புத்தரின் போதனைகளின் தனிச் சிறப்பான
முக்கிய அம்சம் அனைத்துக்கும் நடுநாயகமாய் மனத்தை அங்கீகரித்ததில் உள்ளது.
மனம் பொருள்களுக்கு முந்தியது, அவற்றை
ஆள்கிறது , படைக்கிறது, மனம் அறியப்பட்டால் அனைத்தும் அறியப்படுகின்றன.
மனம் அதன் செயல்திறன் அனைத்துக்கும் தலைமையானது,
அந்த செயல்திறன்களாலானதே அந்த மனமாயுள்ளது.
முதலில் கவனிக்கப்பட வேண்டியது மனத்தைப்
பண்படுத்துதலே .
அகத்து எழுகின்ற மற்றும் புறத்திருந்து
நம்மேல் விழுகின்ற எல்லா நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் மனமே ஊற்றுக்கண்.
தீமையாய் உள்ளவையாவும், தீமையோடிணைக்கப்பட்டுள்ள யாவும், தீமைக்குரிய யாவும்- மனத்தினின்று
தோன்றுபவையே. நன்மையாய் உள்ளன யாவும் , நன்மையோடிணைக்கப்பட்டுள்ள யாவும் , நன்மைக்குரிய
யாவும் - மனத்தினின்று தோன்றுபவையே.
மனத்தின் இச்சைக்குட்பட்டு ஒருவன் பேசினாலோ
, செயற்பட்டாலோ , வண்டியிழுக்கும் காளைகளின் பாதங்களைத் தொடரும் வண்டியைப் போல பேரிடர்
அவனைத் தொடர்கிறது. எனவே மனத்தின் மாசறுத்தலே சமயத்தின் சாரம்.
உண்மையான
சமயம் மத நூல்களில் இல்லை- மாறாகச் சமயக் கோட்பாடுகளை அனுசரித்தலிலேயே உள்ளது.
நூல்:
புத்தரும் அவர் தம்மமும்.
டாகடர்
பி.ஆர்.அம்பேத்கர்.
No comments:
Post a Comment