மாமேதை ஹானிமனின்
மூன்று நோய் மூலக்கூறுகள்
( HAHNEMANN’S THREE MIASMS)
மாமேதை ஹானிமனின்
, ஹோமியோபதின் கோட்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியபோது, நாட்பட்ட நோய்களுக்கு பொறுப்பு
வகிக்கிற அல்லது காரணமாக இருக்கின்ற, சொறி-சிரங்கு, மேகவெட்டை மற்றும் மேகவெட்டை
என்ற மூன்று நோய்மூலக்கூறுகளை ( PSORA, SYCOSIS. SYPHILIS ) கண்டறிந்தார். இன்றைக்கு, அந்த மூன்று நோய் மூலக்கூறுகளையும் உற்று நோக்கும்
போது, அவைகள் அன்பின் மூன்று பரிமாணங்களுக்கு
மிக நெருக்கமாக இருப்பதை நாம் பார்க்க முடியும், அத்துடன் உளவியலறிஞர் சிக்மண்ட் பிராய்டு
குறிப்பிடட பாலுணர்வு உளவளர்ச்சி ( PSYCHOSEXUAL
DEVELOPMENT) பற்றிய மூன்று நிலைகளைக் குறிப்பதாகவும் இருக்கிறது.
ஹானிமன் முதல் நோயமுலக்கூறான , சொறி-சிரங்கு நோய்மூலத்திற்கு (PSORA)
, சிரங்கு நோய் அல்லது "அரிப்பு" நோயே காரணமாக இருக்கிறது என்கிறார். இது குறைபாடு அல்லது பற்றாக்குறை( LACK), வறுமை அல்லது ஆதரவின்மை ( DESTITUTION) , குளிர் ( COLD) மற்றும் பசி (
HUNGER) போன்றவற்றைக் குறித்துக் காட்டுகிறது. , அதேபோல்
"நான் ( I ) " என்ற உணர்வு
மற்றும் பிராய்டின் வாய்வழி நிலையின் (ORAL STAGE) துன்பங்களையும் குறிக்கிறது.
இரண்டாவது நோய்மூலக்கூறான , மேகவெட்டை
நோய்மூலக்கூறு (SYCOSIS) , மேகவெட்டை நோயினால் தூண்டப்பட்டது மற்றும் அதிகப்படியான ( EXCESS-இயல்பு
கடந்த அளவு) , ஆற்றல் (POWER) மற்றும் கட்டுப்பாடு இல்லாமை ( LACK OF CONTROL) மற்றும் "நாம் ( WE ) " என்ற உணர்வையும் மற்றும்
பிராய்டின் குத நிலை ( ANAL STAGE) ஆகியவற்றைக் குறிக்கிறது.
மூன்றாவது நோய்மூலக்கூறான , மேகப்புண்
நோய்மூலம் (SYPHILIS) , அழிவு (DESTRUCTION) , பொறாமை (JEALOUSY) , கொலை (MURDER)
மற்றும் பிராய்டின் தந்தையை வெறுத்து தாய் பாசமிகைப்பு சிக்கல்நிலை ( OEDIPUS
COMPLEX) ஆகியவற்றைக் குறிக்கிறது , மேலும் "ஓர்மை (ONE) " - அதாவது அன்பின் மூன்றாவது பரிமாணத்திற்கு
முன்னேறுவதையும் குறிக்கிறது.
ஒரு மனிதனின் உளவியல் வளர்ச்சியானது,
அவன் கருத்தரித்த தருணத்திலிருந்து, தந்தையின்
பாலின உயிரணுக்கள் தாயின் பாலின உயிரணுக்களுடன்
இணைந்தவுடன் துவங்கி , வாழ்க்கையின் இறுதி வரை இந்த மூன்று வலிமையான நோய் ஆற்றல்களால் பாதிக்கப்படுகிறது.
இந்த மூன்று முக்கிய நோய்மூலக்கூறுகளின் போக்குகள், ஹானிமன் அவர்களால் நாள்பட்ட
நோய்கள் என அழைக்கப்படுகின்றன, அவை பரம்பரையாக பரவுகின்றன மற்றும் நோயாளியின் மற்றும் குடும்ப வரலாற்றிலிருந்து அவற்றை அடையாளம்
காண முடியும்.
ஒவ்வாமை ( ALLERGIES) , சிரங்கு அல்லது அரிக்கும் தோலழற்சி ( ECZEMA) மற்றும்
ஊட்டச்சத்து பிரச்சினைகள் ஆகியவற்றுடன் கைவிடப்பட்ட
உணர்வும் இணைந்து சோரினம் மருந்தும் ( PSORINUM)
அல்லது தனது உடலை விட்டு வெளியேறி இந்த கொடூரமான
உலகத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் டியூபர்குலினம்
மருந்தும் (TUBERCULINUM) , சொறி-சிரங்கு
நோய்மூலத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது . (
சல்பர் –SULPHUR , இன்னொரு முக்கியமான மருந்தாக இருக்கிறது- மொ-ர் ).
மேகவெட்டை விஷநோய்க்கூறு என்பது கட்டிகளை
உருவாக்கும் தன்மையைக் குறிக்கிறது, கார்சினோசின் (CARCINOSIN) அதற்கான முக்கிய மருந்தாக இருக்கிறது. அவர்கள் தங்கள் ரகசியத்தை மிகவும் நெருக்கமாகப்
பாதுகாத்து, அதை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டார்கள்- அதாவது "நீங்கள் பேசாத
சில விஷயங்கள் உள்ளன".இவர்கள் மற்றவர்களை புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக தங்கள்
உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தாதவர்கள் மற்றும் , இறுதியாக புற்றுநோயை உருவாக்கிக்
கொள்கிறார்கள் , இது இரத்தநாளங்களில் உள்ள உயிரணுக்களின் வேறுபாட்டை இழக்கிறது.
மற்ற மேகவெட்டை நோய்க்கூறு நிலைமைகளில்
உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன , இத்தகைய
நோயாளிகள் , நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தை
பற்றிய நிலையான கவலையுடன் வாழ்ந்து வருவதால்
" மெடோரினம்" ( MEDORRHINUM) முக்கிய
மருந்தாக இருக்கிறது - இது உண்மையானது மற்றும் நித்தியமானது. ( இந்த மேகவெட்டை நோய்மூலத்திற்கு,
மருக்கள், பாலுண்ணி போன்றவற்றில் தூஜா-THUJA, இன்னொரு முக்கியமான மருந்தாக இருக்கிறது- மொ-ர் ) .
இறுதியாக, மரபணு குறைபாடுகள், இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள், குடிப்பழக்கம் மற்றும் தற்கொலைக்கு ஆளாகக்கூடிய
குடும்பங்களில் மேகப்புண் விஷநோய்மூலக்கூறு முக்கிய காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, சிபிலினம் (SYPHILINUM) மருந்து
, ஒரு குற்றத்தைச் செய்தபின் தன்னைத் தூய்மைப்படுத்துவது
போல், கை கழுவுவதற்கான திடீர் வெறியை உருவாக்குகிறது. ( இந்த மேகப்புண் நோய்மூலத்திற்கு
மெர்க்கூரியஸ் –MERCURIUS, இன்னொரு முக்கியமான
மருந்தாக இருக்கிறது- மொ-ர்) .
எல்லையற்ற அன்பை ( INFINITE LOVE) நோக்கிய நமது மருத்துவப் பயணத்தில்,
நாம் இன்னும் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்த மூன்று நோய்மூலக்கூறுகள் பற்றிய
அறிவு உதவும் என்று நமக்குத் தெரியும்.
மூலம் : Homeopathic Remedies for the Stages of Life,
மரு. தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD
தமிழில்: சு. கருப்பையா .
No comments:
Post a Comment