Friday, 8 November 2019

ஆர்கனான் மணிமொழி-54


§ 54

The allopathic method of treatment utilized many things against disease, but usually only improper ones (alloea) and ruled for ages in different forms called systems. Every one of these, following each other from time to time and differing greatly each from the other, honored itself with the name of Rational Medicine1.

Every builder of such a system cherished the haughty estimation of himself that he was able to penetrate into the inner nature of life of the healthy as well as of the sick and clearly to recognize it and accordingly gave the prescription which noxious matter2 should be banished from the sick man, and how to banish it in order to restore him to health, all this according to empty assumptions and arbitrary suppositions without honestly questioning nature and listening without prejudice to the voice of experience. Diseases were held to be conditions that reappeared pretty much in the same manner. Most systems gave, therefore, names to their imagined disease pictures and classified them, every system differently. To medicines were ascribed actions which were supposed to cure these abnormal conditions. (Hence the numerous text books on Materia Medica.3)

1 As if the establishment of a science, based only on observation of nature and pure experiment and experience idle speculation and scholastic vaporings could have a place.

2 Up to the most recent times what is curable in sickness was supposed to be material that had to be removed since no one could conceive of a dynamic effect (§ 11 note) of morbific agencies, such as medicines exercise upon the life of the animal organism.

3 To fill the measure of self infatuation to overflowing here were mixed (very learnedly) constantly more, indeed, many different medicines in so-called prescriptions to be administered in frequent and large doses and thereby the precious, easily-destroyed human life was endangered in the hands of these perverted ones. Especially so with seton, venesection, emetics, purgatives, plasters, fontanelles and cauterization.


அலோபதி மருத்துவமுறையில் நோய்களுக்கு எதிராக பல பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அது வழக்கமாக தகுதியற்ற (தவறான)  ஒன்றாக இருக்கிறது (மாறுபட்ட ஒன்று)  மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில்  பின்பற்றப்பட்டு ஒரு மருத்துவ அமைப்பு முறையாக  அழைக்கப்படுகிறது. இம்மருத்துவத்தில் உள்ள ஒவ்வொன்றும் , காலத்திற்குத் தகுந்தவாறு  ஒன்று தொட்டு ஒன்று உருவாகியும்  ஒன்றிற்கு ஒன்று பெரிதும் வேறுபட்டவைகளாகவும்  இருந்து கொண்டு , தனக்குத் தானே பகுத்தறிவின் அடிப்படையிலமைந்த மருத்துவம்-1 என்று கௌரவப்படுத்திக்கொள்கிறது

இந்த மருத்துவ முறைமையை கட்டமைத்த ஒவ்வொரு மருத்துவரும் ,தாங்கள்  நலமாக இருப்பவர் , நோயுற்றவர் ஆகியோருடைய வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்து முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்றவாறு மருந்து பரிந்துரைப்பதாக  தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் , அம்மருத்துவக் குறிப்புகள்   மூலம் கொடுக்கப்பட்ட மருந்துகள்  நச்சுத்தன்மை வாய்ந்தவையென்றும் -2 நோயுற்றவர் தன் நலத்தை மீட்க வேண்டுமென்றால் அவைகள் அந்த நோயுற்ற மனிதனிடமிருந்து கட்டாயமாக விலக்கத்தக்கவையும் இருக்கிறது . அம்மருத்துவரின் இச்செயல்கள் எல்லாம் வெறுமையான அனுமானமாகவும் (நினைத்தல்) மற்றும் இயற்கையிடம் நேர்மையாக கேள்விகள் எழுப்பி அறிந்துகொள்ளாமல்  தன்னிச்சையான ஊகமுடிவாகவும், மற்றும் பட்டறிவின் குரலைக் கேளாமல் முற்சார்பு முடிவுகளினால் உண்டானவை இருக்கிறது  . மேலும், நோய்கள் ஒரே  மாதிரியாக திரும்பத் திரும்ப தோன்றும் தன்மை படைத்தவை    என்றும் கருதப்பட்டது. அதனால்,   ஆகையால்,  அவர்கள் கொடுத்த பல முறைமைகளில், நோயின்  வடிவங்கள் பற்றி அவர்கள் கற்பனை செய்து கொண்டதற்கு ஏற்றவாறு,  ஒவ்வொரு மாறுபட்ட  முறைமையிலும் , நோய்களுக்கு  வெவ்வேறாக  பெயரிட்டு அழைத்தும்   , வெவேறாக வகைப்படுத்தியும் கொண்டார்கள். இம்மருந்துகளின் செயல்கள் நோயாளிகளின் இயற்கைக்கு மாறான நிலைகளை நலப்படுத்துகிறது என்று மிகைப்படுத்தி கூறுகிறார்கள். ( எனவே இம்மருந்துகள் பற்றிய எண்ணற்ற பாடப் புத்தகங்கள் தோன்றின-3).

அடிக்குறிப்பு-1: இயற்கையை ஆராய்ந்து அறிந்தும் ,மற்றும் பரிசோதனை செய்தும்  மற்றும் பட்டறிவையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் நிறுவனத்தில் , பயனற்ற ஊகங்களுக்கும்  மற்றும் கல்விச் செருக்கோடு கூடிய நிலையற்ற வாதங்களுக்கும் இடம் இருக்கும் என்பதைப் போன்றதாகும்.

அடிக்குறிப்பு-2:  நோய்ப்பொருள்களின் ஆற்றல் மிகுந்த விளைவுகளை யாரும் புரிந்து கொள்ள முடியாததால் , விலங்கு உயிரினங்களின் மீது அம்மருந்துகளை சோதித்துப் பார்த்து , அவ்விலங்கினுள் உள்ள நலப்படுத்த வேண்டிய நோய்ப்பருப்பொருளை  நீக்கினால் மட்டுமே நோயாளியை நலப்படுத்த முடியும் என்ற கருத்து சமீப காலங்களில் காணப்படுகிறது.

அடிக்குறிப்பு-3: நெறி தவறிய மனதையுடைய இந்த மருத்துவர்கள் , தங்களுக்கு உள்ள அறிவற்ற மோகத்தை நிறைவு செய்வதற்காக ( கற்றவர்களுக்குரிய) மிகவும் மாறுபட்ட பல மருந்துகளைக் கலந்து, மருத்துவக்குறிப்பு என்ற பெயரில் கொடுத்து , அவற்றை அடிக்கடியும் மிகுதியான(தாராளமான)  அளவிலும் கொடுத்து , அதனால் விலைமதிப்பற்றதும் , எளிதாக அழிக்கக்கூடியதுமான மனித உயிரை அவர்கள் பேரிடருக்கு உள்ளாக்குகிறார்கள். குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், ஊடிழைமம் , இரத்தநாளத்தை துளையிடுதல் அல்லது வெட்டுதல், வாந்தியெடுக்கும் மருந்துகளைக் கொடுத்தல், மலம் இளக்கிகள், பற்றுப்போடும் மருந்துகள், உச்சிக்குழித்தேய்ப்புகள் மற்றும் சூடு போடுதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். 

No comments:

Post a Comment