Friday, 7 February 2020

ஹோமியோபதியும் ஸ்கால்ட்டனும்-அத்தியாயம்-1



அத்தியாயம்-1

தொகுதிப்பகுப்பாய்வும் கருப்பொருளும்

தொகுதி பகுப்பாய்வு   (GROUP ANALYSIS):

ஸ்கால்ட்டன் தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்து அந்தத் தொகுதிக்குரிய  தலைமைக் குறிகளை பிரித்தெடுத்து கொள்கிறார். பின்பு அந்தக்குறிகளை , அதே மூலகங்களைக் கொண்ட வேறு தொகுதியில் உள்ள மருந்துகளோடு இணைத்து அவ்விரு தனிமங்களுக்கும் உரிய சரியான குறியை வரையறுக்கிறார். இவை துயரர்களின் நோய்தாக்குதலுக்குள்ளான  அந்தந்த உறுப்புகளிலும் , தலைமைக் குறிகளிலும் மற்றும் மனக்குறிகளிலும் சிறப்பாக வேலை செய்கிறது.


உதாரணமாக , ஒருவருக்கு நேட்ரம் மூர் தனிமத்தின் பண்பும், பாஸ்பரஸ் தனிமத்தின் பண்பும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மூர் ( NAT-M)  மற்றும் பாஸ்பரஸ் (PHOS) என்ற இரு தனிமங்களைக் தனித்தனியாக கொடுப்பதற்குப் பதிலாக நேட்ரம்- பாஸ் ( NAT-P) என்ற  மருந்தைக் கொடுக்கலாம். இங்கே நேட்ரத்தின் அடிப்படைக் கருப்பொருளும், பாஸ்பரஸின் அடிப்படைக் கருப்பொருளும் இணைந்து ஒரு புதிய கருப்பொருள் உருவாக்கப்படுகிறது.  இதில் நேட்ரத்தின் சாயல் தனியாகவும், பாஸ்பரஸின் சாயல் தனியாகவும் இருப்பதற்குப் பதிலாக இரண்டும், இரண்டறக் கலந்த ஒரு புதிய சாயலாக அதற்கேயுண்டான கருப்பொருளாக வெளிப்படுகிறது.


அதேபோல் , ஒரு துயரருக்கு கார்பானிக்கத்தின் சாரமும்  நேட்ரம் மூர் மருந்தின் சாரமும் இருந்தால் , அவருக்கு நேட்ரம் கார்ப் கொடுக்கலாமா அல்லது கால்சியம்  மூர் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழலாம்.
அல்லது ஒருங்கிணைந்த மருந்தோ ( COMBINATION REMEDY) அல்லது கால்சியம்  கார்ப் மருந்தும் அதனைத் தொடர்ந்து நேட்ரம் மூர் மருந்தும் கொடுக்கலாம். ஆனால், இந்த மாதிரியான தருணங்களில் மனக்குறிகள் சரியாக வழிகாட்டும். எடுத்துக்காட்டாக நேட்ரத்தின் சாரம் தனிமை அல்லது தனித்திருப்பது  (ALONE) ; கார்பானிக்கத்தின் சாரம் மதிப்பு  (DIGNITY). ஒரு துயரர் தனது மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள தனியாக இருக்க விரும்புகிறார் என்றால் இந்த நிலையில் “தனித்து இருப்பதே மதிப்பானது” (ALONE IN HIS DIGNITY) என்ற மனநிலைக்கு நேட்ரம் கார்பானிக்கம் தான் மருந்தாக இருக்க முடியும்.

இதேபோல் மெக்னீசியம் கார்பானிக்கம் மருந்துகளையும் , இன்னபிற மருந்துகளையும் தொகுதி ஆய்வு செய்து கொள்ளலாம்.



கருப்பொருள் ( THEMES)


ஸ்கால்ட்டனின்  தொகுதி பகுப்பாய்வில் ஒவ்வொரு தனிமங்களுக்கும் ஒரு கருப்பொருள் உள்ளது.   இந்தக் கருப்பொருள் துயரர் ஆய்வின் போது  அவர்களிடமிருந்து பெரும் தகவல்களோடு பொருத்தி பார்த்து அவர்களை சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக  கார்பானிக்கம் தந்தையோடும் , மூரியாடிக்கம் தாயோடும், சல்பூரிக்கம் வாழ்க்கைத்துணையோடும்  மற்றும் பாஸ்பாரிக்கம் சகோதர,சகோதரிகள் மற்றும் நண்பர்களோடு ஏற்படக்கூடிய உறவுகளிலிருந்தும் , முரண்பாடுகளிலிருந்தும் தோன்றும் குறிகளைக் கருப்பொருளாக கொண்டுள்ளது. இந்தக் கருப்பொருளை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குரிய சரியான மருந்தை தேர்ந்தெடுக்க முடியும்.


உதாரணமாக ,  ஒன்றுமில்லை (NOTHING) , தனிமை (ALONE)  மற்றும் தடுக்கப்படுதல் (FORBIDDEN)  போன்றவைகள்  நேட்ரம் கனிமத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அதேபோல் தாய் அல்லது அம்மா , அக்கறை அல்லது பொறுப்பு (CARE) , பரிதாபப்படத்தக்க (PITIFUL)  போன்ற கருப்பொருள் மூரியாடிக்கத்தின் கருப்பொருளாக இருக்கிறது. எனவே,  துயரர் “எனக்கு அம்மா இல்லை”, “என்னை பேணிவளர்க்க யாருமில்லை” என்று கூறினால் அவருக்கு " நேட்ரம் மூரியாடிக்கம் " கொடுக்கலாம்.

அதே சமயத்தில் இக்கருப்பொருளையே விடாப்பிடியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமும் சிலசமயம் ஏற்படுவதில்லை . எடுத்துக்காட்டாக , அம்மாவிடம் எந்த முரண்பாடு இல்லாவிட்டாலும் மனைவியை இழந்த பிறகு , ஒரு வயதான கணவனுக்கு   இந்த தனிமையுணர்வும் , தன்னைக் கவனித்துக்கொள்ள யாருமில்லை என்ற உணர்வும் ஏற்படலாம். அவருக்கும் நேட்ரம் மூரியாடிக்கமே மருந்தாக இருக்கிறது.


அதேபோல்  ஒரு மனைவிக்கு  கணவர் கூட தந்தைப் போன்று இருக்கக் கூடும். அவரின் இழப்பை வாழ்க்கைத்துணைவருக்கு பதிலாக தந்தையின் இழப்பாகக் கூட அவர் உணரக்கூடும் . ஆகவே துயரர்களின் வார்த்தைகளில் வெளிப்படும் சரியான கருப்பொருளை  மிகக் கவனமாக புரிந்து கொள்ளவேண்டும். அதனால் எல்லாத் தனிமங்களிலும் இருக்கும் மூலக் கருப்பொருளையும் (THEMES) , மாறுபட்ட கருப்பொருளையும் ( VARIATIONS ON A THEME) நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.


பின்குறிப்பு:

ஸ்கால்ட்டன் அவர்களின் " ஹோமியோபதி மற்றும் கனிமங்கள் " என்ற நூலிருந்து சில பகுதிகளை மட்டும் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  விதமாக தமிழில் கொடுத்துள்ளேன். முழு பகுதியையும் தெளிவாகத் அறிந்து  கொள்ள  மேற்கண்ட மூல நூலை கட்டாயம் வாசித்து பயனடையுங்கள். விபரம் கீழே;

BOOK: HOMEOPATHY AND MINERALS
AUTHOR: JAN SCHOLTEN
HOMEOPATHIC MEDICAL PUBLISHERS
201, Dinar, 20, Station Road, SANTACURZ(W), Mumbai -400054,

INDIA.

1 comment:

  1. Your Affiliate Profit Machine is ready -

    And making money with it is as simple as 1...2...3!

    It's super easy how it works...

    STEP 1. Tell the system which affiliate products you intend to promote
    STEP 2. Add some PUSH BUTTON traffic (this LITERALLY takes 2 minutes)
    STEP 3. See how the system grow your list and sell your affiliate products all for you!

    Do you want to start making profits?

    Click here to activate the system

    ReplyDelete