Saturday, 28 December 2019

ஆர்கனான் மணிமொழி-65


§ 65

Examples of (A) are familiar to all. A hand bathed in hot water is at first much warmer than the other hand that has not been so treated (primary action); but when it is withdrawn from the hot water and again thoroughly dried, it becomes in a short time cold, and at length much colder than the other (secondary action). A person heated by violent exercise (primary action) is afterwards affected with chilliness and shivering (secondary action). To one who was yesterday heated by drinking much wine (primary action), today every breath of air feels too cold (counteraction of the organism, secondary action). An arm that has been kept long in very cold water is at first much paler and colder (primary action) than the other; but removed from the cold water and dried, it subsequently becomes not only warmer than the other, but even hot, red and inflamed (secondary action, reaction of the vital force). Excessive vivacity follows the use of strong coffee (primary action), but sluggishness and drowsiness remain for a long time afterwards (reaction, secondary action), if this be not always again removed for a short time by imbibing fresh supplies of coffee (palliative). After the profound stupefied sleep caused by opium (primary action), the following night will be all the more sleepless (reaction, secondary action). After the constipation produced by opium (primary action), diarrhoea ensues (secondary action); and after purgation with medicines that irritate the bowels, constipation of several days' duration ensues (secondary action). And in like manner it always happens, after the primary action of a medicine that produces in large doses a great change in the health of a healthy person, that its exact opposite, when, as has been observed, there is actually such a thing, is produced in the secondary action by our vital force.


 முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைச் செயல்பாடுகளின் உதாரணங்கள் .



மேற்கண்ட விஷயமாக ( மணிமொழி-64-அ)  எல்லோருக்கும் தெரிந்த சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சூடான  தண்ணீரில் ஒரு கையை நனைக்கும் போது  அவ்வாறு செய்யப்படாத  மற்ற கையை விடச் சூடாகிறது (முதல் நிலைச் செயல்பாடு ) ; ஆனால் அந்தக் கையை  சூடான எடுத்து நன்றாகத் துடைத்து உலர்த்தியவுடன் ,  சிறிது நேரத்தில்  மற்ற கையை விடச் சில்லென்று குளிர்ந்து விடுகிறது இன்னும் சற்று நேரம் கழிந்த பின்பு மிகக் குளிர்ச்சி உடையதாக ஆகிவிடுகிறது  (இரண்டாம் நிலைச்செயல்பாடு) .

கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஒருவருக்கு  முதலில் உடம்பில் சூடு உண்டாகிறது (முதல் நிலைச்செயல்பாடு  ), அதன் பிறகு குளிரும் மற்றும் நடுக்கமும்  தோன்றுகின்றன (இரண்டாம் நிலைச்செயல்பாடு ). 

நேற்று   கொடிமுந்திரி சாராயத்தை அதிகமாக  குடித்ததால் உடம்புச்சூடு அதிகமான ஒருவருக்கு (முதல் நிலைச் செயல்பாடு), இன்று அவர் இழுத்துவிடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் மிகவும் குளிச்சியாக இருக்கிறது ( உயிரியின் எதிர்மறைச்செயல், இரண்டாம் நிலைச்செயல்பாடு )

மிகவும்  குளிர்ந்த தண்ணீரில் நீண்ட  நேரம் கையை வைத்திருக்கும் போது  அந்தக்கை  மற்ற கையை விட  முதலில் அதிகம்  வெளுத்தும் மற்றும்  குளிர்ச்சியாகவும்  இருக்கும் (முதல் நிலைச்செயல்பாடு ); ஆனால் குளிர்ந்த   தண்ணீரிலிருந்து அந்தக் கையை எடுத்துத் துடைத்து உலர்த்திய பிறகு அது மற்ற கையைக் காட்டிலும் சூடாக மாறுவதோடு , சிவந்தும்  மற்றும் அழற்சி அல்லது வேக்காடு அடைந்து விடுகிறது (இரண்டாம் நிலைச்செயல்பாடு, உயிராற்றலின் எதிர்விளைவு).


அதே போல் காப்பியை குடிக்கும் போது  முதலில் அதிகமான  சுறுசுறுப்பு  ஏற்படுகிறது (முதல் நிலைச்செயல்பாடு ) பிறகு மந்தநிலையும் மற்றும் உறக்கக் கலக்கமும் நீண்ட  நேரத்திற்கு  ஏற்படுகின்றன (எதிர்வினை, இரண்டாம் நிலைச்செயல்பாடு ). இந்த நிலையை விரைந்து போக்குவதற்கு மீண்டும் ஒருமுறை  காப்பி சாப்பிட வேண்டியதாக  இருக்கும் (நோய்த்  தணிவிப்பு மருந்து) .

ஒருவர் அபினி (ஓபியம்) எடுத்துக் கொண்ட பிறகு ஆழ்ந்த மயக்கமான தூக்கம் ஏற்படுகிறது ( முதல் நிலைச்செயல்பாடு) , ஆனால் அடுத்த நாள் இரவு அவருக்கு அதிக தூக்கமின்மை ஏற்படும் (எதிர்வினை, இரண்டாம் நிலைச்செயல்பாடு ). அபினி சாப்பிடும் போது  (ஓபியம்)  முதலில் மலச்சிக்கலும் (முதல் நிலைச்செயல்பாடு ) பிறகு வயிற்றுப் போக்கும் ( இரண்டாம் நிலைச்செயல்பாடு ) உண்டாகும். அதற்கு குடல்களை தூய்மையாக்குகிற மருந்துகளை பயன்படுத்துவதால் , குடலில் எரிச்சலை ஏற்படுத்தி   பிறகு பல நாட்களுக்கு தொடரும்  மலச்சிக்கலைத்  தோற்றுவிக்கிறது. ( இரண்டாம் நிலைச்செயல்பாடு ) . இத்தகைய முறையிலேயே  அதிக அளவில் மருந்துகளை  உட்கொள்ளும்போது  ஆரோக்கியமான மனிதனின் உடலில் எப்போதும்  மாற்றங்களை ஏற்படுத்துகிறது   (முதல் நிலைச்செயல்பாடு ) . பின்னர் , அதற்கு   நேர் எதிரான  இரண்டாம் நிலைச்செயல்பாட்டை (எதிர்வினைச்செயல்)  நமது உயிராற்றல் ஏற்படுத்துகிறது என்பதை கூர்ந்து கவனிக்கும் போது நாம் அறிந்து கொள்ளலாம்.



Tuesday, 24 December 2019

ஆர்கனான் மணிமொழி-64

§ 64

During the primary action of the artificial morbific agents (medicines) on our healthy body, as seen in the following examples, our vital force seems to conduct itself merely in a passive (receptive) manners, and appears, so to say, compelled to permit the impressions of the artificial power acting from without to take place in it and thereby after its state of health; it then, however, appears to rouse itself again, as it were, and to develop (A) the exact opposite condition of health (counteraction, secondary action) to this effect (primary action) produced upon it, if there be such an opposite, and that in as great a degree as was the effect (primary action) of the artificial morbific agent on it, and proportionate to its own energy; - or (B) if there be not in nature a state exactly the opposite of the primary action, it appears to endeavor to indifferentiate itself, that is, to make its superior power available in the extinction of the change wrought in it from without (by the medicine), in the place of which it substitutes its normal state (secondary action, curative action).


முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைச் செயல்பட்டுகளின் விளக்கங்கள்.


பின் வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் , நலம் வாய்ந்த நமது  உடலில் செயற்கை நோயை உண்டாக்கும் பொருள்களின்  (அதாவது மருந்தின்) முதல் வேலை செயல்பாடு நடைபெறும் போது ஆரம்பத்தில் உயிராற்றல்  அதற்குப் அடங்கிப்போவது போல ( உடலிலே எற்றுக்கொள்ளும் வகையில் ) தோன்றுகிறது, அதாவது ,  வெளியிலிருந்து வரும் அந்த செயற்கை நோய்ப்பாதிப்பை   தனது உடலில் இயங்கவும்,   தனது நலநிலையில் மாறுதல்கள் உண்டாக்கும் வகையிலும்  கட்டாயத்திற்கு உள்ளாகி அனுமதிக்கிறது. இருந்தாலும்,  சிறிது நேரத்துக்கெல்லாம்  மீண்டும்  தானாக கிளர்ந்தெழுகிறது, அப்போது , 


அ. தன்னைத் தாக்கியுள்ள செயற்கை நோய்ப்பொருளின் சக்திக்கு  ( முதல் நிலைச்செயல்பாடு)  நேர் எதிரான  வேலையை, அந்த விளைவிற்கு  ( முதல் நிலைச்செயல்பாடு)  சற்று அதிகமான அளவில்  (உயிராற்றல்) செய்யத் துவங்குகிறது , அதனால் முதல்நிலை செயல்பாட்டிற்கு எதிரான ( எதிர்நிலைச்செயல் , இரண்டாம்நிலை செயல்பாடு) விளைவை ஏற்படுத்தி , உடலின் சக்திக்கு தேவையான அளவில் நலநிலையை ஏற்படுத்துகிறது. அல்லது,

ஆ . முதல்நிலைச் செயலைப்பாட்டிக்கு மிகப்பொருந்திய நேர் எதிரான நிலை இயல்பாகவே ஏற்படவில்லையென்றால் அதை அலட்சியப்படுத்திவிட்டு,  அங்கே ,  (உயிராற்றல்) தமது உயர்ந்த  ஆற்றலைப்  பயன்படுத்தி வெளியிலிருந்து வந்த ( மருந்தினால் உண்டான) மாற்றத்தை முற்றிலும் நீக்கிவிட்டு , அதற்கு மாறாக, அவ்விடத்தில் இயல்பான நிலை திரும்புமாறு செய்கிறது ( இரண்டாம் நிலைச்செயல்பாடு, நோய் குணப்படுத்தும் இயல்புடைய செயல்) .




Sunday, 22 December 2019

ஆர்கனான் மணிமொழி-63


§ 63

Every agent that acts upon the vitality, every medicine, deranges more or less the vital force, and causes a certain alteration in the health of the individual for a longer or a shorter period. This is termed primary action. Although a product of the medicinal and vital powers conjointly, it is principally due to the former power. To its action our vital force endeavors to oppose its own energy. This resistant action is a property, is indeed an automatic action of our life-preserving power, which goes by the name of secondary action or counteraction.


மருந்தின் முதல்நிலைச் செயல்பாடு  மற்றும் அது உயிரில் ( உயிராற்றலில் )  செயல்படுத்தும்  எதிர்விளைவு அல்லது இரண்டாம்நிலைச் செயல்பாடு ஆகியவற்றின் வித்தியாசம்.


உயிர்நிலையில் அல்லது உயிர்மூல உள்ளுரத்தில் செயல்புரியும் ஒவ்வொரு செயலியும், அதாவது ஒவ்வொரு   மருந்தும் , உயிராற்றலை அதிகமாகவோ அல்லது    குறைவாகவோ தாக்கி, ஒருவரின் உடலின் ஆரோக்கிய நிலையில்  சில நாட்களுக்கோ அல்லது பல நாட்களுக்கோ மாறுதலை உண்டாக்குகிறது. இதுவே முதல் நிலை செயல்பாடு என்று அழைக்கபப்டுகிறது. இது மருந்தின் ஆற்றல் , உயிர்ப்புச் சக்தி ஆகிய இரண்டின்  கூட்டுச் செயலாக இருப்பினும் ,   இந்த முதல் நிலைச் செயல்பாடு  தோன்ற முக்கிய காரணமாக இருப்பது  மருந்தின் ஆற்றலே ஆகும் . இம் முதல் நிலை செயல்பாட்டை நம் உயிராற்றல் தம்முடைய முழு ஆற்றலால் கடுமையாக எதிர்த்து போராடுகிறது. இந்த எதிர்த்துப் போராடும் செயல் என்பது உண்மையிலேயே நமது உயிராற்றல் இந்த உடலைப் பேணி பாதுகாக்க தன்னுள் இயல்பாக பெற்ற தன்னியக்க ஆற்றலின் செயல்பாடே ஆகும், இதுவே இரண்டாம் நிலைச் செயல்பாடு அல்லது எதிர்நிலைசெயல் என்று அழைக்கப்படுகிறது.


Wednesday, 18 December 2019

ஆர்கனான் மணிமொழி-62


§ 62

But on what this pernicious result of the palliative, antipathic treatment and the efficacy of the reverse, the homoeopathic treatment, depend, is explained by the following facts, deduced from manifold observations, which no one before me perceived, though they are so very palpable and so very evident, and are of such infinite importance to the healing art.


தீங்கு  தரும் நோய்த் தணிவிப்பு   சிகிச்சை முறைக்கும்  மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தனித்து  செயல்படும் திறனுக்கான காரணங்கள்.

நோய்த் தணிவிப்பைச் செய்யும் நேர் எதிர் பண்புடைய மருத்துவத்தின்  தீய (அல்லது நாசகார) விளைவுகளையும் , அதற்கு தலைகீழாக (எதிராக) அமைந்த ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பும், எவற்றைப் பொறுத்து உள்ளது என்பதை கீழ்வரும் உண்மைகள் மூலம் நமக்கு நன்கு விளங்கும். பன்மடங்கு கூர்ந்துகவனித்து ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டவையாகவும் , புலன்களால் எளிதில் அறியக் கூடியவையாகவும் மற்றும் பல சான்றுகளைக் கொண்ட , நலமாக்கும் கலைக்கு எல்லையற்ற முக்கியத்துவமும் உள்ள இம்மருத்துக்கலையை ( ஹோமியோபதியை) எனக்கு முன்பு ( ஹானிமன்) வேறு யாரும் மனத்தால் உணர்ந்திருக்கவில்லை.

Tuesday, 17 December 2019

ஆர்கனான் மணிமொழி-61



§ 61

Had physicians been capable of reflecting on the sad results of the antagonistic employment of medicines, they had long since discovered the grand truth, THAT THE TRUE RADICAL HEALING ART MUST BE FOUND IN THE EXACT OPPOSITE OF SUCH AN ANTIPATHIC TREATMENT OF THE SYMPTOMS OF DISEASE; they would have become convinced, that as a medicinal action antagonistic to the symptoms of the disease (an antipathically employed medicine) is followed by only transient relief, and after that is passed, by invariable aggravation, the converse of that procedure, the homoeopathic employment of medicines according to similarity of symptoms, must effect a permanent and perfect cure, if at the same time the opposite of their large doses, the most minute doses, are exhibited. But neither the obvious aggravation that ensued from their antipathic treatment, nor the fact that no physician ever effected a permanent cure of disease of considerable or of long standing unless some homoeopathic medicinal agent was accidentally a chief ingredient in his prescription, nor yet the circumstances that all the rapid and perfect cures that nature ever performed (§ 46), were always effected by the supervention upon the old disease of one of a similar character, ever taught them, during such a long series of centuries, this truth, the knowledge of which can alone conduce to the benefit of the sick.

எதிரான குணமுள்ள மருந்துகளைக் பயன்படுத்துவதால் உண்டாகும் இத்தகைய வருந்தத்தக்க விளைவுகளைப் பற்றி மருத்துவர்கள் (அலோபதி) சிந்தித்து பார்த்திருந்தால், நோய்க்குறிகளுக்கு எதிராக செயல்படும் நேர் எதிர்பண்புடைய மருத்துவச் சிகிச்சைமுறைக்கு நேரெதிரான இந்த உண்மையான அடிப்படை கூறுசார்ந்த மருத்துவக்கலை  (ஹோமியோபதி ) தான் சிறந்தது என்ற பிரமாண்டமான  உண்மையை நீண்ட காலத்திற்கு முன்பே கண்டறிந்திருப்பார்கள். நோயின் அறிகுறிகளுக்கு எதிரான  மருந்துகளின் ( நேர் எதிரான குணமுள்ள மருத்துமுறையில் கொடுக்கப்பட்ட மருந்துகள்)  செயல்பாட்டால் தற்காலிகமான நோய்த்தணிவு மட்டுமே உண்டாகிறது , சிறிது காலம் கழித்து தவறாமல் நோய்க்குறிகள் அதிகரிக்கிறது என்பதை முன்பே உள்ளுணர்ந்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த செயலுக்கு நேர்மாறாக, நோய்க்குறிகளுக்கு ஒத்த தன்மையுள்ள மருந்தினைக் கொடுக்கும் ஹோமியோபதி மருத்துவமுறையில் மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, அது நிரந்தரமான மற்றும் முழுநிறைவான நலமாக்கலை நிச்சயம் ஏற்படுத்துகிறது, அதே சமயத்தில்  அவர்கள் பயன்படுத்திய மிகுதியான அளவு  மருந்துகளுக்கு  எதிராக,  ஹோமியோபதி முறையில் கொடுக்கப்படும் மிக நுண்ணிய அளவு மருந்துகளே நலமாக்கலை கொடுக்கிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,  நேர் எதிர்  பண்புடைய மருத்துவச் சிகிச்சையினால் நோய்கள் தவறாமல் அதிகரிக்கின்றன என்பதும், அல்லது அத்தகைய மருத்துவச்  சிகிச்சையின்  போது பரிந்துரை செய்யப்பட்ட   மருந்தின் முக்கியமான மூலப்பொருள்களில் உள்ள  ஹோமியோபதி விதிகளுக்கு பொருத்தமுள்ள மருந்தினால் மட்டுமே  அந்நோய் குணமாக்கப்பட்டதன்றி , அம்மருத்துவர் யாராலும் அந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்தவில்லை  என்பதும், அல்லது நோயை விரைவாகவும்  ,முழுமையாகவும்  நலமாக்கும் இயற்கையின் செயல்பாடு போலவே  ( மணிமொழி 46 ) ஏற்கனவே அங்கிருந்த   பழைய நோயிற்கு  ஒத்த இயல்புடைய வேறு ஒரு நோய் இடைமறித்துத் தாக்குவதால் அந்நோய் எப்போதும் குணமாகிறது என்பதும் , இதுவே நோயாளிக்கு நன்மை தருவதாக இருக்கிறது  என்ற உண்மையையும், அறிவையும் கடந்த பல நூற்றாண்டுகளாக அம்மருத்துவர்களுக்கு (அலோபதியர்களுக்கு) கற்றுக் கொடுக்கப்படவில்லை.

Saturday, 14 December 2019

ஆர்கனான் மணிமொழி-60


§ 60
If these ill-effects are produced, as may very naturally be expected from the antipathic employment of medicines, the ordinary physician imagines he can get over the difficulty by giving, at each renewed aggravation, a stronger dose of the remedy, whereby an equally transient suppression1 is effected; and as there then is a still greater necessity for giving ever - increasing quantities of the palliative there ensues either another more serious disease or frequently even danger to life and death itself, but never a cure of a disease of considerable or of long standing.


FN-1 : All usual palliatives given for the suffering of the sick have (as is seen here) as after-effects an increase of the same suffering and the older physicians had to repeat them in ever stronger doses in order to achieve a similar modification, which however, was never permanent and never sufficient to prevent an increased recurrence of the ailment. But Brousseau, who twenty-five years before contended against the senseless mixing of different drugs in prescription and thereby ending its reign in France, (for which mankind is grateful to him) introduced his so-called physiological system (without taking note of the homoeopathic method then already established), a method of treatment, while effectively lessening and permanently preventing the return of all the sufferings, was applicable to all diseases of mankind; a thing that the palliatives then in use were not capable of affecting.


Being able to heal disease with mild innocent remedies and thus establish health, Brousseau found the easier way to quiet the sufferings of patients more and more at the cost of their life and at last to extinguish life wholly - a method of treatment that, alas, seemed sufficient to his contemporaries. In the degree that the patient retains his strength will his ailments be apparent and the more intensely will he feel his pains. He moans and groans and cries out and calls for help more and more vociferously so that the physician cannot come any too soon to give relief. Brousseau needed only to depress the vital force, to lessen it more and more and behold, the more frequently the patient was bled, the more leeches and cupping glasses sucked out the vital fluid (for the innocent irreplaceable blood was according to him responsible for almost all ailments). In the same proportion the patient lost strength to feel pain or to express his aggravated condition by violent complaint and gestures. The patient appears more quiet in proportion as he grows weaker, the bystanders rejoice in his apparent improvement, ready to return to the same measures on the renewal of his sufferings - be they spasms, suffocation, fears or pain, for they had so beautifully quieted him before and gave promise of further ease. In disease of long duration and when the patient retained some strength, he was deprived of food, put on a hunger diet, in order to depress life so much more successfully and inhibit the restless states. The debilitated patient feels unable to protest against further similar measures of blood-letting leeches, vesication, warm baths and so forth to refuse their employment. That death must follow such frequently repeated reduction and exhaustion of the vital energy is not noticed by the patient, already robbed of all consciousness, and the relatives, blinded by the improvements even of the last sufferings of the patient by means of blood letting and warm baths, cannot understand and are surprised when the patient quietly slips away.


But God knows the patient on his bed of sickness was not treated with violence, for the prick of a small lancet is not really painful and the gum Arabic solution (Eau de Gourme, almost the only medicine that Brousseau used) was mild in taste and without apparent action - the bite of the leeches insignificant and the blood letting by the physician done quietly while the luke warm baths could only soothe, hence the disease from the very start must have been fatal, so that the patient, notwithstanding all efforts of the physician, had to leave the earth.

In this way the relatives, and especially the heirs of the dear departed, consoled themselves.

The physicians in Europe and elsewhere accepted this convenient treatment of all disease according to a single rule, since it saved them from all further thinking (the most laborious of all work under the sun). They only had to take care to assuage the pangs of conscience and console themselves that they were not the originators of this system and this method of treatment, that all the other thousands of Brousseauists did the same and that possibly everything would cease with death anyway as was taught by their master. In this way many thousand physicians were miserably misled to shed (with cold heart) the warm blood of their patients that were capable of cure and thereby rob millions of men gradually of their life, according to Brousseau's method, more than fell on Napoleon's battlefields. Was it perhaps necessary by the disposition of God for that system of Brousseau which destroyed medically the life of curable patients to precede homoeopathy in order to open the eyes of the world to the only true science and art of medicine, homoeopathy, in which curable patients find health and new life when this most difficult of all arts is practised by an indefatigable discriminating physician in a pure and conscientious manner?


ஆர்கனான் மணிமொழி-60

நேர்எதிர் பண்புடைய  மருந்துகளைப் பயன்படுத்துவதால் ,  மிகவும் எதிர்பார்க்கப்படுகிற இத்தகைய கேடான விளைவுகள்  தோன்றுகின்றன; ஆனால்  ஒவ்வொரு முறையும் நோய் புதுப்பிக்கப்பட்டு அதிகரிக்கும் போதெல்லாம், அம் மருந்தின் அளவை அதிகரிப்பதின் மூலம் நிலைமையைச் சமாளித்து நலப்படுத்தி விடலாம்  என்று சாதாரண மருத்துவர் (அலோபதியர் ) கற்பனை செய்து கொள்கிறார் . அப்படி அதிகளவில் மருந்தை கொடுப்பதால் அதற்கு சமமான வகையில்  நிலையற்ற  உள்ளமுக்கம்-1 தான் ஏற்படுகிறது. ஆனால் அந்த நோய்த்தணிவிப்பு  மருந்தை  மேலும் மேலும் கூடுதலாகத் தருவதால் நீண்ட காலமாக இருந்து வரும் அந்நோய் குணமாகாமல்   , மருந்தின் அளவை இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டிய தேவையே உண்டாகிறது. அப்போது இன்னும் ஆபத்தான மற்றொரு நோய் தோன்றுகிறது அல்லது உயிருக்கே ஆபத்து வரலாம் மற்றும் மரணமும்  ஏற்படுகிறது, ஆனால் குறிப்பிடத்தக்க  அல்லது நீண்டகாலமாக உடலில் இருந்தும் வரும் நோயை குணப்படுத்துவதில்லை.

அடிக்குறிப்பு-1:

நோயாளிகளின் துன்பங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான எல்லா நோய்த்தணிவிப்பு மருந்துகளும் ( இங்கு பார்த்தவாறு) அவற்றின் மறுவிளைவாக , நோயாளியின் அதே துன்பங்களை அதிகரிக்கின்றன மற்றும் பழைய பள்ளி மருத்துவர்கள் ( அலோபதியர்கள்) நோயை அதே போல் மாற்றியமைத்துவிட வேண்டும்  என்ற எண்ணத்தில் மேலும் மேலும் வலிமையான மருந்துகளையே மீண்டும் தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்,  எனினும், இருந்தபோதிலும், அம்மருந்துகள் நோய் அதிகரித்து திரும்பவருவதை தடுக்க போதுமானவையாக இருக்கவில்லை மற்றும் அந்த மாற்றங்கள் என்றும் நிலையானவையாக இருக்கவில்லை. ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரௌஸ்ஸே ( BROWSSEAU) , இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு  ( ஹானிமன் ஆர்கனானை எழுதுவதற்கு முன்பு)  அறிவற்ற வகையில் வேறுபட்ட பல மருந்துகளை  கொடுத்து மருத்துவச்சிகிச்சை செய்யும் முறைக்கு எதிராக வாதிட்டார். அதனால் இந்தமுறை பிரான்ஸ் நாட்டில் நிறுத்தப்பட்டுவிட்டது (அதற்காக மனிதகுலம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது ). ஆயினும்  அவர் உடல்கூறு இயல் முறை ( ஏற்கனவே நிலைபெற்றிருந்த ஹோமியோபதி மருத்துவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்) என்ற பெயரில், நோயின் துயரத்தைக் குறைப்பதற்காகவும்  மற்றும் நோய் மீண்டும் வராமல் நிரந்தரமாக தடுப்பதற்காகவும் , அப்போதிருந்த நோய்தணிவிப்பு மருந்துகளால் அடைய முடியாமல் இருந்த நன்மைகளைப் பெறுவதற்காவும் மனிதகுலத்தைப் பாதிக்கும் எல்லா நோய்களுக்கும் பொருத்தமானதாக கருதிய    ஒரு மருத்துவமுறையை அறிமுகப்படுத்தினார்.

மென்மையான , எளிமையான  மருந்துகளை கொடுத்து அதன் மூலம்  நோயாளிகளின்  நலத்தை மீட்டெடுக்கும் முறைக்குப் பதிலாக, நோயாளியின் உயிரை விலை கொடுக்கும் வகையிலும் மற்றும் இறுதியில் உயிரை  முழுவதும் துடைத்தழிக்கும்  விதமாகவும், நோயாளியின் வேதனைகளை   மென்மேலும் குறைத்து அமைதிப்படுத்தும் எளிதான மருத்துவ வழியை  பிரௌஸ்ஸே கண்டுபிடித்தார். ஐயோ பாவம், அந்த வழிமுறை மருத்துவமானது , அவருடைய சமகால மருத்துவர்களுக்கு போதுமானதாகத் தோன்றியது. நோயாளி எந்த அளவிற்கு தமது வலிமையை தக்கவைத்து கொள்கிறாரோ அந்தளவிற்கு அவரது நோய்கள் தோற்றம் தரும் மற்றும் அவரது வலிகளின் தீவிரத்தை  உணர்ந்து கொள்ள முடியும். அவர் நோய்த்துன்பத்தால் முனங்குகிறார் மற்றும் புலம்புகிறார் மற்றும் வேதனையில் அழுகிறார் , அருகில் இருப்பவரிடம் உதவி கேட்டு  மேலும் மேலும் பெரும் கூச்சலிடுகிறார் ஆனாலும் அவருக்கு உதவுவதற்கு மருத்துவர்  மிக விரைவாக  வரமுடிவதில்லை. பிரௌஸ்ஸேவிற்கு தேவையானது நோயாளியின் உயிராற்றலை அமுக்கி வைத்து அதன் ஆற்றலை மேலும் மேலும் தனித்து வைப்பது தான்.  அதற்காக நோயாளியின் சிரைகளை வெட்டி இரத்தத்தை அடிக்கடி வெளியேற்றுவது , அதிகமான அட்டைப் பூச்சிகளை கடிக்க வைத்தும்  மற்றும் காற்று நீக்கப்பட்ட  கண்ணாடி குடுவைகளை உடலில் பொருத்தி உயிர்நிலையான  திரவத்தை உறிஞ்சி வெளியேற்றி அதன் மூலம் நோயாளிக்கு வலி தெரியாமல் இருக்க செய்தார் (ஏனென்றால் தீங்கற்ற ஈடுசெய்யமுடியாத இரத்தமே எல்லா நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று பிரௌஸ்ஸே கருதினார் ).

நோயாளி  தமது உடல் பலத்தை இழக்க இழக்க அதன் பரிமாணத்திற்குத்  தகுந்தவாறு வலியை உணரும்  ஆற்றலையும் அல்லது  நோய் கடுமையாக அதிகரிப்பதை  எடுத்துரைப்பதற்கும் மற்றும்  சைகைகளால் உணர்த்துவதற்கும்  தேவையான பலத்தை இழந்து விடுகிறார். நோயாளி எந்த அளவிற்கு பலவீனமாகி இருக்கிறாரோ  அதன் பரிமாணத்திற்குத் தகுந்தவாறு  அமைதியானவராக காணப்படுகின்றனர், அதனால் அவருடன்  இருப்பவர்கள் இந்த முன்னேற்றத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகின்றனர், அவர்களது தொல்லைகள் திரும்பி வரும் போது இதே வகையான சிகிச்சைமுறைக்கு திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள்  அந்த நோயாளிக்கு நரம்பு இசிவு , மூச்சுத்திணறல் , பயம் அல்லது  வலிகள்  ஏற்பட்டால், அவைகள் முன்பு எப்படி அழகாக அமுக்கப்பட்டு அமைதியான நிலை ஏற்படுத்தியது போல் , அமைதிப்படுத்தி விடுகிறார்கள்  மற்றும் மேலும் தொல்லையில்லாமல் செய்வதாக உறுதிமொழி  கொடுக்கிறார்கள்.    ஒரு நோயாளி நீண்ட காலத்திற்கு நோய் நிலையில் இருந்தபோதும்  , அந்த நோயாளி இன்னும் சற்று வலிமை உள்ளவராக இருக்கும் பொழுது, அவருக்கு உணவளிப்பது மறுக்கப்பட்டு , அவர் " பட்டினி திட்ட உணவு " முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்,  அதனால் அவர்களது உயிரியக்கம் மிகவும் வெற்றிகரமாக அமுக்கப்படுகிறது மற்றும் அவரது அமைதியற்ற நிலையும் தடுத்து நிறுத்தப்படுகிறது. மிகவும் சோர்வுற்ற நோயாளி அவருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையான அட்டைப்பூச்சிகளை கடிக்க வைத்து இரத்தத்தை வெளியேற்றுதல், கொப்புளங்களை உண்டாக்குதல் , வெதுவெதுப்பான குளியல் (வெந்நீர்க்குளியல்) போன்றவற்றைப்  பயன்படுத்தும் போது அவற்றை எதிர்க்கவும்  முடியாத நிலையை உணருகிறார்.   இவ்வாறு அடிக்கடியும் , திரும்பத் திரும்பவும் செய்யும் போது அவரது உயிரின் ஆற்றல் குறைந்தும்  மற்றும் முழுவதும் ஊக்கமிழந்த நிலை ஏற்பட்டு அந்நோயாளியால் உணர முடியாதவாறு அங்கே இறப்பு  ஏற்படும் நிலை உருவாகிறது. இரத்தத்தை வெளியேற்றுதல், மற்றும் வெதுவெதுப்பான நீரில் குளித்தல் போன்ற  வழிமுறைகளால் ஏற்கனவே உணர்விழந்த நிலையில் இருந்த நோயாளியிடம் கடைசியாகக் காணப்பட்ட முன்னேற்றத்தினால் கண்மறைக்கப்பட்ட அவரது உறவினர்கள்  எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும்    நோயாளியின் அமைதியான இறப்பைக் கண்டு  அதிர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர். 

“நோய்ப் படுக்கையில் இருந்த நோயாளிக்கு கடுமையான மருத்துவச் சிகிச்சை தரப்படவில்லை என்பது அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும், ஏனென்றால் அந்த நோயாளியின் உடலில்  சிறிய சூரிக் கத்தியினால் குத்திய பிறகும் அவருக்கு  உண்மையிலே வலிக்கவில்லை மற்றும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும்  பிசின் போன்ற அரபுநாட்டுக் கரைசல் (Eau de Gourme -கிட்டத்தட்ட இந்த ஒரு மருந்தை மட்டுமே பிரௌஸ்ஸே பயன்படுத்தினார்) மென்மையான சுவை உடையதாகவும் மற்றும் தெளிவான செயல்பாடு இல்லாதவையாகவும் இருக்கிறது. அட்டைப்பூச்சியை விட்டுக் கடிக்கவிட்டு இரத்தத்தை வெளியேற்றுதல் என்பது முக்கியமற்றது , மருத்துவர்கள் மூலம் வேறு வழியில் இரத்தத்தை வெளியேற்றுவது நோயாளியை அமைதியாக இருக்கச் செய்கிறது , அதே சமயத்தில் சற்று வெதுவெதுப்பான குளியல் மட்டும் வேதனையை சிறிது தணிக்கிறது,  எனவே, தொடக்கத்திலிருந்தே அந்த நோய் இறப்பைத் தருவதாகவே இருந்திருக்கிறது, அதனால் மருத்துவரின் எல்லா வகையான முயற்சியையும்  மேற்க்கொண்ட போதிலும் , அந்த நோயாளி , இந்த மண்ணுலகில் இருந்து சென்று விட்டார்". இந்த வகையில் நோயாளியின் உறவினர்களும் , இன்னும் குறிப்பாக கூறினால் , இறந்து போன அன்பான நோயாளியின்  வாரிசுகளும்  (அல்லது வழித்தோன்றல்களும் ) தங்களைத்தானே தேற்றிக் கொள்ளத்தான் வேண்டும் .

ஐரோப்பாவிலும் மற்றும் பிறநாடுகளிலும் இருக்கும் மருத்துவர்கள் எல்லா நோய்களுக்குமான இந்த வசதியான மருத்துவமுறையை , அதாவது  இனிமேல் மூளையைக் கசக்கி  ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ( சூரியனுக்கு கீழிருக்கும் இந்த உலகில் மிகவும் நீடித்த உழைப்பு தேவைப்படுகிற முக்கியமான வேலை) அவசியம் ஏதுமில்லை  என்ற  ஒரே விதியின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர்,  தாங்கள் இந்த மருத்துவமுறையைத் தோற்றுவித்தவர் இல்லை,  ஆனால் இந்த வகை மருத்துவச் சிகிச்சை முறையைத் தான் எல்லா நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான பிரௌஸ்ஸேவின் வழித்தோன்றல்கள் பின்பற்றுகிறார்கள், எல்லாமே இறப்பில் தான் முடிகிறது என்று தங்களுடைய ஆசிரியர் கற்பித்துள்ளார் என்று எண்ணியவர்களாக , தங்களின் மனசாட்சியின் உறுத்தலை மட்டுப் படுத்திக்கொண்டு தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கின்றனர்" இவ்வாறு , பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் கொடுமையான முறையில் தவறாக வழிநடத்தப்பட்டு தங்களுடைய நோயாளிகளின் வெம்மையான இரத்தத்தை ( இரக்க உணர்வில்லாமல்)  அதாவது நலப்படுத்தும் ஆற்றலுள்ள இரத்தத்தை , வெளியேற்றித் தீர்த்தனர். ஆனால், நெப்போலியனின் (Napoleon Bonaparte, FRANCE-1769-1821) போர்க்களத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்  அதிகமாக பிரௌஸ்ஸேவின் மருத்துவமுறை  சிகிச்சையினால் பல இலட்சம் மக்களின் உயிர்கள்  படிப்படியாக பறிக்கப்பட்டது. குணப்படுத்த வாய்ப்புள்ள நோயாளிகளை பிரௌஸ்ஸேவின் மருத்துவமுறை யின் மூலம் மருத்துவரீதியாக கொன்று குவித்த பிறகு,  மக்களின் மனக்கண்ணைத் திறந்து, பின்னாளில் வரப்போகிற உண்மையான மருத்துவச் சிகிச்சைக் கலையான  ஹோமியோபதியை உலகிற்கு உணர்த்துவதற்கான முன்னோடியாகவே மேற்கண்ட நிகழ்வுகள் இருப்பது கடவுளின் மனநிலையாகக்கூட இருக்கலாம், ஹோமியோபதி, அதாவது எல்லா மருத்துவக் கலைகளிலும் சிரமமான இந்தக் கலையை பயிற்சி செய்யும்   சளைக்காத வேறுபடுத்திக் காணும் அறிவு படைத்தவரும் , தமது  தூய மற்றும் மனச்சான்றுக்குக்கட்டுப்பட்ட வழியில் நின்று செயல்படும் மருத்துவர் மூலம்  அனைத்து நோயாளிகளும் நலமடைகிறார்கள் மற்றும் புதுவாழ்வு பெறுகிறார்கள்.



Sunday, 8 December 2019

ஆர்கனான் மணிமொழி-59


§ 59

Important symptoms of persistent diseases have never yet been treated with such palliative, antagonistic remedies, without the opposite state, a relapse - indeed, a palpable aggravation of the malady - occurring a few hours afterwards. For a persistent tendency to sleepiness during the day the physician prescribed coffee, whose primary action is to enliven; and when it had exhausted its action the day - somnolence increased; - for frequent waking at night he gave in the evening, without heeding the other symptoms of the disease, opium, which by virtue of its primary action produced the same night (stupefied, dull) sleep, but the subsequent nights were still more sleepless than before; - to chronic diarrhoeas he opposed, without regarding the other morbid signs, the same opium, whose primary action is to constipate the bowels, and after a transient stoppage of the diarrhoea it subsequently became all the worse; - violent and frequently recurring pains of all kinds he could suppress with opium for but a short time; they then always returned in greater, often intolerable severity, or some much worse affection came in their stead. For nocturnal cough of long standing the ordinary physician knew no better than to administer opium, whose primary action is to suppress every irritation; the cough would then perhaps cease the first night, but during the subsequent nights it would be still more severe, and if it were again and again suppressed by this palliative in increased doses, fever and nocturnal perspiration were added to the disease; - weakness of the bladder, with consequent retention of urine, was sought to be conquered by the antipathic work of cantharides to stimulate the urinary passages whereby evacuation of the urine was certainly at first effected but thereafter the bladder becomes less capable of stimulation and less able to contract, and paralysis of the bladder is imminent; - with large doses of purgative drugs and laxative salts, which excite the bowels to frequent evacuation, it was sought to remove a chronic tendency to constipation, but in the secondary action the bowels became still more confined; - the ordinary physician seeks to remove chronic debility by the administration of wine, which, however, stimulates only in its primary action, and hence the forces sink all the lower in the secondary its primary action, and hence the forces sink all the lower in the secondary action; - by bitter substances and heating condiments he tries to strengthen and warm the chronically weak and cold stomach, but in the secondary action of these palliatives, which are stimulating in their primary action only, the stomach becomes yet more inactive; - long standing deficiency of vital heat and chilly disposition ought surely to yield to prescriptions of warm baths, but still more weak, cold, and chilly do the patients subsequently become; - severely burnt parts feel instantaneous alleviation from the application of cold water, but the burning pain afterwards increases to an incredible degree, and the inflammation spreads and rises to a still greater height;1 - by means of the sternutatory remedies that provoke a secretion of mucus, coryza with stoppage of the nose of long standing is sought to be removed, but it escapes observation that the disease is aggravated all the more by these antagonistic remedies (in their secondary action), and the nose becomes still more stopped; - by electricity and galvanism, with in their primary action greatly stimulate muscular action, chronically weak and almost paralytic limbs were soon excited to more active movements, but the consequence (the secondary action) was complete deadening of all muscular irritability and complete paralysis; - by venesections it was attempted to remove chronic determination of blood to the head, but they were always followed by greater congestion; - ordinary medical practitioners know nothing better with which to treat the paralytic torpor of the corporeal and mental organs, conjoined with unconsciousness, which prevails in many kinds of typhus, than with large doses of valerian, because this is one of the most powerful medicinal agents for causing animation and increasing the motor faculty; in their ignorance, however, they knew not that this action is only a primary action, and that the organism, after that is passed, most certainly falls back, in the secondary (antagonistic) action, into still greater stupor and immobility, that is to say, into paralysis of the mental and corporeal organs (and death); they did not see, that the very diseases they supplied most plentifully with valerian, which is in such cases an oppositely acting, antipathic remedy, most infallibly terminated fatally. The old school physician rejoices2 that he is able to reduce for several hours the velocity of the small rapid pulse in cachectic patients with the very first dose of uncombined purple foxglove (which in its primary action makes the pulse slower); its rapidity, however, soon returns; repeated, and now increased doses effect an ever smaller diminution of its rapidity, and at length none at all - indeed - in the secondary action the pulse becomes uncountable; sleep, appetite and strength depart, and a speedy death is invariably the result, or else insanity ensues. How often, in one word, the disease is aggravated, or something even worse is effected by the secondary action of such antagonistic (antipathic) remedies, the old school with its false theories does not perceive, but experience teaches it in a terrible manner.

