மருத்துவர் ஜே.எச்.கிளார்க்
(JOHN HENRY CLARKE)
இறப்பு : 24/11/1931
இங்கிலாந்து நாடு
ஹோமியோபதி உலகிற்கு தந்த மிகச் சிறந்த மருத்துவர் ஜே
. எச். கிளார்க் .
இவர் கி.பி. 1853 இல் பிறந்தார். அளப்பரிய ஆற்றலும் , மதி நுட்பமும் கொண்ட இவரைச் சந்தித்த
ஒவ்வொருவரும் இவருடையத் தனித்தன்மையையும் , மனித நேயத்தையும் மறக்கவே மாட்டார்கள்.
இவர் கி.பி. 1875 இல் எடின்பரோ ( EDINBURGH) பல்கலைக்கழகத்தில் M.B.C.M., பட்டம் பெற்றார். மேலும் தொடர்ந்து படித்த மருத்துவர்
கிளார்க் கி.பி. 1877 இல் பட்டத்தையும் பெற்றார். தமது சிறப்பான மருத்துவச் சேவையின் மூலம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.
1.
CATARRH,
COLDS AND GRIPPE.
2.
CHOLERA,
DIARRHEA AND DYSCENTERY.
3.
CONSTITUTIONAL
MEDICINES.
4.
DECACHORDS.
5.
DISEASES OF THE HEART ABD ARTERIES.
6.
GRAND
CHARACTERISTICS OF MATERIA MEDICA.
7.
DICTIONARY
OF MATERIA MEDICA.
8.
CLINICAL
REPERTORY.
9.
GUNPOWDER
AS A WAR REMEDY.
10.
HAEMORROIDS
AND HABITUAL CONSTIPATION.
11.
HOMEOPATHY
EXPLAINED.
12.
INDIGESTION,
ITS CAUSES AND CURE.
13.
NON-SURGICAL
TREATMENT OF DISEASES OF GLANDS.
14.
ORGANON
OF MEDICINE
15.
RADIUM
AS AN INTERNAL REMEDY.
16.
REVOLUTION
IN HOMEOPATHY.
17.
THERAPEUTICS
OF CANCER.
18.
WHOOPING
COUGH.
19.
THE
PRESCRIBER.
இவரது படைப்புகளில்
சில புத்தகங்கள் ஸ்பானிய மற்றும் ஜெர்மானிய மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இவரது எழுத்தாற்றலும்
விஞ்ஞான நுட்பமும் ஹோமியோபதி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி உள்ளதென்றால் அது மிகையாகாது.
குறிப்பாக, மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட
இவரது “DICTIONARY OF MATERIA MEDICA” என்ற மருந்தியல் களஞ்சியம் உலகம் முழுவதும்
உள்ள ஹோமியோபதியர்களை மிகவும் கவர்ந்தது.
மாமேதை ஹானிமனின்
படைப்புகளுக்குப் பிறகு , ஹோமியோபதி உலகம் கண்ட முகச் சிறந்த புத்தகங்களாக மருத்துவர்
ஜே.எச்.கிளார்க்கின் " “DICTIONARY OF MATERIA MEDICA” என்ற மருந்தியல் களஞ்சியமும்,
மருத்துவர் ஜே.டி. கெண்ட் ( AD 1849-1916) எழுதிய” REPERTORY OF MATERIA MEDICA” என்ற மருந்துகாண் ஏடும் போற்றப்படுகின்றன.
இங்கிலாந்தில்
ஜே.எச்.கிளார்க் என்றால் அமெரிக்காவிற்கு ஜே.டி. கெண்ட் என்று இருவரையும் ஒப்பிட்டு
மகிழ்ந்தனர் உலக ஹோமியோபதி மருத்துவர்கள்.
No comments:
Post a Comment