Monday, 5 October 2015

துயரர் வரலாறு -சாமோமில்லா

துயரர் : ஒன்று.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகாலை 03.00 மணிக்கு அந்த கைபேசி அழைப்பு வந்தது . மறுமுனையில் வெளியூரில் பணிபுரியும் எனது நண்பர். குரலில் மிகவும் பதட்டமும்  கூடவே என்னை தொந்தரவு செய்து விட்ட வருத்தமும் தெரிந்தது. அவரது 8 மாத மகனுக்கு இரண்டு நாட்களாக நல்ல சுரம் . பல் முளைக்கும் பருவம் தான் . பால் கூட சாப்பிட முடியவில்லை , வாந்தி எடுத்து விடுகிறான்.  அவரது வீடு எனது வீட்டிலிருந்து கொஞ்ச தூரமும் கூட . என்னால் உடனடியாக  அந்த நேரத்தில் போகவும் முடியவில்லை. கவலைப்படாதீர்கள் ! காலையில் சென்று பார்த்து விடுகிறேன் என்றேன்.


காலை 09.00 மணி. குழந்தை கட்டிலில் படுத்திருந்தான். இலேசான காய்ச்சல் தான் இருந்தது. இரண்டு நாட்களாக சரியான  உணவு இல்லாதால் சோர்ந்து காணப்பட்டான். நான் தொட்டவுடன் , சத்தத்துடன் ஒரே அழுகை. அருகில் இருந்த அவனது பாட்டியை நோக்கித் தாவிவிட்டான். இப்படித் தான் தம்பி தூக்கி வைத்துக்கொண்டே இருக்கச் சொல்கிறான். வேறென்ன ! சாமோமில்லா  தான்!! . முப்பது வீரியத்தில்  மூன்று உருண்டைகளை அவனது நாக்கில் போட்டேன். மேலும் ஒரு மூன்று உருண்டைகளை மடித்து அவர்கள் கையில் கொடுத்து , முன்னேன்றம் தோன்றாவிடில் மாலை மூன்று மணிக்கு கொடுக்குமாறு கூறினேன்.  மாலை இரண்டு மணிக்கு நண்பர் மீண்டும்  அழைத்தார். சார்!  பையன் பரவாயில்லை ஆனால்,  அவனால்  இன்னும் சாப்பிட இயலவில்லை . இரண்டாவது தடவையும் கொடுக்கச் சொன்னேன்.


மாலை 08.30 மணிக்கு நண்பரின் வீட்டுத் தொலைபேசியை அழைத்தேன். சார்! தம்பி நல்லா இருக்கிறான்! காய்ச்சல் இல்லை. பாலும் சாப்பிட்டான் , வாந்தியுமில்லை!. நண்பரின் துணைவியாரின் மகிழ்ச்சியை அந்தக் குரலிலே தெரிந்து கொண்டேன்.


துயரர்: இரண்டு.
சாமோமில்லாவா நீ ?

அந்த மூன்று வயது குழந்தைக்கு  கடுமையான காய்ச்சல். அவருடைய அம்மா சிறந்த அலோபதி மருத்துவர். எனது நெருங்கிய நண்பரின் மகளும் கூட. ஹோமியோபதியை படிக்க விரும்பிய அவரை அலோபதி  மருத்துவம் படிக்க வைத்த குடுபத்தினர் மீது அவருக்கு இன்னும் வருத்தம் இருக்கிறது. ஆனால் இப்போது அதற்கு பழி வாங்கி விட்டார். ஆம்!  குழந்தைக்கு ஹோமியோபதி மருத்துவம் தான். 


சில நாட்களுக்கு முன்னர் சளிப்பிடித்திருந்த குழந்தையை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். சளித்தொல்லை முற்றி கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. குழந்தை அங்கே இரண்டு நாள் கஷ்டப்பட்டுவிட்டது . அவரிடம் ஹோமியோபதி மருந்துகள் கைவசம் இல்லாதாதால் , பாராசிட்டமால் கொடுத்து வந்திருக்கிறார். குழந்தைக்கு இளைப்பு ஏற்பட ஆரம்பிக்கவே கொடைக்கானலில் இருந்து அவசரமாக திரும்ப வேண்டிய நிலை.  காரில் இருந்து திரும்பும் போதே , மிகச்சிறந்த அந்த ஹோமியோபதி  மருத்துவரிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் குறிகளை கூறி விபரங்கள் கேட்டு உள்ளார். அவர் , குறிகளின் அடிப்படையில் "ஸ்ட்ராமோனியம்-30"   கொடுக்குமாறு தெரிவித்திருக்கிறார். அப்போது இரவு 09.30 மணி . அவர்கள் வீடு திரும்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது. நான் ஆறுதல் கூறி , நீங்கள் இறங்கியவுடன் உங்கள் கையில்   "ஸ்ட்ராமோனியம்-30"   ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தேன். இரவு 10.45 மணிக்கு"ஸ்ட்ராமோனியம்-30" கொடுக்கப்பட்டது.


அக்குழந்தைக்கு காலை 09.00 மணிவரை காய்ச்சல் குறையவில்லை. காய்ச்சல் 104 டிகிரி. அந்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பெல்லடோன்னா-30 முயற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார். என்னிடம் மறுபடியும் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , மருந்து சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் காய்ச்சல் குறையலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும், வேறு மருந்து தேவைபட்டால் என்னை அழையுங்கள் என்றும் நம்பிக்கை ஊட்டினேன்.  மிக்கியமான வேலைப்பளு  காரணமாக மூன்று நாள் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை . 


அந்த மூன்று நாட்களிலும் மற்ற இரண்டு ஹோமியோபதி மருத்துவர்களைப் பார்த்து கல்கேரியா கார்ப்-30 ஒரு மருத்துவரிடமும் , பிரையோனியா உட்பட மற்றும் இரண்டு மருந்துகள்??? (கொடுக்கப்படவில்லை) மற்றொருவரிடமும் முயற்சி செய்துள்ளார். இறுதியாக நம்பிக்கை இழந்து 11/09/2015 ந் தேதி மாலை குழந்தைகள் நல மருத்துவரை (அலோபதி) அணுகி  ஆலோசைக்காக அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது எனது ஞாபகம் வரவே என்னை அழைத்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். ஹோமியோபதி மருத்துவர்களைத் தேடித் தேடித் களைத்துப் போன அவரின் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஹோமியோபதியின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பவில்லை. அவருக்கும் இருமல் வேறு இருந்தது அதனால் என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன்!


குழந்தை இப்போதும் காய்ச்சலுடன் அவர் மடியில் தான் படுத்திருந்தது.. இரண்டு நிமிடத்தில் அவரது தோளில் ஏறிப்படுத்துகொண்டது, ஒரே சினுங்கல் . நான் தொட்டவுடன் கோபத்துடன் ஒரு பார்வை. அவ்வளவு  தான்.  கடந்த இரண்டு நாளும் இப்படிதான் அங்கிள் ! என் தோளை விட்டு இறங்கவில்லை! ஆகா! நீ சாமோமில்லாவா? இந்தா பிடி சாமோமில்லா -200 ;  நான்கு உருண்டைகள் அவர் வாயில்  போட்டேன். குழந்தை ஆசையாகச் சுவைத்தது. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சாமோமில்லா தான் மருந்து என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும்  என் ஆலோசனை அப்போது அங்கே தேவைப்படவில்லை என்பது தான் என் நிலைப்பாடு.

அடுத்த நாள் காலை 10.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்தது  .  அங்கிள்! குழந்தைக்கு காய்ச்சல் இல்லை. நலம். எனக்கு நிம்மதி, நன்றி.

இதில் எனக்கு கிடைத்த பட்டறிவு :

முதல் மருத்துவர்:1. Violent Fever, 2. Child clings to those near him. :- STARM-30
இரண்டாவது மருத்துவர்: Anemic, Pale;Aversion, Milk;Bed Wetting:- CALC-30

ஆனால் சரியானது!
Irritable
Cross and Uncivil
Children Want to be CARRIED

Rx.CHAM-200;


இது தான் அக்குழந்தையை நலப்படுத்தியது மருந்து. எனக்கு ஹோமியோதியின் சிறப்பை நிருபித்த மகிழ்ச்சி கிடைத்தது உண்மையே.

No comments:

Post a Comment