Thursday, 5 December 2019

ஆர்கனான் மணிமொழி-58


§ 58

If, in estimating the value of this mode of employing medicines, we should even pass over the circumstance that it is an extremely faulty symptomatic treatment (v. note to § 7), wherein the practitioner devotes his attention in a merely one-sided manner to a single symptom, consequently to only a small part of the whole, whereby relief for the totality of the disease, which is what the patient desires, cannot evidently be expected, - we must, on the other hand, demand of experience if, in one single case where such antipathic employment of medicine was made use of in a chronic or persisting affection, after the transient amelioration there did not ensue an increased aggravation of the symptom which was subdued at first in a palliative manner, an aggravation, indeed, of the whole disease? And every attentive observer will agree that, after such short antipathic amelioration, aggravation follows in every case without exception, although the ordinary physician is in the habit of giving his patient another explanation of this subsequent aggravation, and ascribes it to malignancy of the original disease, now for the first time showing itself, or to the occurrence of quite a new disease1.

1 Little as physicians have hitherto been in the habit of observing accurately, the aggravation that so certainly follows such palliative treatment could not altogether escape their notice. A striking example of this is to be found in J. H. Schulze's Diss. qua corporis humani momentanearum alterationum specimina quoedam expenduntur, [ Dissertation showing certain cases of brief alterations in the human body] Hale, 1741, § 28. Willis bears testimony to something similar (Pharm. rat., § 7, cap. I, p.298): Opiata dolores atroscissimos plerumque sedant atque indolentiam - procurant, camque - aliquamdiu et pro stato quodam tempore continuant, quo spatio elapso dolores mox recrusescunt et brevi ad sol itam ferociam augentur[ Opiates generally assuage the most severe pains and bring on insensibility , and they continue the insensibility for some time and for a fixed period. When the period has elapsed the pains soon flare up again and in short order increase to their accustomed severity) . And also at page 295: Exactis opii viribus illico redeunt tormina, nec atrocitatem suam remittunt, nisi dum ab eodem pharmaco rursus incantuntur [ When the opium’s strength is spent , the intestinal pains return straightaway , nor do they slacken their severity unless they are charmed away again by the same drug] . In like manner J. Hunter (On the Venereal Disease, p.13) says that wine and cordials given to the weak increase the action without giving real strength, and the powers of the body are afterwards sunk proportionally as they have been raised, by which nothing can be gained, but a great deal may be lost.

அப்படியானால், இந்த முறையில் மருந்துகளை பயன்படுத்துவதை மதிப்பீடு செய்யும் போது  , மருத்துவர்கள்  நோய்க்குறிகளில் ஒன்றை மட்டுமே , அதாவது நோய்த் தாக்குதலை முழுமையாகப் பார்க்காமல் அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் கவனிப்பதினால், நோயாளிகள் விரும்பியவாறு , முழு நோயும் நீங்குமென்று  ஆதாரபூர்வமாக எதிர்பார்க்க முடியாது. ஆகவே,  இம்முறை மிக மிகத் தவறானது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் (மணிமொழி § 7 இன் அடிக்குறிப்பை பார்க்கவும்). அதற்கு மாறாக, ஒரு நோயாளிக்கு அவருடைய நாட்பட்ட நோயிற்கு அல்லது தொடர்ந்து பாதிப்பைக் கொடுக்கும் தொல்லைக்கு நேர் எதிரான மருந்தினைக்  கொடுத்து சிகிச்சையளிக்கும் போது , அவருடைய நோய்க்குறிகள்  ஆரம்பத்தில் நோய் தணிக்கிற  வகையில்   தற்காலிகமாக மறைந்து பின்னர் அதைவிட கூடுதலாக அதிகரிக்கும், உண்மையில் , நோய்க்குறிகள் முன்பிருந்ததைவிட அதிகரித்திருக்கும்? என்பதை அறிந்து கொள்வதற்கு நமக்கு அனுபவம் தேவை. இவ்வாறு நேரெதிர் மருந்து கொடுத்த பிறகு நோயாளிக்கு  ஏற்படும் நோய்குறைதல் என்பது மிகக்  குறுகிய காலமே இருக்கும், அதன் பிறகு விதிவிலக்கில்லாமல் ஒவ்வொரு நோயாளிக்கும்  அந்த நோய்க்குறிகள் அதிகரிக்கவே செய்யும் என்பதை  கூர்ந்து கவனித்து மருந்தளிக்கும்  மருத்துவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு தனது நோய் அதிகரித்து விடக் காரணமென்ன என்று கேட்கும் நோயாளிடம், இந்த சாதாரண (அலோபதி ) மருத்துவர் வழக்கமாகச் சொல்லும் சமாதானம்  என்பது , " முன்பு இருந்த நோய் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது , இப்போது தான் அது தன் சுய உருவத்தைக் காட்டுகிறது அல்லது  முற்றிலும் புதியதொரு நோய் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது " என்பதாகும்.

அடிக்குறிப்பு-1:


இதுவரையிலும் மருத்துவர்கள் (அலோபதி ) சரியாக கவனிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார்கள், அப்படி அவர்கள் கவனித்திருந்தால் இந்த நோய்தணிவிப்பு மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு  நோய்க்குறிகள் நிச்சயமாக அதிகரிப்பது அவர்களுடைய பார்வையில் இருந்து தப்பிவிட முடியாது. இதற்கு  சரியான  எடுத்துக்காட்டுகளை மருத்துவர் J.H. ஸ்சுல்ஸ் ( J.H.SCHULZE) அவர்களின் கூற்றின்  மூலம் அறிய முடிகிறது (இவரது விளக்கவுரை ஆராய்ச்சிக் கட்டுரை சில நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது மனித  உடலில் ஏற்படும்  மாற்றங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறுகிறது ) . மருத்துவர்  ஹாலே (HALE) மற்றும் வில்லிஸ் (WILLIS) போன்றவர்களும் இதற்கு ஒத்துள்ள  சான்றுகளை  உறுதிப்படுத்தியுள்ளனர். (ஓபியம் கொடுக்கும் போது , மிகக் கடுமையான வலிகளை மட்டுப்படுத்துகிறது மற்றும் உணர்விழந்த நிலைக்குக் கொண்டு வருகிறது,மற்றும்  அவர்கள் இந்த உணர்விழந்த நிலையை சிறிது காலத்திற்கு அல்லது குறிப்பிட்ட காலம் வரை  நீடிக்கச் செய்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு வலிகள் விரைவில் பட்டொளி வீசத்  துவங்குகிறது. மற்றும் குறைந்த நேரத்திலே அவரது வலிகள் அதிகரித்து பழக்கமான தீவிரத்தன்மை அடைகிறது. மற்றும் இந்த ஓபியம் மருந்தின் வலிமை குறைந்தவுடன் , குடல்களில் ஏற்பட்டிருந்த வலிகள் உடனடியாக திரும்புகிறது. அந்த வலிகளை  குறைக்க அதே மருந்தான ஒப்பியத்தை மீண்டும்  கொடுத்து குறைக்க அல்லது கட்டுப்படுத்த  வேண்டும்). இதே போல் மருத்துவர்J. ஹண்டர் ( J.HUNTER -பால்வினை நோய் என்ற நூலில், பக்கம் 13  இல் ) என்பவரும் வலுக்குறைந்தவர்களுக்கு கொடிமுந்திரிச் சாராயமும் (WINE) மற்றும் உக்கம் தரும் உணவு வகைகளையும் (CORDIALS) கொடுக்கப்பட்ட போது, அவை அவர்களின் வலிமைமையை அதிகரிக்காமல்  செயல்பாட்டை மட்டுமே அதிகரித்தன என்றும், அதற்குப் பிறகு அவர்களுடைய உடலின் ஆற்றல் , மேற்கண்ட கிளர்ச்சியின் எழுச்சிக்குத் தகுந்தவாறு தாழ்ந்து போய் விடுகிறது என்றும், அதனால் அவர்களுக்கு எந்த நன்மையும்   கிடைக்கவில்லை, ஆனால் மிகப்பெரிய அளவிற்கு இழப்பே ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment