல், மனஅமைதியின்மை, தசைகளில் வலி மற்றும் தலைசுற்றல். துயரரால் நிற்க முடியாது ; சம்பந்தமில்லாமல் பேசுவார், கட்டுப்பாடு இல்லாமல் சிரிப்பார், கற்பனையில் பிசாசை பார்த்து மிரண்டு ஓடுவார், காற்றில் எதையாவது பிடிப்பது போல் செய்வார். மற்றும் படுக்கைத் துணியை சுருட்டுவார் . கோமாளித்தனமான செய்கைகளிலும் ஈடுபடுவார்.

இரண்டாவது நிலை: பிதற்றலினால் களைத்து  முழுமையான அரைத்தூக்க அல்லது அயர்வுநிலைக்கு சென்றுவிடுவார் (DROWSINESS). மயக்கம் (STUPOR) , உணர்விழந்தநிலை(INSENSIBILITY) மற்றும் மூச்சு விடும் பொழுது குறட்டை ஒலி போன்ற சுவாசம் இருக்கும் ( STERTOROUS BREATHING).

மூன்றாவது நிலை: இழந்த சுயநினைவு  மெதுவாக திரும்பி வரும் அல்லது உணர்விழந்தநிலை மேலும் ஆழமான நிலைக்குச் செல்லலாம், அதனால் துயரர் மெதுவாக இறப்பை நோக்கிச் செல்வார்

ஸ்ட்ராமோனியம்,  சித்தபிரமை அல்லது பிதற்றலை நலமாக்கும் ( DELIRIUM)  மூன்று முக்கிய மருந்துகளில் இறுதியானது. மற்ற இரண்டு மருந்துகள் ;  பெல்லடோன்னா மற்றும் ஹயோசியாமஸ் .

மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இத்தாவரத்தை தமது உயர்ந்த அறிவுத் திறனால்   நிரூபணம்  செய்து மனித குலத்திற்கு என்றும் பயன்படும் வகையில் , (குறிப்பாக மனநோய்களை குணமாக்கும்) ஒரு நல்ல மருந்தாக  கொடுத்துள்ளார் மாமேதை .ஹானிமன்.


2.    இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION OR AFFINITIES):

மூளை (BRAIN), நரம்பு மண்டலம் (NERVOUS SYSTEM), முதுகு தண்டுவட நரம்புகள் [SPINAL NERVES(ARMS, LEFT HIP)],  சுற்றோட்டம் அல்லது சுழற்சி ( இரத்தஓட்டம் - CIRCULATION), தசைகள் (MUSCLES) மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் (SEX ORGANS). தோல் மற்றும் சளிச்சவ்வுகள்.

3.    மனக்குறிகள்(Mind):

1.       பயம் (FEAR); சுலபத்தில் பயந்து விடுவார்கள். இருட்டு மற்றும் சுரங்கப்பாதை போன்றவற்றிக்குப் பயம். நாய் கடித்து விடும் அல்லது தாக்கும் என்ற பயம். பயமும் , அச்சமும் (கிலி) இம்மருந்தின் திறவு கோல் குறியாகும்.

2.       பயம்: சாவு, இருட்டு, தண்ணீர்; தலையில் தண்ணீர் பட்டாலோ அல்லது ஓடும் தண்ணீர். தனிமை (குறிப்பாக இரவில் அல்லது இருட்டில் ) மற்றும் மிருகங்கள்.

3.       ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும்  கோளாறு (CLAUSTROPHOBIA). திறந்தவெளி கண்டு இயற்கை மீறிய பேரச்சம் (AGORAPHOBIA). வெறிநாய்க்கடி அல்லது நீர் அச்ச நோய் (HYDROPHOBIA).


4.       வெளிச்சத்தின் மீது பேரார்வம் ( இருட்டின் மீதுள்ள பயத்தினால்). இருளில் இவர்களால் தூங்க இயலாது; அறையின் மூலையில் சிறிதளவு  வெளிச்சம் இருக்க வேண்டும். அதனால் விளக்கு எரிய  வேண்டும்.


5.       தனியாக இருக்க பயம். யாருடனாவது சேர்ந்திருக்க விரும்புவார்கள்; இவர்களால் தனித்திருக்க இயலாது குறிப்பாக இரவில்.


6.       பித்துப்பிடித்த நிலை: முகம் சிவந்திருக்கும்; கண்விழிகள் விரிந்திருக்கும்; உடலில் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட பலம் உண்டாகும்.

7.       அமைதியாக உட்க்கார்ந்திருப்பார்கள்; கண்விழிகள் தரையை பார்த்திருக்கும்; தான் உடுத்தியிருக்கும் ஆடையை பிடித்து இழுப்பார்கள் அல்லது சுருட்டி கொண்டிருப்பார்கள்.

8.       அருகில் இருப்பவர்களை பற்றிக் (CLINGING)கொள்வார்கள் .

9.       சந்தேகப்புத்தி (SUSPICIOUS).

10.    பொறாமை( JEALOUSY). கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவார்கள்.

11.    அழிக்கக்கூடிய எண்ணம் (DESTRUCTIVE). கொலை செய்யும் எண்ணம்.

12.    கட்டுக்கு அடங்காத ஆத்திரம்; கடிக்கவும்,  அடிக்கவும், கழுத்தை நெறிக்கவும் , கொல்லவும் விரும்புதல்.

13.    பலமாக (LOUD) அல்லது வஞ்சகமாக(CRUEL)  அல்லது மூர்க்கவெறிகொண்டு(WILD)   சிரிப்பார்கள்.

14.    கற்பணைகளின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

15.    வாயாடித்தனம் அல்லது இடைவிடாது பேசுதல் (LOQUACITY) : புத்தித் தடுமாற்றத்திலும் , பைத்தியம் பிடித்த போதும் வாய் ஓயாமல் பேசுதல். இடைவிடாது பேசிக் கொண்டிருக்க விரும்புதல். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பேசுவார். சிரிப்பார், கைகளைத் தட்டுவார்.மாதவிடாயின் போது அதிகம் பேசுவார்.

16.    தெரியாத அந்நிய மொழியில் பேசுவார்கள். சிலசமயம் பேச மாட்டார்கள்.


17.    கடவுளைத் துதிக்கும் குணம் (PRAYING) : கண்களில் நீர் பெறுக கடவுளைத் துதிப்பதும்  உள்ளம் உருக அடிபணிந்து வேண்டிக்கொள்ளவும் செய்வார். இரவில் முட்டி போட்டுகொண்டு வேண்டுதல்  செய்வார்; குறிப்பாக பெண்கள் மாதவிடாய் உள்ளமுக்கப்பட்டு இருக்கும் போது இவ்வாறு செய்வார். பைபிள் அல்லது பக்தி நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்.


18.    ஆன்மிகச்சிந்தனைகளும் , சிற்றின்ப ஆர்வமும் மாறி மாறி தோன்றும்.

19.    காமவெறி: ஆண், பெண் இருபாலருக்கும் சிற்றின்ப ஆசை அதிகரித்து விடும். பாலியல் உணர்வு மிகுதியால் மனஎழுச்சி ஏற்படும்; பிறப்புறுப்புகளை மூடியுள்ள ஆடைகளை அடிக்கடி விலக்கிக் கொள்வார்; ; அவற்றை கைகளால் பிடித்து இருப்பார் அல்லது பிசைவார். ஒழுங்கீனமான பேச்சு . அசிங்கமான பாட்டுக்கள் பாடுவார், 

20.  பிதற்றல் (DELIRIUM) , சீற்றம்(FURIOUS) .பிதற்றலின் போது அதிகப்படியான பலம் ஏற்பட்டு இவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமாக இருக்கும். பிதற்றலின் போது தப்பி ஓட விருப்பம் (பெல்லடோன்னா , பிரையோனியா, ரஸ்டாக்ஸ்). ஒளிந்து கொள்வார் (HIDE).


21.    மனஅமைதியின்மை (RESTLESSNESS) ; ஓடவேண்டும் என்று தோன்றும்.

22.    மற்றவர்கள் முகத்தில் துப்புவார்கள்(SPITTING).

23.    மிகையான இயக்கம் ( HYPER-ACTIVE) உள்ள குழந்தைகள். ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள மாட்டார்கள்.

24.    குழந்தைகளை கண்டிக்கும் போது கண்விழி விரியும்.

25.    மாயத்தோற்றங்கள் அல்லது பொய்த் தோற்றங்கள் (ILLUSIONS : HALLUCINATIONS): தன் உடல் பெரியதாகி (TALL) விட்டது போல்; தன்  உருவம் எப்படியோ மாறி விட்டது போல்; தன் உறுப்புகளில் ஒன்று இரண்டாக இருப்பது போல் அல்லது தன் உடலின் ஒரு பாதியை வெட்டி எரிந்து விட்டது போன்ற மாயத் தோற்றங்கள் ஏற்படும். மற்றும் தலை வெடித்து சிதறிப் போய்விட்டது போலவும் தோன்றும். பயங்கரமான தோற்றங்கள் ; எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் பல பிராணிகள் எல்லா இடங்களிலும் இருப்பது போல் தோன்றுதல். பூதங்களையும் (GHOSTS) , பிசாசுகளையும் (DEVILS) காண்பதாகவும் அவை பேசுவது காதில் கேட்பதாகவும் அவைகளுடன் தான் பேசுவதாகவும் சொல்வார்; குறிப்பாக இருட்டில்.

26.    திக்குவாய் (STAMMERING); திக்கித் திக்கிப் பேசுவார். பேச்சில் புத்திசாலித்தனம் இருக்காது, மிகவும் முயற்சி எடுத்துப் பேசுவார். (திக்குவாயும், வலிப்பும் சேர்ந்திருந்தால் ஸ்ட்ராமோனியமே மருந்து).

27.    நகைச்சுவையாக பேசுவார்கள் ஆனால் அருவருப்பானதாக இருக்கும் (HYOS).

28.    மனிதர் மற்றும் விலங்கு போல் ஒலியெழுப்பும் கலை (MIMICRY) இவர்களுக்கு இருக்கும் ( குரல்கள், அசைவுகள் மற்றும் விலங்குகளின் செய்கைகள் ). 

29.    ஞான திருஷ்டி ( CLAIRVOYANCE) அல்லது கட்புலனுக்கு அகப்பட்டவற்றைக் காணும் திறனுடையவராக இருப்பார்.

30.    தண்ணீரைக் கண்டாலோ அல்லது பிரகாசமாக மின்னும் பொருளைக் கண்டாலோ இவர்களுக்கு இழுப்பு (SPASMS)  ஏற்படும்.

31.    தூக்கத்தில் நடத்தல் (SOMNAMBULISM).

32.    கணவன் தன்னை புறக்கணிப்பதாக மனைவியும், மனைவி தனக்கு உண்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று கணவனும் நினைத்துக் கொள்வார்கள் (HYOS).

4.    சிறப்பியல்புக்குறிகள் (Characteristic Symptoms) :

i.                     இளமைப்பருவமும் , அதிக இரத்தப் பெருக்கமும் உள்ளவர்களுக்கு முக்கியமாக சிறுவர்களுக்கு உண்டாகும் கோளாறுகள்( முகத்தசை துடிப்பு , பைத்தியம் மற்றும் பிதற்றலுடன் காய்ச்சல்),

ii.                    வலியில்லாத தன்மை (PAINLESSNESS) என்பது ஸ்ட்ராமோனியத்தின் முக்கிய சிறப்பியல்பு குறியாக இருக்கிறது . பொதுவாக வலியை  தரும்  எல்லா நோய்களிலும் வலி இருக்காது.

iii.                  சுரப்புகளும் (SECRETIONS) , கழிவுகளும் (EXCRETIONS) உள்ளமுக்கப்பட்டிருக்கும்; மலமும் அல்லது  சிறுநீரும் வெளியேறாது.


iv.                  பிடிப்புகள் (SPASMS) , வலிப்புகள் (CONVULSION), முகத்தசைதுடிப்பு. CHOREA).  வேகமாக கண்ணிமைக்கும் பழக்கம் (TICS). தசைத்துடிப்பதிர்ச்சி (JERKS). உருக்குலைவு அல்லது கோணிக் கொள்ளுதல் (DISTORTION).

v.                    தொண்டை , குரல்வளை ஆகியவைகளில் வலிப்பு. விழுங்குவது சிரமமாக இருக்கும்.

vi.                  வலிப்பு ; வெளிச்சத்தினால் , பிரகாசமான ஒளியைப் பார்ப்பதால் அதிகமாகும்.

vii.                 பீதி , அடக்கப்பட்ட கோபம் , தலை காயம், தடுப்பூசி , காய்ச்சல் , மற்றும் பெருமூளை காயம் இவற்றிற்குப் பிறகு தொல்லைகள் ஏற்படும்.

viii.               பிதற்றலின் போது துயரர் படுக்கையிலிருந்து (தலையணை) தலையை தூக்குவார் , முடியாததால் திரும்பவும் தலை தாழ்ந்து விடும்.

ix.                  தலையணையிலிருந்து தலையை தூக்கியவுடன் வாந்தி எடுத்தல். வாந்தி சளி மற்றும் பச்சை பித்தத்துடன் வெளியாகும்.

x.                    தலைவலி : அதிர்ச்சி, சூரிய வெப்பம் அல்லது பீதியினால் தலைவலி உண்டாகும். தலையின் முன்பக்கமும் , புருவத்தின் மீதும் தாங்கமுடியாத வலி இருக்கும்.

xi.                  ஒருபக்கம் வலிப்பும், மறுபக்கம் பாரிசவாதத்துடன் இருத்தல்.

xii.                 வலிப்பின் போது  உணர்வு நிலையில் இருப்பார்கள்( NUX-V)

xiii.               பேரச்சம் அல்லது கிலி ஏற்படும் போது இரத்தம் தலைக்கு வேகமாக பாயும். அதனால் முகம் சிவந்து சூடாக காணப்படும்.. கை , கால்கள் சில்லிப்புடன்  இருக்கும்


xiv.               மாறுகண் அல்லது பக்கவாட்டுப் பார்வை (SQUINT).

xv.                 தூக்கத்தில் கண்கள் பாதியாக திறந்திருக்கும்.

xvi.               தூக்கம்: உணர்விழந்த நிலை (COMATOSE).

xvii.              இனிப்பு பண்டங்களின் மீது விருப்பம்.

xviii.            தண்ணீரைக்  கண்டால்   அச்சம் அல்லது நடுக்கம் (HYDROPHOBIA).. தண்ணீர் மீது அளவு கடந்த வெறுப்பு.

xix.               கடுமையான டைபாய்டு காய்ச்சல். இரத்தப்பெருக்குடன் கடுமையான வலிப்புகள். கடுமையான நீர்க்கோவை சம்பந்தமான வேக்காடுகள். விஷத்தன்மை வாய்ந்த , இரத்தத்தில் விஷம் கலந்த நிலமைகள். கடுமையான வியர்வை.

xx.                 காய்ச்சலின் போது முகம் சிவந்து , உடல் முழுவதும் குளிராக இருக்கும்; சிறுநீர் தடைப்பட்டிருக்கும். உடல் முழுவதையும் போர்த்திக் கொள்ள விரும்புவார். காய்ச்சலின் போது தாகமும் வாந்தியும் இருக்கும்.

xxi.               எல்லா அசைவுகளும் (MOVEMENTS)  மிக வேகமாக நடைபெறும் . எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுவார். முகத்தசை துடிப்பின் போது முதுகெலும்புப் பகுதியிலும் மற்றும் உடல் முழுவதும்  விட்டு விட்டு துடிப்புகள் ஏற்படும். அத்துடிப்புகளால் பலவிதமான அருவருக்கத்தக்க அல்லது விசித்திரமான  அசைவுகளும் (GROTESQUE) , சைகைகளும் காணப்படும்.

xxii.              நடுக்குவாதம் (PARKINSON DISEASE).

xxiii.            கை , கால்கள் உடலிலிருந்து பிரிந்து தனியாக இருப்பது போன்ற உணர்வு.

xxiv.            தொல்லைகள் குறுக்குவெட்டாக தோன்றும். உடலின் மேல் பகுதியில் இடது பக்கமும், கீழ் பகுதியில் வலது பக்கமும் தாக்கப்படும்.


xxv.           திக்குவாய் (STAMMERING); திக்கித் திக்கிப் பேசுவார். பேச்சில் புத்திசாலித்தனம் இருக்காது, மிகவும் முயற்சி எடுத்துப் பேசுவார். (திக்குவாயும், வலிப்பும் சேர்ந்திருந்தால் ஸ்ட்ராமோனியமே மருந்து).

xxvi.         பிடிவாதமான விக்கல்.


xxvii.           முகத்தைக் கோணிக் கொள்ளுதல் (DISTORTS) (BOV., IGN., SPIG).

xxviii.         தாடைகள் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் நோய் (LOCK-JAW).

xxix.            கை,  கால்களில் கூச்ச உணர்வு(TINGLING).

xxx.              காய்ச்சலின் போது வியர்வை எண்ணெய் போல் ஓட்டும் குணமுள்ளதாகவும் , நாற்றமுடையதாகவும் இருக்கும்.  கை, கால்கள் மிகவும் குளிர்ச்சியாக (சில்லிப்பாக) இருக்கும்.

xxxi.            வயதான ஆண்களுக்கு சிறுநீர் மெதுவாக வெளியாகும்.

xxxii.           மாதவிடாயின் போது பெண்ணின் உடலிலிருந்து கடுமையான நாற்றம் வீசும்.

xxxiii.         வலியில்லாத வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கறுப்பாகவும் , நாற்றத்துடன் வெளியாகும்.




5.    நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

அதிர்ச்சி மற்றும் அதிர்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள்.   பீதி , சூரியன்( சூரிய வெப்பம்) , குழந்தை பிறப்பு , கழிவுகள் உள்ளமுக்கம் ( மாதவிடாய், சிறுநீர் இன்னபிற). சுயஇன்பம் . அளவிற்கு மீறி படித்தல். வயதான ஆண்களுக்கு சிறுநீர் மெதுவாக வெளியாகும்


6.    ஆண்கள் (Male):

ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சி மேன்மையாக இருக்கும், ஆபாசமான பேச்சும் மற்றும் செயல்களும் இருக்கும். அவர்களது கைகள்  எப்போதும் ஆண்குறியை பிடித்துக்கொண்டிருக்கும்.


7.    பெண்கள் (Female):

மாதவிடாய் இருக்கும் காலத்தில் வாயாடித்தனம் அல்லது அதிகம் பேசுதல். மாதவிடாயில் இருக்கும் சமயத்திலும் ,  உள்ளமுக்கப்பட்டிருக்கும் போதும் கடவுளை வணங்குதல் அல்லது பிரார்த்தனை செய்தல். பிள்ளைப்பேற்றின் விளைவாக ஏற்படும் காய்ச்சலின் போதும் பிரார்த்தனை செய்வார்கள். தனது உடல் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருப்பது போன்ற மனப்பிரமை  இருக்கும். அதேபோல்  படுக்கையில்  தன்னுடன் யாரோ ஒருவர் இருப்பதாகவும் மனப்பிரமை இருக்கும்.

மாதவிடாய் அல்லாமல் இரத்தப்போக்கு இருக்கும் போதும் ( metrorrhagia) மிக அதிகமாக பேசுதல், பாடுதல் மற்றும் பிராத்தனை செய்தல். இயற்கைக்கு மீறிய காமவெறி இருக்கும் (NYMPHOMANIA),  காமவெறி பேச்சு ( LEWD TALK) மற்றும் ஆபாசமான பாடல்களைப்  பாடுவார்கள். மாதவிடாயின் போது பெண்ணின் உடலிலிருந்து கடுமையான நாற்றம் வீசும்

 பிள்ளைப்பேற்றின் போது பித்துப்பிடிக்கும் , மனக்குறிகள் அதிகம் தோன்றும் மற்றும் ஏராளமான வியர்வையும் இருக்கும். பிள்ளைப்பேற்றிற்குப் பிறகு வலிப்பு ஏற்படும்.

8.    குழந்தைகள்(Children):

குழந்தை சத்தமாக பேசும் போதும் அல்லது தொடும் போதும்  மரப்பலகை போல் விறைப்பாக இருக்கும் . கரகரப்பான குரலில் அலறும்; இருட்டாக இருக்கும் அறையில் தூங்க செல்லாது, ஆனால் வெளிச்சமான அறையில் உடனடியாகத் தூங்கி விடும். மிகவும் சிடுசிடுப்பாகவும் , அடிக்கவும் மற்றும் கடிக்கவும் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு மதம் சம்பந்தமான  மனப்போக்கும் இருக்கும். தூக்கத்தில் பற்களை கடிக்கும் (அரைக்கும்) . சிறுவர்கள் தனது ஆண்குறியை எப்போதும் பிடித்து  இழுத்து விளையாடுவார்கள்.

குழந்தைகளை கண்டிக்கும் போது கண்விழி விரியும்.

குழந்தைகளுக்கு நினைவு தவறி , தான் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல், பெற்றோர்கள் அருகில் நின்று தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும் , " அப்பா,  அம்மா"  என்று கூப்பிடும்.

9.    உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):

புளித்த பானங்களில் அதிகமான விருப்பம். அமில உணவுகளில் விருப்பம். எல்லா திரவ உணவுகளில் வெறுப்பு,


10.   மாறுமைகள்: (Modalities):

நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):

பயம் மற்றும் பீதி; தனியாக மற்றும் இருட்டில் இருக்கும் போது தொல்லைகள் அதிகரிக்கும். இவர்களால் இருட்டில் நடக்க முடியாது. பிரகாசமான வெளிச்சம், பளபளவென்று ஒளி வீசும் பொருள்களை பார்த்தால் தொல்லைகள் கூடும் . அசைவுகள் ( வலிப்புகளை மீண்டும் தோன்ற செய்யும்). தூங்கிய பிறகு (APIS., LACH., OP., SPONG) தொல்லைகள் அதிகரிக்கும்.  விழுங்குவதற்கு முயற்சிக்கும் போது குறிப்பாக திரவங்கள். தொடுவது இவர்களுக்கு பிடிக்காது. வரம்புமீறிய செயல் அல்லது தன்னடக்கமின்மை (INTEMPERANCE).

நோய்க்குறி குறைதல்(Amelioration):

வெளிச்சம் (LIGHT) , பிறருடன் சேர்ந்திருத்தல் (COMPANY). வெதுவெதுப்பான நிலை (WARMTH). குளிர்ந்த தண்ணீர்.


11.  இம்மருந்துக்கான  உட்கரு:  (Nucleus):

I.                     பயத்தை ஏற்படுத்தும் வன்முறை செயல்கள்.
II.                    கடுமையான பயங்கள்.
III.                  இருட்டில் தொல்லைகள் அதிகரித்தல். வெளிச்சத்தில் தொல்லைகள் குறைதல்.
IV.                 தனிமையில்  தொல்லைகள் அதிகரித்தல். மற்றவர்களுடன் சேர்ந்திருக்கும் போது  தொல்லைகள் குறைதல்.
V.                   உள்ளமுக்கப்பட்ட கழிவுகள்.
VI.                 விட்டுவிட்டு இசிப்பிற்கு ஆட்படும் தன்மை, திரும்பத்திரும்ப ஏற்படும் வலிப்பு.


12.            உடனடி அல்லது துரித நோய்களிகளில் (ACUTE) ஸ்ட்ராமோனியம் :

i.                     திடீர் நோய்த்தாக்குதலின் போது துயரரின் முகம் மந்தமாகி, (பொலிவிழந்து ) பதட்டமும் மற்றும் பயமும் கலந்து நோய்வாய்ப்படுவார்.
ii.                    ஒரே தலைப்பில் பாடவும் அல்லது பேசவும் செய்வார்.
iii.                  எப்போதும் ஒருவரிடமும் சேர்ந்திருக்க வேண்டும்; மற்றவர்களை பற்றிக் கொள்வார்.
iv.                  பயம்: இருளில் பயம் ; பிரகாசமாக வெளிச்சத்திற்கும் அச்சம்.
v.                    முகச்சுளிப்பு (FROWN) செய்வார்.
vi.                  குளிர்ந்த உடல் மற்றும் தாகமும் இருக்கும்.


13.    வீரியம் (POTENCY): 6 முதல் 200 வரை. மிக உயர்ந்த வீரியங்களையும் பயன்படுத்தலாம்.

