மருத்துவர் வில்லியம் போயரிக்
(William G.
Boericke )
பிறப்பு:
25/10/1849
இறப்பு:01/04/1929
மாமேதை ஹானிமனை அடியொற்றி ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய
பல முன்னோடிகளை நாம் கண்டிருந்தாலும் மருத்துவர் வில்லியம் போயரிக்கின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே நம் சிந்தனைகளில் உலா வரும். ஆம்!. மாமேதை ஹானிமனின்
" ORGANAON OF MEDICINE” என்ற ஹோமியோபதி தத்துவங்களை உள்ளடக்கிய புத்தகத்தின் ஆறாம் பாதிப்பை வெளிக் கொணர்ந்ததில் வில்லியம் போயரிக்கின் பங்கு மகத்தானது.
மாமேதை ஹானிமனின் மறைவிற்குப் பிறகு அவரால் ஆறாவது முறையாக திருத்தப்பட்ட
" ORGANAON OF MEDICINE " நூலின் கையெழுத்துப் பிரதி அவரது இரண்டாவது மனைவி மேடம் மெலானியால் வெளியிடப்படாமல்
முடக்கப்பட்டது. பின்னர், மேடம் மெலானியின் மறைவிற்குப் பிறகு அக்கையெழுத்துப் பிரதி போயின்னிங்ஹாசனின் குடும்பத்தினரைச்
சென்றடைந்தது . அவர்களும் ஆர்கனான் ஆறாம்பதிப்பை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
அவர்களிடம் அப்பிரதி இருப்பதை அறிந்துகொண்ட வில்லியம் போயரிக் , அதை வெளியிடுவதற்கு
இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், பலன் எதுவும் கிட்டவில்லை. பின்னர், முதல் உலகப் போரின் விளைவாக தம் சொத்துக்களையெல்லாம் இழந்து தவித்த போயின்னிங்ஹாசனின் குடும்பத்தினருக்கு ஆர்கனான் பிரதியைக் கொடுத்து பணம் பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
ஆம்! வில்லியம் போயரிக்கின் இருபது ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆர்கனான் ஆறாம் பதிப்பின் கையெழுத்துப் பிரதியை அவருக்கு விற்க போயின்னிங்ஹாசன்
குடும்பத்தினர் முன் வந்தனர், இதற்கு பேருதவியாக இருந்தவர் போயரிக்கின் நண்பர் மருத்துவர் ரிச்சர்டு ஹெகல் என்பதை இங்கே கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டியதுள்ளது.
அவரே ஆர்கனானின் ஆறாம் பதிப்பை முதலில் ஜெர்மானிய மொழியில் கி.பி. 1921 இல் வெளியிட்டார். பின்னர் கி.பி. 1922 இல் வில்லியம் போயரிக் அவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஒரு செயலுக்காகவே மருத்துவர் வில்லியம் போயரிக் அவர்களுக்கு ஹோமியோபதி உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய நாட்டில் பிறந்த மருத்துவர் வில்லியம் போயரிக் அங்கேயுள்ள " வியன்னா மருத்துவப்பள்ளியில் " தமது
மருத்துவப்படிப்பைத் தொடங்கினார். முதலாம் ஆண்டு படிப்பு முடிந்த பிறகு சூழ்நிலையின் காரணமாக போயரிக்கின் குடும்பம் அமெரிக்காவிற்கு
குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அங்கே, பிலடெல்பியாவில்
உள்ள ஹானிமன் மருத்துவக் கல்லூரியில் தமது மருத்துவப் பட்டப்படிப்பை தொடர்ந்து படித்து கி.பி. 1880 ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார். பின்னர் சான்பிரான்சிஸ்க்கோ நகருக்கு தமது குடியிருப்பை மாற்றிக் கொண்ட போயரிக் அங்கேயே
50 ஆண்டுகள் மருத்துவச் சேவையினைச் செய்தார்.
கி.பி 1881 இல்
, சான்பிரான்சிஸ்க்கோ நகரில் பசிபிக் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் , ஹானிமன் மருத்துவமனையும்
உருவாக்க பெரிதும் காரணமாக இருந்தார் போயரிக். பின்னர் , இக்கல்லூரி கலிபோர்னியா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் தான் வில்லியம் போயரிக் ஹோமியோபதி மருந்துகாண் ஏடு மற்றும் சிகிச்சைக்குறிப்புகள் பற்றி போதிக்கும் பேராசிரியராக ஏறத்தாழ
30 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் மிகச் சிறந்த பேராசியராக திகழ்ந்தவர் என்பதற்கு சான்றாக கி.பி. 1901 இல் அவர் வெளியிட்ட “ POCKET
MANUAL OF HOMEOPATHY MATERIA MEDICA “ என்ற
புத்தகம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அந்த புத்தகம் கி.பி. 1922 க்குள் ஒன்பது பதிப்புக்கள் வெளிவந்தது என்றால் அதன் சிறப்பினை நாம் புரிந்து கொள்ள முடியும். பின்னர் வில்லியம் போயரிக்கின் சகோதரர் ஆஸ்கார் போயரிக் அவர்களின் முயற்சியால் மருந்துகாண் ஏடு அந்தப்புத்தகத்துடன் கி.பி. 1906 இல் இணைக்கப்பட்டது.
மருத்துவர் வில்லியம் போயரிக் எழுதிய நூல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.
THE TWELEVE
TISSUE REMEDIES OF DR.SCHUSSLER- WITH
W.A.DEWEY-1888
2.
A COMPEND OF THE
PRINCIPLES OF HOMEOPATHY AS TAUGHT BY HAHNEMANN-1896
3. Pocket Manual of Homeopathic Materia Medica-1901
4. The Management and Care of Children – Including Homeopathic Treatment-1903
5. The Care, Feeding and Homeopathic Treatment of Children- with
dr.runyan.-1903
6. HOMEOPATHY A SPECIALITY IN THERAPEUTIC – 1908
7. ORGANON OF MEDICINE –With tafel- 1922
ஹோமியோபதியின் மூலம் இவ்வுலகிற்கு அரும்பணியாற்றிய மருத்துவர் வில்லியம் போயரிக் மாரடைப்பின் காரணமாக கி.பி. 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். மரணத்தால், அம்மேதையின் பூதவுடலைத் தான் மறைக்க முடிந்ததே தவிர, அவருடைய புகழை அல்ல. அவரின் பட்டறிவினால் உருவான மருந்தியல் களஞ்சியத்தின் மூலம் ஆயிரமாயிரம் நோயாளிகள் நலமடைந்து வருவது வில்லியம் போயரிக்கின் கொடையே!.
SOURCE:
www.homeoint.org
(இக்கட்டுரை ஹோமியோ தோழன் நவம்பர்-2007 இதழில் எழுதியது).
Sir 200 potency daily two times edukurathu safe ha
ReplyDeleteSingle dose na enna sir multiple dose na enna konjam sollunga apparam oru medicine work aayuruchuna namma stop panniralama illa disease fulla cure aana than medicine stop pannanuma
ReplyDelete