Saturday, 8 February 2020

ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும் -அத்தியாயம்-2


கனிமங்களின் தொகுதி பகுப்பாய்வு


இப்போது ஸ்கால்ட்டன் “ஹோமியோபதி மற்றும் கனிமங்கள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ள தொகுதி பகுப்பாய்வையும் , அதனுடைய கருப்பொருளையும் , மற்றும் மருந்துகளையும்  சுருக்கமாகப் பார்க்கலாம்.


I.              கார்பானிக்கம் (CARBONICUM):

வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் , அதன் மதிப்பும் ( VALUES) கார்பானிக்கத்தின் முக்கிய  கருப்பொருளாக இருக்கிறது . அவர்களின் இருப்பு, அவர்களின் வாழ்க்கை என்பதன் அர்த்தத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு பொருளைத் தேடுகிறார்கள், மதிப்புகளை வைப்பது அவர்களுக்கு மிக முக்கியமானது.

அடுத்து , சுயமதிப்பு ( SELF WORTH) என்பது இரண்டாவது கருப்பொருளாக இருக்கிறது. மூன்றாவது கருப்பொருள் கண்ணியம்(DIGNITY)  ஆகும். இவர்கள் நியாயமாக சிந்திக்கிறவர்களாக இருப்பதோடு  , தங்களின் சுய மதிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவும்   ,  கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களிடம்  சிறிய அளவில் உயர்குடி இயல்பும்( ARISTOCRATIC)  இருக்கும்.

கார்பானிக்கத்தின்  அடுத்த கருப்பொருள் வேலை மற்றும் தொழிலில் காணப்படுகிறது. அவர்கள் கடின உழைப்பாளிகள். இது சமூக நிலைப்பாட்டுடன் ஓரளவு தொடர்புடையது. இவர்கள் சுயநலமற்றவர்கள் என்கிறார் மருத்துவர் ரோஜர் மோரிசன்.

இறுதி கருப்பொருள் தந்தை உருவம். . தந்தையின் அடையாளம் அதிகாரம். அவர்கள் அர்த்தமுள்ள , மதிப்புவாய்ந்த , கண்ணியமான வேலை முதலியவற்றைக் கொண்டிருப்பார்கள். நடைமுறையில், இந்த தொகுதியில் உள்ள மருந்துகள் பெரும்பாலும் தந்தை அல்லது அதிகாரிகளின்  சிக்கல்களைக் நிரூபிக்கிறது.

கிராபைட்டிஸில் தந்தை இருக்கிறார், ஆனால் அவர் குடும்பத்திலிருந்து தனியாக இருக்கிறார், அவர் எப்போதும் விலகி இருக்கிறார்.  நேட்ரம் கார்பானிக்கத்தில்  தந்தை முற்றிலும் இல்லாமல் இருக்க முடியும். மெக்னீசியம் கார்பானிக்கத்தில்  தந்தையுடனோ அல்லது அதிகாரிகளுடனோ அதிகாரப் போராட்டம் ஏற்படலாம்.



கிராபைட்டிஸ் (GRAPH):


உண்மையில் தந்தை யார் , எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வியே இதன் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது.

இவர்கள் மந்தமான (SLOW), முரட்டுத்தனமான (COARSE) , மேம்பாடு அடையாத மனிதர்களாக இருப்பார்கள். அத்தோடு மாறுகின்ற மனநிலையோடு , எதற்கும் எதிர்வினையாற்றாதவராகவும் மற்றும் சிறிய விஷயங்களுக்கு கூட கவலை கொள்பவராகவும் இருப்பார்கள். இவர்கள் பதட்டமுள்ளவர்களாகவும் (ANXIOUS), கோபக்காரராகவும் (ANGRY), கவலையுள்ளவர்களாகவும் (SAD)  மற்றும் அழும் குணமுள்ளவராகவும் (CRY)இருப்பார்கள். ஆனால் , அவர்களுடைய பிரச்சனைகள் பற்றி பேசினாலும் , அழுதாலும் தொல்லைகள் உடனடியாக மறைந்து விடும். ஏறக்குறைய பல்சாட்டில்லா துயரர்கள் போல் இருப்பார்கள்.

சுலபமாக அழுவது என்பது கிராபைட்டிஸ் மருந்தின் முக்கியமான குறியாகும் . இவர்கள் சின்ன விஷயங்களுக்கும் , காரணமே இல்லாமலும்   அழும் தன்மையுள்ளவராக இருப்பார்கள்.  பல்சாட்டில்லா துயரர்கள் மற்றவர்களின் கவனத்தைப் பெற அழுவார்கள்; ஆனால் கிராபைட்டிஸ் துயரர்கள் உறுதியற்ற நிலையினால் அழுவார்கள். 


இவர்களின் தந்தை வெளியூரில் இருப்பார்; குடும்பத்திற்காக கடுமையாக  உழைப்பார். ஆனால் , அவரை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. தந்தையைப் பற்றி கேள்வி கேட்டால், அவர் எங்கு இருக்கிறார்?, என்ன செய்கிறார்? என்பது தெரியாது என்று சொல்வார்கள். அதாவது தந்தை இருந்தும் இல்லாத நிலை.


கால்சியம்   கார்பானிக்கம் (CALC):

பிறர் தங்களது குழப்பத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற மனப்பிரமை இம்மருந்தின் மைய கருப்பொருளாக இருக்கிறது. தங்களுக்கு எதுவும் தெரியாது ; சரியானவற்றை புரிந்து கொள்ளாத தெரியாதவர், தன்னுடைய  மதிப்பு தெரியாதவர் என்பது போன்ற பலவீனங்கள்  மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்ற  மனப்பிரமையும் இருக்கும். அதேபோல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து விமர்சனம் செய்து விடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும்.

குழந்தைகள் மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்காமல் , கண்களின் ஓரத்திலிருந்து பார்க்கும். அவர்களது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தால் அப்போது உங்களைப் பார்க்கும். அதனால் வெட்கம் அல்லது கூச்சம் (SHYNESS) என்பது இவர்களது உள்ளுறைந்த குணம் என்பதை தெரிந்து கொள்ள இயலும்.

இவர்கள்  தங்களைப்பற்றிய கணிப்பில் உறுதியற்றவர்களாக  இருப்பார்கள். இருந்தாலும்  இவர்கள் , உறுதியானவர் மற்றும்  நிலையானவர் போன்று காட்டிக் கொள்வார்கள். அதை நிரூபிக்கும் விதமாகவும் , மற்றவர்கள் பார்வையில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கவும் கடுமையாக வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.


மெக்னீசியம் கார்பானிக்கம் (MAG-C):


இவர்கள் ஆக்ரோஷமானவராக (AGGRESSIVE) இருப்பார்கள். சுயமதிப்பு (SELF WORTH) என்பது இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.  குழந்தைகள் மிகவும் ஆக்ரோஷமுள்ளவராக இருப்பார்கள்.  மற்றவர்கள் இவர்களை அங்கிகாரம் செய்யவும் , ஏற்றுக்கொள்ளவும்   வேண்டிய தேவை இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்வார்கள்; தங்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்று  கட்டாய படுத்துவார்கள்.

மருத்துவர் J.T. கெண்ட் இம்மருந்து அனாதை குழந்தைகளுக்கு உரியது என்கிறார். அதாவது அனாதை இல்லங்களில் அல்லது காப்பகங்களில் இருக்கும் அனாதைக் குழந்தைகள்.  இவர்கள்,  சமுதாயத்தில் தாங்கள்  புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும், மதிக்கப்பட தக்கவர்கள் இல்லை என்றும் தங்களைப்பற்றி கற்பனை செய்து கொள்வார்கள். அதனால் , இக்குழந்தைகள் புரட்சி செய்பவர்களாவோ (REBILLIOUS) அல்லது தங்களது ஆக்ரோஷத்தை அடக்கி வைத்துக் கொள்பவர்களாகவோ இருப்பார்கள்.

ஆகவே, தங்களுக்கு உரிய மரியாதை அல்லது பாராட்டுக் கிடைக்கவில்லை என்பது இம்மருந்தின் இன்னொரு கருப்பொருளாக இருக்கிறது. அதே போல் , தன்னால் ஏற்படும் தொல்லைகளாலும் , புரட்டுத் தனமான செய்கையாலும் தான் தமது  பெற்றோர்கள்  சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று நினைப்பார்கள்.  அல்லது தமது பெற்றோர்களின் மதிப்பிற்கு உரியவனாக தான் இல்லை அதனால் அவர்கள் சண்டையிடுகிறார்கள் , பிறகு தன்னை விட்டு  விலகி சென்று விடுவார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.


நேட்ரம் கார்பானிக்கம் (NAT-C):

மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்  மனிதர்கள். எல்லா உதவிகளையும் செய்து முடித்துவிட்டு  நாகரீகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் கனிவான மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடையவர்கள். தாங்கள் செய்யும் நற்செயலுக்கான பாராட்டை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கமாட்டார்கள். தனியாக இருக்க விரும்புவார்கள்; குறிப்பிட்ட நல்ல நண்பர்களிடம்  சேர்ந்து இருப்பார்கள். குறிப்பாக அவர்களை புரிந்து கொள்ளாதவர்களிடமிருந்து   விலகி இருக்கவே விரும்புவார்கள்.  நாகரீகமாக ஒதுங்கிக்கொள்வது  என்பது இம்மருந்தின் மையாக கருப்பொருளாக இருக்கிறது.


 மற்றவர்கள் தங்களது கௌரவத்தை கெடுத்து விடுதற்கு முன்பே அமைதியாக இருந்து தமது கௌரவதைக் காப்பாற்றிக் கொள்வார். இவருக்கு கோபம் இருக்கிறது என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. தமக்கும் மற்றவர்களுக்கும் ( SOCIETY, RELATIVES & STRANGERS) இடையே பிரிவினை (SEPARATION) இருக்கிறது என்ற மனப்பிரமை இவர்களுக்கு இருக்கும். தனக்கு தந்தை இல்லை என்ற உணர்வோ அல்லது தந்தையால் புறக்கணிக்கப்பட்டு விட்டோம் அல்லது கைவிடப்பட்டுவிட்டோம் அல்லது தந்தை இறந்துவிட்டார் என்ற எண்ணமே  இதன் கருப்பொருளாக இருக்கிறது. ( நேட்ரம்- புறக்கணிக்கப்படுத்தல்; கார்பானிக்கம்- தந்தை).



பின்குறிப்பு:
ஸ்கால்ட்டன் அவர்களின் " ஹோமியோபதி மற்றும் கனிமங்கள் " என்ற நூலிருந்து சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  விதமாக தமிழில் கொடுத்துள்ளேன். முழு பகுதியையும் தெளிவாகத் அறிந்து  கொள்ள  மேற்கண்ட மூல நூலை கட்டாயம் வாசித்து பயனடையுங்கள். விபரம் கீழே;

BOOK: HOMEOPATHY AND MINERALS
AUTHOR: JAN SCHOLTEN
HOMEOPATHIC MEDICAL PUBLISHERS
201, Dinar, 20, Station Road, SANTACURZ(W), Mumbai -400054,
INDIA.

1 comment:

  1. As claimed by Stanford Medical, It's in fact the SINGLE reason women in this country get to live 10 years longer and weigh an average of 19 KG lighter than us.

    (And realistically, it has NOTHING to do with genetics or some secret exercise and really, EVERYTHING to do with "how" they eat.)

    BTW, What I said is "HOW", not "WHAT"...

    Tap on this link to determine if this little quiz can help you find out your true weight loss potential

    ReplyDelete