திடீர் நோய்த்தாக்குதலின் போது தாய்த் திரவத்தில் 5 முதல் 10 சொட்டுகள் வரை தினமும் மூன்று வேலை கொடுக்கலாம் என்று மரு. வில்லியம் போயரிக் (WILLIAM BOERICKE) குறிப்பிடுகிறார். நாட்பட்ட நோயை குணப்படுத்தும் போது இம்மருந்திற்கு முன்னால் அத்துயரரின் உடல்தகுதிக்கு உகந்த  அல்லது மியாசத்திற்கு தகுந்த மருந்தைக் கொடுத்த பிறகு இம்மருந்தைக் கொடுக்க வேண்டும். 

மிகத் தீவிரமான பிதற்றலில் 200  வது வீரியத்தை விட 30  வது வீரியம் நன்றாக செயல்பட்டது என்று மரு. பாஞ்சா ( K.C. BHANJA) குறிப்பிடுகிறார்.

மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF ACTION): மிகக் குறுகிய காலமே இம்மருந்து வேலை செய்யும் ( 1 முதல் 7 நாட்கள் வரை) .


மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) : மிகக் குறுகிய காலமே இம்மருந்து வேலை செய்யும் ( முதல் வரை) , அதனால் திடீர் நோய்த் தாக்குதலின் போது அடிக்கடி கொடுக்கலாம். ஆனால் மருந்து வேலை செய்ய ஆரம்பித்த பிறகு திரும்பத் தருவதை நிறுத்திவிட வேண்டும்.


நிறைவு செய்யும் மருந்து (COMPLEMANTORY) : பெல்லடோன்னா, ஹயாசியாமஸ் மற்றும் ஓபியம் போன்ற மருந்துகள் இம்மருந்திற்கு ஒத்தமருந்துகள் . அதனால் இம்மருந்துகளில்  தகுந்த ஒன்றைக் கொடுக்கலாம்.


14.  மருந்துகளுக்குள் உறவு ./ ஒற்றுமை(Relationship):

I.                     பிரகாசமான ஒளியினால் வலிப்புகள் உண்டாகுதல்: KALI-BR
II.                    கைகள் இடைவிடாது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டிருத்தல்: zinc.
III.                  தூங்கிய பிறகு தொல்லைகள் அதிகரித்தல்: APIS., LACH., OP., SPONG.
IV.                 தூக்கக் கலக்கமாக இருந்தாலும் தூங்க முடியாமை: BELL., CHAM., OP.
V.                   தனியாக இருக்க முடியாமை: ARS., BISM., HYOS., KALI-C., LAC-C., LYC., PHOS.
VI.                 வெளிச்சமான இடத்தில இருப்பதையும் , பிறருடன் சேர்ந்திருப்பதையும் விரும்புதல்: BELL., CALC., GELS., LAC-C.
VII.                குழந்தைகள் தூக்கத்திலிருந்து திடீரென்று எழுதல்; கதறுதல்  மற்றும் தொட்டிலைப் பிடுத்துக் கொள்ளுதல். APIS., BORAX.,BOV., CINA.,KALI-BR.
VIII.               பெரும்பாலான தொல்லைகளில் வலி இல்லாத தன்மை: OP.
IX.                 தொடர்ச்சியாக பேசுதல் : CIC., LACH.

X.                   வெறிநாய்க்கடி அல்லது நீர் அச்ச நோய் (HYDROPHOBIA). ARS., BELL., CANTH., HYOS., LYSS.
XI.                 திக்குவாய் (STAMMERING) குழந்தைகள் : BOV., IGN., SPIG.
XII.                கடவுளைத் துதிக்கும் குணம் (PRAYING) :AUR., PULS., VERAT.
XIII.              பேய், பிசாசுகள் , ஒளிந்திருக்கும் உருவங்கள் மற்றும் மிருகங்களைப் பார்ப்பதாக கூறுதல்:  BELL.
XIV.             மனக்கோளாறுடன் அதிகம் பேசுதல்: AGAR., LACH.
XV.               தொல்லைகள் குறுக்குவெட்டாக தோன்றும். உடலின் மேல் பகுதியில் இடது பக்கமும், கீழ் பகுதியில் வலது பக்கமும் தாக்கப்படும்: AGAR., ANT-T., LED.
XVI.             வலிப்பின் போது  உணர்வு நிலையில் இருப்பார்கள்: NUX-V., உணர்வற்ற நிலை: BELL., CIC., HYOS., OP.