§
38
II
Or
the new dissimilar disease is the stronger. In this case the disease under
which the patient originally labored, being the weaker, will be kept back and
suspended by the accession of the stronger one, until the latter shall have run
its course or been cured, and then the old one reappears uncured. Two children
affected with a kind of epilepsy remained free from epileptic attacks after
infection with ringworm (tinea) but as soon as the eruption on the head was
gone the epilepsy returned just as before, as Tulpius1 observed. The
itch, as Schopf2 saw, disappeared on the occurrence of the scurvy, but
after the cure of the latter it again broke out. So, also the pulmonary
phthisis remained stationary when the patient was attacked by a violent typhus,
but went on again after the latter had run its course3 If mania occur in
a consumptive patient, the phthisis with all its symptoms is removed by the
former; but if that go off, the phthisis returns immediately and proves
fatal4 When measles and smallpox are prevalent at the same time, and both
attack the same child, the measles that had already broken out is generally
checked by the smallpox that came somewhat later; nor does the measles resume
its course until after the cure of the smallpox; but it not infrequently
happens that the inoculated smallpox is suspended for four days by the
supervention of the measles, as observed by Manget5 after the
desquamation of which the smallpox completes its course. Even when the
inoculation of the smallpox had taken effect for six days, and the measles then
broke out, the inflammation of the inoculation remained stationary and the
smallpox did not ensue until the measles had completed its regular course of seven
days6 In an epidemic of measles, that disease attacked many individuals on
the fourth or fifth day after the inoculation of smallpox and prevented the
development of the smallpox until it had completed its own course, whereupon
the smallpox appeared and proceeded regularly to its termination7 The
true, smooth, erysipelatous-looking scarlatina of Sydenham, with sore throat,
was checked on the fourth day by the eruption of cow-pox, which ran its regular
course, and not till it was ended did the scarlatina again establish itself;
but on another occasion, as both diseases seem to be of equal strength, the
cow-pox was suspended on the eighth day by the supervention of the true, smooth
scarlatina of Sydenham,8 and the red areola of the former disappeared
until the scarlatina was gone, wherein the cow-pox immediately resumed its course,
and went on its regular termination 9 The measles suspended the cow-pox;
on the eighth day, when the cow-pox had nearly attained its climax, the measles
broke out; the cow-pox now remained stationary, and did not resume and complete
its course until the desquamation of the measles, had taken place, so that on
the sixteenth day it presented the appearance it otherwise would have shown on
the tenth day, as Kortum10 observed.
Even
after the measles had broken out the cow-pox inoculation took effect, but did
not run its course until these measles had disappeared, as Kortum likewise witnessed.11
I
myself saw the mumps (angina parotidea) immediately disappear when the cow-pox
inoculation had taken effect and had nearly attained its height; it was not
until the complete termination of the cow-pox and the disappearance of its red
areola that this febrile tumefaction of the parotid and submaxillary glands,
that is caused by a peculiar miasm, reappeared and ran its regular course of
seven days.
And
thus it is with all dissimilar disease; the stronger suspends the weaker (when
they do not complicate one another, which is seldom the case with acute
disease), but they never cure one another.
1 Obs., lib. I,
obs. 8.
2 In Hufeland's
Journal, xv, 2.
3 Chevalier, in
Hufeland's Neuesten Annalen der franzosichen Heikunde, ii, p.192.
4 Mania phthisi
superveniens eam cum omnibus suis phaenomenis auffert, verum mox redit phthisis
et occidit, abeunte mania. Reil Memorab., fasc. iii, v, p.171.
5 In the Edinb.
Med. Comment., pt. i, 1.
6 John Hunter, On
the veneral Disease, p.5.
7 Rainey, in the
Edinb. Med. Comment., iii, p.480.
8 Very accurately
described by Withering and Plenciz, but differing greatly from the purpura (or
Roodvonk), which is often erroneously denominated scarlet fever. It is only of
late year that the two, which were originally very different diseases, have
come to resemble each other in their symptoms.
9 Jenner, in
Medicinische Annalen, August, 1800, p.747.
10 In Hufeland's
Journal der praktischen Arzneikunde, xx, 3, p.50.
11 Loc. cit.
அல்லது புதியதாக வரும் மாறுபட்ட (ஒற்றுமையில்லாத) இயற்கை நோய் அதிக
பலம் பொருந்தியதாக இருக்கும். நோயாளியிடம் முதலில் தோன்றி துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிற நோய் பலவீனமுடையதாக இருந்தால், பலம் பொருந்திய புதிய நோய்
தலைமைப் பொறுப்பேற்றவுடன் அந்நோய் பின்னுக்குத் தள்ளப்பட்டு சில காலத்திற்கு
நீக்கி வைக்கப்படுகிறது. புதிய நோய் முழுவீச்சில் ஓடி ஆடி அடங்கியபின் அல்லது
குணமானவுடன் , உள்ளுறைந்திருக்கும்
குணமடையாத பழைய நோய் மறுபடியும் வெளிப்படுகிறது. வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு
குழந்தைகளுக்கு தலையில் படர்தாமரை நோய் ( உடல் மேல் பரவும் பூஞ்சக்காலான்கள்)
வந்தவுடன் வலிப்பு வருவது நின்று விட்டது , ஆனால் படர்தாமரைநோய் குணமானவுடன் முன்பிருந்தவாறு
வலிப்புகள் வர ஆரம்பித்துவிட்டன என்று மரு. துல்பியஸ் தெரிவித்துள்ளார். சொறி,சிரங்குகள் இருந்தவர்களுக்கு
ஊட்டக்குறைவு கோளாறு நோய் தோன்றியவுடன் அந்நோய் மறைந்துவிட்டது. ஆனால்
ஊட்டக்குறைவு கோளாறுகள் குணமானவுடன் அந்த சொறி, சிரங்குகள் திரும்பவும்
தோன்றியதை மரு.ஸ்காப் பார்த்திருக்கிறார்.
நுரையீரல் காசநோய்
இருந்தவருக்கு கடுமையான பெருவாரிக்காய்ச்சல் தோன்றியது. அந்தக் காய்ச்சல் இருந்த
வரையில் உள்ளடங்கி இயங்காமல் இருந்த நுரையீரல் காசநோய் , பெருவாரிக்காய்ச்சல் குணமான பின்பு திரும்பவும் நடமாடத் துவங்கியது. காசநோய் (எலும்புருக்கி நோய்) உள்ளவருக்கு
மூளைக்கோளாறு தோன்றினால் , மூளைக்கோளாறு
சரியாகும் வரை காசநோய் உள்ளே மறைந்திருந்து , பின்பு மறுபடியும் தோன்றி , மிகக் கடுமையாகத் தாக்கி இறுதியில்
மரணத்தைக் கொடுத்துவிடும். தட்டம்மையும் (சின்னம்மை )
பெரியம்மையும் சேர்ந்தாற்ப்போல் தோன்றும் காலங்களில் இரண்டு
நோய்களும் ஒரே குழந்தையை ஒரே நேரத்தில் தாக்கும் பொழுது , முதலில் தட்டம்மையும் பின்னர் பெரியம்மையும் தோன்றினால் தட்டம்மை அடங்கிப்போய்
பெரியம்மை குணமான பிறகே வெளி வருகிறது. ஆனால் மரு.மான்கெட்
கூறியவாறு பெரியம்மை நோய்த்தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் அது நான்கு நாட்கள்
தடுத்துநிறுத்தப்பட்டு தட்டம்மை ஆடி அடங்கியபின் மீண்டும் பெரியம்மைப்பாதிப்பு
தோன்றி தன் தாக்கத்தை உண்டாக்குவதும் , பிறகு செதிளுரிந்து
முழுமையாக குணமாவதும் அவ்வப்போது காணப்படுகிறது.
பெரியம்மை தடுப்பூசி போட்டு
ஆறு நாட்களுக்கு அதன் விளைவை எற்படுத்திய பிறகு தட்டம்மை தோன்றுமாயின் , அது ஏழு நாட்களுக்கு முழுமையாகச் செயலாற்றி அடங்கும் வரை பெரியம்மைத்
தடுப்பூசியின் அழற்சியும் அதே நிலையில் நிறுத்தப்பட்டு அதன் பின்னரே பெரியம்மையின்
பாதிப்பு தலை தூக்குகிறது. தட்டம்மை பெருவாரியாகத் தொற்றிப்பரவும்
காலங்களில் பெரியம்மை நோய்த்தடுப்பூசி போட்டுக்கொண்ட பல மனிதர்களிடம் நான்கு
அல்லது ஐந்து நாட்கள் வரை பெரியம்மையின் பாதிப்பு ஏற்படாமல் தட்டம்மையின் பாதிப்பு
முழுவதும் நீங்கிய பின்னரே பெரியம்மைத் தடுப்பூசியின் விளைவு வெளிப்பட்டு
முடிவிற்கு வந்துள்ளது.
உண்மையாக கூறுவதென்றால் , மெல்லிழைவான அக்கி நோய் போன்றதும் , தொண்டைப் புண்ணுடனும் கூடிய விஷத்தன்மையான செங்காய்ச்சல் சைடன்காம் நகரில் பாதித்திருந்தபோது நான்காவது நாளில் சரும எழுச்சியுடன் கூடிய மாட்டம்மை அல்லது கோமாரிநோய் தோன்றியவுடன் செங்காய்ச்சல் தடுத்து நிறுத்தப்பட்டு , கோமாரி நோய் செயலாற்றி முடித்தவுடன் செங்காய்ச்சல் மீண்டும் எழுந்தது. ஆனால் , வேறொரு சூழ்நிலையில் இந்த இரண்டு நோய்களும் சமவலிமையுடன் காணப்பட்டபோது கோமாரிநோய் அதனுடைய எட்டாவது நாளில் செங்காய்ச்சலினால் தடுக்கப்பட்டு அந்நோய் மறைந்தவுடன் மீண்டும் முழுமையாகத் தோன்றி மறைந்துள்ளது. மற்றும் கோமாரிநோய்க் கொப்பளத்தின் செம்மைநிறம் , செங்காய்ச்சல் தாக்குதல் இருந்தவரை மறைந்திருந்து பின்னர் கோமாரிநோய் வெளிப்பட்டவுடன் திரும்பவும் தோன்றி குணமாகி முடிவுக்கு வந்துள்ளது. அதே போல் கோமாரிநோய் கொப்பளங்கள் தோன்றிய எட்டாவது நாளில் அதனுடைய உச்சநிலையை அடைந்து முடிவுறும் தருவாயில் இருக்கும் பொழுது தட்டம்மை வெடித்துக் கிளம்பியதால் கோமாரிநோய் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு தட்டம்மை முழுவதும் குணமாகி செதில் உறிந்து வெளியேறிய பின்னர் பதினாறாவது நாளில் கோமாரிநோய் திரும்பவும் தலைதூக்கி அதன்பிறகு குணமடைந்துள்ளது. இல்லாவிடின் பத்தாவது நாளிலேயே கோமாரிநோய் குணமாக்கப்பட்டிருக்கும் என்று மரு. கோர்டும் கவனித்துக் கூறியுள்ளார்.
தட்டம்மை பாதிப்பு தொடங்கிய
பிறகு கோமாரிநோய்க்கான நோய்தடுப்பூசி போட்டவுடன் அதன் விளைவுகள் தட்டம்மை நீங்கும்
வரை அடங்கியிருந்து அதன் பின்னரே வெளிப்பட்டது என்பதையும் மரு, கோர்ட்டும் உறுதிப்படுத்துகிறார்.
கோமாரி நோய் தடுப்பூசியினால்
கொப்புளப்பாதிப்பு தோன்றி அதன் உச்சத்தை
அடைந்தபோது அதற்கு முன்பிருந்த புட்டாளம்மை அல்லது பொன்னுக்குவீங்கி ( உமிழ்நீர்
கோளவீக்கம்) உடனே மறைந்து விட்டதையும் , கோமாரி நோய் முற்றிலும் நீங்கி அதன்
செம்புள்ளிகளும் மறைந்த பிறகே புட்டாளம்மை தோன்றிக் காய்ச்சலுடன் காதுகளுக்கு
பின்புறம் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கமும் மற்றும் கீழ்த்தாடை
சுரப்பிகளிலும் வீக்கம் ஏற்பட்டு , ஒரு வினோதமான மியாசத்தினால் ( நோய் மூலம் ) திரும்பவும்
தோன்றி அதற்குரிய ஏழு நாட்கள் நீடித்திருந்ததையும் நான் ( ஹானிமன் )
பார்த்திருக்கிறேன்.
எனவே, மாறுபட்ட அல்லது ஓததன்மையில்லாத
நோய்கள் இங்கு கூறிய முறையிலே தோன்றுகிறது என்பதையும், வலிமையானது
பலவீனமானதை விலக்கி வைக்கிறது என்பதையும் (பொதுவாக அவைகள் ஒன்றுக்கொன்று
சிக்கல்படுத்திக் கொள்வதில்லை என்றாலும் திடீர் நோயின் போது அத்தகைய சிக்கலைத் தோற்றுவிக்கும் நிலையும்
எப்பொழுதாவது ஏற்படுவதுண்டு) ஆனால் அவைகள் ஒன்றையொன்று
எப்போதும் குணப்படுத்துவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment