Sunday, 22 December 2019

ஆர்கனான் மணிமொழி-63


§ 63

Every agent that acts upon the vitality, every medicine, deranges more or less the vital force, and causes a certain alteration in the health of the individual for a longer or a shorter period. This is termed primary action. Although a product of the medicinal and vital powers conjointly, it is principally due to the former power. To its action our vital force endeavors to oppose its own energy. This resistant action is a property, is indeed an automatic action of our life-preserving power, which goes by the name of secondary action or counteraction.


மருந்தின் முதல்நிலைச் செயல்பாடு  மற்றும் அது உயிரில் ( உயிராற்றலில் )  செயல்படுத்தும்  எதிர்விளைவு அல்லது இரண்டாம்நிலைச் செயல்பாடு ஆகியவற்றின் வித்தியாசம்.


உயிர்நிலையில் அல்லது உயிர்மூல உள்ளுரத்தில் செயல்புரியும் ஒவ்வொரு செயலியும், அதாவது ஒவ்வொரு   மருந்தும் , உயிராற்றலை அதிகமாகவோ அல்லது    குறைவாகவோ தாக்கி, ஒருவரின் உடலின் ஆரோக்கிய நிலையில்  சில நாட்களுக்கோ அல்லது பல நாட்களுக்கோ மாறுதலை உண்டாக்குகிறது. இதுவே முதல் நிலை செயல்பாடு என்று அழைக்கபப்டுகிறது. இது மருந்தின் ஆற்றல் , உயிர்ப்புச் சக்தி ஆகிய இரண்டின்  கூட்டுச் செயலாக இருப்பினும் ,   இந்த முதல் நிலைச் செயல்பாடு  தோன்ற முக்கிய காரணமாக இருப்பது  மருந்தின் ஆற்றலே ஆகும் . இம் முதல் நிலை செயல்பாட்டை நம் உயிராற்றல் தம்முடைய முழு ஆற்றலால் கடுமையாக எதிர்த்து போராடுகிறது. இந்த எதிர்த்துப் போராடும் செயல் என்பது உண்மையிலேயே நமது உயிராற்றல் இந்த உடலைப் பேணி பாதுகாக்க தன்னுள் இயல்பாக பெற்ற தன்னியக்க ஆற்றலின் செயல்பாடே ஆகும், இதுவே இரண்டாம் நிலைச் செயல்பாடு அல்லது எதிர்நிலைசெயல் என்று அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment