மருத்துவர் தீவே வில்லிஸ் அலோன்ஸோ
(DR.DEWEY WILLIS ALONZO ., MD)
பிறப்பு: 25/10/1858
இறப்பு: 01/04/1938
மருத்துவர் தீவே தனது
பள்ளிப்படிப்பை மிடில்பரியிலுள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் 1872 ஆம் ஆண்டு முடித்தார். நியூயார்க்கிலுள்ள பேக்கார்ட்ஸ்
வர்த்தகக் கல்லூரியில் ( PACKARD’S BUSINESS COLLEGE) தனது பட்டப்படிப்பை
முடித்தார். பின்பு நியூயார்க் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்
பட்டப்படிப்பை 1880 இல் முடித்து பட்டம் பெற்றார்.
இவர் 1881 மற்றும் 1882 ஆம் ஆண்டுகளை தமது பட்ட மேற்படிப்பிற்காக பெர்லின்
( BERLIN) , ஹெப்ட்டில்பர்க்
(HEIDLEBURG) , வியன்னா( VIENNA) , பாரிஸ் (PARIS) மற்றும் இலண்டனில் (LONDON) கழித்தார்.
இவர் மருத்துவராகவும்
, கட்டுரையாளராகவும் , தி மெடிக்கல் செஞ்சுரி ( THE MEDICAL CENTURY) என்ற பத்திரிக்கையின்
ஆசிரியராகவும் மற்றும் உரிமையாளராகவும் விளங்கியதால் இவருடைய சேவை அட்லாண்டிக் கடலிலிருந்து பசிபிக் கடல் வரை விரிவடைந்தது. 1880 ஆம்
ஆண்டு நியூயார்க்கில் உள்ள “ WARDS ISLAND HOMEOPATHIC HOSPITAL” இல் தங்கி மருத்துவம்
செய்யும் மருத்துவராக பணியாற்றினார். அடுத்த இரண்டு ஆண்டுகளை ஒரு வெளிநாடுகளில்
கழித்தார் . 1884 முதல் 1888 வரை " ஹானிமன் மெடிக்கல் காலேஜ் ஆப் தி பசிபிக்" கில் உடலியல் கற்றுத் தரும் பேராசிரியராகவும் ,
1888 முதல் 1892 வரை மருந்தியல் களஞ்சியம் நடத்தும் பேராசிரியராகவும்
வேலை பார்த்தார்.
இதே காலகட்டத்தில்
" கலிபோர்னியா ஹோமியோபதி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் விளங்கினார்.
1893 மற்றும் 1894 ஆண்டில் நியூயார்க்கிலுள்ள " மெட்ரோபாலிட்டன்
போஸ்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மெடிசின் ( METROPOLITAN POST GRADUATE SCHOOL OF
MEDICINE) “கல்லூரியில் மருந்தியல் களஞ்சியம் கற்றுத் தந்தார். 1896 ஆம் ஆண்டு “ UNIVERSITY OF MICHIGAN” இல் இதே வேலையில்
சேர்ந்தார். 1900 இல் மிச்சிகன் இல் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் பேராசிரியராகவும்
பணிபுரிந்துள்ளார். இவ்வாறாக , தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை ஹோமியோபதிக்காக அர்பணித்துக்
கொண்டார்.
இவர் மருத்துவர் வில்லியம் போயரிக் உடன் இணைந்து " TWELVE TISSUE REMEDIES” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது தவிர,
1. Essentials of homeopathic Materia Medica.
2. Essential of homeopathic Therapeutics
3. Practical homeopathic Therapeutics
ஆகிய நூல்களையும்
ஹோமியோபதி உலகிற்கு அர்பணித்துள்ளார். இதில் குறிப்பாக “ Practical homeopathic Therapeutics” என்ற நூல் நோயாளிக்கு சரியான
ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்வதற்கு நமக்கு
வழிகாட்டுகிறது என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment