§ 40
III.
Or the new disease, after having long acted on the organism, at length joins
the old one that is dissimilar to it, and forms with it a complex disease, so
that each of them occupies a particular locality in the organism, namely, the
organs peculiarly adapted for it, and, as it were, only the place specially
belonging to it, while it leaves the rest to the other disease that is
dissimilar to it. Thus a syphilitic patient may become psoric, and vice versa.
As two disease dissimilar to each other, they cannot remove, cannot cure one
another. At first the venereal symptoms are kept in abeyance and suspended when
the psoric eruption begins to appear; in course of time, however (as the
syphilis is at least as strong as the psora), the two join together 1
that is, each involves those parts of the organism only which are most adapted
for it, and the patient is thereby rendered more diseased and more difficult to
cure.
When
two dissimilar acute infectious diseases meet, as, for example, smallpox and
measles, the one usually suspends the other, as has been before observed; yet
there have also been severe epidemics of this kind, where, in rare cases, two
dissimilar acute diseases occurred simultaneously in one and the same body, and
for a short time combined, as it were, with each other. During an epidemic, in
which smallpox and measles were prevalent at the same time, among three hundred
cases (in which these diseases avoided or suspended one another, and measles
attacked patients twenty days after the smallpox broke out, the smallpox,
however, from seventeen to eighteen days after the appearance of the measles,
so that the first disease had previously completed its regular course) there
was yet one single case in which P. Russell2 met with both these
dissimilar diseases in one person at the same time. Rainey3 witnessed
the simultaneous occurrence of smallpox and measles in two girls. J.
Maurice4, in his whole practice, only observed two such cases. Similar
cases are to be found in Ettmuller's 5 works, and in the writings of a
few others. Zencker6 saw cow-pox run its regular course along
with measles and along with purpura.
The
cow-pox went on its course undisturbed during a mercurial treatment for
syphilis, as Jenner saw.
Foot notes:
1 From careful
experiments and cures of complex diseases of this kind, I am now firmly
convinced that no real amalgamation of the two takes place, but that in such
cases the one exists in the organism besides the other only, each in pairs that
are adapted for it, and their cure will be completely effected by a judicious
alternation of the best mercurial preparation, with the remedies specific for
the psora, each given in the most suitable dose and form.
2 Vide Transactions
of a Society for the Improvement of Med. and Chir. Knowledge, ii.
3 In Edinb. Med and
Phys. Journ., 1805.
4 In Med. and Phys.
Journ., 1805.
5 Opera, ii, p.i,
cap. 10.
6 In hufeland's
Journal, xvii.
அல்லது , அந்த புதிய நோய் ( அலோபதி
மருந்தினால் உருவானது) ,
பல காலங்களுக்கு
உடலில் வேலை செய்த பிறகு ,
ஒத்ததன்மையில்லாத
பழைய நோயுடன் அதுவும் சேர்ந்து கொண்டு மேலும் நீடித்து கலப்புநோய் ஒன்றை
ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக பழைய , புதிய நோய்கள் இரண்டும் நோயாளியின் உடலில் தனது
தகுதிக்கேற்ப ,
குறிப்பிட்ட அந்த
நோயிற்குரிய தனிப்பட்ட உறுப்புகளை அடைந்து , அதை தன்வயப்படுத்திக் கொண்டு இதரப் பகுதிகளை மற்ற
ஒத்ததன்மையில்லாத நோய்களுக்கு விட்டு வைக்கிறது.
இவ்வாறு ஒரு சிபிலிஸ்
(மேககிராந்தி) நோயுள்ளவருக்கு சோரா நச்சுத்தன்மை கொண்ட நோய் தாக்குவதும் , அதே போல் சோரா நச்சுத்தன்மை
உள்ளவருக்கு சிபிலிஸ் நோய் தாக்குவதும் நிகழ்கிறது. அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்ததன்மையில்லாத வையாக இருப்பதால் ஒன்றை மற்றொன்று
நீக்கமுடியாது, குணப்படுத்தவும் முடியாது. முதலில் சிபிலிஸ் நோயுள்ள ஒருவரின் உடலில் சோரா
நச்சுத்தன்மை (சொறி,சிரங்கு) வெளிப்படத் துவங்கியபோது, சிபிலிஸ் குறிகள் தள்ளி வைக்கப்பட்டு, ஒதுக்கிவைக்கப்படுகிறது ; ஆனால் சில காலங்களுக்குப் பிறகு , எவ்வகையிலாயினும் (சிபிலிஸ்
நோயும் ஏறக்குறைய சோரா நோயிற்கு இணையாக பலமடைகிறது) இரண்டு நோய்களும் ஒன்றாக
இணைந்து விடுகின்றன. அதாவது ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தைப் பிடித்துக்கொண்டு
, தனித்தனியே உடலில் குடியிருந்து கொள்கிறது. அதனால் அந்த
நோயாளிக்கு நோயின் அளவு அதிகமாகிறது மற்றும் குணமாக்குவது மிகவும் சிரமமாகி
விடுகிறது.
திடீர் வகை தொற்று நோய்களில்
ஒத்ததன்மையில்லாத இரண்டு நோய்கள் சந்திக்கும் போது, உதாரணத்திற்கு பெரியம்மையும்
, தட்டம்மையும் ( சின்னம்மை)
ஒரே நேரத்தில் சந்திக்கும்போது ஒன்றை மற்றொன்று அடக்கிச் செயலற்றதாக செய்து
விடுகிறது என்று முன்பே கவனித்துக் கூறியிருக்கிறேன். ஆயினும், அவை கடுமையாகவும் , பெருவாரியாகவும் தோன்றும்
காலங்களில் ஒன்றையொன்று அடக்குவதுபோய் , மிகவும் அபூர்வமாகவே , ஓத்ததன்மையில்லாத அவ்விரண்டு
நோய்களும் ஒரே நேரத்தில் தோன்றி குறுகிய காலத்திற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து ( கலப்பு நோயாக) செயலாற்றுகிறது. பெருவாரிநோய் ஏற்பட்ட காலத்தில் பெரியம்மையும் , தட்டம்மையும் ஒரே நேரத்தில் தோன்றியபோது , அவற்றால் பாதிக்கப்பட்ட
முன்னூறு நோயாளிகளில் ஒருவர் மட்டுமே ஒத்ததன்மையில்லாத இவ்விரு நோய்களாலும்
பாதிக்கப்பட்டார். (இந்த இரண்டு நோய்களும் ஒன்றேயொன்று அடக்குவதும் , தள்ளிவைப்பதுமாக காணப்பட்டன. மற்றும் பெரியம்மை நோயால்
பாதிக்கப்பட்ட நோயாளியை இருபது நாட்கள் கழிந்த பின்னரே தட்டம்மை தாக்கியது.
ஆயினும் தட்டம்மையால் தாக்கப்பட்டவரை அந்நோய் தாக்கி வெளியேறிய பிறகு அதாவது பதினேழு
முதல் பதினெட்டு நாட்களுக்குப் பிறகே பெரியம்மை தாக்கியது). ஒத்ததன்மையில்லாத இந்த இரண்டு நோய்களும் ஒரே நேரத்தில்
தாக்கிய ஒரேயொரு நோயாளியின் வரலாற்றை மருத்துவர்.P.இரசல் கண்டுள்ளார். அதேபோல் மருத்துவர்.ரெயினி
என்பவர் , பெரியம்மையும் , தட்டம்மையும் சேர்ந்து ஒரே
நேரத்தில் இரண்டு சிறுமிகளைத் தாக்கியதை கண்டுள்ளார். மருத்துவர்.J.மௌரிஸ் தமது முழுமையான மருத்துவப்பயிற்சி காலங்கள்
முழுவதிலும் இரண்டு நோயாளிகளிடம் மட்டுமே இவ்விரு நோய்களின் பாதிப்பு இருந்ததை கவனித்துள்ளார். இத்தகைய மருத்துவக்குறிப்புகளை மருத்துவர்.எட்டிமில்லரின்
ஐந்து நூல்களிலும் மற்றும் சிலரின் எழுத்துகளிலும் காணமுடிகிறது.
கோமாரிநோய் ( அல்லது
மாட்டம்மை ) தாக்கியிருந்த காலம் முழுவதும் தட்டம்மையும், தோலின் மேல் ஊதா நிறப்புள்ளிகள்
காணப்படும் நோயுடனும் ஒருங்கே காணப்பட்டதை மருத்துவர்.செனேக்கர்
குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிபிலிஸ் நோய்த்தாக்குதலின் போது பாதரச மருத்துவச்சிகிச்சை
எடுத்துக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு கோமாரிநோய் எவ்வித தடையிமின்றி ஆடி முடிந்து
வெளியேறியதை மருத்துவர்.ஜென்னர் கண்டுள்ளார்.
அடிக்குறிப்பு -1
மிகுந்த கவனத்துடன்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளாலும் , மற்றும் கலப்பு நோய்களின் குணமாக்குதல் மூலமாகவும் , அவ்விரண்டு நோய்களும்
உண்மையாகவே இணைந்து கொள்வதில்லை என்றும், அந்த நோய் வரலாறுகளில் அவை இரண்டும் மனிதஉடலில்
தமக்கு ஏற்புடைய உடற்பகுதியில் வேறு வேறாகத் தங்கிக் கொள்கின்றன என்றும் நான்
(ஹானிமன்) இப்பொழுது உறுதிபடத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கூர்ந்த மதி
நுட்பத்துடன் மிகக் கவனத்துடன் தயாரிக்கப்பட்ட பாதரச மருந்தையும் , சோரா நோயிற்கு ( சொறி,சிரங்கு) திட்டவட்டமாகப் பொருந்தும் மருந்தையும் மிகப்
பொருத்தமான மருந்தளவிலும்,
வடிவத்திலும்
கொடுப்பதால் அவை முழுமையாகக் குணமடைகின்றன.