நோய் தணிக்கும் மருந்துகளாலும்  , முரண்பாடான மருந்துகளைக் கொண்டும்  சிகிச்சை செய்யும் போது பிடிவாத குணமுள்ள நோய்களின் முக்கியக்குறிகள் திரும்பி வராமல் இருப்பதில்லை- உண்மையிலே , ஒரு சிலமணி  நேரங்கழித்து புலன்களால் உணரக்கூடிய அளவிற்கு  நோய் அதிகரிக்கவே செய்கிறது. 

நீண்ட காலமாக பகலில் தூக்கக் கலக்கமாக இருந்து வந்த ஒருவருக்கு மருத்துவர் காபியை (மருந்தாக)  கொடுத்தபோது , அதன் முதல்நிலைச் செயல்பாடு எழுச்சியூட்டுவதாக இருக்கிறது; அந்த  முதல்நிலைச் செயல்பாடு முடிந்தவுடன் அவருக்கு- பகல் உறக்கநிலை அதிகரித்துவிட்டது. 

இரவில் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டு நல்ல தூக்கம் இல்லாமலிருந்த ஒருவருக்கு  நோயின் மற்ற அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் , மாலைநேரத்தில் அபினியை (OPIUM)மருந்தாகக் கொடுத்தபோது , அன்று இரவு நல்ல தூக்கம் ( மயக்கமான மந்தமான ) வந்தது, ஆனால் அதற்கு அடுத்த இரவுகளில்  முன்பு இருந்த நிலைக்கும் மேலாக தூக்கமில்லாத நிலை ஏற்பட்டது.

நீண்டகாலமாக காணப்பட்ட வயிற்றுப்போக்குக்கு எதிராக , நோயின் மற்றகுறிகளை கணக்கில் கொள்ளாமல் , அதே அபினியை மருந்தாக மருத்துவர் கொடுத்தபோது , அதன் முதல்நிலைச் செயல்பாடு மலச்சிக்கலை உண்டாக்குவது (குடல்களை இறுக்குவது) ஆதலால் மிகக் குறைந்த காலத்திற்கு வயிற்றுப்போக்கு நின்றது என்றாலும், அதற்குப் பிறகு அது இன்னும் மோசமடைந்தது.


மிகக் கடுமையாகவும் , அடிக்கடியும் மற்றும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கிற எல்லாவிதமான வலிகளையும் அபினியைக் கொண்டு சிறிது காலத்திற்கு அடக்கி வைக்கலாம்; ஆனால் , அதற்குப் பிறகு அவை தவறாமலும் , அதைவிட அதிகமாகவும், தாங்க முடியாதவாறு இன்னும் மிகுந்த வலியுடன் திரும்பி வரத்தான் செய்யும்  அல்லது அதற்குப் பதிலாக அவ்வலிகளைவிட மோசமான புதியதொரு பாதிப்பு தோன்றுவதுமுண்டு. 


பலநாட்களாக இரவு நேரங்களில் ஏற்படும் இருமலுக்கு அபினியை  மருந்தாகத்  தருவதைத் தவிர இந்த சாதாரண (அலோபதி) மருத்துவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. எல்லாவகை எரிச்சல் அல்லது உறுத்தல்களையும் அடக்குவதே அதன் முதல்நிலைச் செயல் ஆதலால் முதல்நாள் இரவில் அந்த இருமல் நின்றுவிட்டுப் பிறகு அடுத்து வரும் இரவுகளில் , இந்த இருமல் முன்பைவிட கடுமையாக ஏற்படலாம். ஆனால் இந்த நோய் தணிவிப்பு மருந்தை இன்னும் அதிக அளவில் திரும்பதிரும்பக் கொடுத்து இருமலை அடக்கி வந்தால் , காய்ச்சல் மற்றும் இரவுநேர வியர்வை உண்டாகுதல் போன்ற குறிகளும் இன்னும் கூடுதலாக (இருமலுடன் ) சேர்ந்து கொள்கின்றன.

சிறுநீர்ப்பையின் பலவீனமும், அதனால் ஏற்படும் சிறுநீர்த்தேக்கம் நீங்குவதற்கும் மற்றும் சிறுநீர் பாதையைத் தூண்டுவதற்கும் , நேர் எதிர்பண்புடைய மருந்தாக காந்தாரிஸ் ( காந்தாரிஸ் வண்டு)  மருந்தை பயன்படுத்திய போது , முதலில் சிறுநீர்போக்கு  உறுதியாக வெளியேறியது என்றாலும் , அதற்குப் பிறகு சிறுநீர்ப்பையின் இயற்கையான சுருங்கும் ஆற்றல் மேலும் குறைந்து சிறுநீர்ப்பை முடக்கம் ஏற்படுவதை கண்கூடாக காணமுடிகிறது.


நீண்டகாலமாக நிலைத்திருக்கும் மலச்சிக்கலை நீக்க  குடல்களைத்  தூண்டி அடிக்கடி மலத்தை வெளியேற்றும் சக்தியுள்ள பேதி மருந்துகளையும் , மலமிளக்கி உப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். அவைகளின் முதல்நிலைச் செயலின் காரணமாக மலச்சிக்கல் நீங்கினாலும் , அவற்றின் இரண்டாம்நிலைச் செயல்பாடாக மலம் வெளியேற முடியாமல் இன்னும் கட்டுப்படுத்தப்படுகிறது.

நீண்டகாலமாக காணப்படும் தளர்ச்சியை நீக்கும் என்று எதிர்பார்த்து நோயாளிக்கு கொடிமுந்திரி (திராட்சை) சாராயத்தை (WINE) இந்த சாதாரண மருத்துவர் (அலோபதி) பரிந்துரை செய்கிறார். ஆனால், அதன் முதல்நிலைச் செயல்பாட்டில் மட்டுமே ஊக்கஉணர்வை ஊட்டுவது ஆதலால், அதன் இரண்டாம்நிலை செயல்பாட்டினால் அந்த நோயாளியின் ஆற்றல் இன்னும் குறைந்து விடுகிறது. அதனால்  கொடிமுந்திரி சாராயத்தின் இரண்டாம் நிலைச் செயல் நோயாளியின் ஆற்றலை குறைத்து படிப்படியாக வலுவிழக்கச் செய்கிறது.


நீண்டகாலமாக  பலவீனமாகவும் மற்றும்   வயிற்றில் குளிர்ச்சியான  உணர்ச்சியும்  இருந்த ஒருவருக்கு கசப்புப் பொருள்களையும் சூட்டை உண்டாக்கும் (மிளகு போன்ற) காரப்பொருட்களையும், கொடுத்து வயிற்றைப் பலப்படுத்தவும்,  சூடு ஏற்படவும் மருத்துவர் முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நோய் தணிவிப்பு மருந்துகளின் முதல் நிலைச் செயல்பாட்டினால் தூண்டுதல் பெற்று விரும்பிய பலன் ஏற்படுகிறது,  ஆனால் இரண்டாம் நிலைச் செயல்பாட்டினால் வயிறு மேலும் செயலிழந்து விடுகிறது.

பலநாட்களாக உடலின் இயற்கையாய் இருக்க வேண்டிய சூட்டின் அளவு குறைந்து  உடம்பில் குளிர்ச்சியான உணர்ச்சியுள்ளவருக்குச் சுடு தண்ணீரில் குளிக்கச் செய்தால் குளிர்ச்சியான உணர்ச்சி உறுதியாக மறைந்து விடுகிறது , ஆனால் சிறிது நேரமானவுடன் நோயாளிக்கு முன்னை விடப் பலம் குறைந்து, குளிர்ந்து ,  அதிகமான   குளிர்நடுக்கமும் ஏற்படுகிறது .
கடுமையாக நெருப்புச் சுட்டுவிட்ட உடல் பகுதிகளில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றும் போது அங்கே இருக்கும்  எரிச்சல் உடனே  மறைந்து விடுகிறது. ஆனால், சிறிது நேரம் சென்றவுடன் எரிச்சல் வலி தாங்க முடியாத அளவிற்கு அதிகமாகிறது ,  அதேபோல் உடல் முழுவதும் கடுமையான வேக்காடு பரவி முன்பு இருந்ததை  விட வலி கூடுகிறது-1.

பல  நாட்களாக  சளித்தொல்லையால் மூக்கடைப்பு ஏற்பட்டு  அவதிக்குள்ளாகும் நோயாளிக்கு தும்மலை தூண்டுகிற  மருந்துகளைக் கொடுத்துச் சளியை உண்டாக்கி குணம் செய்து விடலாம் என்று எண்ணுகிறார்கள் . ஆனால் இவ்விதமான நேர் எதிர்க்குணமுள்ள மருந்துகளால் (அவைகளின் இரண்டாம்நிலை செயல்பாட்டினால்  ) நோய் மேலும் அதிகரிப்பதை அவர் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மற்றும் முதல் அம்மருந்துகளின் முதல் செயல்பாட்டினால்  மூக்கடைப்பு நீங்கினாலும், அதனுடைய இரண்டாவதுநிலை செயல்பாட்டினால் மூக்கடைப்பு   முன்பைவிட  அதிகமாகவே செய்கிறது.

மின்சாரம் மற்றும் மின்னியக்கம் போன்றவைகளின்  முதல் செயல்பாடு  தசைகளின் இயக்கங்களுக்கு  ஊக்கம் தருகிறது . நீண்டகாலமாக  பலவீனத்தாலும்,  பக்கவாதத்தாலும்  தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கை கால் முடங்கி விட்டவர்களுக்கு மின்சாரச் சிகிச்சை செய்தவுடனே முடங்கியிருந்த கை கால்களை மடக்கவும் நீட்டவும் முடிகிறது. ஆனால் அதனுடைய பின்விளைவாக ( இரண்டாம்நிலை செயல்பாடு) தசைகளின் இயக்கங்கள் முழுமையாக ஒழித்துக்கட்டப்பட்டு  எரிச்சல்த்தன்மை ஏற்படுகிறது மற்றும் முழுமையான பக்கவாதம் ஏற்பட்டு முடங்கிப் போகிறார்கள். 

நீண்ட நாட்களாக  தலையில்  அதிக இரத்தம் சேருவதை (இரத்தத்தேக்கம் ) நீக்க அங்குள்ள அசுத்த இரத்தக்குழாயை ஊசியால் குத்தி இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதன் விளைவாக அங்கு இரத்தத்தேக்கம்  அதிகமாகிறது.


உடல் மற்றும் மனம் சார்ந்த உறுப்புகளின் இயக்க ஆற்றலிழந்து , அத்துடன் மயக்கமும் சேர்ந்து ஏற்படும் பலவகையான நச்சுக்காய்ச்சலை   அடக்க சடாவல்லி (VALERIAN) என்ற மருந்தை ஏராளமான அளவில் கொடுப்பது, என்பது ஒன்றைத் தவிர வேறு எதுவும் சாதாரண மருத்துவ பயிற்சியாளர்களுக்குத் (அலோபதி )  தெரியாது. ஏனென்றால் உயிரியக்கத்தையும் , மற்றும் இயக்க ஆற்றலையும்  உண்டாக்கும் ஆற்றல் மிக்க  மருந்துகளில் சடாமல்லியும் ஒன்று. உடலுக்கு ஊக்கம் தருவது சடாமல்லியின்  முதல் செயல்பாடு  என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் ,அதன் முதல் செயல்பாடு  முடிந்து , சிலநாட்கள் கழித்து,  இரண்டாவது நிலை செயல்பாடு ( மாறான)  துவங்கியவுடன் அதிக மந்தநிலையும்  மற்றும் இயங்கமுடியாத நிலையும்   ஏற்பட்டு, அதாவது உடல் மன வேதனைகள் முன்பைவிட  அதிகமாகி உடல் உறுப்புகளும் மூளையும் செயலற்றுப்போய் விடுகிறது ( மற்றும் மரணமும் நேரலாம்) என்பதை தெரிந்து கொள்ளமுடியாத அறியாமையில் அம்மருத்துவர்கள் இருக்கிறார்கள். சடாமல்லியை அதிக அளவில் மருந்தாகப் பயன்படுத்தும் போது ,  அம்மருந்து  எதிரிடையாக  செயல்பட்டு, நேரெதிர் மருந்தாக  வேலை செய்கிறது,   சிறிதும் தவறாமல் (நிச்சயமான)  மரணத்தை ஏற்படுத்துகிறது  என்பதையும் அவர்கள் காண்பதில்லை.

நோய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நோயாளிகளின் நாடித்துடிப்பு சிறியதாகவும், வேகமாகவும் இருக்கும் . அதற்கு கையுறை போன்ற நீண்ட  ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடியிலிருந்து பெறப்படும் மருந்தை  ( DIGITALIS=FOXGLOVE) ஒரு வேளை கொடுத்து , நாடித்துடிப்பின் வேகத்தை பல மணி நேரங்களுக்குக் கட்டுப்படுத்தி வைக்க தன்னால் முடிந்ததை பற்றி பழைய பள்ளி மருத்துவர்கள் (அலோபதி) மகிழ்ச்சியடைகிறார்கள் -2. (அம்மருந்தின் முதல் செயல்பாடு நாடித்துடிப்பின் வேகத்தைக் குறைப்பதாகும்) . எனினும், அந்த வேகமான நாடித்துடிப்பு விரைவில் திரும்ப வருகிறது; அதனால் அதே மருந்தை இன்னும் கூடுதலாகவும் , திரும்பதிரும்பவும் கொடுப்பதால் நாடித்துடிப்பின் வேகம் மிகக் குறைந்து , சிறியதாகி  , இன்னும் சிறிது காலத்தில் நாடித்துடிப்பே இல்லாத நிலையும் ஏற்படுகிறது. -உண்மையிலே அம்மருந்தின் இரண்டாம்நிலை செயல்பாட்டில் நாடித்துடிப்பு எண்ணிக் கணக்கிட முடியாதவாறு இருக்கும்; தூக்கம், பசி மற்றும் உடல்வலிமை ஆகியவையாவும் விலகிச்சென்று விடும், மற்றும் தவறாமல் விரைவில் மரணம் ஏற்படுவது முடிவாக இருக்கும் , அல்லது நோயாளிக்கு பைத்தியம் பிடிப்பது பின்நிகழ்வாகிறது. ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் , அந்த முரண்பாடான மருந்துகளின்  ( நேர் எதிர் மருந்துகள்)  இரண்டாம்நிலை செயல்பாட்டினால் நோய் அதிகரிக்கின்றது அல்லது அதைக்காட்டிலும் மோசமான நிலையை அடைகிறது என்பதை பழைய பள்ளி மருத்துவர்கள் (அலோபதியர்கள்) தங்களிடையே பொய்யான கோட்ப்பாடுகளினால் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர், ஆனால் அனுபவங்கள் பயங்கரமான முறையில்  நமக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறது .

1 Vide Introduction.
2 Vide Hufeland, in his pamphlet, Die Homoopathie, p.20.



Thursday, 5 December 2019

ஆர்கனான் மணிமொழி-58


§ 58

If, in estimating the value of this mode of employing medicines, we should even pass over the circumstance that it is an extremely faulty symptomatic treatment (v. note to § 7), wherein the practitioner devotes his attention in a merely one-sided manner to a single symptom, consequently to only a small part of the whole, whereby relief for the totality of the disease, which is what the patient desires, cannot evidently be expected, - we must, on the other hand, demand of experience if, in one single case where such antipathic employment of medicine was made use of in a chronic or persisting affection, after the transient amelioration there did not ensue an increased aggravation of the symptom which was subdued at first in a palliative manner, an aggravation, indeed, of the whole disease? And every attentive observer will agree that, after such short antipathic amelioration, aggravation follows in every case without exception, although the ordinary physician is in the habit of giving his patient another explanation of this subsequent aggravation, and ascribes it to malignancy of the original disease, now for the first time showing itself, or to the occurrence of quite a new disease1.

1 Little as physicians have hitherto been in the habit of observing accurately, the aggravation that so certainly follows such palliative treatment could not altogether escape their notice. A striking example of this is to be found in J. H. Schulze's Diss. qua corporis humani momentanearum alterationum specimina quoedam expenduntur, [ Dissertation showing certain cases of brief alterations in the human body] Hale, 1741, § 28. Willis bears testimony to something similar (Pharm. rat., § 7, cap. I, p.298): Opiata dolores atroscissimos plerumque sedant atque indolentiam - procurant, camque - aliquamdiu et pro stato quodam tempore continuant, quo spatio elapso dolores mox recrusescunt et brevi ad sol itam ferociam augentur[ Opiates generally assuage the most severe pains and bring on insensibility , and they continue the insensibility for some time and for a fixed period. When the period has elapsed the pains soon flare up again and in short order increase to their accustomed severity) . And also at page 295: Exactis opii viribus illico redeunt tormina, nec atrocitatem suam remittunt, nisi dum ab eodem pharmaco rursus incantuntur [ When the opium’s strength is spent , the intestinal pains return straightaway , nor do they slacken their severity unless they are charmed away again by the same drug] . In like manner J. Hunter (On the Venereal Disease, p.13) says that wine and cordials given to the weak increase the action without giving real strength, and the powers of the body are afterwards sunk proportionally as they have been raised, by which nothing can be gained, but a great deal may be lost.

அப்படியானால், இந்த முறையில் மருந்துகளை பயன்படுத்துவதை மதிப்பீடு செய்யும் போது  , மருத்துவர்கள்  நோய்க்குறிகளில் ஒன்றை மட்டுமே , அதாவது நோய்த் தாக்குதலை முழுமையாகப் பார்க்காமல் அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் கவனிப்பதினால், நோயாளிகள் விரும்பியவாறு , முழு நோயும் நீங்குமென்று  ஆதாரபூர்வமாக எதிர்பார்க்க முடியாது. ஆகவே,  இம்முறை மிக மிகத் தவறானது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் (மணிமொழி § 7 இன் அடிக்குறிப்பை பார்க்கவும்). அதற்கு மாறாக, ஒரு நோயாளிக்கு அவருடைய நாட்பட்ட நோயிற்கு அல்லது தொடர்ந்து பாதிப்பைக் கொடுக்கும் தொல்லைக்கு நேர் எதிரான மருந்தினைக்  கொடுத்து சிகிச்சையளிக்கும் போது , அவருடைய நோய்க்குறிகள்  ஆரம்பத்தில் நோய் தணிக்கிற  வகையில்   தற்காலிகமாக மறைந்து பின்னர் அதைவிட கூடுதலாக அதிகரிக்கும், உண்மையில் , நோய்க்குறிகள் முன்பிருந்ததைவிட அதிகரித்திருக்கும்? என்பதை அறிந்து கொள்வதற்கு நமக்கு அனுபவம் தேவை. இவ்வாறு நேரெதிர் மருந்து கொடுத்த பிறகு நோயாளிக்கு  ஏற்படும் நோய்குறைதல் என்பது மிகக்  குறுகிய காலமே இருக்கும், அதன் பிறகு விதிவிலக்கில்லாமல் ஒவ்வொரு நோயாளிக்கும்  அந்த நோய்க்குறிகள் அதிகரிக்கவே செய்யும் என்பதை  கூர்ந்து கவனித்து மருந்தளிக்கும்  மருத்துவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு தனது நோய் அதிகரித்து விடக் காரணமென்ன என்று கேட்கும் நோயாளிடம், இந்த சாதாரண (அலோபதி ) மருத்துவர் வழக்கமாகச் சொல்லும் சமாதானம்  என்பது , " முன்பு இருந்த நோய் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது , இப்போது தான் அது தன் சுய உருவத்தைக் காட்டுகிறது அல்லது  முற்றிலும் புதியதொரு நோய் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது " என்பதாகும்.

அடிக்குறிப்பு-1:


இதுவரையிலும் மருத்துவர்கள் (அலோபதி ) சரியாக கவனிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார்கள், அப்படி அவர்கள் கவனித்திருந்தால் இந்த நோய்தணிவிப்பு மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு  நோய்க்குறிகள் நிச்சயமாக அதிகரிப்பது அவர்களுடைய பார்வையில் இருந்து தப்பிவிட முடியாது. இதற்கு  சரியான  எடுத்துக்காட்டுகளை மருத்துவர் J.H. ஸ்சுல்ஸ் ( J.H.SCHULZE) அவர்களின் கூற்றின்  மூலம் அறிய முடிகிறது (இவரது விளக்கவுரை ஆராய்ச்சிக் கட்டுரை சில நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது மனித  உடலில் ஏற்படும்  மாற்றங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறுகிறது ) . மருத்துவர்  ஹாலே (HALE) மற்றும் வில்லிஸ் (WILLIS) போன்றவர்களும் இதற்கு ஒத்துள்ள  சான்றுகளை  உறுதிப்படுத்தியுள்ளனர். (ஓபியம் கொடுக்கும் போது , மிகக் கடுமையான வலிகளை மட்டுப்படுத்துகிறது மற்றும் உணர்விழந்த நிலைக்குக் கொண்டு வருகிறது,மற்றும்  அவர்கள் இந்த உணர்விழந்த நிலையை சிறிது காலத்திற்கு அல்லது குறிப்பிட்ட காலம் வரை  நீடிக்கச் செய்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு வலிகள் விரைவில் பட்டொளி வீசத்  துவங்குகிறது. மற்றும் குறைந்த நேரத்திலே அவரது வலிகள் அதிகரித்து பழக்கமான தீவிரத்தன்மை அடைகிறது. மற்றும் இந்த ஓபியம் மருந்தின் வலிமை குறைந்தவுடன் , குடல்களில் ஏற்பட்டிருந்த வலிகள் உடனடியாக திரும்புகிறது. அந்த வலிகளை  குறைக்க அதே மருந்தான ஒப்பியத்தை மீண்டும்  கொடுத்து குறைக்க அல்லது கட்டுப்படுத்த  வேண்டும்). இதே போல் மருத்துவர்J. ஹண்டர் ( J.HUNTER -பால்வினை நோய் என்ற நூலில், பக்கம் 13  இல் ) என்பவரும் வலுக்குறைந்தவர்களுக்கு கொடிமுந்திரிச் சாராயமும் (WINE) மற்றும் உக்கம் தரும் உணவு வகைகளையும் (CORDIALS) கொடுக்கப்பட்ட போது, அவை அவர்களின் வலிமைமையை அதிகரிக்காமல்  செயல்பாட்டை மட்டுமே அதிகரித்தன என்றும், அதற்குப் பிறகு அவர்களுடைய உடலின் ஆற்றல் , மேற்கண்ட கிளர்ச்சியின் எழுச்சிக்குத் தகுந்தவாறு தாழ்ந்து போய் விடுகிறது என்றும், அதனால் அவர்களுக்கு எந்த நன்மையும்   கிடைக்கவில்லை, ஆனால் மிகப்பெரிய அளவிற்கு இழப்பே ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.