Sunday, 8 December 2019

ஆர்கனான் மணிமொழி-59


§ 59

Important symptoms of persistent diseases have never yet been treated with such palliative, antagonistic remedies, without the opposite state, a relapse - indeed, a palpable aggravation of the malady - occurring a few hours afterwards. For a persistent tendency to sleepiness during the day the physician prescribed coffee, whose primary action is to enliven; and when it had exhausted its action the day - somnolence increased; - for frequent waking at night he gave in the evening, without heeding the other symptoms of the disease, opium, which by virtue of its primary action produced the same night (stupefied, dull) sleep, but the subsequent nights were still more sleepless than before; - to chronic diarrhoeas he opposed, without regarding the other morbid signs, the same opium, whose primary action is to constipate the bowels, and after a transient stoppage of the diarrhoea it subsequently became all the worse; - violent and frequently recurring pains of all kinds he could suppress with opium for but a short time; they then always returned in greater, often intolerable severity, or some much worse affection came in their stead. For nocturnal cough of long standing the ordinary physician knew no better than to administer opium, whose primary action is to suppress every irritation; the cough would then perhaps cease the first night, but during the subsequent nights it would be still more severe, and if it were again and again suppressed by this palliative in increased doses, fever and nocturnal perspiration were added to the disease; - weakness of the bladder, with consequent retention of urine, was sought to be conquered by the antipathic work of cantharides to stimulate the urinary passages whereby evacuation of the urine was certainly at first effected but thereafter the bladder becomes less capable of stimulation and less able to contract, and paralysis of the bladder is imminent; - with large doses of purgative drugs and laxative salts, which excite the bowels to frequent evacuation, it was sought to remove a chronic tendency to constipation, but in the secondary action the bowels became still more confined; - the ordinary physician seeks to remove chronic debility by the administration of wine, which, however, stimulates only in its primary action, and hence the forces sink all the lower in the secondary its primary action, and hence the forces sink all the lower in the secondary action; - by bitter substances and heating condiments he tries to strengthen and warm the chronically weak and cold stomach, but in the secondary action of these palliatives, which are stimulating in their primary action only, the stomach becomes yet more inactive; - long standing deficiency of vital heat and chilly disposition ought surely to yield to prescriptions of warm baths, but still more weak, cold, and chilly do the patients subsequently become; - severely burnt parts feel instantaneous alleviation from the application of cold water, but the burning pain afterwards increases to an incredible degree, and the inflammation spreads and rises to a still greater height;1 - by means of the sternutatory remedies that provoke a secretion of mucus, coryza with stoppage of the nose of long standing is sought to be removed, but it escapes observation that the disease is aggravated all the more by these antagonistic remedies (in their secondary action), and the nose becomes still more stopped; - by electricity and galvanism, with in their primary action greatly stimulate muscular action, chronically weak and almost paralytic limbs were soon excited to more active movements, but the consequence (the secondary action) was complete deadening of all muscular irritability and complete paralysis; - by venesections it was attempted to remove chronic determination of blood to the head, but they were always followed by greater congestion; - ordinary medical practitioners know nothing better with which to treat the paralytic torpor of the corporeal and mental organs, conjoined with unconsciousness, which prevails in many kinds of typhus, than with large doses of valerian, because this is one of the most powerful medicinal agents for causing animation and increasing the motor faculty; in their ignorance, however, they knew not that this action is only a primary action, and that the organism, after that is passed, most certainly falls back, in the secondary (antagonistic) action, into still greater stupor and immobility, that is to say, into paralysis of the mental and corporeal organs (and death); they did not see, that the very diseases they supplied most plentifully with valerian, which is in such cases an oppositely acting, antipathic remedy, most infallibly terminated fatally. The old school physician rejoices2 that he is able to reduce for several hours the velocity of the small rapid pulse in cachectic patients with the very first dose of uncombined purple foxglove (which in its primary action makes the pulse slower); its rapidity, however, soon returns; repeated, and now increased doses effect an ever smaller diminution of its rapidity, and at length none at all - indeed - in the secondary action the pulse becomes uncountable; sleep, appetite and strength depart, and a speedy death is invariably the result, or else insanity ensues. How often, in one word, the disease is aggravated, or something even worse is effected by the secondary action of such antagonistic (antipathic) remedies, the old school with its false theories does not perceive, but experience teaches it in a terrible manner.

நோய் தணிக்கும் மருந்துகளாலும்  , முரண்பாடான மருந்துகளைக் கொண்டும்  சிகிச்சை செய்யும் போது பிடிவாத குணமுள்ள நோய்களின் முக்கியக்குறிகள் திரும்பி வராமல் இருப்பதில்லை- உண்மையிலே , ஒரு சிலமணி  நேரங்கழித்து புலன்களால் உணரக்கூடிய அளவிற்கு  நோய் அதிகரிக்கவே செய்கிறது. 

நீண்ட காலமாக பகலில் தூக்கக் கலக்கமாக இருந்து வந்த ஒருவருக்கு மருத்துவர் காபியை (மருந்தாக)  கொடுத்தபோது , அதன் முதல்நிலைச் செயல்பாடு எழுச்சியூட்டுவதாக இருக்கிறது; அந்த  முதல்நிலைச் செயல்பாடு முடிந்தவுடன் அவருக்கு- பகல் உறக்கநிலை அதிகரித்துவிட்டது. 

இரவில் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டு நல்ல தூக்கம் இல்லாமலிருந்த ஒருவருக்கு  நோயின் மற்ற அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் , மாலைநேரத்தில் அபினியை (OPIUM)மருந்தாகக் கொடுத்தபோது , அன்று இரவு நல்ல தூக்கம் ( மயக்கமான மந்தமான ) வந்தது, ஆனால் அதற்கு அடுத்த இரவுகளில்  முன்பு இருந்த நிலைக்கும் மேலாக தூக்கமில்லாத நிலை ஏற்பட்டது.

நீண்டகாலமாக காணப்பட்ட வயிற்றுப்போக்குக்கு எதிராக , நோயின் மற்றகுறிகளை கணக்கில் கொள்ளாமல் , அதே அபினியை மருந்தாக மருத்துவர் கொடுத்தபோது , அதன் முதல்நிலைச் செயல்பாடு மலச்சிக்கலை உண்டாக்குவது (குடல்களை இறுக்குவது) ஆதலால் மிகக் குறைந்த காலத்திற்கு வயிற்றுப்போக்கு நின்றது என்றாலும், அதற்குப் பிறகு அது இன்னும் மோசமடைந்தது.


மிகக் கடுமையாகவும் , அடிக்கடியும் மற்றும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கிற எல்லாவிதமான வலிகளையும் அபினியைக் கொண்டு சிறிது காலத்திற்கு அடக்கி வைக்கலாம்; ஆனால் , அதற்குப் பிறகு அவை தவறாமலும் , அதைவிட அதிகமாகவும், தாங்க முடியாதவாறு இன்னும் மிகுந்த வலியுடன் திரும்பி வரத்தான் செய்யும்  அல்லது அதற்குப் பதிலாக அவ்வலிகளைவிட மோசமான புதியதொரு பாதிப்பு தோன்றுவதுமுண்டு. 


பலநாட்களாக இரவு நேரங்களில் ஏற்படும் இருமலுக்கு அபினியை  மருந்தாகத்  தருவதைத் தவிர இந்த சாதாரண (அலோபதி) மருத்துவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. எல்லாவகை எரிச்சல் அல்லது உறுத்தல்களையும் அடக்குவதே அதன் முதல்நிலைச் செயல் ஆதலால் முதல்நாள் இரவில் அந்த இருமல் நின்றுவிட்டுப் பிறகு அடுத்து வரும் இரவுகளில் , இந்த இருமல் முன்பைவிட கடுமையாக ஏற்படலாம். ஆனால் இந்த நோய் தணிவிப்பு மருந்தை இன்னும் அதிக அளவில் திரும்பதிரும்பக் கொடுத்து இருமலை அடக்கி வந்தால் , காய்ச்சல் மற்றும் இரவுநேர வியர்வை உண்டாகுதல் போன்ற குறிகளும் இன்னும் கூடுதலாக (இருமலுடன் ) சேர்ந்து கொள்கின்றன.

