Monday, 17 February 2020

மெடோரினம்


மெடோரினம்

பிரிவு : நோய்க்கழிவு
நிருபணம் செய்தவர் : மரு . ஸ்வான்







1.    முன்னுரை (Introduction) :

மெடோரினம் மேகவேட்டை நோய் கிருமியிலுருந்து (கோள நுண்மம்= cocci) தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை முதலில் நிரூபணம் செய்தவர் மருத்துவர்  ஸ்வான் ஆவார். இம்மருந்தின் நிரூபணங்கள் பெரும்பாலும் ஐந்தாவது வீரியத்தில்  செய்யப்பட்டுள்ளன .

இது சைக்கோசிஸ் மியாசத்தை அடிப்படியாகக் கொண்டதாக இருக்கிறது. மரபு வழியாகவோ  அல்லது முயன்று பெற்ற  மேகவெட்டை பாதிப்பிற்கு இம்மருந்து  பல அற்புதமான ஹோமியோபதி நலமாக்கலைக் கொடுத்துள்ளது. 

இந்த நோயாளிகளுக்கு ,  உடல் முழுவதும் உள்ள நிணநீர் சுரப்பிக்கள் பெருத்துவிடும் என்பது பொதுவான விதியாக இருக்கிறது. இவர்கள்  , வெளிறிய முகத்துடன்  ,  மஞ்சள் கலரில்  , குறிப்பாக கண்களைச் சுற்றி கன்றிப்போன காயத்துடன் , நெற்றியில் தலைமுடிக்கு அருகில் மஞ்சள் பட்டையுடனும் , தோல் பச்சை நிறத்தில்  பளபளப்பான  தோற்றம் தருவார்கள். வாத வலிகள் , விசித்திரமான பற்கள், உடலில் துர்நாற்றம், கண் இமைகளின் செதில் விளிம்புகள் மற்றும் விழி மயிர்கள் உதிருதல் ஆகியவை மெடோரினத்தின் குறிகளாக இருக்கிறது.

மேகவெட்டை பாதிப்பிற்குள்ளான நமது மூதாதையர்களிடமிருந்து மரபு வழியாக கடத்தப்பட்டு வரும் நோய்த்தொற்றின் காரணமாக நமக்கு பல நோய்கள் உருவாகின்றன. அவையாவன; கருப்பைக் கட்டிகள் (Ovarian tumours) , சினைப்பையின் வேக்காடு(oophoritis)  , பெலோப்பியின் குழாயில் வேக்காடு (salpingitis), கருப்பையில் வேக்காடு(metritis) , கருப்பையைச்  சுற்றிலும் வேக்காடு (parametritis), கருப்பையின் உட்ப்புறத்திலிலுள்ள தோலில் வேக்காடு (endometritis) , மண்டை ஓட்டினுள் நீர்க்கோவை (hydrocephalus) , மூக்கில் தசைவளர்ச்சி(nasal polypi)  , மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல்(epistaxis) , தடிப்புத் தோல் அழற்சி (,psoriasis ) , சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் (albuminuria), மூத்திரப்பையின் வேக்காடு  (cystitis) ,விரைகளில் உள்ள சிறு உறுப்புகளில் வேக்காடு(epididymitis) , சுக்கிலச்சுரப்பி அழற்சி (prostatitis) ,மற்றும் மூட்டுச்சுரப்பி சவ்வுகளில் வேக்காடு (synovitis ) ஆகியவை ஆகும். 

மேற்கூறியவற்றைப் தவிர , குழந்தைகளில் உடலமைப்பில்  மறைந்திருக்கும் மேகவெட்டை நோய்க்கிருமிகளின் தாக்குதலால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்  . அத்தகைய குறைபாடுகளை களைய மெடோரினம் சரியான மருந்தாக இருக்கிறது.  அக்குழந்தைகளுக்கு இம்மருந்தைக் கொடுத்த  பிறகு, அவர்களிடமிருந்த  மனம் மற்றும் உடல் ஆகியவற்றில் இருந்த தடை நீங்கி ,  அவர்களின்  மனம் , ஒழுக்கம் மற்றும் உடல்  ஆரோக்கியம் ஆகியவற்றில்  முன்னேற்றம் ஏற்பட்டு  இயல்பான நிலைக்கு  திரும்பி இருக்கிறார்கள் மற்றும்  அவர்கள் சுறுசுறுப்பானவர்களாக மாறிவிடுகிறார்கள். மெடோரினத்தின் நோய் தோற்றங்கள்  கீழ் வருமாறு இருக்கிறது;

Ø  மூளை மற்றும் மற்றும் முதுகெலும்பு பாதித்து    பக்கவாதம், நடுக்கம் மற்றும் சஞ்சலமான நிலையோடு  நினைவாற்றல் இழப்பையும்  உருவாக்குகிறது.

Ø  இதய இரத்தநாளங்கள்   மற்றும் சுவாச கோசங்களில் ஏற்படும் பாதிப்பினால் மூச்சுத்திணறல், வலி மற்றும் இருமல் தோன்றும் .

Ø  மூட்டுகளில் முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் ஏற்படும்.

Ø  உடல் முழுவதும் உள்ள நிணநீர் சுரப்பிக்கள் பெருத்துவிடும்

மெடோரினம் மேகவெட்டை சார்ந்த நோய்களை   சைக்கோசிஸ் மட்டுமல்லாது , சோரா மற்றும் சிபிலிஸ் (மேகப்புண்) வகை சார்ந்த நோய்களையும் நலமாக்கும் ஆற்றல் கொண்டது என்று ஹானிமன் கண்டறிந்து கூறியுள்ளார். அதேபோல்  தோல் , சளி சவ்வுகளில்  ஏற்பட்டுள்ள நாட்பட்ட பாதிப்புகளுக்கு சோரினமும், மேகப்புண் வகை சார்ந்த நோய்களுக்கு சிபிலினமும் நன்றாக வேலை செய்து குணப்படுத்துகிறது.  

2.    இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION):

மெடோரினம்  முக்கியமாக நரம்பு மண்டலம் மனம், , மூளை, முதுகெலும்பு (முள்ளந்தண்டு) மற்றும் அதன் உறைகள் ,  நிணநீர் கோளங்கள், தோல் மற்றும் சளி சவ்வு, மூட்டுகள், இதய இரத்தநாளங்கள்  மற்றும் சுவாச அமைப்பு, இரைப்பை குடல் பாதை, பெண் பிறப்புறுப்பு உறுப்புகள், சிறுநீர் மற்றும் பாலியல் உறுப்புகள், ஆகியவற்றை பாதிக்கிறது.


3.    மனக்குறிகள்(Mind):

Ø  இவர்கள்,  மனக்கிளர்ச்சி அல்லது திடீர் எழுச்சிக்கு ஆளாகிற (IMPULSIVE) , திடீரெண்டு துண்டித்துக் கொள்கிற (ABRUPT) , முரட்டுத்தனமான(RUDE), சராசரியான (MEAN) , கொடூரமான (CRUEL)  மனிதர்களாக இருப்பார்கள்.

Ø  பலவீனமான நினைவாற்றல் , உரையாடலின் இழையை இழப்பது அதாவது தொடர்ந்து பேச இயலாதது  , இவர்களால் அழாமல் பேச முடியாது, பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவது.

Ø  பொதுவாக பேசிக்கொள்ளும் வார்த்தைகளை  சரியாக உச்சரிக்கமாட்டார்கள்.

Ø  ஞாபக மறதி: பிரபலமான பெயர்கள், பெயரின் எழுத்துக்கள், சொற்கள்,   மிக நெருக்கமான நண்பரின் பெயர் ,  ஏன் தன்பெயரைக்கூட மறந்து விடுதல்.

Ø  எப்போதும் அழுதுகொண்டிருத்தல் (PULS., LIL-T) ; இவர்களால் அழாமல் பேச முடியாது; அழாமல்  நோய்குறிகளைக் கூற இயலாது( PULS) (SEP உடல் நலத்தைப்பற்றி கேட்கும் போது அழுவார்கள்).


Ø  நேரம் மிக மெதுவாக செல்வதாகத் தோன்றும் ( ALUM., ARG-N., CANN-I)  . அவசரம், பொறுமையின்மை , முக்கியமில்லாத விஷயங்களுக்கெல்லாம் பதட்டமடைதல்.

Ø  குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இவர்களுக்கு பதட்டம் வந்து விடும்.

Ø  எதையும் செய்யும் போது மிகுந்த அவசரம் (HURRIEDNESS), அது அவர்களுக்கு  சோர்வளிக்கும் அளவுக்கு அவசரமாக இருக்கிறது.

Ø  நோயிலிருந்து நலமாவதில்  நம்பிக்கை இழத்தல் .

Ø  தங்களது நோய்களை பற்றி நினைக்கும் பொழுது மனக்குறிகள் அதிகரித்து தொல்லைகள் கூடும்.

Ø  உச்சமான நிலை (EXTREME) என்பது இதனுடைய முக்கிய வார்த்தையாக இருக்கிறது. அன்பை செலுத்துவதிலும் , வெறுப்பதிலும் உச்சம் தான் .

Ø  இருட்டிற்கு அச்சம்; பைத்தியம் பிடித்துவிடும் என்ற பயம்.

Ø  எல்லாவற்றையும் அனுபவிக்க ஆசை, தடைசெய்யப்பட்டதை அதிகம் விரும்புவார்கள்.

Ø  பகல் சிடுசிடுப்பாகவும் , இரவில் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இரவு இவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்; சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இரவு மனிதர்கள்.

Ø  வாழ்க்கையை உண்மையற்றதாக உணர்வார்கள் ,  இவர்களுக்கு எல்லாம் உண்மையற்றதாகத் தெரியும்.

Ø  ஒரு வேலையைச் செய்ய நேரம் நிர்ணயிக்கப்படும் போது இவர்களுக்கு  பதட்டம் வந்துவிடும். அதனால் வேலைத் தள்ளிப்போடும் குணம் இவர்களுக்கு இருக்கும் (POSTPONES WORK).

Ø  கூச்சசுபாவம் உள்ளவர்கள்; அதனால் நேர்முகத் தேர்வுகளில் இவர்களால் பதிலளிக்க இயலாது.  எப்படி முடிக்க வேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியாது.

Ø  தொடுவதற்கான வெறுப்பு.

Ø  உணர்ச்சிக்கு ஆட்பட்ட (PASSIONATE) , நாகரீகமற்ற (WILD), அதிக காமஉணர்வு (STRONG SEX DRIVE) கொண்டவர்கள்.

Ø  திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைத் தரும்.

Ø  சுய கட்டுப்பாடு இல்லாத (LACK OF SELF CONTROL  , கொடுமையான (CRUEL) மற்றும்  சுயநலமான மனிதர்கள்( SELF CENTERED).

Ø  வெளி உலகத்திலிருந்து விலகிச் சென்று , உள் கனவு உலகத்தில் வாழ்வார்கள்.

Ø  அழகு, பூக்கள், இயற்கை ஆகியவற்றிற்கு மட்டுமீறிய கூருணர்வு உடையவர்களாக இருப்பார்கள்.

Ø  மிருகங்களுடன் மிகவும் பாசமாக இருப்பார்கள் (AETH).

Ø  பிற மனிதர்கள்  , குழந்தைகள்  மற்றும் மிருகங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும் , கொடுமையானவர்களாகவும்  நடந்து கொள்வார்கள் (ANAC., MOSCH., TARENT).

Ø  அச்சம் கொள்கிற , ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று  எதிர்பார்ப்பது , வெகு தொலைவில் இருப்பது போன்ற உணர்வு , இன்று செய்யப்பட்ட விஷயங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தது போல தோற்றம் இவர்களுக்கு ஏற்படும் .  

Ø  சோகமான,  மோசமான பார்வை (SAD DISMAL LOOK) > அழுகை  அவர்களது தொல்லைகளைக்  குறைக்கிறது.

Ø  கவனக்குறைவு  அல்லது  ஒருமித்த கவனம் குறைதல்.

Ø  பொறுப்புகளை தவிர்த்து விடுவார்கள்.

Ø  பொய் பேசுபவர்கள் (LIARS)  ; சுயநலமிகள்.

Ø  நகம் கடிப்பார்கள், கால்விரல் நகங்களைக் கூட  கடிப்பார்கள்..

Ø  கடிக்க வேண்டும் (BITES) என்ற பலமான ஆசை இருக்கும்.

Ø  உணர்ச்சி வசப்படும் நிலை அதிகரிக்கும் : ஞான திருஷ்டி அல்லது புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் (CLAIRVOYANCE).


4.    சிறப்பியல்புக்குறிகள் (Characteristic Symptoms) :

Ø  பொதுவாக குள்ளமானவர்கள் (DWARFISH) , வளர்ச்சி குன்றியவர்கள் (STUNTED), புளிப்பு மணம் கொண்ட குழந்தைகள், மன மந்தமான மற்றும் பலவீனமான குழந்தைகள். மேகவெட்டை நோய்தாக்குதல் வரலாறு கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த  குழந்தைகளில் மங்கோலிய சாயல் இருக்கும் (MONGOLISM= DOWN’S DYNDROME ;  இது ஒரு பிறவி குறைபாடு . வட்டமான முகத்துடனும் , மூக்கு , கண் மற்றும்  வாய் சுருங்கியும் , மனவளர்ச்சி மிகவும் குன்றிய நிலையில் உள்ள பிறவிக்  கோளாறான குழந்தைகள். இக்குழந்தைகளுக்கு மண்டை அகன்று குட்டையாக இருக்கும். அகண்ட கைகளும், குட்டையான விரல்களும் இருக்கும்.) .

Ø  காரமான, அரிப்பைத் தரும் ஏராளமான  கழிவுகள்;   மீன் துர்நாற்றத்தைத் தருகிறது.

Ø  உடலில்  துர்நாற்றம் இருக்கும் , குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இருக்கும்.

Ø  தளர்ச்சியில் வீழ்ந்து விடுவார்கள் (COLLAPSE) ; எப்போதும் காற்று வீசிக்  கொண்டே இருக்கவேண்டும் (carb-v., lach).

Ø  உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் காந்தல் அல்லது எரிச்சல் உணர்ச்சி (SULPH., PULS.,CHAM., & lach).

Ø  வெப்ப உடல்வாகு.

Ø  கடுமையான தலைவலி எரிச்சல் தன்மையுடன் இருக்கும். தலைவலி சிறுமூளையில் தோன்றி முதுகெலும்பை நோக்கி கீழ்நோக்கிப் பரவும்.

Ø  நரம்புத்தளர்ச்சியுடன் உடல் முழுவதும் நடுக்கமும்  மற்றும் களைப்பும் மேலோங்கி இருக்கும் ( gels., arg-n., & merc) .

Ø  உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருந்தாலும் போர்த்திக் கொள்ள விரும்பமாட்டார்கள், போர்வையை தூக்கி எறிவார்கள்( camph., sec).

Ø  கால்களிலும், பாதத்திலும் தீவிரமான அமைதியற்ற நிலை  (ஆட்டிக் கொண்டேயிருப்பார்கள்) மற்றும் சஞ்சலமாக இருக்கும்(zinc).

Ø  இடுப்பு வலியில்,  சிறுநீர் அதிகமாக வெளியேறினால்   குறையும் (lyc).

Ø  மதுபானங்கள்  , உப்பு, அமில உணவு ஆரஞ்சு , புளிப்பு பொருள்கள் மற்றும் இனிப்பு பொருள்களின் மீது அளவு கடந்த விருப்பம். குறிப்பாக மதுபானத்தின் மீது மிகுந்த நாட்டம்.

Ø  முகத்தை கீழே கவிழ்த்திப் படுத்தால் மூச்சுத்திணறல் குறையும். அதே போல் நாக்கை உள்ளே மற்றும் வெளியே இழுத்தாலும் குறையும். 

Ø  பெண்களின் மாதவிலக்கு  ஏராளமாகவும், அதிகக்  கறுப்பாகவும், கட்டியாகவும், சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் வகையில் கறைபடிந்தும் வெளியாகும் (MAG-C).

Ø  மார்பகம்  மற்றும் முலைக்காம்புகளில்  புண் ஏற்படும் மற்றும் தொடுவதற்கு கூருணர்ச்சி ஏற்படும்.

Ø  வெள்ளைப்பாடு - மெல்லிய மற்றும் மீன் வாசனையுடன் கூடிய வெள்ளைப்பாடு இருக்கும்.

Ø  இதயப்பகுதியில் உச்சியிலுருந்து அடிப்பகுதி வரை  வலி ஏற்படும் ( சிபிலினம் (syph) அடியிலிருந்து உச்சி வரை பாயும்; இதயத்தின் அடியிலிருந்து கழுத்துப்பட்டை எலும்பு அல்லது தோள்பட்டை வரை- SPIG).

Ø  சூரியன் உதிக்க ஆரம்பித்தலிருந்து , சூரியன் மறையும் வரை அவர்களது தொல்லைகள் அதிகரிக்கும். அதே போல் தங்களுடைய நோய்களைப்பற்றி நினைக்கும் போதும் , வெப்பத்தினாலும், உடலை மூடினாலும் மற்றும் வியர்வையினாலும் அத்தொல்லைகள் கூடும். கடற்கரையில் இருக்கும் போது தொல்லைகள் குறையும் ( NAT-M., SYPH  இதற்கு எதிரானது ).

Ø  சாப்பிட்ட உடனேயே  திரும்பவும் கடுமையான பசி ஏற்படும்.

Ø  குளிர் பானங்கள், குளிர் உணவு, பட்டாணி, பீன்ஸ், முட்டை மற்றும்  மெலிதான உணவுகள் மீது வெறுப்பு.

Ø  ஆஸ்த்மா  :  கடற்கரை பகுதியில் மற்றும்  ஈரமான பருவத்திலும் தொல்லை குறையும். முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து  படுத்தாலும் குறையும்.

Ø  மலம்-குடலின் மந்தநிலை, விடாப்பிடியான , களிமண் போன்ற அல்லது பந்து போன்ற, மந்தமான மலம் , மற்றும் மலக்குடல் வெளியே வந்துவிடும் என்ற  உணர்வு எழுவதால் மலத்தை வெளித்தள்ளுவதில் சிரமம் ஏற்படும்.

Ø  மலச்சிக்கல்> உடலை பின்னோக்கி வளைத்தல் மலம் வெளியாகும்.

Ø  மலக்குடலில் கூர்மையான  ஊசியால் குத்துவது போன்ற  வலிகள் .

Ø  சிறுநீரக பகுதியில்  கடுமையான வலி> அதிக சிறுநீர் கழித்தல் உபாதைகள் குறையும்.

Ø  சிறுநீர்க்குழாய்களில் கடுமையான வலியுடன்  சிறுநீரக வேக்காடு , சிறுநீரகங்கள் நகர்ந்து செல்வது போன்ற  உணர்வோடு ( LYC., BERB., SARS) , சிறுநீரகத்தில் குமிழ் உணர்வு(BERB)- (BUBBLING). < பனி கட்டியினால் வலி குறையும்.

Ø  இரவில் படுக்கையில் தானாக சிறுநீர்க் கழித்தல் ,  ஒவ்வொரு இரவும் படுக்கையில் சிறுநீர்க் கழித்தல் - அதில்   அதிக அளவு அம்மோனியாவும் , அடர்த்தியான வண்ணமும் இருக்கும். இது ,  < அதிக வேலை  அல்லது அதிக விளையாட்டு, வெப்பம் அல்லது குளிர் அதிகமான தருணங்களில் அதிகரிக்கும்.

Ø  முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து  வைத்து கொண்டு தூங்கும்  (KNEE-CHEST POSITION), கைகளை நெற்றியின் மேல் வைத்து, முதுகுப்புறமாகத் தூங்குவார்கள் (PULS).

Ø  தோள்பட்டை மற்றும் கைகளில்  வாத நோய் ( RIGHT-SANG; LEFT-FERR), வலிகள்  விரல்களுக்கு நீட்டிக்கும், > அசைவினால்  வலிகள் குறையும் .

Ø  கால்களின் கனத்தன்மையினால் , ஈயம் போல உணருவார்கள், நடப்பது மிகவும் கடினம், கால்கள் மிகவும் கனமாகவும் , தளர்வுற்றும் இருக்கும்.

Ø  இரவு முழுவதும் கால்களில்  வலி, அந்த வலி தூக்கத்தைத் தடுக்கும்.

Ø  இடுப்புச்சந்து வாதம் (SCIATICA) : இடது பக்கம் பாதிக்கும்; அதிகாலையில் வலி கூடும்; கடற்கரை பகுதியில் வலி குறையும்.

Ø  நடக்கும்போது கணுக்கால் எளிதில் திரும்பும். உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டும் விறைப்பாக இருக்கும். கை விரல் மூட்டுகள் உருக்குலைந்து காணப்படும். மேலும் விரலில் உள்ள மூட்டு எலும்புகளில் வீக்கம் அல்லது புடைத்திருக்கும்.

Ø  நகங்களில் குறுக்குவெட்டாக ஒடுக்கமான நீண்ட கரைமேடு (RIDGE) இருக்கும் ( செங்குத்தாக இருப்பது * THUJ) .

Ø  சிவப்பு முடுச்சுகள் அல்லது மச்சம்.

Ø  அதிகமான வியர்வை ஏற்படும்  , குறிப்பாக கால்களில் அதிகம்  வியர்த்தல்.

Ø  தொல்லைகள் திடீரென்று ஆரம்பித்து படிப்படியாகக் குறையும்.

5.    நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

Ø  உள்ளமுக்கப்பட்ட மேகவெட்டை நோய்களினால் ஏற்பட்ட விளைவுகள். மரபு வழியாக வந்த மேகவெட்டை நோய்த்தன்மையினால்  ஏற்படும் தொல்லைகள்.

Ø  எதிர்பார்ப்பு (ANTICIPATION) .

Ø  கெட்ட செய்திகள் (BAD NEWS).


6.    ஆண்கள் (Male):

ஆண்மையின்மை ( AGN., CALAD). சுக்கிலச்சுரப்பி பெருத்து வீங்கி வலியைத்  தரும்; அத்தோடு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும், சிறுநீர் கழிக்கும் போது வலியும் ஏற்படும் (STAPH) . வெட்டை நீர்; சிறுநீர் வெளியேறும் குழாய் முழுவதும் புண்ணாகுதல் (HEP). காமஇச்சை மிகவும் அதிகமாக இருக்கும் (SATYRIASIS).
7.    பெண்கள் (Female):

மலட்டுத்தன்மை (STERILITY). பெண்களின் மாதவிலக்கு  ஏராளமாகவும், அதிகக்  கறுப்பாகவும், கட்டியாகவும், சுத்தம் செய்ய கடினமாக  இருக்கும் வகையில் கறைபடிந்தும் வெளியாகும் (MAG-C). மார்பகம்  மற்றும் முலைக்காம்புகளில்  புண் ஏற்படும் மற்றும் தொடுவதற்கு கூருணர்ச்சி ஏற்படும். மாதவிடாயின் போது முலைகள் குளிர்ச்சியாகவும் , வலியுடமும் இருக்கும். மாதவிடாய் நிற்கும் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ,  ஏராளமான  இரத்தப்போக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். கர்ப்பப்பையில் உயிருக்கு ஆபத்தைத் தரும் நோய்கள் ஏற்படும். கருப்பை வாயிலும், யோனியிலும் அரிப்பு; அதைப்பற்றி நினைக்கும் போது அரிப்பு இன்னும் அதிகரிக்கும்; வெதுவெதுப்பான நீரில் குளித்தால் தணியும்.

பெலோப்பியின் குழாயில் வேக்காடு (salpingitis), கருப்பையில் வேக்காடு(metritis) , கருப்பையைச்  சுற்றிலும் வேக்காடு (parametritis), கருப்பையின் உட்ப்புறத்திலிலுள்ள தோலில் வேக்காடு (endometritis) , மூத்திரப்பையின் வேக்காடு  (cystitis) போன்ற நோய்கள் தாக்கும்.

காமஇச்சை மிகவும் அதிகமாக இருக்கும் (NYMPHOMANIA).
8.    குழந்தைகள்(Children):

குழந்தைகளில் உடலமைப்பில்  மறைந்திருக்கும் மேகவெட்டை நோய்க்கிருமிகளின் தாக்குதலால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்.  

குள்ளமானவர்கள் , வளர்ச்சி குன்றியவர்கள் , புளிப்பு மணம் கொண்ட குழந்தைகள், மன மந்தமான மற்றும் பலவீனமான குழந்தைகள்.

குழந்தைகளுக்கு வெறியெழுச்சி (AGGRESSION).  மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவார்கள்; உதைப்பார்கள்; அடிப்பார்கள்; கடிப்பார்கள். அதேபோல் தான் பெற்றோர்களிடமும் , உறவினர்களிடமும் நடந்து கொள்வார்கள்.

கேள்விகளை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும்; திரும்பவும் கேள்வி  கேட்க வேண்டும் (BAR-C). பிறந்த  சில நாட்களே ஆன இளம் குழந்தைகளுக்கு ஆசன வாயிற்குப் பக்கத்தில் நெருப்புப் போல் சிவந்த சருமக் கோளாறு தோன்றுதல். குழந்தைகள் வயிற்றின் மேல்  தூங்கும் , முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து  வைத்து கொண்டு தூங்கும்  (KNEE-CHEST POSITION).] சிறிய குழந்தைகளுக்கு சிரங்கு ஏற்படும்.

மிருகங்களிடத்தில் அதிகமான அன்பும் , கொடூரமும் இருக்கும் (CRUEL TO ANIMAL) . இவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வயதிலேயே காமஉணர்வுகள் துளிர்க்க ஆரம்பித்துவிடும். குழந்தைப்பருவத்திலேயே சுயஇன்பம் அனுபவிக்காத துவங்குவார்கள்.

குழந்தைகளின் கால்கள் மிகவும் சூடாக இருக்கும் ; அதனால் தங்களது  காலணிகளை கழட்டச் சொல்வார்கள்; வெறுங்கால்களில் குளிர்ச்சியான தரையில் நடக்க விரும்புவார்கள்.

9.    உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):

சாராயம்( பிராந்தி) , உப்பு, அமில உணவு ஆரஞ்சு , புளிப்பு பொருள்கள் மற்றும் இனிப்பு பொருள்களின் மீது அளவு கடந்த விருப்பம். குறிப்பாக சாராயத்தின் மீது மிகுந்த நாட்டம். பசுமையான  பழங்கள் , ஐஸ் க்ரீம் மற்றும் குளிர்ச்சியான பானங்களில்(ICY) விருப்பம் இருக்கும்.

சாப்பிட்ட உடனேயே  திரும்பவும் கடுமையான பசி ஏற்படும் ( RAVENOUS APPETITE) .

எப்போதும் தாகம் இருந்து கொண்டேயிருக்கும் (CONSTANT THIRST).

குளிர் பானங்கள், குளிர் உணவு, பட்டாணி, பீன்ஸ், முட்டை மற்றும்  மெலிதான உணவுகள் மீது வெறுப்பு.

10.  மாறுமைகள்: (Modalities):

நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):

Ø  பகலில் தொல்லைகள் அதிகரிக்கும். சூரியன் உதிக்க ஆரம்பித்தலிருந்து , சூரியன் மறையும் வரை அவர்களது தொல்லைகள் அதிகரிக்கும்.

Ø  அதே போல் தங்களுடைய நோய்களைப்பற்றி நினைக்கும் போதும் , வெப்பத்தினாலும், உடலை மூடினாலும் மற்றும் வியர்வையினாலும் அத் தொல்லைகள் கூடும்.

Ø  விடியற்காலை முக்கியமாக 3 மணியிலிருந்து 4 மணி வரையில் குறிகள் அதிகரிக்கும். மேகவெட்டை சம்பந்தமான காசநோய் விடியற்காலை 2 மணியிலிருந்து 4 மணி வரையில் அதிகமாக இருக்கும்.

