§
50
Mighty
Nature herself has, as we see, at her command, as instruments for effecting
homoeopathic cures, little besides the miasmatic diseases of constant
character, (the itch) measles and smallpox1, morbific agents which2, as
remedies, are either more dangerous to life and more to be dreaded than the
disease they are to cure, they themselves require curing, in order to be
eradicated in their turn - both circumstances that make their employment, as
homoeopathic remedies, difficult, uncertain and dangerous. And how few diseases
are there to which man is subject that find their similar remedy in smallpox,
measles or itch! Hence, in the course of nature, very few maladies can be cured
by these uncertain and hazardous homoeopathic remedies, and the cure by their
instrumentality is also attended with danger and much difficulty, for this
reason that the doses of these morbific powers cannot be diminished according
to circumstances, as doses of medicine can; but the patient afflicted with an
analogous malady of long standing must be subjected to the entire dangerous and
tedious disease, to the entire disease of smallpox, measles (or itch), which in
its turn has to be cured. And yet, as is seen, we can point to some striking
homoeopathic cures effected by this lucky concurrence, all so many
incontrovertible proofs of the great, the sole therapeutic law of nature that
obtains in them: Cure by symptoms similarity!
1 And the exanthematous
contagious principle present in the cow-pox lymph.
2 Namely, small-pox and
measles.
எல்லாம் வல்ல இயற்கை அன்னை , நாம்
அறிந்த வகையில் , தமது அளப்பரிய அதிகாரத்தினால் ஹோமியோபதி விதிப்படி நலமாக்கும் ஆற்றல் வாய்ந்த கருவியாக
இருக்கிறது. இது நீங்கலாக , பரம்பரை வழியாக வரும் நிலையான மரபுகூற்சார்ந்த நோய்கள்
( சொறி , சிரங்கு) 1 , மணல்வாரி அம்மை ,
பெரியம்மை போன்ற நோய்களை உண்டாக்குகிற இயற்றிகளை (MORBIFIC AGENTS)2
மருந்துப் பொருளாகப் பயன்படுத்தும் போது, அவை அந்நோய்களை நலப்படுத்துவதைவிட அதன்
விளைவுகள் உயிருக்கு மிகவும் பேராபத்தை
விளைவிப்பதாகவும் மற்றும் பேரச்சத்தைத் தருவதாகவும் இருக்கிறது, அல்லது
அந்த நோய்களை அம்மருந்துப் பொருள்களால் குணமாக்கிய பின்னர் ஏற்படும் அதே தன்மை
வாய்ந்த ( சொறி, சிரங்கு போன்ற ) புதியவற்றையும் அதே வரிசையில் ஒழித்துக்கட்டி
நலமாக்கப்பட வேண்டியவையாக இருக்கிறது- இந்த இரண்டு சூழ்நிலையிலும் அவைகளை
ஹோமியோபதி மருந்துகளாக பயன்படுத்துவதற்கு கடினமாகவும் , உறுதியற்றதாகவும் மற்றும்
ஆபத்தானதாகவும் இருக்கிறது. மற்றும் இப்படிப்பட்ட
சில நோய்கள் இருக்கிறது என்பதை
தெரிந்து கொண்டு , பெரியம்மை, மணல்வாரி
அம்மை, மற்றும் சொறி, சிரங்கு நோய்களில் இருப்பது போன்ற ஒத்த மருந்துகளை மனிதன் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, இயற்கையின் வழியாக சென்றாலும்
கூட, இத்தகைய உறுதியற்ற மற்றும் அபாயகரமான நோய்ப்பொருளினால் தயாரிக்கப்பட்ட
ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு மிக சில
நோய்களைத் தான் நலமாக்க முடியும். அவ்வாறு
அவற்றைப் பயன்படுத்தி நலப்படுத்தும் போது ஏற்படும் துணைப்பொருள்கள் மிகவும்
ஆபத்தானதாகவும் மற்றும் சிரமத்தைத் தருவதாகவும்
இருக்கிறது. இந்தக் காரணத்திற்க்காக நோயை உண்டாக்குகிற ஆற்றலையுடைய
மருந்தின் அளவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு குறைத்துக் கொள்ளவும் இயலாது, மருந்துகளினால்
நலப்படுத்தவும் முடியும், ஆனால் நீண்ட காலமாக ஆபத்தான மற்றும் மனச்சோர்வு தருகிற
நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த
துயரரின் ஒத்த நோய்த்தன்மைக்கு தகுந்த ,
அதாவது பெரியம்மை, மணல்வாரி அம்மை ( அல்லது சொறி , சிரங்கு) ஆகிய முழுமையான
நோய்களையும் உண்டாக்க கூடியதாகவும் ,
பின்னர் அவற்றினால் ஏற்படும் பின்விளைவுகளை நலமாக்கவும் வேண்டும். இது வரையிலும், நாம் பார்த்தவரை, சில அதிர்ஷ்டமான நிகழ்வுகளால் குறிப்பிட்டுக் கூறும்படியான சில ஹோமியோபதி
நலமாக்கலும் நிகழ்ந்துள்ளது, அத்தகைய உயர்ந்த , மறுக்கமுடியாத ஆதாரங்களினால் ,
இயற்கையின் முழுமையான நலமாக்கல் விதி அவைகளிருந்து பெறப்பட்டுள்ளது. இது வரையிலும், நாம் பார்த்தவரை, சில
அதிர்ஷ்டமான நிகழ்வுகளால் குறிப்பிட்டுக்
கூறும்படியான சில ஹோமியோபதி நலமாக்கலும் நிகழ்ந்துள்ளது, அத்தகைய உயர்ந்த , மறுக்கமுடியாத
ஆதாரங்களினால் , இயற்கையின் முழுமையான நலமாக்கல் விதி அவைகளிருந்து
பெறப்பட்டுள்ளது: குறிகளின்
ஒத்திருக்கும் தன்மையினாலேயே நலப்படுத்த முடியும் !.
அடிக்குறிப்பு-1: மாட்டம்மை கொப்பளத்திலிருந்து வெளிப்படும் சீழ்நீரில் உள்ள
தொற்றுமூலப்பொருளும் இதோடு சேர்ந்தது.
அடிக்குறிப்பு-2 : அதாவது, பெரியம்மை மற்றும் மணல்வாரி அம்மை நோய்கள்.
No comments:
Post a Comment