சிறுநீர்ப்பையின் பலவீனமும், அதனால் ஏற்படும் சிறுநீர்த்தேக்கம் நீங்குவதற்கும் மற்றும் சிறுநீர் பாதையைத் தூண்டுவதற்கும் , நேர் எதிர்பண்புடைய மருந்தாக காந்தாரிஸ் ( காந்தாரிஸ் வண்டு)  மருந்தை பயன்படுத்திய போது , முதலில் சிறுநீர்போக்கு  உறுதியாக வெளியேறியது என்றாலும் , அதற்குப் பிறகு சிறுநீர்ப்பையின் இயற்கையான சுருங்கும் ஆற்றல் மேலும் குறைந்து சிறுநீர்ப்பை முடக்கம் ஏற்படுவதை கண்கூடாக காணமுடிகிறது.


நீண்டகாலமாக நிலைத்திருக்கும் மலச்சிக்கலை நீக்க  குடல்களைத்  தூண்டி அடிக்கடி மலத்தை வெளியேற்றும் சக்தியுள்ள பேதி மருந்துகளையும் , மலமிளக்கி உப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். அவைகளின் முதல்நிலைச் செயலின் காரணமாக மலச்சிக்கல் நீங்கினாலும் , அவற்றின் இரண்டாம்நிலைச் செயல்பாடாக மலம் வெளியேற முடியாமல் இன்னும் கட்டுப்படுத்தப்படுகிறது.

நீண்டகாலமாக காணப்படும் தளர்ச்சியை நீக்கும் என்று எதிர்பார்த்து நோயாளிக்கு கொடிமுந்திரி (திராட்சை) சாராயத்தை (WINE) இந்த சாதாரண மருத்துவர் (அலோபதி) பரிந்துரை செய்கிறார். ஆனால், அதன் முதல்நிலைச் செயல்பாட்டில் மட்டுமே ஊக்கஉணர்வை ஊட்டுவது ஆதலால், அதன் இரண்டாம்நிலை செயல்பாட்டினால் அந்த நோயாளியின் ஆற்றல் இன்னும் குறைந்து விடுகிறது. அதனால்  கொடிமுந்திரி சாராயத்தின் இரண்டாம் நிலைச் செயல் நோயாளியின் ஆற்றலை குறைத்து படிப்படியாக வலுவிழக்கச் செய்கிறது.


நீண்டகாலமாக  பலவீனமாகவும் மற்றும்   வயிற்றில் குளிர்ச்சியான  உணர்ச்சியும்  இருந்த ஒருவருக்கு கசப்புப் பொருள்களையும் சூட்டை உண்டாக்கும் (மிளகு போன்ற) காரப்பொருட்களையும், கொடுத்து வயிற்றைப் பலப்படுத்தவும்,  சூடு ஏற்படவும் மருத்துவர் முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நோய் தணிவிப்பு மருந்துகளின் முதல் நிலைச் செயல்பாட்டினால் தூண்டுதல் பெற்று விரும்பிய பலன் ஏற்படுகிறது,  ஆனால் இரண்டாம் நிலைச் செயல்பாட்டினால் வயிறு மேலும் செயலிழந்து விடுகிறது.

பலநாட்களாக உடலின் இயற்கையாய் இருக்க வேண்டிய சூட்டின் அளவு குறைந்து  உடம்பில் குளிர்ச்சியான உணர்ச்சியுள்ளவருக்குச் சுடு தண்ணீரில் குளிக்கச் செய்தால் குளிர்ச்சியான உணர்ச்சி உறுதியாக மறைந்து விடுகிறது , ஆனால் சிறிது நேரமானவுடன் நோயாளிக்கு முன்னை விடப் பலம் குறைந்து, குளிர்ந்து ,  அதிகமான   குளிர்நடுக்கமும் ஏற்படுகிறது .
கடுமையாக நெருப்புச் சுட்டுவிட்ட உடல் பகுதிகளில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றும் போது அங்கே இருக்கும்  எரிச்சல் உடனே  மறைந்து விடுகிறது. ஆனால், சிறிது நேரம் சென்றவுடன் எரிச்சல் வலி தாங்க முடியாத அளவிற்கு அதிகமாகிறது ,  அதேபோல் உடல் முழுவதும் கடுமையான வேக்காடு பரவி முன்பு இருந்ததை  விட வலி கூடுகிறது-1.

பல  நாட்களாக  சளித்தொல்லையால் மூக்கடைப்பு ஏற்பட்டு  அவதிக்குள்ளாகும் நோயாளிக்கு தும்மலை தூண்டுகிற  மருந்துகளைக் கொடுத்துச் சளியை உண்டாக்கி குணம் செய்து விடலாம் என்று எண்ணுகிறார்கள் . ஆனால் இவ்விதமான நேர் எதிர்க்குணமுள்ள மருந்துகளால் (அவைகளின் இரண்டாம்நிலை செயல்பாட்டினால்  ) நோய் மேலும் அதிகரிப்பதை அவர் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மற்றும் முதல் அம்மருந்துகளின் முதல் செயல்பாட்டினால்  மூக்கடைப்பு நீங்கினாலும், அதனுடைய இரண்டாவதுநிலை செயல்பாட்டினால் மூக்கடைப்பு   முன்பைவிட  அதிகமாகவே செய்கிறது.

மின்சாரம் மற்றும் மின்னியக்கம் போன்றவைகளின்  முதல் செயல்பாடு  தசைகளின் இயக்கங்களுக்கு  ஊக்கம் தருகிறது . நீண்டகாலமாக  பலவீனத்தாலும்,  பக்கவாதத்தாலும்  தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கை கால் முடங்கி விட்டவர்களுக்கு மின்சாரச் சிகிச்சை செய்தவுடனே முடங்கியிருந்த கை கால்களை மடக்கவும் நீட்டவும் முடிகிறது. ஆனால் அதனுடைய பின்விளைவாக ( இரண்டாம்நிலை செயல்பாடு) தசைகளின் இயக்கங்கள் முழுமையாக ஒழித்துக்கட்டப்பட்டு  எரிச்சல்த்தன்மை ஏற்படுகிறது மற்றும் முழுமையான பக்கவாதம் ஏற்பட்டு முடங்கிப் போகிறார்கள். 

நீண்ட நாட்களாக  தலையில்  அதிக இரத்தம் சேருவதை (இரத்தத்தேக்கம் ) நீக்க அங்குள்ள அசுத்த இரத்தக்குழாயை ஊசியால் குத்தி இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதன் விளைவாக அங்கு இரத்தத்தேக்கம்  அதிகமாகிறது.


உடல் மற்றும் மனம் சார்ந்த உறுப்புகளின் இயக்க ஆற்றலிழந்து , அத்துடன் மயக்கமும் சேர்ந்து ஏற்படும் பலவகையான நச்சுக்காய்ச்சலை   அடக்க சடாவல்லி (VALERIAN) என்ற மருந்தை ஏராளமான அளவில் கொடுப்பது, என்பது ஒன்றைத் தவிர வேறு எதுவும் சாதாரண மருத்துவ பயிற்சியாளர்களுக்குத் (அலோபதி )  தெரியாது. ஏனென்றால் உயிரியக்கத்தையும் , மற்றும் இயக்க ஆற்றலையும்  உண்டாக்கும் ஆற்றல் மிக்க  மருந்துகளில் சடாமல்லியும் ஒன்று. உடலுக்கு ஊக்கம் தருவது சடாமல்லியின்  முதல் செயல்பாடு  என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் ,அதன் முதல் செயல்பாடு  முடிந்து , சிலநாட்கள் கழித்து,  இரண்டாவது நிலை செயல்பாடு ( மாறான)  துவங்கியவுடன் அதிக மந்தநிலையும்  மற்றும் இயங்கமுடியாத நிலையும்   ஏற்பட்டு, அதாவது உடல் மன வேதனைகள் முன்பைவிட  அதிகமாகி உடல் உறுப்புகளும் மூளையும் செயலற்றுப்போய் விடுகிறது ( மற்றும் மரணமும் நேரலாம்) என்பதை தெரிந்து கொள்ளமுடியாத அறியாமையில் அம்மருத்துவர்கள் இருக்கிறார்கள். சடாமல்லியை அதிக அளவில் மருந்தாகப் பயன்படுத்தும் போது ,  அம்மருந்து  எதிரிடையாக  செயல்பட்டு, நேரெதிர் மருந்தாக  வேலை செய்கிறது,   சிறிதும் தவறாமல் (நிச்சயமான)  மரணத்தை ஏற்படுத்துகிறது  என்பதையும் அவர்கள் காண்பதில்லை.

நோய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நோயாளிகளின் நாடித்துடிப்பு சிறியதாகவும், வேகமாகவும் இருக்கும் . அதற்கு கையுறை போன்ற நீண்ட  ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடியிலிருந்து பெறப்படும் மருந்தை  ( DIGITALIS=FOXGLOVE) ஒரு வேளை கொடுத்து , நாடித்துடிப்பின் வேகத்தை பல மணி நேரங்களுக்குக் கட்டுப்படுத்தி வைக்க தன்னால் முடிந்ததை பற்றி பழைய பள்ளி மருத்துவர்கள் (அலோபதி) மகிழ்ச்சியடைகிறார்கள் -2. (அம்மருந்தின் முதல் செயல்பாடு நாடித்துடிப்பின் வேகத்தைக் குறைப்பதாகும்) . எனினும், அந்த வேகமான நாடித்துடிப்பு விரைவில் திரும்ப வருகிறது; அதனால் அதே மருந்தை இன்னும் கூடுதலாகவும் , திரும்பதிரும்பவும் கொடுப்பதால் நாடித்துடிப்பின் வேகம் மிகக் குறைந்து , சிறியதாகி  , இன்னும் சிறிது காலத்தில் நாடித்துடிப்பே இல்லாத நிலையும் ஏற்படுகிறது. -உண்மையிலே அம்மருந்தின் இரண்டாம்நிலை செயல்பாட்டில் நாடித்துடிப்பு எண்ணிக் கணக்கிட முடியாதவாறு இருக்கும்; தூக்கம், பசி மற்றும் உடல்வலிமை ஆகியவையாவும் விலகிச்சென்று விடும், மற்றும் தவறாமல் விரைவில் மரணம் ஏற்படுவது முடிவாக இருக்கும் , அல்லது நோயாளிக்கு பைத்தியம் பிடிப்பது பின்நிகழ்வாகிறது. ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் , அந்த முரண்பாடான மருந்துகளின்  ( நேர் எதிர் மருந்துகள்)  இரண்டாம்நிலை செயல்பாட்டினால் நோய் அதிகரிக்கின்றது அல்லது அதைக்காட்டிலும் மோசமான நிலையை அடைகிறது என்பதை பழைய பள்ளி மருத்துவர்கள் (அலோபதியர்கள்) தங்களிடையே பொய்யான கோட்ப்பாடுகளினால் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர், ஆனால் அனுபவங்கள் பயங்கரமான முறையில்  நமக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறது .

1 Vide Introduction.
2 Vide Hufeland, in his pamphlet, Die Homoopathie, p.20.



No comments:

Post a Comment