§ 60
If these
ill-effects are produced, as may very naturally be expected from the antipathic
employment of medicines, the ordinary physician imagines he can get over the
difficulty by giving, at each renewed aggravation, a stronger dose of the
remedy, whereby an equally transient
suppression1 is effected; and as there then is a still greater necessity
for giving ever - increasing quantities of the palliative there ensues either
another more serious disease or frequently even danger to life and death
itself, but never a cure of a disease of considerable or of long standing.
FN-1 : All
usual palliatives given for the suffering of the sick have (as is seen here) as
after-effects an increase of the same suffering and the older physicians had to
repeat them in ever stronger doses in order to achieve a similar modification,
which however, was never permanent and never sufficient to prevent an increased
recurrence of the ailment. But Brousseau, who twenty-five years before
contended against the senseless mixing of different drugs in prescription and
thereby ending its reign in France, (for which mankind is grateful to him)
introduced his so-called physiological system (without taking note of the
homoeopathic method then already established), a method of treatment, while
effectively lessening and permanently preventing the return of all the
sufferings, was applicable to all diseases of mankind; a thing that the
palliatives then in use were not capable of affecting.
Being able to
heal disease with mild innocent remedies and thus establish health, Brousseau
found the easier way to quiet the sufferings of patients more and more at the
cost of their life and at last to extinguish life wholly - a method of
treatment that, alas, seemed sufficient to his contemporaries. In the degree
that the patient retains his strength will his ailments be apparent and the
more intensely will he feel his pains. He moans and groans and cries out and
calls for help more and more vociferously so that the physician cannot come any
too soon to give relief. Brousseau needed only to depress the vital force, to
lessen it more and more and behold, the more frequently the patient was bled,
the more leeches and cupping glasses sucked out the vital fluid (for the
innocent irreplaceable blood was according to him responsible for almost all
ailments). In the same proportion the patient lost strength to feel pain or to
express his aggravated condition by violent complaint and gestures. The patient
appears more quiet in proportion as he grows weaker, the bystanders rejoice in
his apparent improvement, ready to return to the same measures on the renewal
of his sufferings - be they spasms, suffocation, fears or pain, for they had so
beautifully quieted him before and gave promise of further ease. In disease of
long duration and when the patient retained some strength, he was deprived of
food, put on a hunger diet, in order to depress life so much more
successfully and inhibit the restless states. The debilitated patient feels
unable to protest against further similar measures of blood-letting leeches,
vesication, warm baths and so forth to refuse their employment. That death must
follow such frequently repeated reduction and exhaustion of the vital energy is
not noticed by the patient, already robbed of all consciousness, and the
relatives, blinded by the improvements even of the last sufferings of the
patient by means of blood letting and warm baths, cannot understand and are
surprised when the patient quietly slips away.
But God knows
the patient on his bed of sickness was not treated with violence, for the prick
of a small lancet is not really painful and the gum Arabic solution (Eau de
Gourme, almost the only medicine that Brousseau used) was mild in taste and
without apparent action - the bite of the leeches insignificant and the blood letting
by the physician done quietly while the luke warm baths could only soothe,
hence the disease from the very start must have been fatal, so that the
patient, notwithstanding all efforts of the physician, had to leave the earth.
In this way
the relatives, and especially the heirs of the dear departed, consoled
themselves.
The physicians
in Europe and elsewhere accepted this convenient treatment of all disease
according to a single rule, since it saved them from all further thinking (the
most laborious of all work under the sun). They only had to take care to
assuage the pangs of conscience and console themselves that they were not the
originators of this system and this method of treatment, that all the other
thousands of Brousseauists did the same and that possibly everything would
cease with death anyway as was taught by their master. In this way many
thousand physicians were miserably misled to shed (with cold heart) the warm
blood of their patients that were capable of cure and thereby rob millions of
men gradually of their life, according to Brousseau's method, more than fell on
Napoleon's battlefields. Was it perhaps necessary by the disposition of God for
that system of Brousseau which destroyed medically the life of curable patients
to precede homoeopathy in order to open the eyes of the world to the only true
science and art of medicine, homoeopathy, in which curable patients find health
and new life when this most difficult of all arts is practised by an
indefatigable discriminating physician in a pure and conscientious manner?
ஆர்கனான் மணிமொழி-60
நேர்எதிர் பண்புடைய மருந்துகளைப் பயன்படுத்துவதால் , மிகவும் எதிர்பார்க்கப்படுகிற இத்தகைய கேடான
விளைவுகள் தோன்றுகின்றன; ஆனால் ஒவ்வொரு முறையும் நோய் புதுப்பிக்கப்பட்டு
அதிகரிக்கும் போதெல்லாம், அம் மருந்தின் அளவை அதிகரிப்பதின் மூலம் நிலைமையைச்
சமாளித்து நலப்படுத்தி விடலாம் என்று
சாதாரண மருத்துவர் (அலோபதியர் ) கற்பனை செய்து கொள்கிறார் . அப்படி அதிகளவில்
மருந்தை கொடுப்பதால் அதற்கு சமமான வகையில்
நிலையற்ற உள்ளமுக்கம்-1 தான் ஏற்படுகிறது. ஆனால்
அந்த நோய்த்தணிவிப்பு மருந்தை மேலும் மேலும் கூடுதலாகத் தருவதால் நீண்ட
காலமாக இருந்து வரும் அந்நோய் குணமாகாமல் , மருந்தின் அளவை இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டிய
தேவையே உண்டாகிறது. அப்போது
இன்னும் ஆபத்தான மற்றொரு நோய் தோன்றுகிறது அல்லது உயிருக்கே ஆபத்து வரலாம் மற்றும்
மரணமும் ஏற்படுகிறது, ஆனால்
குறிப்பிடத்தக்க அல்லது நீண்டகாலமாக
உடலில் இருந்தும் வரும் நோயை குணப்படுத்துவதில்லை.
அடிக்குறிப்பு-1:
நோயாளிகளின் துன்பங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான எல்லா நோய்த்தணிவிப்பு
மருந்துகளும் ( இங்கு பார்த்தவாறு) அவற்றின் மறுவிளைவாக , நோயாளியின் அதே
துன்பங்களை அதிகரிக்கின்றன மற்றும் பழைய பள்ளி மருத்துவர்கள் ( அலோபதியர்கள்) நோயை
அதே போல் மாற்றியமைத்துவிட வேண்டும் என்ற
எண்ணத்தில் மேலும் மேலும் வலிமையான மருந்துகளையே மீண்டும் தரவேண்டிய நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள், எனினும்,
இருந்தபோதிலும், அம்மருந்துகள் நோய் அதிகரித்து திரும்பவருவதை தடுக்க போதுமானவையாக
இருக்கவில்லை மற்றும் அந்த மாற்றங்கள் என்றும் நிலையானவையாக இருக்கவில்லை. ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரௌஸ்ஸே (
BROWSSEAU) , இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ( ஹானிமன் ஆர்கனானை எழுதுவதற்கு முன்பு) அறிவற்ற வகையில் வேறுபட்ட பல மருந்துகளை கொடுத்து மருத்துவச்சிகிச்சை செய்யும் முறைக்கு
எதிராக வாதிட்டார். அதனால் இந்தமுறை பிரான்ஸ் நாட்டில்
நிறுத்தப்பட்டுவிட்டது (அதற்காக மனிதகுலம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது ). ஆயினும் அவர் உடல்கூறு இயல் முறை ( ஏற்கனவே
நிலைபெற்றிருந்த ஹோமியோபதி மருத்துவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்) என்ற
பெயரில், நோயின் துயரத்தைக் குறைப்பதற்காகவும்
மற்றும் நோய் மீண்டும் வராமல் நிரந்தரமாக தடுப்பதற்காகவும் , அப்போதிருந்த
நோய்தணிவிப்பு மருந்துகளால் அடைய முடியாமல் இருந்த நன்மைகளைப் பெறுவதற்காவும் மனிதகுலத்தைப்
பாதிக்கும் எல்லா நோய்களுக்கும் பொருத்தமானதாக கருதிய ஒரு மருத்துவமுறையை அறிமுகப்படுத்தினார்.
