Wednesday, 7 October 2015

ஆர்கனான் மணிமொழி-41


Much more frequent than the natural diseases associating with and complicating one another in the same body are the morbid complication resulting from the art of the ordinary practitioner, which the inappropriate medical treatment (the allopathic method) is apt to produce by the long-continued employment of unsuitable drugs. To the natural disease, which it is proposed to cure, there are then added, by the constant repetition of the unsuitable medical agent, the new, often very tedious, morbid conditions corresponding to the nature of this agent; these gradually coalesce with and complicate the chronic malady which is dissimilar to them (which they were unable to cure by similarity of action, that is, homoeopathically), adding to the old disease a new, dissimilar, artificial malady of a chronic nature, and thus give the patient a double in place of a single disease, that is to say, render him much worse and more difficult to cure, often quite incurable. Many of the cases for which advice is asked in medical journals, as also the records of other cases in medical writings, attest the truth of this. Of a similar character are the frequent cases in which the venereal chancrous disease, complicated especially with psora or with the venereal chancrous disease, complicated especially with psora or with dyscrasia of condylomatous gonorrhoea, is not cured by long-continued or frequently repeated treatment with large doses of unsuitable mercurial preparations, but assumes its place in the organism beside the chronic mercurial affection1 that has been in the meantime gradually developed, and thus along with it often forms a hideous monster of complicated disease (under the general name of masked venereal disease), which then, when not quite incurable, can only be transformed into health with the greatest difficulty.

1 For mercury, besides the morbid symptoms which by virtue of similarity can cure the venereal disease homoeopathically, has among its effects many others unlike those of syphilis, for instance, swelling and ulceration of bones, which, if it be employed in large doses, causes new maladies and commit great ravages in the body, especially when complicated with psora, as is so frequently the case.

ஒரே உடம்பில் இயற்கையாக ஏற்படும் நோய்கள் இன்னொரு நோயுடன் இணைந்து சிக்கலைத் தருவதைக்காட்டிலும் , சாதாரண மருத்துவர்கள் தரும் பொருத்தமற்ற மருத்துவச் சிகிச்சையாலும் ( அலோபதி முறையில்) , அவர்கள் தரும் மருந்துகளை நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவதாலும் அங்கே நோயின் பாதிப்புகள் சிக்கலாகிவிடுகின்ற நிலையை அடிக்கடி காணமுடிகிறது, இயற்கை நோயைக் குணபடுத்தும் எண்ணத்துடன் ஒவ்வாத (அல்லது பொருந்தாத)  மருந்துகளை தொடர்ந்தும், திரும்பத் திரும்பவும் கொடுப்பதால் அம்மருந்துப் பொருள்களின் தன்மைக்கு இணங்க பழைய இயற்கை நோயுடன் , ஒரு புதிய, மனச்சோர்வூட்டுகின்ற வகையில் நீடிக்கிற நோய்த்தன்மைகள் கூடுதலாக உண்டாகுகின்றன. இந்த நோய்த்தன்மைகள் படிப்படியாக ஓததன்மையில்லாத நீண்டகால நோயுடன் ஒன்றிணைந்து கொண்டு (ஒத்ததன்மையுடைய ஹோமியோபதி மருத்துவ முறையினால் குனமாக்கப்படாதவரை) ஒத்ததன்மையில்லாததும், செயற்கையானதும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இயல்புகளைக் கொண்டதுமான ஒரு புதிய நோயையும்  சேர்த்துக்கொண்டு , அந்த நோயாளிக்கு ஒரு நோயிற்குப் பதிலாக இரண்டு மடங்கு நோயைக் கொடுத்து , அதனால் அவருடைய உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்து அவரது நோயைக் குணமாக்குவதற்கு சிரமத்தைக் கொடுக்கிறது, அவ்வப்போது குணப்படுத்தவும் இயலாதவாறு ஆகி விடுகிறது. மருத்துவப் பத்திரிக்கைகளில் கேட்கப்படும் பல நோயாளிக்களுக்கான அறிவுரைகளும் , வெளியிடப்படும் பிற மருத்துவக்கட்டுரைகளும் இந்த உண்மையைத்தான் உறுதிப்படுத்துகின்றன . இதற்குச் சான்றாக , பால்வினை நோயைக் குணப்படுத்தும் பல நோய் வரலாறுகளில் , மேகநோயும் ( சிற்றின்பத்துக்குரிய கலவியினால் தோன்றுகின்ற ) , சொறி,சிரங்கு போன்ற (சோரா) தோல் நோய்களும் இணைந்து சிக்கலாகியோ , அல்லது மேகவெட்டை நோயினால் பிறப்புறுப்பைச் சுற்றி வளரும் துர்சதை வளர்ச்சி போன்ற நோயுடன் இணைந்த நிலையிலோ அந்த நோயாளிக்கு நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தும் , அடிக்கடியும்,திரும்பத் திரும்பவும் அதிக அளவில் கொடுக்கப்படும் ஒவ்வாத பாதரச மருந்துத்தயாரிப்புகளால் அந்நோய்கள் குனமாக்கப்படுவதில்லை.  ஆனால் அம்மருந்துகளால் அந்த நோய்கள் குணமடையாமல் நோயாளியின் உடலில் தங்கி தங்களுக்கு உரிய இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு படிப்படியாக அங்கே நீண்டகால பாதரசபாதிப்பு நோயை உருவாக்கி , அத்துடன் மறைந்திருந்து செயல்படும் கொடிய பூதகரமான பெரும் சிக்கலையுடைய ஒரு நோயாக மாறி விடுகிறது( மூடிமறைக்கப்பட்ட பால்வினைநோய் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது) . அதன் பிறகு அதைக் குணமாக்க முடியாத நிலை ஏற்பட்டு , மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகே குணப்படுத்த இயலும். 

அடிக்குறிப்பு -1 


பாதரசமானது , நோய்சார்ந்த குறிகளைத் தவிர, ஒத்ததன்மையோடு இருக்கிறது என்ற காரணத்தால் ஹோமியோபதி முறைப்படி மேககிரந்தி நோயினை குணமாக்குவதுடன், அது மேகப்புண்கள் ( சிபிலிஸ்) போல்  இல்லாத வேறு பல பாதிப்புகளையும் , உதாரணத்திற்கு எலும்புகளில் வீக்கத்தையும் மற்றும் புண்களையும் உருவாக்குவதுடன் , அதை அதிக அளவிலான மருந்தாகப் பயன்படுத்தும்போது, குறிப்பாக சோரா நச்சுத்தன்மையுடன் சேர்ந்து சிக்கலாகும்போது , வேறு சில நோய்களும் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதோடு உடலில் பல அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment