Sunday, 3 November 2019

ஆர்கனான் மணிமொழி-51


§ 51

This therapeutic law is rendered obvious to all intelligent minds by these instances, and they are amply sufficient for this end. But, on the other hand, see what advantages man has over crude Nature in her happy-go-lucky operations. How many thousands more of homoeopathic morbific agents has not man at his disposal for the relief of his suffering fellow-creatures in the medicinal substances universally distributed throughout creation! . In them he has producers of disease of all possible varieties of action, for all the innumerable, for all conceivable and inconceivable natural diseases, to which they can render homoeopathic aid - morbific agents (medicinal substances), whose power, when their remedial employment is completed, being overcome by the vital force, disappears spontaneously without requiring a second course of treatment for its extirpation, like the itch - artificial morbific agents, which the physician can attenuate, subdivide and potentize almost to an infinite extent, and the dose of which he can diminish to such a degree that they shall remain only slightly stronger than the similar natural disease they are employed to cure; so that in this incomparable method of cure, there is no necessity for any violent attack upon the organism for the eradication of even an inveterate disease of old standing; the cure by this method takes place by only a gentle, imperceptible and yet often rapid transition from the tormenting natural disease to the desired state of permanent health.


இந்த  உதாரணங்கள் மூலம் ,   அறிவுத்திறம்  வாய்ந்த (விவேகமுள்ள) அனைவருக்கும் (ஹோமியோபதி மருத்துவர்கள்)  இந்த  நோய்நீக்கற் கலைசார்ந்த விதிகள் தெளிவாக புலப்படக் கூடியது என்பதால்,  இதுபற்றி கூறியது தேவைக்கேற்ற வகையில்   போதுமானது  ஆகும்.  ஆனால் , மறுபுறம் சோம்பல் வாழ்வுடைய வருவது வரட்டும் என்றிருக்கிற  முரட்டுத்தனமான இயல்பு தன்மையால் (அலோபதி மருத்துவத்தில்) ,  என்ன  நன்மைகள்  மனிதனுக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள். இயற்கை படைப்பின் நெடுகிலும்  உள்ள மருத்துவப் பொருட்கள் மூலம் எத்தனை ஆயிரக்கணக்கில் வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி நோய் பொருள்கள் ( மருந்துகள் )  நமக்குக் கிடைத்திருக்கிறது அது மனிதனுக்கு மட்டுமல்லாமல் உடன்படைக்கப்பட்ட உயிரினங்களுக்கும் அவைகளின்  துன்பத்திலிருந்து தீர்வுகாண மருந்தாகப் பயன்படுகிறது. அவை, பலதிறப்பட்ட நோய் வகைகளின் செயல்பாடுகளைக் கொண்டதாகவும் , கணக்கில்    அடங்காததாகவும் , எண்ணிப்பார்க்கக் கூடியதாகவும் மற்றும்  எண்ணிப்பார்க்கமுடியாத  இயற்கை நோய்களுக்கு ஹோமியோபதி முறைப்படி நலப்படுத்த உதவும் நோய்ப்பொருளாகவும் ( மருந்துப் பொருள்கள்  )  இருக்கிறது, அவற்றின் ஆற்றலை மருந்தாகப் பயன்படுத்தும் செயல் நிறைவடையும் போது , உயிராற்றலின் விளைவால் (நோய்கள்) முறியடிக்கப்பட்டு , அவற்றை வேரோடு அழிப்பதற்கு இரண்டாவது மருத்துவ நடவடிக்கை தேவைப்படாமலும் , சொறி சிரங்கு போன்ற நோய்கள்  அங்கிருந்து நீக்கப்பட்டு விடுகின்றன. ஹோமியோபதி மருத்துவர் இந்த செயற்கை நோய்ப்பொருளை மெல்லியதாக்கி, ஒன்றை பல பாகங்களாகப் பிரித்து , எல்லையற்ற அளவிற்கு வீரியப்படுத்தி , நலப்படுத்த வேண்டிய ஒத்த இயற்கை நோய்த்தன்மையை விட சிறிது அதிக ஆற்றல் மிகுந்த மருந்தாக தயாரித்துக் கொடுக்கிறார். இம்மாதிரியான நிகரற்ற (அல்லது ஒப்பற்ற) அல்லது ஒப்பிடமுடியாத நலமாக்கும் வழிமுறை , உடலில் நீண்ட காலமாக நீடித்து தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நோய்களை வெளியேற்றி நலப்படுத்தும் போது எந்த பயங்கரமான விளைவுகளைத் தருவதில்லை. இத்தகைய முறையினால் ( ஹோமியோபதி) ஏற்படும் நலமாக்கல் மென்மையாகவும், கண்ணுக்குப்புலப்படாமலும் மற்றும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இயற்கை நோயில் விரைந்து மாற்றத்தை ஏற்படுத்தி  நாம் விரும்பும் நிரந்தரமான நலத்தைத் தருகிறது.


No comments:

Post a Comment