மென்மையான , எளிமையான மருந்துகளை
கொடுத்து அதன் மூலம் நோயாளிகளின் நலத்தை மீட்டெடுக்கும் முறைக்குப் பதிலாக,
நோயாளியின் உயிரை விலை கொடுக்கும் வகையிலும் மற்றும் இறுதியில் உயிரை முழுவதும் துடைத்தழிக்கும் விதமாகவும், நோயாளியின் வேதனைகளை மென்மேலும் குறைத்து அமைதிப்படுத்தும் எளிதான மருத்துவ
வழியை பிரௌஸ்ஸே கண்டுபிடித்தார்.
ஐயோ பாவம், அந்த வழிமுறை மருத்துவமானது , அவருடைய சமகால மருத்துவர்களுக்கு
போதுமானதாகத் தோன்றியது. நோயாளி எந்த அளவிற்கு தமது வலிமையை தக்கவைத்து
கொள்கிறாரோ அந்தளவிற்கு அவரது நோய்கள் தோற்றம் தரும் மற்றும் அவரது வலிகளின்
தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். அவர்
நோய்த்துன்பத்தால் முனங்குகிறார் மற்றும் புலம்புகிறார் மற்றும் வேதனையில்
அழுகிறார் , அருகில் இருப்பவரிடம் உதவி கேட்டு
மேலும் மேலும் பெரும் கூச்சலிடுகிறார் ஆனாலும் அவருக்கு உதவுவதற்கு மருத்துவர்
மிக விரைவாக வரமுடிவதில்லை. பிரௌஸ்ஸேவிற்கு தேவையானது நோயாளியின் உயிராற்றலை அமுக்கி வைத்து அதன் ஆற்றலை மேலும்
மேலும் தனித்து வைப்பது தான். அதற்காக
நோயாளியின் சிரைகளை வெட்டி இரத்தத்தை அடிக்கடி வெளியேற்றுவது , அதிகமான
அட்டைப் பூச்சிகளை கடிக்க வைத்தும்
மற்றும் காற்று நீக்கப்பட்ட
கண்ணாடி குடுவைகளை உடலில் பொருத்தி உயிர்நிலையான திரவத்தை உறிஞ்சி வெளியேற்றி அதன் மூலம்
நோயாளிக்கு வலி தெரியாமல் இருக்க செய்தார் (ஏனென்றால் தீங்கற்ற ஈடுசெய்யமுடியாத
இரத்தமே எல்லா நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று பிரௌஸ்ஸே கருதினார் ).
நோயாளி தமது உடல் பலத்தை இழக்க
இழக்க அதன் பரிமாணத்திற்குத் தகுந்தவாறு
வலியை உணரும் ஆற்றலையும் அல்லது நோய் கடுமையாக அதிகரிப்பதை எடுத்துரைப்பதற்கும் மற்றும் சைகைகளால் உணர்த்துவதற்கும் தேவையான பலத்தை இழந்து விடுகிறார். நோயாளி எந்த அளவிற்கு பலவீனமாகி இருக்கிறாரோ அதன் பரிமாணத்திற்குத் தகுந்தவாறு அமைதியானவராக காணப்படுகின்றனர், அதனால்
அவருடன் இருப்பவர்கள் இந்த
முன்னேற்றத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகின்றனர், அவர்களது தொல்லைகள் திரும்பி
வரும் போது இதே வகையான சிகிச்சைமுறைக்கு திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் அந்த நோயாளிக்கு நரம்பு இசிவு , மூச்சுத்திணறல்
, பயம் அல்லது வலிகள் ஏற்பட்டால், அவைகள் முன்பு எப்படி அழகாக
அமுக்கப்பட்டு அமைதியான நிலை ஏற்படுத்தியது போல் , அமைதிப்படுத்தி விடுகிறார்கள் மற்றும் மேலும் தொல்லையில்லாமல் செய்வதாக
உறுதிமொழி கொடுக்கிறார்கள். ஒரு நோயாளி நீண்ட காலத்திற்கு நோய் நிலையில்
இருந்தபோதும் , அந்த நோயாளி இன்னும் சற்று
வலிமை உள்ளவராக இருக்கும் பொழுது, அவருக்கு உணவளிப்பது மறுக்கப்பட்டு , அவர்
" பட்டினி திட்ட உணவு " முறைக்கு உள்ளாக்கப்படுகிறார், அதனால் அவர்களது உயிரியக்கம் மிகவும்
வெற்றிகரமாக அமுக்கப்படுகிறது மற்றும் அவரது அமைதியற்ற நிலையும் தடுத்து
நிறுத்தப்படுகிறது. மிகவும் சோர்வுற்ற நோயாளி அவருக்கு அளிக்கப்படும்
மருத்துவச் சிகிச்சையான அட்டைப்பூச்சிகளை கடிக்க வைத்து இரத்தத்தை வெளியேற்றுதல்,
கொப்புளங்களை உண்டாக்குதல் , வெதுவெதுப்பான குளியல் (வெந்நீர்க்குளியல்) போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அவற்றை எதிர்க்கவும் முடியாத நிலையை உணருகிறார். இவ்வாறு அடிக்கடியும் , திரும்பத் திரும்பவும்
செய்யும் போது அவரது உயிரின் ஆற்றல் குறைந்தும்
மற்றும் முழுவதும் ஊக்கமிழந்த நிலை ஏற்பட்டு அந்நோயாளியால் உணர முடியாதவாறு
அங்கே இறப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.
இரத்தத்தை வெளியேற்றுதல், மற்றும் வெதுவெதுப்பான நீரில் குளித்தல்
போன்ற வழிமுறைகளால் ஏற்கனவே உணர்விழந்த
நிலையில் இருந்த நோயாளியிடம் கடைசியாகக் காணப்பட்ட முன்னேற்றத்தினால்
கண்மறைக்கப்பட்ட அவரது உறவினர்கள் எதையும்
புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும்
நோயாளியின் அமைதியான இறப்பைக் கண்டு
அதிர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர்.
“நோய்ப்
படுக்கையில் இருந்த நோயாளிக்கு கடுமையான மருத்துவச் சிகிச்சை தரப்படவில்லை என்பது
அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும், ஏனென்றால் அந்த நோயாளியின் உடலில் சிறிய சூரிக் கத்தியினால் குத்திய பிறகும்
அவருக்கு உண்மையிலே வலிக்கவில்லை மற்றும் நோயாளிகளுக்குக்
கொடுக்கப்படும் பிசின் போன்ற அரபுநாட்டுக்
கரைசல் (Eau de Gourme -கிட்டத்தட்ட
இந்த ஒரு மருந்தை மட்டுமே பிரௌஸ்ஸே பயன்படுத்தினார்) மென்மையான சுவை உடையதாகவும்
மற்றும் தெளிவான செயல்பாடு இல்லாதவையாகவும் இருக்கிறது. அட்டைப்பூச்சியை விட்டுக் கடிக்கவிட்டு
இரத்தத்தை வெளியேற்றுதல் என்பது முக்கியமற்றது , மருத்துவர்கள் மூலம் வேறு வழியில்
இரத்தத்தை வெளியேற்றுவது நோயாளியை அமைதியாக இருக்கச் செய்கிறது , அதே சமயத்தில்
சற்று வெதுவெதுப்பான குளியல் மட்டும் வேதனையை சிறிது தணிக்கிறது, எனவே, தொடக்கத்திலிருந்தே அந்த நோய் இறப்பைத்
தருவதாகவே இருந்திருக்கிறது, அதனால் மருத்துவரின் எல்லா வகையான முயற்சியையும் மேற்க்கொண்ட போதிலும் , அந்த நோயாளி , இந்த
மண்ணுலகில் இருந்து சென்று விட்டார்". இந்த வகையில் நோயாளியின் உறவினர்களும் , இன்னும்
குறிப்பாக கூறினால் , இறந்து போன அன்பான நோயாளியின் வாரிசுகளும்
(அல்லது வழித்தோன்றல்களும் ) தங்களைத்தானே தேற்றிக் கொள்ளத்தான் வேண்டும் .
ஐரோப்பாவிலும் மற்றும் பிறநாடுகளிலும் இருக்கும் மருத்துவர்கள் எல்லா
நோய்களுக்குமான இந்த வசதியான மருத்துவமுறையை , அதாவது இனிமேல் மூளையைக் கசக்கி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ( சூரியனுக்கு
கீழிருக்கும் இந்த உலகில் மிகவும் நீடித்த உழைப்பு தேவைப்படுகிற முக்கியமான வேலை) அவசியம்
ஏதுமில்லை என்ற ஒரே விதியின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர், “ தாங்கள் இந்த மருத்துவமுறையைத் தோற்றுவித்தவர்
இல்லை, ஆனால் இந்த வகை மருத்துவச்
சிகிச்சை முறையைத் தான் எல்லா நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான பிரௌஸ்ஸேவின்
வழித்தோன்றல்கள் பின்பற்றுகிறார்கள்,
எல்லாமே இறப்பில் தான் முடிகிறது என்று தங்களுடைய ஆசிரியர் கற்பித்துள்ளார் என்று
எண்ணியவர்களாக , தங்களின் மனசாட்சியின் உறுத்தலை மட்டுப் படுத்திக்கொண்டு தங்களைத்
தாங்களே தேற்றிக் கொள்கின்றனர்" இவ்வாறு ,
பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் கொடுமையான முறையில் தவறாக வழிநடத்தப்பட்டு தங்களுடைய
நோயாளிகளின் வெம்மையான இரத்தத்தை ( இரக்க உணர்வில்லாமல்) அதாவது நலப்படுத்தும் ஆற்றலுள்ள இரத்தத்தை ,
வெளியேற்றித் தீர்த்தனர். ஆனால், நெப்போலியனின் (Napoleon Bonaparte, FRANCE-1769-1821)
போர்க்களத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக பிரௌஸ்ஸேவின் மருத்துவமுறை சிகிச்சையினால் பல இலட்சம்
மக்களின் உயிர்கள் படிப்படியாக
பறிக்கப்பட்டது. குணப்படுத்த வாய்ப்புள்ள நோயாளிகளை பிரௌஸ்ஸேவின்
மருத்துவமுறை யின் மூலம் மருத்துவரீதியாக
கொன்று குவித்த பிறகு, மக்களின் மனக்கண்ணைத் திறந்து, பின்னாளில் வரப்போகிற உண்மையான மருத்துவச்
சிகிச்சைக் கலையான ஹோமியோபதியை உலகிற்கு
உணர்த்துவதற்கான முன்னோடியாகவே மேற்கண்ட நிகழ்வுகள் இருப்பது கடவுளின் மனநிலையாகக்கூட
இருக்கலாம், ஹோமியோபதி, அதாவது எல்லா மருத்துவக் கலைகளிலும்
சிரமமான இந்தக் கலையை பயிற்சி செய்யும்
சளைக்காத வேறுபடுத்திக் காணும் அறிவு படைத்தவரும் , தமது தூய மற்றும் மனச்சான்றுக்குக்கட்டுப்பட்ட வழியில் நின்று செயல்படும் மருத்துவர் மூலம்
அனைத்து நோயாளிகளும் நலமடைகிறார்கள் மற்றும் புதுவாழ்வு பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment