Monday, 4 November 2019

ஆர்கனான் மணிமொழி-52


§ 52

There are but two principle methods of cure: the one based only on accurate observation of nature, on careful experimentation and pure experience, the homoeopathic (before we never designedly used) and a second which does not do this, the heteropathic or allopathic. Each opposes the other, and only he who does not know either can hold the delusion that they can ever approach each other or even become united, or to make himself so ridiculous as to practice at one time homoeopathically at another allopathically, according to the pleasure of the patient; a practice which may be called criminal treason against divine homoeopathy.


நோயாளிகளை  நலமாக்குவதற்கு இரண்டு முதன்மையான மருத்துவமுறைகள் இருக்கின்றன: முதலாவது இயற்கையை மிகச் சரியாக கூர்ந்து கவனித்தும், கவனமான செய்முறை ஆய்வுகள்  மற்றும் தூய பட்டறிவு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ( இதற்கு முன்பு வடிவமைத்து பயன்படுத்தப்படாத) ஹோமியோபதி மருத்துவமுறை. மற்றும் இரண்டாவது, மேற்கண்ட செயலைச் செய்யாத , நோய்குறிகளுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளைக்  கொண்ட மருத்துவமுறை அல்லது அலோபதி மருத்துவமுறை ஆகும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை, இவ்விரண்டு மருத்துவ முறைகளையும் தனித்தனியாகவோ அல்லது இரண்டையும் ஒன்றாக இணைத்தோ அல்லது நோயாளியின் விருப்பதிற்கிணங்கி ஒருமுறை ஹோமியோபதி மருத்துவமும் மற்றொரு முறை அலோபதி மருத்துவமும் பயன்படுத்தலாம் என்ற பிரமைக்குள்  இருக்கும் மருத்துவர் தம்மைத்தாமே ஏளனத்திற்கு ஆளாக்கிக் கொள்பவராகவும் , இம்மருத்துவ முறைகளில் ஒன்றையும் அறியாதவரும் ஆவார்: இத்தகைய மருத்துவப் பயிற்சி செய்வோர் புனிதமான ஹோமியோபதி மருத்துவத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோக ( கீழறுப்பு வேலை) குற்ற செயல் புரிந்தவர் ஆகிறார்.


No comments:

Post a Comment