Tuesday, 24 December 2019

ஆர்கனான் மணிமொழி-64

§ 64

During the primary action of the artificial morbific agents (medicines) on our healthy body, as seen in the following examples, our vital force seems to conduct itself merely in a passive (receptive) manners, and appears, so to say, compelled to permit the impressions of the artificial power acting from without to take place in it and thereby after its state of health; it then, however, appears to rouse itself again, as it were, and to develop (A) the exact opposite condition of health (counteraction, secondary action) to this effect (primary action) produced upon it, if there be such an opposite, and that in as great a degree as was the effect (primary action) of the artificial morbific agent on it, and proportionate to its own energy; - or (B) if there be not in nature a state exactly the opposite of the primary action, it appears to endeavor to indifferentiate itself, that is, to make its superior power available in the extinction of the change wrought in it from without (by the medicine), in the place of which it substitutes its normal state (secondary action, curative action).


முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைச் செயல்பட்டுகளின் விளக்கங்கள்.


பின் வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் , நலம் வாய்ந்த நமது  உடலில் செயற்கை நோயை உண்டாக்கும் பொருள்களின்  (அதாவது மருந்தின்) முதல் வேலை செயல்பாடு நடைபெறும் போது ஆரம்பத்தில் உயிராற்றல்  அதற்குப் அடங்கிப்போவது போல ( உடலிலே எற்றுக்கொள்ளும் வகையில் ) தோன்றுகிறது, அதாவது ,  வெளியிலிருந்து வரும் அந்த செயற்கை நோய்ப்பாதிப்பை   தனது உடலில் இயங்கவும்,   தனது நலநிலையில் மாறுதல்கள் உண்டாக்கும் வகையிலும்  கட்டாயத்திற்கு உள்ளாகி அனுமதிக்கிறது. இருந்தாலும்,  சிறிது நேரத்துக்கெல்லாம்  மீண்டும்  தானாக கிளர்ந்தெழுகிறது, அப்போது , 


அ. தன்னைத் தாக்கியுள்ள செயற்கை நோய்ப்பொருளின் சக்திக்கு  ( முதல் நிலைச்செயல்பாடு)  நேர் எதிரான  வேலையை, அந்த விளைவிற்கு  ( முதல் நிலைச்செயல்பாடு)  சற்று அதிகமான அளவில்  (உயிராற்றல்) செய்யத் துவங்குகிறது , அதனால் முதல்நிலை செயல்பாட்டிற்கு எதிரான ( எதிர்நிலைச்செயல் , இரண்டாம்நிலை செயல்பாடு) விளைவை ஏற்படுத்தி , உடலின் சக்திக்கு தேவையான அளவில் நலநிலையை ஏற்படுத்துகிறது. அல்லது,

ஆ . முதல்நிலைச் செயலைப்பாட்டிக்கு மிகப்பொருந்திய நேர் எதிரான நிலை இயல்பாகவே ஏற்படவில்லையென்றால் அதை அலட்சியப்படுத்திவிட்டு,  அங்கே ,  (உயிராற்றல்) தமது உயர்ந்த  ஆற்றலைப்  பயன்படுத்தி வெளியிலிருந்து வந்த ( மருந்தினால் உண்டான) மாற்றத்தை முற்றிலும் நீக்கிவிட்டு , அதற்கு மாறாக, அவ்விடத்தில் இயல்பான நிலை திரும்புமாறு செய்கிறது ( இரண்டாம் நிலைச்செயல்பாடு, நோய் குணப்படுத்தும் இயல்புடைய செயல்) .




No comments:

Post a Comment