§ 39
Now
the adherents of the ordinary school of medicine saw all this for so many
centuries; they saw that Nature herself cannot cure any disease by the
accession of another, be it ever so strong, if the new disease be dissimilar to
that already present in the body. What shall we think of them, that they
nevertheless went on treating chronic disease with allopathic remedies, namely,
with medicines and prescriptions capable of producing God knows what morbid
state - almost invariably, however, one dissimilar to the disease to be cured?
And even though physicians did not hitherto observe nature attentively, the
miserable results of their treatment should have taught them that they were
pursuing an inappropriate, a false path. Did they not perceive when they
employed, as was their custom, and aggressive allopathic treatment in a chronic
disease, that thereby they only created an artificial disease dissimilar to the
original one, which, as long as it was kept up, merely held in abeyance, merely
suppressed, merely suspended the original disease, which latter, however,
always returned, and must return, as soon as the diminished strength of the
patient no longer admitted of a continuance of the allopathic attacks on the
life? Thus the itch exanthema certainly disappears very soon from the skin
under the employment of violent purgatives, frequently repeated; but when the
patient can no longer stand the factitious (dissimilar) disease of the bowels,
and can take no more purgatives, then either the cutaneous eruption breaks out
as before, or the internal psora displays itself in some bad symptom, and the
patient, in addition to his undiminished original disease, has to endure the
misery of a painful ruined digestion and impaired strength to boot. So, also,
when the ordinary physicians keep up artificial ulcerations of the skin and
issues on the exterior of the body, with the view of thereby eradicating a
chronic disease, they can NEVER cure them by that means, as such artificial
cutaneous ulcers are quite alien and allopathic to the internal affection; but
inasmuch as the irritation produced by several tissues is at least sometimes a
stronger (dissimilar) disease than the indwelling malady, the latter is thereby
sometimes silenced and suspended for a week or two. But it is only suspended,
and that for a very short time, while the patient's powers are gradually worn out.
Epilepsy, suppressed for many years by means of issues, invariably recurred,
and in an aggravated form, when they were allowed to heal up, as Pechlin1 and
others testify. But purgatives for itch, and issues for epilepsy, cannot be
more heterogeneous, more dissimilar deranging agents - cannot be more
allopathic, more exhausting modes of treatment - than are the customary
prescriptions, composed of unknown ingredients, used in ordinary practice for
the other nameless, innumerable forms of disease. These likewise do nothing but
debilitate, and only suppress or suspend the malady for a short time without
being able to cure it, and when used for a long time always add a new morbid
state to the old disease.
1
Obs. phys. med., lib. ii, obs, 30.
இப்போதும் , இந்த விசயங்கள் தெரிந்தும் பல நூற்றாண்டுகளாக அலோபதி முறையின்
ஆதரவாளராக இருந்து கொண்டு வருகிறார்கள். மேலும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள ஒரு
இயற்கையான நோயை புதியதாகத் தோன்றும் மாறுபட்ட அல்லது ஒத்ததன்மையில்லாத மற்றொரு புதிய
நோய் அது எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் இயற்கையான வகையில் அந்நோயைக்
குணப்படுத்த இயலாது என்பதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இருந்த போதிலும்
நீடித்த வகை நோய்களுக்கு அலோபதி மருந்துகளையே எழுதிக் கொடுத்து அம்மருந்துகளைக்
கொண்டே மருத்துவமும் செய்து வருகின்றனர். அம்மருந்துகள் , அங்கு குணப்படுத்த வேண்டிய
நோயிற்கு ஒத்ததன்மை இல்லாதவையாகவும் எந்தவிதமான செயற்கை நோயை உண்டாக்க
முடியும் என்பதும் அந்த இயற்கை
அன்னைக்குத் தான் தெரியும். இத்தகைய
மருத்துவர்களைப் பற்றி நாம் வேறென்ன நினைப்பது? அவர்களால் இயற்கையாக
நடைபெறும் காரியங்களை கூர்ந்து கவனிக்க முடியாமல் போனாலும், அவர்களது மருத்துவத்தினால் உண்டான கொடிய விளைவுகளைப் பார்த்த பிறகாவது , தாங்கள் சற்றும் பொருத்தமில்லாதமுறையைப் பின்பற்றித் தவறான வழியில் செல்கிறோம்
என்பதை அலோபதி மருத்துவர்கள் கற்றுணர்ந்திருக்க வேண்டுமல்லவா?
நீடித்த வகை நோயிற்கு நெருக்கடி தருகிற அலோபதி மருந்தைக்கொண்டு மருத்துவம்
செய்யும்பொழுது முதலாவதாக உள்ள இயற்கை
நோயிற்கு , மாறுபட்ட அல்லது
ஓததன்மையில்லாத செயற்கை நோயொன்று உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் , அம்மருந்து கொடுக்கப்படும் காலங்களில் முதலில் தோன்றிய இயற்கையான நோய்
உள்ளமுக்கப்பட்டும் , தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டும் இருக்கிறது என்பதையும் , மருந்தின் கொடுமையினால் நோயாளியின் உடல்வலிமை குறைந்து இனி மருந்து கொடுக்க
இயலாது என்ற நிலை ஏற்பட்டு, அதை நிறுத்திய பின்பு உள்ளமுக்கப்பட்ட இயற்கைநோய் திரும்பி வருகிறது
என்பதையும் , கட்டாயம் வரும் என்பதையும் அலோபதி மருத்துவர்களால் அறிய
முடியவில்லையா?
இவ்வாறு, அரிப்புடன் கூடிய தோல் எழுச்சிநோய் ( சின்னம்மை போன்ற) இருக்கும் போது கடுமையான பேதி மருந்துகளை ( குடல்
இளக்கமருந்துகள்) அடிக்கடி திரும்பத் திரும்ப கொடுத்து வரும் பொழுத மிக விரைவில்
அந்த தோல் எழுச்சிநோய் தோல்
பகுதியிலிருந்து மறைந்து விடுகின்றன.
ஆனால் , இயற்கைக்கு மாறான ஓததன்மையில்லாத மருந்துகளினால் குடல்களின்
நோயை இனி தாங்க முடியாது என்ற நிலை உருவாகி
, இனி பேதி மருந்துகளை
உட்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்படும் பொழுது நோயாளியிடம் முன்பு தோன்றிய
தோல் எழுச்சிநோய் முன்பிருந்தது போல் திரும்பவும் ஏற்படும் அல்லது உடலினுள்ளே
இருக்கும் சோரா நச்சுத்தன்மை சில மோசமான குறிகளை தோற்றுவிக்கும்.
நீடித்தவகை நோயை வேருடன் அழித்தொழித்து
குணமாக்கும் நோக்கத்துடன் சாதாரணமான (அலோபதி ) மருத்துவர்கள் உடலின்
வெளிப்புறத்தில் ( தோலில்) செயற்கையான புண்களையும் , புறக்கசிவுகளையும் உண்டாக்கி
அவற்றைத் தக்கவைத்துக் கொண்டு வருவதால் அந்த நீடித்த நோயை குணமாக்கவேண்டும் என்ற
நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. எப்படியென்றால் உடலினுள்ளே இருக்கும் நோயின்
பாதிப்புகளுக்கு இது புறம்பாகவும் மற்றும் ஒத்ததன்மையில்லாததாகவும் , பொருந்தாதவாகவும் ( அலோபதி மருத்துவம் ) இருப்பதால் அவர்களால் ஒருபோதும்
குணப்படுத்த முடியாது. ஆனால் உடலின் புறத்தே
தோன்றியுள்ள உறுத்தல்கள் (அல்லது நமைச்சல்) , உடலினுள்ளே காணும் நோயைக்
காட்டிலும் ஒத்ததன்மை இல்லாதவையாகவும் , சில சமயத்தில்
வலிமையானவையாகவும் இருந்தால் , உடலினுள்ளே
இருக்கும் அந்தநோயை அப்போதைக்கு செயலற்றநிலை ஏற்படுத்தப்பட்டும், ஒன்று அல்லது இரண்டு
வாரங்களுக்கு தள்ளிப் போடவுமே இது உதவும். இவ்வாறு நோயை மிகக்குறைந்த
காலத்திற்குத் தள்ளிப்போடச் செய்யும்போது நோயாளியின் ஆற்றல் அல்லது உடல்வலிமை
படிப்படியாக சோர்வடைந்து ( நைவுற்று )
விடுகிறது. உடலில் புறக்கசிவுகளை
ஏற்படுத்துவதின் மூலம் பல ஆண்டுகளுக்கு உள்ளமுக்கப்பட்டிருந்த வலிப்புநோய் , புறக்கசிவை நிறுத்திப் புண்களை ஆற்றியபோது வலிப்புநோயின் தாக்கம் முன்பைவிட
அதிகரித்த நிலையில் தவறாமல் வெளிப்பட்டதை மரு. பெச்லின் ( Pechlin) என்பவரும் மற்றும்
சிலரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
பெயரறியப்படாத , எண்ணிக்கையிலடங்காத பல நோய்களுக்கு கொடுக்கப்படுகின்ற
அறிந்துகொள்ளமுடியாத பல ஆக்கக்கூறுகளையுடைய கொண்டதும் , பொதுவான மருத்துவப்பயிற்சியில் பயன்படுத்தப்படும் வழக்கமான
மருத்துவக்குறிப்புகளைக் காட்டிலும்- சொறி சிரங்குகளை அடக்க பேதி மருந்துகளை பயன்படுத்துவதும் , வலிப்பு நோயிற்கு புறக்கசிவு மருந்துகளைக் கொடுப்பதும் இயற்கைக்கு எதிரானதாக இருக்கின்றன.இத்தகைய
மருத்துவம், மேலும் பல்வேறான
முரண்கூறுகொண்ட மருந்துகளையும், மேலும் ஒத்ததன்மையில்லாத வகையில்
சீர்கேட்டை எற்படுத்துவதுமாகவும் , மேலும் பொருந்தாத (அலோபதி) முறையினாலும் நோயாளிக்கு
சோர்வைத்தருகின்ற வகையில் இருப்பதால் நோயாளியை
குணப்படுத்தமாட்டாது. இப்படிப்பட்ட அலோபதி மருத்துவமானது , நோயாளியை சோர்வுறச் செய்கிறதேயன்றி வேறெந்த நன்மையையும் செய்யாது. மற்றும்
நோயைக் குணமாக்க இயலாமல் அதை உள்ளமுக்கியோ அல்லது குறைந்த காலத்திற்கு அடக்கி, தள்ளிவைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய மருத்துவத்தை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து
எடுத்துக் கொண்டு வரும் பொழுது , பழைய நோயுடன் ஒரு புதிய நோய்
நிலையும் சேர்ந்து கொள்கிறது.
No comments:
Post a Comment