Nature
herself permits, as has been stated, in some cases, the simultaneous occurrence
of two (indeed, of three) natural disease in one and the same body. This
complication, however, it must be remarked, happens only in the case of two
dissimilar disease, which according to the eternal laws of nature do not
remove, do not annihilate and cannot cure one another, but, as it seems, both
(or all three) remain, as it were, separate in the organism, and each takes
possession of the parts and systems peculiarly appropriate to it, which, on
account of the want of resemblance of these maladies to each other, can very
well happen without disparagement to the unity of life.
சில சமயங்களில் ,
ஒருவர் உடலில்
இரண்டு இயற்கை நோய்களை ( உண்மையிலேயே , மூன்று ) ஒரே நேரத்தில் தோன்றுவதற்கு இயற்கை அன்னையே
அனுமதிப்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தபோதிலும், கீழ்காணும் இந்தச் சிக்கல்களையும் , கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, இந்த இரண்டு இயற்கை நோய்களும் ஓததன்மையில்லாதவையாகவும் , என்றும் நிலைத்திருக்கிற
விதிகளின்படி ஒன்றையொன்று நீக்க முடியாததாகவும் , முற்றிலும் அழித்தொழிக்க
முடியாததாகவும்,
ஒன்றையொன்று
குணமாக்க முடியாததாகவும் ,
உடலில் அவை இரண்டும்
( அல்லது மூன்று நோய்களும்) தனக்குரிய வசதியான உறுப்புகளையும் மற்றும் உறுப்பு
மண்டலத்தையும்தமது பிடியில் வைத்துகொண்டு , ஒன்றோடொன்று
பொருந்தாதவையாகவும் இருப்பதால் மட்டுமே உயிரியக்கத்தின் தன்னிறைவான வாழ்க்கைக்கு
எந்த மதிப்புக் குறைவும் இல்லாமல் அந்தநோய்கள் அங்கே ஒன்றாக இருக்க முடிகிறது.
No comments:
Post a Comment