நோய்க்குறி குறைதல்(Amelioration):

Ø  கடற்கரையில் இருக்கும் போது தொல்லைகள் குறையும் ( NAT-M., SYPH  இதற்கு எதிரானது ).

Ø  வயிற்றில் படுக்கும் போது அதாவது குப்புறப் படுத்தால் தொல்லைகள் குறையும்; முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து  படுத்தாலும் குறையும் (KNEE-CHEST POSITION).

Ø  முதுகை பின்பக்கமாக எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவு தூரமும் வளைத்தால் மலத்தைச் சுலபமாக வெளியேற்ற முடியும்.

Ø  பலமாக தேய்த்தல் (HARD RUBBING).

Ø  சிறிய தூக்கம் (SHORT SLEEP) .

Ø  ஈரமான பருவநிலை (DAMP WEATHER).

Ø  சூரியன் மறைந்த பிறகு தொல்லைகள் குறையும்.


11.  இம்மருந்துக்கான (சிறப்புக் குணங்கள்) உட்கரு:  (Nucleus):

Ø  உள்ளமுக்கப்பட்ட மேகவெட்டை நோய்களினால் ஏற்பட்ட விளைவுகள். மரபு வழியாக வந்த மேகவெட்டை நோய்த்தன்மையினால் பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் பிற தொல்லைகள் ஏற்படும்.

Ø  நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நோய்த்தன்மை, எளிதில் குணப்படுத்த முடியாத  பிடிவாதமான தொல்லைகள்.

Ø  காந்தள் அல்லது எரிச்சல் தன்மை.

Ø  குமட்டுகிற அல்லது நாற்றத்தைத் தருகிற கழிவுகள்.

12.  வீரியம் (POTENCY):  

உயர்ந்த வீரியங்கள் ; 200 வது வீரியத்திற்கு மேல் தான் பயன்படுத்த வேண்டும்.

மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) :  ஒரு வேளை மருந்து மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF ACTION):  குறிப்பிடப்படவில்லை.


நிறைவு மருந்துகள்: தூஜா (THUJ), நேட்ரம் சல்பூரிக்கம் (NAT-S), சல்பர் (SULPH), கன்னாபீஸ் இண்டிகா(CANN-I), பல்சாட்டில்லா (PULS).


13.                        ஒப்பீடுகள்  (COMPARISIONS) :


சல்பர் (SULPH): தன்முனைப்பு, ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமை , கொழுப்பு உணவு , இனிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவுகளில் விருப்பம், சிரங்கு, நகம் கடித்தல், கால்களை போர்த்திக்கொள்ள விரும்பாதது.

நக்ஸ்வாமிக்கா (NUX-V) : ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமை , கொழுப்பு உணவுகளில் விருப்பம் , மூத்திரப்பை அழற்சி , அதிக காமஉணர்வு.

லாக்கஸிஸ் (LACH) : எளிதில் உணர்ச்சிவசப்படுதல். பொறாமை. அதிக காம இச்சை, ஆஸ்த்மா.

Saturday, 8 February 2020

ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும் -அத்தியாயம்-2


கனிமங்களின் தொகுதி பகுப்பாய்வு


இப்போது ஸ்கால்ட்டன் “ஹோமியோபதி மற்றும் கனிமங்கள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ள தொகுதி பகுப்பாய்வையும் , அதனுடைய கருப்பொருளையும் , மற்றும் மருந்துகளையும்  சுருக்கமாகப் பார்க்கலாம்.


I.              கார்பானிக்கம் (CARBONICUM):

வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் , அதன் மதிப்பும் ( VALUES) கார்பானிக்கத்தின் முக்கிய  கருப்பொருளாக இருக்கிறது . அவர்களின் இருப்பு, அவர்களின் வாழ்க்கை என்பதன் அர்த்தத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு பொருளைத் தேடுகிறார்கள், மதிப்புகளை வைப்பது அவர்களுக்கு மிக முக்கியமானது.

அடுத்து , சுயமதிப்பு ( SELF WORTH) என்பது இரண்டாவது கருப்பொருளாக இருக்கிறது. மூன்றாவது கருப்பொருள் கண்ணியம்(DIGNITY)  ஆகும். இவர்கள் நியாயமாக சிந்திக்கிறவர்களாக இருப்பதோடு  , தங்களின் சுய மதிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும்   ,  கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களிடம்  சிறிய அளவில் உயர்குடி இயல்பும்( ARISTOCRATIC)  இருக்கும்.

கார்பானிக்கத்தின்  அடுத்த கருப்பொருள் வேலை மற்றும் தொழிலில் காணப்படுகிறது. அவர்கள் கடின உழைப்பாளிகள். இது சமூக நிலைப்பாட்டுடன் ஓரளவு தொடர்புடையது. இவர்கள் சுயநலமற்றவர்கள் என்கிறார் மருத்துவர் ரோஜர் மோரிசன்.

இறுதி கருப்பொருள் தந்தை உருவம். . தந்தையின் அடையாளம் அதிகாரம். அவர்கள் அர்த்தமுள்ள , மதிப்புவாய்ந்த , கண்ணியமான வேலை முதலியவற்றைக் கொண்டிருப்பார்கள். நடைமுறையில், இந்த தொகுதியில் உள்ள மருந்துகள் பெரும்பாலும் தந்தை அல்லது அதிகாரிகளின்  சிக்கல்களைக் நிரூபிக்கிறது.

கிராபைட்டிஸில் தந்தை இருக்கிறார், ஆனால் அவர் குடும்பத்திலிருந்து தனியாக இருக்கிறார், அவர் எப்போதும் விலகி இருக்கிறார்.  நேட்ரம் கார்பானிக்கத்தில்  தந்தை முற்றிலும் இல்லாமல் இருக்க முடியும். மெக்னீசியம் கார்பானிக்கத்தில்  தந்தையுடனோ அல்லது அதிகாரிகளுடனோ அதிகாரப் போராட்டம் ஏற்படலாம்.



கிராபைட்டிஸ் (GRAPH):


உண்மையில் தந்தை யார் , எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வியே இதன் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது.

இவர்கள் மந்தமான (SLOW), முரட்டுத்தனமான (COARSE) , மேம்பாடு அடையாத மனிதர்களாக இருப்பார்கள். அத்தோடு மாறுகின்ற மனநிலையோடு , எதற்கும் எதிர்வினையாற்றாதவராகவும் மற்றும் சிறிய விஷயங்களுக்கு கூட கவலை கொள்பவராகவும் இருப்பார்கள். இவர்கள் பதட்டமுள்ளவர்களாகவும் (ANXIOUS), கோபக்காரராகவும் (ANGRY), கவலையுள்ளவர்களாகவும் (SAD)  மற்றும் அழும் குணமுள்ளவராகவும் (CRY)இருப்பார்கள். ஆனால் , அவர்களுடைய பிரச்சனைகள் பற்றி பேசினாலும் , அழுதாலும் தொல்லைகள் உடனடியாக மறைந்து விடும். ஏறக்குறைய பல்சாட்டில்லா துயரர்கள் போல் இருப்பார்கள்.

சுலபமாக அழுவது என்பது கிராபைட்டிஸ் மருந்தின் முக்கியமான குறியாகும் . இவர்கள் சின்ன விஷயங்களுக்கும் , காரணமே இல்லாமலும்   அழும் தன்மையுள்ளவராக இருப்பார்கள்.  பல்சாட்டில்லா துயரர்கள் மற்றவர்களின் கவனத்தைப் பெற அழுவார்கள்; ஆனால் கிராபைட்டிஸ் துயரர்கள் உறுதியற்ற நிலையினால் அழுவார்கள். 


இவர்களின் தந்தை வெளியூரில் இருப்பார்; குடும்பத்திற்காக கடுமையாக  உழைப்பார். ஆனால் , அவரை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. தந்தையைப் பற்றி கேள்வி கேட்டால், அவர் எங்கு இருக்கிறார்?, என்ன செய்கிறார்? என்பது தெரியாது என்று சொல்வார்கள். அதாவது தந்தை இருந்தும் இல்லாத நிலை.


கால்சியம்   கார்பானிக்கம் (CALC):

பிறர் தங்களது குழப்பத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற மனப்பிரமை இம்மருந்தின் மைய கருப்பொருளாக இருக்கிறது. தங்களுக்கு எதுவும் தெரியாது ; சரியானவற்றை புரிந்து கொள்ளாத தெரியாதவர், தன்னுடைய  மதிப்பு தெரியாதவர் என்பது போன்ற பலவீனங்கள்  மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்ற  மனப்பிரமையும் இருக்கும். அதேபோல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து விமர்சனம் செய்து விடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும்.

குழந்தைகள் மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்காமல் , கண்களின் ஓரத்திலிருந்து பார்க்கும். அவர்களது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தால் அப்போது உங்களைப் பார்க்கும். அதனால் வெட்கம் அல்லது கூச்சம் (SHYNESS) என்பது இவர்களது உள்ளுறைந்த குணம் என்பதை தெரிந்து கொள்ள இயலும்.

இவர்கள்  தங்களைப்பற்றிய கணிப்பில் உறுதியற்றவர்களாக  இருப்பார்கள். இருந்தாலும்  இவர்கள் , உறுதியானவர் மற்றும்  நிலையானவர் போன்று காட்டிக் கொள்வார்கள். அதை நிரூபிக்கும் விதமாகவும் , மற்றவர்கள் பார்வையில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கவும் கடுமையாக வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.


மெக்னீசியம் கார்பானிக்கம் (MAG-C):


இவர்கள் ஆக்ரோஷமானவராக (AGGRESSIVE) இருப்பார்கள். சுயமதிப்பு (SELF WORTH) என்பது இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.  குழந்தைகள் மிகவும் ஆக்ரோஷமுள்ளவராக இருப்பார்கள்.  மற்றவர்கள் இவர்களை அங்கிகாரம் செய்யவும் , ஏற்றுக்கொள்ளவும்   வேண்டிய தேவை இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்வார்கள்; தங்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்று  கட்டாய படுத்துவார்கள்.

மருத்துவர் J.T. கெண்ட் இம்மருந்து அனாதை குழந்தைகளுக்கு உரியது என்கிறார். அதாவது அனாதை இல்லங்களில் அல்லது காப்பகங்களில் இருக்கும் அனாதைக் குழந்தைகள்.  இவர்கள்,  சமுதாயத்தில் தாங்கள்  புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும், மதிக்கப்பட தக்கவர்கள் இல்லை என்றும் தங்களைப்பற்றி கற்பனை செய்து கொள்வார்கள். அதனால் , இக்குழந்தைகள் புரட்சி செய்பவர்களாவோ (REBILLIOUS) அல்லது தங்களது ஆக்ரோஷத்தை அடக்கி வைத்துக் கொள்பவர்களாகவோ இருப்பார்கள்.

ஆகவே, தங்களுக்கு உரிய மரியாதை அல்லது பாராட்டுக் கிடைக்கவில்லை என்பது இம்மருந்தின் இன்னொரு கருப்பொருளாக இருக்கிறது. அதே போல் , தன்னால் ஏற்படும் தொல்லைகளாலும் , புரட்டுத் தனமான செய்கையாலும் தான் தமது  பெற்றோர்கள்  சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று நினைப்பார்கள்.  அல்லது தமது பெற்றோர்களின் மதிப்பிற்கு உரியவனாக தான் இல்லை அதனால் அவர்கள் சண்டையிடுகிறார்கள் , பிறகு தன்னை விட்டு  விலகி சென்று விடுவார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.


நேட்ரம் கார்பானிக்கம் (NAT-C):

மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்  மனிதர்கள். எல்லா உதவிகளையும் செய்து முடித்துவிட்டு  நாகரீகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் கனிவான மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடையவர்கள். தாங்கள் செய்யும் நற்செயலுக்கான பாராட்டை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கமாட்டார்கள். தனியாக இருக்க விரும்புவார்கள்; குறிப்பிட்ட நல்ல நண்பர்களிடம்  சேர்ந்து இருப்பார்கள். குறிப்பாக அவர்களை புரிந்து கொள்ளாதவர்களிடமிருந்து   விலகி இருக்கவே விரும்புவார்கள்.  நாகரீகமாக ஒதுங்கிக்கொள்வது  என்பது இம்மருந்தின் மையாக கருப்பொருளாக இருக்கிறது.


 மற்றவர்கள் தங்களது கௌரவத்தை கெடுத்து விடுதற்கு முன்பே அமைதியாக இருந்து தமது கௌரவதைக் காப்பாற்றிக் கொள்வார். இவருக்கு கோபம் இருக்கிறது என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. தமக்கும் மற்றவர்களுக்கும் ( SOCIETY, RELATIVES & STRANGERS) இடையே பிரிவினை (SEPARATION) இருக்கிறது என்ற மனப்பிரமை இவர்களுக்கு இருக்கும். தனக்கு தந்தை இல்லை என்ற உணர்வோ அல்லது தந்தையால் புறக்கணிக்கப்பட்டு விட்டோம் அல்லது கைவிடப்பட்டுவிட்டோம் அல்லது தந்தை இறந்துவிட்டார் என்ற எண்ணமே  இதன் கருப்பொருளாக இருக்கிறது. ( நேட்ரம்- புறக்கணிக்கப்படுத்தல்; கார்பானிக்கம்- தந்தை).



பின்குறிப்பு:
ஸ்கால்ட்டன் அவர்களின் " ஹோமியோபதி மற்றும் கனிமங்கள் " என்ற நூலிருந்து சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  விதமாக தமிழில் கொடுத்துள்ளேன். முழு பகுதியையும் தெளிவாகத் அறிந்து  கொள்ள  மேற்கண்ட மூல நூலை கட்டாயம் வாசித்து பயனடையுங்கள். விபரம் கீழே;

BOOK: HOMEOPATHY AND MINERALS
AUTHOR: JAN SCHOLTEN
HOMEOPATHIC MEDICAL PUBLISHERS
201, Dinar, 20, Station Road, SANTACURZ(W), Mumbai -400054,
INDIA.

Friday, 7 February 2020

ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும்-அத்தியாயம்-1



அத்தியாயம்-1

தொகுதிப்பகுப்பாய்வும் கருப்பொருளும்

தொகுதி பகுப்பாய்வு   (GROUP ANALYSIS):

ஸ்கால்ட்டன் தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்து அந்தத் தொகுதிக்குரிய  தலைமைக் குறிகளை பிரித்தெடுத்து கொள்கிறார். பின்பு அந்தக்குறிகளை , அதே மூலகங்களைக் கொண்ட வேறு தொகுதியில் உள்ள மருந்துகளோடு இணைத்து அவ்விரு தனிமங்களுக்கும் உரிய சரியான குறியை வரையறுக்கிறார். இவை துயரர்களின் நோய்தாக்குதலுக்குள்ளான  அந்தந்த உறுப்புகளிலும் , தலைமைக் குறிகளிலும் மற்றும் மனக்குறிகளிலும் சிறப்பாக வேலை செய்கிறது.


உதாரணமாக , ஒருவருக்கு நேட்ரம் மூர் தனிமத்தின் பண்பும், பாஸ்பரஸ் தனிமத்தின் பண்பும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மூர் ( NAT-M)  மற்றும் பாஸ்பரஸ் (PHOS) என்ற இரு தனிமங்களைக் தனித்தனியாக கொடுப்பதற்குப் பதிலாக நேட்ரம்- பாஸ் ( NAT-P) என்ற  மருந்தைக் கொடுக்கலாம். இங்கே நேட்ரத்தின் அடிப்படைக் கருப்பொருளும், பாஸ்பரஸின் அடிப்படைக் கருப்பொருளும் இணைந்து ஒரு புதிய கருப்பொருள் உருவாக்கப்படுகிறது.  இதில் நேட்ரத்தின் சாயல் தனியாகவும், பாஸ்பரஸின் சாயல் தனியாகவும் இருப்பதற்குப் பதிலாக இரண்டும், இரண்டறக் கலந்த ஒரு புதிய சாயலாக அதற்கேயுண்டான கருப்பொருளாக வெளிப்படுகிறது.


அதேபோல் , ஒரு துயரருக்கு கார்பானிக்கத்தின் சாரமும்  நேட்ரம் மூர் மருந்தின் சாரமும் இருந்தால் , அவருக்கு நேட்ரம் கார்ப் கொடுக்கலாமா அல்லது கால்சியம்  மூர் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழலாம்.
அல்லது ஒருங்கிணைந்த மருந்தோ ( COMBINATION REMEDY) அல்லது கால்சியம்  கார்ப் மருந்தும் அதனைத் தொடர்ந்து நேட்ரம் மூர் மருந்தும் கொடுக்கலாம். ஆனால், இந்த மாதிரியான தருணங்களில் மனக்குறிகள் சரியாக வழிகாட்டும். எடுத்துக்காட்டாக நேட்ரத்தின் சாரம் தனிமை அல்லது தனித்திருப்பது  (ALONE) ; கார்பானிக்கத்தின் சாரம் மதிப்பு  (DIGNITY). ஒரு துயரர் தனது மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள தனியாக இருக்க விரும்புகிறார் என்றால் இந்த நிலையில் “தனித்து இருப்பதே மதிப்பானது” (ALONE IN HIS DIGNITY) என்ற மனநிலைக்கு நேட்ரம் கார்பானிக்கம் தான் மருந்தாக இருக்க முடியும்.

இதேபோல் மெக்னீசியம் கார்பானிக்கம் மருந்துகளையும் , இன்னபிற மருந்துகளையும் தொகுதி ஆய்வு செய்து கொள்ளலாம்.



கருப்பொருள் ( THEMES)


ஸ்கால்ட்டனின்  தொகுதி பகுப்பாய்வில் ஒவ்வொரு தனிமங்களுக்கும் ஒரு கருப்பொருள் உள்ளது.   இந்தக் கருப்பொருள் துயரர் ஆய்வின் போது  அவர்களிடமிருந்து பெரும் தகவல்களோடு பொருத்தி பார்த்து அவர்களை சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக  கார்பானிக்கம் தந்தையோடும் , மூரியாடிக்கம் தாயோடும், சல்பூரிக்கம் வாழ்க்கைத்துணையோடும்  மற்றும் பாஸ்பாரிக்கம் சகோதர,சகோதரிகள் மற்றும் நண்பர்களோடு ஏற்படக்கூடிய உறவுகளிலிருந்தும் , முரண்பாடுகளிலிருந்தும் தோன்றும் குறிகளைக் கருப்பொருளாக கொண்டுள்ளது. இந்தக் கருப்பொருளை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குரிய சரியான மருந்தை தேர்ந்தெடுக்க முடியும்.


உதாரணமாக ,  ஒன்றுமில்லை (NOTHING) , தனிமை (ALONE)  மற்றும் தடுக்கப்படுதல் (FORBIDDEN)  போன்றவைகள்  நேட்ரம் கனிமத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அதேபோல் தாய் அல்லது அம்மா , அக்கறை அல்லது பொறுப்பு (CARE) , பரிதாபப்படத்தக்க (PITIFUL)  போன்ற கருப்பொருள் மூரியாடிக்கத்தின் கருப்பொருளாக இருக்கிறது. எனவே,  துயரர் “எனக்கு அம்மா இல்லை”, “என்னை பேணிவளர்க்க யாருமில்லை” என்று கூறினால் அவருக்கு " நேட்ரம் மூரியாடிக்கம் " கொடுக்கலாம்.

அதே சமயத்தில் இக்கருப்பொருளையே விடாப்பிடியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமும் சிலசமயம் ஏற்படுவதில்லை . எடுத்துக்காட்டாக , அம்மாவிடம் எந்த முரண்பாடு இல்லாவிட்டாலும் மனைவியை இழந்த பிறகு , ஒரு வயதான கணவனுக்கு   இந்த தனிமையுணர்வும் , தன்னைக் கவனித்துக்கொள்ள யாருமில்லை என்ற உணர்வும் ஏற்படலாம். அவருக்கும் நேட்ரம் மூரியாடிக்கமே மருந்தாக இருக்கிறது.


அதேபோல்  ஒரு மனைவிக்கு  கணவர் கூட தந்தைப் போன்று இருக்கக் கூடும். அவரின் இழப்பை வாழ்க்கைத்துணைவருக்கு பதிலாக தந்தையின் இழப்பாகக் கூட அவர் உணரக்கூடும் . ஆகவே துயரர்களின் வார்த்தைகளில் வெளிப்படும் சரியான கருப்பொருளை  மிகக் கவனமாக புரிந்து கொள்ளவேண்டும். அதனால் எல்லாத் தனிமங்களிலும் இருக்கும் மூலக் கருப்பொருளையும் (THEMES) , மாறுபட்ட கருப்பொருளையும் ( VARIATIONS ON A THEME) நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.


பின்குறிப்பு:

ஸ்கால்ட்டன் அவர்களின் " ஹோமியோபதி மற்றும் கனிமங்கள் " என்ற நூலிருந்து சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  விதமாக தமிழில் கொடுத்துள்ளேன். முழு பகுதியையும் தெளிவாகத் அறிந்து  கொள்ள  மேற்கண்ட மூல நூலை கட்டாயம் வாசித்து பயனடையுங்கள். விபரம் கீழே;

BOOK: HOMEOPATHY AND MINERALS
AUTHOR: JAN SCHOLTEN
HOMEOPATHIC MEDICAL PUBLISHERS
201, Dinar, 20, Station Road, SANTACURZ(W), Mumbai -400054,

INDIA.

Thursday, 6 February 2020

ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும்


ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும்


முன்னுரை :


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்கால்ட்டன் தனிம அட்டவணையில் ( PERIODIC TABLE) உள்ள பெரும்பாலான தனிமங்களை ( ELEMENTS) ஆய்வு செய்து அவற்றை ஹோமியோபதி மருந்துகளாக கொடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள " ஹோமியோபதி  மற்றும் கனிமங்கள் ", " ஹோமியோபதி  மற்றும் தனிமங்கள் " என்ற நூல்கள் ஹோமியோபதி உலகிற்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நலமாக்களில் புதிய யுக்திகளையும் கொடுத்துள்ளது.


கனிமங்கள் மற்றும் தனிமங்கள் ஆகியவற்றை அதன்   பண்புகளின் அடிப்படையில் பகுப்பாய்ந்து அவற்றை  "தொகுதி  பகுப்பாய்வு (GROUP ANALYSIS)  " மற்றும் " கருப்பொருள் ( THEMES) " என்ற தலைப்புகளில் தொகுத்து , அவற்றை மனித வாழ்க்கையோடு பொருத்தி எழுதியுள்ளார். பொதுவாக


மனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து இறக்கும் வரை பல பருவங்களைக் கடந்து வருகிறான். இதில் ஒவ்வொரு பருவத்திலும் அவனது சிந்தனை, எண்ணம் மற்றும் செயல் ஆகியவைகள் வளர்ச்சியடைந்து செல்கிறது. இந்தப்பருவ நிலைகள் இப்பிரபஞ்சத்திலுள்ள தனிமங்களின் அணுக்களோடு மிகவும் பொருந்தி வருகிறது என்பதே ஸ்கால்ட்டனின் கண்டுபிடிப்பு. அதாவது , இந்த தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்கள் அனைத்தும் அதன் அணு எண் அடிப்படையில் கிடைமட்டமாக ( HORIZONTAL)     ஏழு வரிசைகளும் ( SERIES) , நெட்டு வாக்கில் ( VERTICAL) பதினெட்டு படிநிலைகளாகவும் ( STAGES) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு வரிசைகள் மனிதனின் ஏழு பருவ நிலைகளாகவும்  , பதினெட்டு படிநிலைகளாகவும் ஸ்கால்ட்டன் வகைப்படுத்துகிறார். இந்த ஏழு வரிசைகளில் அதாவது பருவ நிலைகளிலும் , பதினெட்டு படிநிலைகளிலும் ஏற்படும் தேக்கமே அல்லது தடங்கலே மனிதனுடைய வாழ்க்கையில் நோயிற்கான சூழலை உருவாக்குகிறது என்று அவர் நம்புகிறார்.


தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.   ஸ்கால்ட்டனின் கண்டுபிடிப்பும் , விளக்கங்களும் ஹோமியோபதி தத்துவத்தின் அடிப்படையில் நிரூபணம் செய்யப்படவில்லை என்ற குறைபாடும்  உள்ளது.


இருந்தாலும் ஹோமியோபதியர்களான நாம், ஹோமியோபதியில் நோயிற்கு மருந்தல்ல.  மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.  மாமேதை ஹானிமன் ஆர்கனான் மணிமொழி மூன்றில் எடுத்துக் கூறியவாறு, ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது? என்பதையும், அதே போல், ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது? என்பதையும் உணர்ந்து, துயரர்களை தனித்துவப்படுத்தி , அதன் அடிப்படையில்  ஹோமியோபதி மருந்துகளைக் கொடுக்கிறோம். இந்த தனித்துவத்தின் அடிப்படையில் தான்  ஸ்கால்ட்டனும் ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.


அதாவது கனிமங்களையும், தனிமங்களையும் சமூகத்தில்  உள்ள தாயாக, தந்தையாக, பிள்ளைகளாக, சகோதர சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார். எனவே, ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை ஸ்கால்ட்டன் கூறுகிறார்.


அதன் அடிப்படையில் அவர் தனிமங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்தும் (GROUP ANALYSIS) , அதன் மூலம் அந்தப் பொருளின் பண்பை அதாவது அதன் கருப்பொருளை ( THEMES) வரையறுக்கிறார். இதன் அடிப்படையில் தான் அவரின் " ஹோமியோபதி  மற்றும் கனிமங்கள்” என்ற  நூலில் ஏறத்தாழ 58 மருந்துகள் எழுதப்பட்டுள்ளது. அவற்றை இப்போது சுருக்கமாக பார்க்கலாம்.


பின்குறிப்பு:

ஸ்கால்ட்டன் அவர்களின் " ஹோமியோபதி மற்றும் கனிமங்கள் " என்ற நூலிருந்து சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  விதமாக தமிழில் கொடுத்துள்ளேன். முழு பகுதியையும் தெளிவாகத் அறிந்து  கொள்ள  மேற்கண்ட மூல நூலை கட்டாயம் வாசித்து பயனடையுங்கள். விபரம் கீழே;

BOOK: HOMEOPATHY AND MINERALS
AUTHOR: JAN SCHOLTEN
HOMEOPATHIC MEDICAL PUBLISHERS
201, Dinar, 20, Station Road, SANTACURZ(W), Mumbai -400054,

INDIA.

Saturday, 18 January 2020

ஆர்கனான் மணிமொழி-68


§ 68

In homoeopathic cures they show us that from the uncommonly small doses of medicine (§§ 275 - 287) required in this method of treatment, which are just sufficient, by the similarity of their symptoms, to overpower and remove from the sensation of the life principle the similar natural disease there certainly remains, after the destruction of the latter, at first a certain amount of medicinal disease alone in the organism, but, on account of the extraordinary minuteness of the dose, it is so transient, so slight, and disappears so rapidly of its own accord, that the vital force has no need to employ, against this small artificial derangement of its health, any more considerable reaction than will suffice to elevate its present state of health up to the healthy point - that is, than will suffice to effect complete recovery, for which after the extinction of the previous morbid derangement but little effort is required (§ 64, B).


ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சைமுறை  செயல்படும் திறனை விளக்கும் உண்மைகள்.

ஹோமியோபதி நலமாக்கல் நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுவது  என்னவென்றால் ,  இந்த  சிகிச்சைமுறையில்  நடைமுறைக்கு மாறாக , சிறிய அளவிலான மருந்துகளே ( மணிமொழி 275-287) தேவையானதும் , போதுமானதுமாக இருக்கிறது. அந்த சிறிய அளவு மருந்துகளிலுள்ள ஒத்த தன்மையிலான குறிகளே உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூற்றில் ஏற்பட்டியிருக்கும் ஒத்த இயற்கை நோயை அடக்கி  ஆட்கொண்டு அகற்றி விடுகிறது. மேற்கூறிய ஒத்த இயற்கை நோய் அழிக்கப்பட்ட பின்பு சிறிய அளவிலான மருந்து சார்ந்த , அதாவது மருந்தினால் விளைந்த நோய் உடலிலுள்ள உயிரியில் நிச்சயமாக எஞ்சியிருக்கிறது , ஆனால் , அசாதாரணமான முறையில் மிக நுட்பமான அளவில் அம்மருந்தளவு இருப்பதாலும்  , அதுவும் மிகக் குறைந்ததாகவும் , சிறிய அளவிலும் இருப்பதாலும்  , விரைவில் தானாகவே மறைந்து விடும் தன்மை கொண்டதாலும் , ஆரோக்கியத்தை சிறிதளவு பாதித்த இந்த சிறிய செயற்கை நோயைத் தனியாக வெளியேற்ற வேண்டிய அவசியமோ அல்லது போதுமான அளவு எதிர்வினைச்செயல் புரிய வேண்டிய அவசியமோ உயிராற்றலுக்கு தேவை இல்லாமல் போய்விடுகிறது. அதாவது, ஏற்கனவே இருந்த இயற்கை நோய் வெளியேறிய பிறகு , எஞ்சியுள்ள இந்த சிறிதளவு செயற்கை நோயை முழுவதுமாக வெளியேற்றி நலத்தை மீட்பதற்கு மிகச் சிறிய அளவிலான முயற்சியே போதுமானதாகும் (மணிமொழி 64- B பிரிவு).


ஆர்கனான் மணிமொழி-67


§ 67


These incontrovertible truths, which spontaneously offer themselves to our notice and experience, explain to us the beneficial action that takes place under homoeopathic treatment; while, on the other hand, they demonstrate the perversity of the antipathic and palliative treatment of diseases with antagonistically acting medicines.1


1 Only in the most urgent cases, where danger to life and imminent death allow no time for the action of a homoeopathic remedy - not hours, sometimes not even quarter-hours, and scarcely minutes - in sudden accidents occurring to previously healthy individuals - for example, in asphyxia and suspended animation from lightning, from suffocation, freezing, drowning, etc. - is it admissible and judicious, at all events as a preliminary measure to stimulate the irritability and sensibility (the physical life) with a palliative, as for instance, with gentle electrical shocks, with clysters of strong coffee, with a stimulating odor, gradual application of heat, etc. When this stimulation is effected, the play of the vital organs again goes on in its former healthy manner, for there is here no disease* to be removed, but merely an obstruction and suppression of the healthy vital force. To this category belong various antidotes to sudden poisoning: alkalies from mineral acids, hepar sulphuris for metallic poisons, coffee and camphora (and ipecacuanha) for poisoning by opium, etc.

It does not follow that a homoeopathic medicine has been ill selected for a case of disease because some of the medicinal symptoms are only antipathic to some of the less important and minor symptoms of the disease; if only the others, the stronger well-marked (characteristic), and peculiar symptoms of the disease are covered and matched by the same medicine with similarity of symptoms - that is to say, overpowered, destroyed and extinguished; the few opposite symptoms also disappear of themselves after the expiry of the term of action of the medicament, without retarding the cure in the least.

* And yet the new sect that mixes the two systems appeals (though in vain) to this observation, in order that they may have an excuse for encountering everywhere such exceptions to the general rule in diseases, and to justify their convenient employment of allopathic palliatives, and of other injurious allopathic trash besides, solely for the sake of sparing themselves the trouble of seeking for the suitable homoeopathic remedy for each case of disease - and thus conveniently appear as homoeopathic physicians, without being such. But their performances are on a par with the system they pursue; they are corrupting.


ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையின் உடல்நலம் விளைவிக்கிற குணம்    மற்றும் எதிர்நிலை ( நோய்தணிவிப்பு) மருத்துவச் சிகிச்சைமுறையில் உள்ள நெறிபிறழ்வுகள் பற்றிய உண்மையான விளக்கங்கள் .


மேலே  குறிப்பிட்ட மறுக்கமுடியாத உண்மைகள் , இயற்கையின் வழியாகவும் மற்றும் பட்டறிவின் மூலமாகவும்  நமது கவனத்திற்கு கொண்டு வருவதோடு , ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையினால்   ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விளக்குகிறது. அதே நேரத்தில், அதற்கு மாறாக ,   நோய்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளின் மூலம்  நோய்களுக்கு செய்யப்படும்  நேர் எதிர்பண்புடைய மற்றும் நோய்தணிப்பு சிகிச்சையினால் ஏற்படும் நெறிபிறழ்வு தன்மைகளை  அவைகள் நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுகிறது-1.

 அடிக்குறிப்பு-1:
ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்வதற்கு போதுமான அவகாசம் இல்லாத நிலையில்,  உதாரணமாக , ஏற்கனவே ஆரோக்கியமாக இருந்த ஒருவர் திடீரெண்டு விபத்தில் சிக்கி இன்னும் சில மணிநேரத்தில்   அல்லது கால்மணி நேரத்தில் அல்லது  சில நிமிடத்திலோ உயிர்  போய்விடும் என்ற ஆபத்தான நிலையிலும் மற்றும் திடீர்  மூச்சடைப்பு  , மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட இயக்கமற்ற நிலை , மூச்சுத்திணறல் , உடல் குளிரால் தாக்குண்டு பனிக்கட்டிபோல் உறைந்தநிலை  மற்றும் தண்ணீரில் மூழ்குதல் போன்ற  மிக நெருக்கடியாக தருணங்களில் மட்டுமே  இந்த நோய்தணிவிப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். அது போன்ற ஆபத்தான நேரங்களில்  முதலுதவியாக  பாதிக்கப்பட்டவரின் உடலின் இயக்கம் (உறுத்தல்) மற்றும் உணர்வுகள் (உடம்பின் உயிர்வாழ்வு) ஆகியவற்றை உடனடியாகத் தூண்டும் நியாயமான செயலாக  இந்த நோய்த்தணிவிப்பு முறையை மேற்கொள்ளலாம். இதற்குச் சான்றாக, மென்மையான மின்னாற்றல் சிகிச்சை, மிகக்கெட்டியான காபிச்சாறு, நறுமணப் பொருள்களால் கிளர்ச்சியைத் தூண்டுதல் , படிப்படியாக உடம்பை சூடாக்குதல் போன்ற செயல்முறைகளைச் செய்யலாம். இவ்வாறு கிளர்ச்சிசெய்து தூண்டியபிறகு ,உடலின் முக்கியமான உறுப்புகள் அவை முன்பிருந்த  ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புகின்றன, ஏனென்றால் அங்கே  நீக்க வேண்டிய நோய் என்று எதுவும் இங்கே இல்லை , ஆனால் நலமான உயிராற்றலுக்கு  அங்கே ஏற்பட்டிருந்த தடையும் மற்றும் உள்ளமுக்கமும் மட்டுமே இருந்தன * .


திடீரென்று ஏற்பட்ட நச்சுத்தன்மைக்கு கொடுக்கும் முறிவு மருந்துகள் அனைத்தும் இவ்வகையைச் சேர்ந்தது தான் : எடுத்துக்காட்டாக கனிம அமிலங்களுக்கு வேதியியல் பொருள்களையும் , உலோகப்பொருள்களின் நச்சுத்தன்மைக்கு ஹீபர் சல்பரும் , அபினியின் (ஓபியம்) நச்சுத்தன்மையை போக்க காபி மற்றும் கற்பூரம் ( மற்றும் இபிகா)  கொடுப்பது போன்றவற்றைக்  சொல்லலாம்.


சில நோய்களுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட  ஹோமியோபதி மருந்தின் குறிகள்  அந்த நோயின்  ஒரு சில முக்கியமற்ற குறிகளுக்கும்  மற்றும் சிறிதளவு  குறிகளுக்கான  எதிர்நிலையான மருந்தாக இருப்பதாலேயே , அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மருந்து தவறானது என்ற முடிவிற்கு நாம் வந்துவிடக்கூடாது. அந்நோயின் நன்றாகத் தெரிகிற வலிமை வாய்ந்த  குறிகள் ( தனிச் சிறப்புப்பண்புக்குறிகள்  ) , மற்றும் பிற விசித்திரமான  குறிகள் அந்த மருந்திற்கு ஒத்துவருவதாகவும் மற்றும்  பொருத்தமானவையாகவும் இருந்தால் அவை அடக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் மற்றும் துடைத்தழிக்கப்பட்டும் விடுகின்றன. அம்மருந்தின் முழுமையாக செயல்பாடு முடிந்த பிறகு அங்கே  எஞ்சியிருக்கும் ஒரு சில எதிரான குறிகளும் கூடத் தாமாகவே மறைந்து விடுகின்றன, இறுதியில் நலம் ஏற்படுகிறது.


[ * இருந்த போதிலும், இருவேறு மருத்துவ முறைகளையும் கலந்து தருகின்றவர்களாகிய ஒரு பிரிவினர் இத்தகைய கூர்நோக்கு  பற்றி ஒரு முறையீட்டைச் செய்கின்றனர்  ( பயனற்றது என்றாலும்  ) , அதாவது, நோய்களை பற்றிக் கூறப்பட்ட பொதுவான விதிகளுக்கு எதிரான அத்தகைய விதிவிலக்குகளே எங்கும் எதிர் கொள்ளப்படுபவையாக இருக்கிறது என்றும் , அதனால் தாங்கள் இருவேறு மருத்துவமுறைகளையும்  கலந்து மருத்துவம் செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் , மிகவும் வசதியாக உள்ள இந்த அலோபதி நோய்த்தணிவிப்பு  மருந்துகளையும் , தீங்கு தரும் அம்மருத்துவ குப்பைகளையும் தருவதை அவர்கள் நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதெல்லாம் , ஒவ்வொரு நோய்க்குமான சரியான ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தொல்லையிலிருந்து தங்களை முழுமையாகக்  காத்துக் கொள்வதற்காக மட்டுமே அவர்கள் அச்செயலைச்  செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஹோமியோபதி மருத்துவர்களாக இல்லாமலேயே , தங்களை தகுந்த ஹோமியோபதி மருத்துவர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். ஆனால் , அவர்களது செயல்திறனை  அவர்கள் பின்பற்றும் மருத்துவமுறையோடு  சமநிலைப்படுத்திப் பார்க்கும் போது ; அவைகள் கேடு விளைவிப்பதாக  உள்ளது ].



Saturday, 11 January 2020

ஆர்கனான் மணிமொழி-66


§ 66

An obvious antagonistic secondary action, however, is, as may readily be conceived, not to be noticed from the action of quite minute homoeopathic doses of the deranging agents on the healthy body. A small dose of every one of them certainly produces a primary action that is perceptible to a sufficiently attentive; but the living organism employs against it only so much reaction (secondary action) as is necessary for the restoration of the normal condition.

முகநுண்ணிய ஹோமியோபதி மருந்தின் செயல்களை  , தமது  இரண்டாம் நிலைச்செயல்பாட்டின் மூலமாக   உயிராற்றலில்  நிலைநிறுத்தும் ஏகநிலைமை (சமநிலை) நலத்தின் வழியாக  மட்டுமே அறிந்து முடியும் .


நலமான நிலையில் இருக்கும் உடலில் சீர்கேட்டை ஏற்படுத்தும் மிக  நுண்ணிய அளவிலான ஹோமியோபதி மருந்துகள் உட்கொண்ட பிறகு   ஏற்படும் செயலை காணமுடிவதில்லை , ஆனாலும் , அதனுடைய வெளிப்படையான எதிர்நிலையான இரண்டாம்நிலைச் செயல்பாட்டை உடனடியாக உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு சிறிய அளவிலான ஹோமியோபதி மருந்துகளும் நோயாளியின் உடலில் நிச்சயமான  முதல்நிலைச் செயல்பாட்டை   உருவாக்குகிறது ஆனால், ஜீவனுள்ள ( உயிர் வாழும்  ) உயிரி இந்த முதல்நிலை செயல்பாட்டிற்கு எதிராக செயல் புரிந்து இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுத்து  இயல்பான உடல்நலத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான எதிர்வினை செயலை (இரண்டாம்நிலைச் செயல்பாடு )  நிகழ்த்துகிறது என்பதை போதுமான அளவு  கூர்மையாக கவனிக்கும் ஆற்றல் உள்ளவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

Saturday, 28 December 2019

ஆர்கனான் மணிமொழி-65


§ 65

Examples of (A) are familiar to all. A hand bathed in hot water is at first much warmer than the other hand that has not been so treated (primary action); but when it is withdrawn from the hot water and again thoroughly dried, it becomes in a short time cold, and at length much colder than the other (secondary action). A person heated by violent exercise (primary action) is afterwards affected with chilliness and shivering (secondary action). To one who was yesterday heated by drinking much wine (primary action), today every breath of air feels too cold (counteraction of the organism, secondary action). An arm that has been kept long in very cold water is at first much paler and colder (primary action) than the other; but removed from the cold water and dried, it subsequently becomes not only warmer than the other, but even hot, red and inflamed (secondary action, reaction of the vital force). Excessive vivacity follows the use of strong coffee (primary action), but sluggishness and drowsiness remain for a long time afterwards (reaction, secondary action), if this be not always again removed for a short time by imbibing fresh supplies of coffee (palliative). After the profound stupefied sleep caused by opium (primary action), the following night will be all the more sleepless (reaction, secondary action). After the constipation produced by opium (primary action), diarrhoea ensues (secondary action); and after purgation with medicines that irritate the bowels, constipation of several days' duration ensues (secondary action). And in like manner it always happens, after the primary action of a medicine that produces in large doses a great change in the health of a healthy person, that its exact opposite, when, as has been observed, there is actually such a thing, is produced in the secondary action by our vital force.


 முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைச் செயல்பாடுகளின் உதாரணங்கள் .



மேற்கண்ட விஷயமாக ( மணிமொழி-64-அ)  எல்லோருக்கும் தெரிந்த சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சூடான  தண்ணீரில் ஒரு கையை நனைக்கும் போது  அவ்வாறு செய்யப்படாத  மற்ற கையை விடச் சூடாகிறது (முதல் நிலைச் செயல்பாடு ) ; ஆனால் அந்தக் கையை  சூடான எடுத்து நன்றாகத் துடைத்து உலர்த்தியவுடன் ,  சிறிது நேரத்தில்  மற்ற கையை விடச் சில்லென்று குளிர்ந்து விடுகிறது இன்னும் சற்று நேரம் கழிந்த பின்பு மிகக் குளிர்ச்சி உடையதாக ஆகிவிடுகிறது  (இரண்டாம் நிலைச்செயல்பாடு) .

கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஒருவருக்கு  முதலில் உடம்பில் சூடு உண்டாகிறது (முதல் நிலைச்செயல்பாடு  ), அதன் பிறகு குளிரும் மற்றும் நடுக்கமும்  தோன்றுகின்றன (இரண்டாம் நிலைச்செயல்பாடு ). 

நேற்று   கொடிமுந்திரி சாராயத்தை அதிகமாக  குடித்ததால் உடம்புச்சூடு அதிகமான ஒருவருக்கு (முதல் நிலைச் செயல்பாடு), இன்று அவர் இழுத்துவிடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் மிகவும் குளிச்சியாக இருக்கிறது ( உயிரியின் எதிர்மறைச்செயல், இரண்டாம் நிலைச்செயல்பாடு )

மிகவும்  குளிர்ந்த தண்ணீரில் நீண்ட  நேரம் கையை வைத்திருக்கும் போது  அந்தக்கை  மற்ற கையை விட  முதலில் அதிகம்  வெளுத்தும் மற்றும்  குளிர்ச்சியாகவும்  இருக்கும் (முதல் நிலைச்செயல்பாடு ); ஆனால் குளிர்ந்த   தண்ணீரிலிருந்து அந்தக் கையை எடுத்துத் துடைத்து உலர்த்திய பிறகு அது மற்ற கையைக் காட்டிலும் சூடாக மாறுவதோடு , சிவந்தும்  மற்றும் அழற்சி அல்லது வேக்காடு அடைந்து விடுகிறது (இரண்டாம் நிலைச்செயல்பாடு, உயிராற்றலின் எதிர்விளைவு).


அதே போல் காப்பியை குடிக்கும் போது  முதலில் அதிகமான  சுறுசுறுப்பு  ஏற்படுகிறது (முதல் நிலைச்செயல்பாடு ) பிறகு மந்தநிலையும் மற்றும் உறக்கக் கலக்கமும் நீண்ட  நேரத்திற்கு  ஏற்படுகின்றன (எதிர்வினை, இரண்டாம் நிலைச்செயல்பாடு ). இந்த நிலையை விரைந்து போக்குவதற்கு மீண்டும் ஒருமுறை  காப்பி சாப்பிட வேண்டியதாக  இருக்கும் (நோய்த்  தணிவிப்பு மருந்து) .

ஒருவர் அபினி (ஓபியம்) எடுத்துக் கொண்ட பிறகு ஆழ்ந்த மயக்கமான தூக்கம் ஏற்படுகிறது ( முதல் நிலைச்செயல்பாடு) , ஆனால் அடுத்த நாள் இரவு அவருக்கு அதிக தூக்கமின்மை ஏற்படும் (எதிர்வினை, இரண்டாம் நிலைச்செயல்பாடு ). அபினி சாப்பிடும் போது  (ஓபியம்)  முதலில் மலச்சிக்கலும் (முதல் நிலைச்செயல்பாடு ) பிறகு வயிற்றுப் போக்கும் ( இரண்டாம் நிலைச்செயல்பாடு ) உண்டாகும். அதற்கு குடல்களை தூய்மையாக்குகிற மருந்துகளை பயன்படுத்துவதால் , குடலில் எரிச்சலை ஏற்படுத்தி   பிறகு பல நாட்களுக்கு தொடரும்  மலச்சிக்கலைத்  தோற்றுவிக்கிறது. ( இரண்டாம் நிலைச்செயல்பாடு ) . இத்தகைய முறையிலேயே  அதிக அளவில் மருந்துகளை  உட்கொள்ளும்போது  ஆரோக்கியமான மனிதனின் உடலில் எப்போதும்  மாற்றங்களை ஏற்படுத்துகிறது   (முதல் நிலைச்செயல்பாடு ) . பின்னர் , அதற்கு   நேர் எதிரான  இரண்டாம் நிலைச்செயல்பாட்டை (எதிர்வினைச்செயல்)  நமது உயிராற்றல் ஏற்படுத்துகிறது என்பதை கூர்ந்து கவனிக்கும் போது நாம் அறிந்து கொள்ளலாம்.