§
56
By
means of this palliative (antipathic, enantiopathic) method, introduced
according to Galen's teaching Contraria contrariis for seventeen
centuries, the physicians hitherto could hope to win confidence while they
deluded with almost instantaneous amelioration. But how fundamentally unhelpful
and hurtful this method of treatment is (in diseases not running a rapid
course) we shall see in what follows. It is certainly the only one of the modes
of treatment adopted by the allopaths that had any manifest relation to a
portion of the sufferings caused by the natural disease; but what kind of
relation? Of a truth the very one (the exact contrary of the right one) that
ought carefully to be avoided if we would not delude and make a mockery of the
patient affected with a chronic disease1.
1
A third mode of employing medicines in diseases has been attempted to be
created by means of Isopathy, as it is called - that is to say, a method of
curing a given disease by the same contagious principle that produces it. But
even granting this could be done, yet, after all, seeing that the virus is
given to the patient highly potentized, and consequently, in an altered condition,
the cure is effected only by opposing a simillimum to a simillimum.
To
attempt to cure by means of the very same morbific potency (per Idem)
contradicts all normal human understanding and hence all experience. Those who
first brought Isopathy to notice, probably thought of the benefit which mankind
received from cowpox vaccination by which the vaccinated individual is
protected against future cowpox infection and as it were cured in advance. But
both, cowpox and smallpox are only similar, in no way the same disease. In many
respects they differ, namely in the more rapid course and mildness of cowpox
and especially in this, that is never contagious to man by more nearness.
Universal vaccination put an end to all epidemics of that deadly fearful smallpox
to such an extent that the present generation does no longer possess a clear
conception of the former frightful smallpox plague.
Moreover,
in this way, undoubtedly, certain diseases peculiar to animals may give us
remedies and thus happily enlarge our stock of homoeopathic remedies.
But
to use a human morbific matter (a Psorin taken from the itch in man) as a
remedy for the same itch or for evils arisen therefrom is - ?
Nothing
can result from this but trouble and aggravation of the disease.
பதினேழாம்
நூற்றாண்டில் மருத்துவர் கல்லன் என்பவர்
"எதிருக்கு எதிர் " என்ற கோட்பாட்டின்படி கற்பித்த வலி தணிக்கும்
மருத்துவ முறையை ( நேர் எதிர்
குறிகளையுடைய , நோயின் குணத்திற்கு எதிரான
குணமுள்ள மருந்துகளை பயன்படுத்துதல்) அறிமுகம் செய்தார், இந்த மருத்துவ
முறையால் நோய்கள் ஏறத்தாழ உடனடியாக
குறைவதை சுட்டிக்காட்டி மக்களின் நம்பிக்கையை வெல்லலாம் என்று அம் மருத்துவர்கள்
இது நாள் வரை நம்புகிறார்கள். ஆனால் மருத்துவ சிகிச்சை (விரைந்து பாதிப்பை
உண்டாக்காத நோய்களில்) அடிப்படையாகவே எவ்வாறு உதவவில்லை மற்றும் தீங்கு
விளைவிப்பதாக இருக்கிறது என்பதை நாம்
அடுத்துப் பார்க்கலாம். அலோபதி
மருத்துவர்களால் கடைபிடிக்கப்படும் இந்த
ஒரே உறுதியான மருத்துவ முறையால் இயற்கை
நோயினால் வெளிப்படும் துன்பங்களுடன்
தொடர்பு இல்லாததாக இருக்கிறது; ஆனால் எந்த வகையான தொடர்பு இருக்கிறது? உண்மை
என்னவென்றால் ( சரியானவற்றிற்கு நேர் எதிராக இருக்கிறது) நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை ஏமாற்றி வஞ்சிப்பதாக
இருப்பதால் கவனமான முறையில் விலக்கி வைக்கப்பட வேண்டியதாக இருக்கிறது-1.
அடிக்குறிப்பு-1:
நோய்களைக்
குணப்படுத்த மூன்றாவது மருத்துவமாக இருப்பது அதேபொருள் மருத்துவம்
(எடுத்துக்காட்டாக:நோய்க்கழிவுகளைக் கொண்டு நோயைக் குணப்படுத்துதல்) என்று
அழைக்கப்படுவதாகும், அதாவது , ஒரு குறிப்பிட்ட நோயின் போது , அந்நோயினால்
உண்டாக்கப்படும் நோய்த்தொற்றுப் பொருளைக் கொண்டே அந்நோயைக் குணப்படுத்தும்
மருத்துவமுறை என்பதாகும். ஆனால், இப்படிச்
செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டாலும், எனினும், மொத்தத்தில் எப்படியிருந்தாலும்,
அந்த நச்சு நுண்ணுயிரியை மிக நுண்மையாக வீரியப்படுத்தி அந்த நோயாளிக்கு கொடுக்கும்
போது , அதன் விளைவாக , இயல்புத்தன்மைக்கு மாறாக ஏற்பட்டிருக்கும் மாறுபட்டநிலைக்கு
ஒத்தவகையான மருந்தைக் கொடுத்து அந்த ஒத்தநோயைக் நலமாக்குவதே இங்கு நிகழ்கிறது.
அதே நோய்ப்பொருள்
வீரியத்தையே ( அப்பொருளையே) கொடுத்து அந்நோயைக் குணப்படுத்த முயற்சி செய்வது
என்பது மனிதர்களின் பொதுவான
புரிதலுக்கும் மற்றும் எல்லா வகையான
பட்டறிவிற்கும் முரண்பட்டதாக உள்ளது. யார் முதன்முதலாக அதேபொருள்
மருத்துவத்தில் கவனம் செலுத்தினார்களோ அவர்கள், மாட்டம்மை கொப்பளத்திலிருந்து (கோமாரி நோய்)
தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட மனிதர்கள் ,எதிர்காலத்தில்
அந்த நோயின் தொற்றுக்கு ஆட்படாமல் பாதுகாக்கப்படுவதாகவும் , அதனால் நோய்வருவதற்கு
முன்பே அந்நோய் குணமாக்கப்படுவதாகவும்
அநேகமாக எண்ணினார்கள். ஆனால்
, மாட்டம்மை (கோமாரி நோய்) மற்றும் பெரியம்மை ஆகிய இரண்டு நோய்களும் ஒத்த
தன்மையுடையவைகள் மட்டுமே தவிர, அவை ஒரே
நோய் ஆகாது. அவை
பலவகையில் ஒன்றில் இருந்து மற்றவை வேறுபட்டவையாக இருக்கிறது, அதாவது மிக விரைவாக
பரவக்கூடியதும் , மென்மையான தன்மையுடையதுமான மாட்டம்மை அல்லது கோமாரி நோய் மிக அருகில் இருக்கும் மனிதர்களுக்கு ஒருபோதும்
தொற்றி பரவாதது ஆகும். பெரியம்மை
நோயில் இருந்து பெறப்பட்ட மருந்தை உலகம்
முழுவதும் தடுப்பு மருந்தாக
பயன்படுத்தியதால் பேரச்சத்தை தரக்கூடியதாகவும் பெருவாரியாக பரவக்கூடியதாகவும்
இருந்த அப்பெரியம்மை முடிவுக்கு வந்துவிட்டது என்பதால் தற்கால தலைமுறையினர் கடந்த காலத்தில் பயத்தைத் தரக்கூடியதாக இருந்த
பெரியம்மையைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் , இதே
மாதிரி, விலங்குகளைத் தாக்கும் சில
வினோதமான நோயிலிருந்தும் சில மருந்துகள்
சந்தேகமில்லாமல் நமக்கு கிடைத்திருக்கிறது மற்றும் அம்மருந்துகள் நமது
பெட்டகத்தில் உள்ள ஹோமியோபதி மருந்துகளின் எண்ணிக்கையை
அதிகரிப்பது மகிழ்ச்சி தருகிறது.
ஆனால்,
மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட நோய்ப்பொருள் ( மனிதனைத் தாக்கிய சொறிநோயில் இருந்து
எடுக்கப்பட்ட மருந்து- சோரினம்
) அதே மனிதனுக்கு அதே சொறிநோயிற்கு மருந்தாகுமா அல்லது அதிலிருந்து
தீமைகள் உண்டாகுமா?.
அவற்றில் இருந்து
எந்த விளைவும் ஏற்படாது ஆனால் தொல்லையும்
மற்றும் நோய் அதிகரிக்கவும் செய்யும்.
No comments:
Post a Comment