No!
Two diseases, differing, it is true, in kind1 but very similar in their
phenomena and effects and in the sufferings and symptoms they severally
produce, invariably annihilate one another whenever they meet together in the
organism; the stronger disease namely, annihilates the weaker, and that for
this simple reason, because the stronger morbific power when it invades the
system, by reason of its similarity of action involves precisely the same part
of the organism that were previously affected by the weaker morbid irritation,
which, consequently, can no longer act on these parts, but is extinguished2,
or (in other words), the new similar but stronger morbific potency controls the
feelings of the patient and hence the life principle on account of its
peculiarity, can no longer feel the weaker similar which becomes extinguished -
exists no longer - for it was never anything material, but a dynamic -
spirit-like - (conceptual) affection. The life principle henceforth is affected
only and this but temporarily by the new, similar but stronger morbific
potency.
1
Vide, supra, § 26, note.
2
Just as the image of a lamp's flame is rapidly overpowered and effaced from our
retina by the stronger sunbeam impinging on the eye.
இல்லை. இரண்டு நோய்களும் , உண்மையில், நோய்த்தன்மையிலே1 மாறுபட்டதாக இருந்தாலும் , புலன்களால் உணரத்தக்கவையும் மற்றும் நோய்பாதிப்பினால் ஏற்படும் விளைவுகளும்
மற்றும் துன்பங்களும் மற்றும் அவைகள்
உருவாக்கும் கடுமையான குறிகளும் மிகவும் ஒத்ததன்மையில் இருந்தாலும் , இரண்டும் ஒரே உடலில்
ஒன்றோடொன்று இணைந்து சந்திக்கும் போது , தவறாமல் ஒன்றை மற்றொன்று
அழித்தொழித்து விடுகிறது. அதாவது அவ்விரண்டில்
அதிக வலிமையான நோய் , பலவீனமான பழைய நோயைத் தவறாமல் அழித்தொழித்து
விடுகிறது. அதற்க்கான காரணம் மிக
எளிமையானது. ஏனென்றால் வலிமை குறைந்த பழைய நோயுடன் ஒத்தசெயல்பாடு உள்ளதும் அதைவிட
வலிமைமிக்கதாகவும் உள்ள புதியநோய் நோயாளியின் உடலில் எந்தந்த உறுப்புகளையும் , உறுப்பு மண்டலங்களையும் பாதித்திருந்ததோ அந்தந்த உறுப்புகளுக்குள்ளும், உறுப்பு
மண்டலங்களுக்குள்ளும் புகுந்து தாக்குகிறது. அதன் பின் விளைவாக பலவீனமான பழைய நோய் அவ்விடங்களைத்
துன்புறுத்த இயலாமல் துடைத்தழிக்கப்படுகிறது 2 . அல்லது ( வேறு வகையில் கூறுவதென்றால் )
ஒத்ததும், வலிமையானதுமான புதிய நோய், தன்னுடைய நோய்க்குறிகளை
உருவாக்கும் ஆற்றலினால் நோயாளியின் உணர்வுகளைத் கட்டுப்படுத்திக் கொள்கிறது. அதன்பிறகு உயிர்
முதலாற்றலையும் தன்னுடைய தனித்துவமான பண்புகளின் மூலம் தனது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருகிறது. அதனால் ஒத்ததும் , பலவீனமானதும் , துடைத்தழிக்கப்பட்டதுமான அந்த பழைய நோயின் பாதிப்பு ஒருபோதும் பருப்பொருள்
வடிவத்தில் இல்லாமல் இயக்க ஆற்றலுடன் , ஆவி வடிவத்தில் ( கருத்துருவத்தில் ) இருந்துள்ளது. அதனால் தான், ஒத்ததும், வலிமையானதுமான புதிய நோயின் ஆற்றலினால் தற்காலிகமாக
பாதிக்கக்கூடியவகையில் உயிர்முதலாற்றல் இருக்கிறது.
அடிக்குறிப்பு -1 : மணிமொழி 26 மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அடிக்குறிப்பு -2
இது , சூரியனின் ஒளிக்கதிர் நம் கண்களின் மீது விரைவாக மோதித் தாக்குவதால் , ஒரு விளக்கினுடைய சுடரொளி
வடிவம் விரைவாக மறைக்கப்பட்டு , அது நமது விழித்திரையில்
இருந்து மறையச் செய்வதைப் போன்றதாகும்.
No comments:
Post a Comment