Monday, 3 October 2022

பெர்பெரிஸ் வல்காரிஸ் (BERB-V)

 

பெர்பெரிஸ் வல்காரிஸ் (BERB-V)

BERIBERIS VULGARIS

 

குடும்பம்: தாவரம், பெர்பெரிடேசியா.

நிரூபணம்: ஹெஸ்ஸே ,1834












1.      முன்னுரை   (Introduction) :

 

ஒரு உறுப்பில் தோன்றிய வலியானது  , அந்த மைய பகுதியிலிருந்து உடலின்   எல்லா திசைக்கும் பரவும்  வலிகள் ( RADIATING PAIN )  என்பது பெர்பெரிஸ் மருந்தின் சிறப்பியல்புக் குறியாக இருக்கிறது. குறிப்பாக , கீல்வாதம், முடக்குவாதம் , இடுப்புவலி மற்றும் சிறுநீரக்கற்கள் போன்ற நோய்களில் இக்குறிகள் தோன்றும். இந்த வலியானது , கூர்மையாகவும், உடனடியாகவும், தைக்கும் தன்மையுடையதாகவும், திடீரென்று தோன்றும் சுரீர் வலியாகவும் இருக்கும்.  மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து  அடிக்கடி  பிறபகுதிகளுக்குப் பரவும் தன்மையுடையதாகவும் அல்லது அப்படியே நகரும்  தன்மையுடையதாகவும் இருக்கும். அத்துடன் நரம்புகளில் வலியை ஏற்படுத்துவதாக இருக்கும். கடும் வயிற்றுவலி அல்லது அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு மற்றும் உடலின் எல்லாப் பகுதிகளிலும் தோன்றும்  வலிகளுக்கு பெர்பெரிஸ் வல்காரிஸ் முக்கியமான மருந்தாக இருக்கிறது, அதேபோல் வாதநோய் சம்பந்தமான தொல்லைகளுக்கும் உரிய மருந்தாக இருக்கிறது. பெர்பெரிஸ் வல்காரிஸ் , முழு சிறுநீர் மண்டலத்தில்  பாதிப்புகளை ஏற்படுத்தி கடுமையான வலியைத் தருகிறது; சிறுநீரகத்தில் வலி, சிறுநீரக்கற்கள், சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் விரைகளில் வலி போன்ற தொல்லைகளைத் தருகிறது.

 

இந்த மருந்திற்குரிய நபர்கள் , வெளிறிய தோற்றத்துடன் , மண் போன்ற நிறத்தில் , குழிவிழுந்த கன்னத்துடன் , கண்களை சுற்றி நீல நிறத்தில் ,வளையங்களுடன் தோற்றம் தருவார். குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள். பெரும்பாலும் மேகவெட்டை நோய்மூலக்கூறு மேலோங்கி இருக்கும்.

 

பொதுவாக , இவர்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் வரும்போது, வாழ்க்கை நல்ல நிலைக்கு வரும் போது,  வேகமாக சரிந்து விடுகின்றனர் : களைத்துப் போன தொழிலதிபர்களுக்கு, வேலை செய்து உழைத்து வருபவர்களுக்கு, தாங்கள் செய்ததெல்லாம் வேலைதான் என்று எண்ணி, தங்கள் தொழில் வளர்ச்சியடைந்து ஒழுங்கு நிலை  பெறும்போது, அவர்கள் தாங்களாகவே பலவீனமடைந்து பலம் இல்லாமல் போகிறார்கள் .

 

 

2.      இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION):

 

இம்மருந்து , முக்கியமாக சிறுநீரகங்கள்(KIDNEY), சிறுநீர்ப்பை (BLADDER), சிறுநீர்க்குழாய்கள்( URETERS) , செரிமான பாதை , கல்லீரல் (LIVER) மற்றும் பித்தப்பை ( GALL BLADDER), மூட்டுகள் (JOINTS) , கர்ப்பப்பை (UTERUS) , விரைநாண் ( SPERMATIC CORD) ஆகிய உறுப்புகளில் சிறப்பாக வேலை செய்யும். இடது பக்கம் பாதிப்பை ஏற்படுத்தும்.

3.      இம்மருந்துக்கான( சிறப்புக் குணங்கள் ) உட்கரு:  (Nucleus):

 

Ø  ஒரு மைய இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவும்  வலிகள்.

 

Ø  முதுகில் வலி, விறைப்புதன்மை (STIFFNESS) ,  மற்றும் நடை தடுமாற்றம் , உட்கார்ந்து எழுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது; கைகளால் உதவ வேண்டும்.

 

Ø  கலகலவென்ற சப்தம் (GURGLING) , குமிழ்த்தல்( BUBBLING) , கொதிக்கும் ( BOILING) உணர்வுநிலை .

 

Ø  சளி சவ்வுகளின் வறட்சி. எச்சில் பிசுபிசுப்பாக இருக்கும் .

 

Ø  சிறுநீரக பகுதியில்  கூருணர்ச்சி .

 

4.      நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

 

இடையூறு ( INTERRUPTION)  ,  கடுங்கோபம் (RAGE), சண்டை (QUARREL) இவற்றிற்குப் பிறகு தொல்லைகள் ஏற்படும். தவறாக பயன்படுத்திய பிறகு (ABUSE) மற்றும்  பாலியியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகும்   (RAPE) தொல்லைகள் ஏற்படும்.   முறைக் காய்ச்சலுக்குப் பிறகும் (MALARIA) தொல்லைகள் ஏற்படும் . 

 

5.      மனக்குறிகள் (Mind):

 

Ø  மந்தமான அல்லது கருத்தில்லாத ( LISTLESS) ;  ஆர்வமில்லாத (APATHETIC) ; விருப்புவெறுப்பின்மை ( INDIFFERENCE)  .

 

Ø  நெருக்கமான சிந்தனை தேவைப்படும் மன உழைப்பு மிகவும் கடினம்; குறைந்தபட்ச குறுக்கீடு சிந்தனையின் போக்கை தடைசெய்யும்; குறுக்கிடும்போது எண்ணங்கள் மறைந்துவிடும்.

 

Ø  அந்தி நேரத்தில் (TWILGHT) , பொருள்கள் இயற்கையை விட இரண்டு மடங்கு பெரியதாகத் தெரியும் . குறிப்பாக , குழந்தைகள் அந்தி நேரத்தில் திகிலூட்டும் காட்சிகளைப் பார்க்கிறது.

 

Ø  மனச்சோர்வு, அழுவதற்கான விருப்பம்.

 

Ø  மாலை தூங்கும் முன் பதட்டம் .

 

Ø  மாதவிடாய் காலத்தில்,  மனம் மரணத்தை விரும்புகிறது.

 

Ø  விருப்பு வெறுப்பின்மை  மற்றும் சிந்தனையில் மூழ்கிய மனம் , மற்றும்  பேச விருப்பமின்மை.

 

Ø  பயமுறுத்தும் நகைச்சுவை (FRETFUL HUMOUR)  மற்றும் வாழ்க்கையில்  சோர்வு.

 

Ø  உட்கார்ந்து இருக்கும் போது , நிற்கும் போது அல்லது நகரும் போது பதட்டம்.

 

Ø  மறைக்கப்பட்ட காயங்கள் (HIDDEN WOUNDS): நாம் அனைவரும் நமக்குள் தனித்தனி ஆளுமைகளைக் கொண்டுள்ளோம். ஆனால் கடுமையான உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் நடந்தால் [அனைத்து பன்முகமான ஆளுமைக் கோளாறு நோயாளிகளிளிடத்தில் உள்ளது போல] மனதில் பிளவு மிக அதிகமாகி, சாதாரண உணர்வுநிலையில் நடக்கும்  செயல்பாடுகள் , மனிதனின் துணை ஆளுமையான  நனவிலியின்  வழிகாட்டுதலின் படி அதனுடன்  சேர்ந்து கூட்டுக்  கலவையாகிவிடும் .

 

Ø  தாய் - பெண்  முரண்பாடு ( CONFLICT OF MOTHER-WOMAN) : தாய்க்கும் பெண்ணுக்கும் இடையில் முரண்படும் பெண்களுக்கு  பொருத்தமான மருந்தாக இருக்கிறது. ஒரு பெண் , தாய்மையடைந்த பிறகு, தனக்கு பாலுணர்வு ஏற்படுவது இழிவானது அல்லது அசுத்தமானது என்று எண்ணம் ஏற்படுவதால் ,   ஒரு பெண்ணாக இருப்பதும் , அதே சமயம் அவளுக்கு பாலுணர்வு  இருப்பதும் பொருந்தாத் தன்மையில் இருக்கிறது . இந்த சூழ்நிலையில் அவள் , தான் ஒரு பெண் என்பதை மறுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தில் அல்லது அதற்குப் பிறகு, தங்கள் கூட்டாளிகளால் விரும்பப்படுவதில்லை என்று நினைக்கும் பெண்களுக்கும்  அல்லது, கர்ப்பத்திற்குப் பிறகு அல்லது தாயான பிறகு சிற்றின்ப அல்லது பாலுணர்வு உணராத பெண்களுக்கும்  அல்லது ஒரு பெண் , தான்  பாலியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டதாக உணருகிறேன்  என்று புகார் கூறினாலும் அவர்களுக்கு , பெர்பெரிஸ் வல்காரிஸ் மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது. 

 

6.      சிறப்பியல்புக் குறிகள் (Characteristic Symptoms) , மற்றும்  வழிகாட்டும் குறிகள் (GUIDING SYMPTOMS):

 

Ø  இடதுபக்க பாதிப்புகள் முதன்மையாக இருக்கும்; இடது சிறுநீரகம் மற்றும் இடது பக்க சிறுநீர்க்குழாய்.

 

Ø  குறைந்த அளவிலான இருமல் மற்றும் இதயக்கோளாறுகள் , குறிப்பாக புரையோடிய புண்ணின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும்.

 

Ø  மூட்டுவலி மற்றும் வாத நோய் பாதிப்புகள், குறிப்பாக சிறுநீர் பிரச்சனைகளுடன் இருக்கும்.

 

Ø  சிறுநீர் கழிக்காதபோது சிறுநீர் வெளியேறும் குழாயில் எரிச்சல் ஏற்படும்.

 

Ø  சிறுநீர்: கெட்டியாக (THICK) , கலங்கலாக (TURBID),  மஞ்சள் நிறத்தில் ; சிவப்பு, மாவு போல் , மணல் அல்லது மெலிதான வண்டல் (SLIMY SEDIMENT)  நிரம்பியிருக்கும்.

 

Ø  சிறுநீரக வலி (RENAL COLIC) .

 

Ø  வலி முதுகில் ஆரம்பித்து கீழ்ப்பக்கம் நீள்கிறது  , மேலும் சிறுநீர்க்குழாய்களின் கீழ் சிறுநீர்ப்பைக்குள் செல்கிறது.

 

Ø  சிறுநீரகப் பகுதியில் குமிழி உணர்வு (BUBBLING SENSATION) .

 

Ø  சிறுநீரகப் பகுதியில் வெட்டும் ( STICKING) மற்றும் கிழிக்கும் (TEARING) வலிகள் ; ஆழமான அழுத்தத்தினால் மோசமடையும்.

 

Ø  இடுப்பு வாத நோய் (LUMBAGO) .

Ø  முதுகு விறைப்பாகவும், மரத்துப்போன உணர்வுடனும் இருக்கும் , மேலும் வலிகள் சிறுநீரகங்களிலிருந்து முதுகுப்பக்கம் பாயும்.

 

Ø  சிறுநீரகப் பகுதியில் இருந்து வெளிப்படும் வலிகள் மற்ற பகுதிகளுக்கு பரவும் தன்மையுடையதாக இருக்கும் மற்றும் அந்த வலிகள் தொடைகள் வரை நீள்கிறது.

 

Ø  முதுகின் ஒடுங்கிய பகுதியில் , இரத்தங்கட்டிய காயம் போன்று,  விறைப்புத் தன்மையுடன்  மற்றும் நடையில் தடுமாற்றமும்  இருக்கும் ;  சிரமத்துடன் தான் இருக்கையில் இருந்து எழுந்திருக்க முடியும்.

 

Ø  சிறுநீரகத்தின் பகுதியில் முதுகுவலி; உட்கார்ந்து இருக்கும் போதும்  அல்லது படுத்திருக்கும் போதும் மற்றும் காலையில் படுக்கையில் இருக்கும் போதும் மோசமடையும்.

 

Ø  பெர்பெரிஸ் மருந்து  "கல்சார்ந்த அல்லது சிறுநீரகத்தில் கற்கள்  உருவாகும் தன்மையுள்ள உடல்கூறு ." என்று அழைக்கப்படும் நோயாளிகளுக்கான சிறந்த மருந்துகளில் ஒன்றாகும்.

 

Ø  சிறுநீரக வலி , இடது புறத்தில் மோசமாக இருக்கும்  (டபாக்கம் ; இருபுறமும் இருக்கும் , இடைவிடாத தூண்டுதல் உணர்ச்சி மற்றும் நீர்க்கடுப்பு நோயில் -காந்தாரிஸ் ; வலது பக்கம் மோசமடையும்  - லைகோபோடியம் ).

 

Ø  சிறுநீர் மற்றும் சிறுநீரக நோய்க்குறியியல்:  இறுக்கமான உணர்வு  மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றுடன் சிறுநீர்ப்பை வேக்காடு , சிறுநீர் கழிக்கும் போது அல்லது அதற்குப் பிறகு வலி, நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சி, உடலுறவிற்குப் பிறகு அல்லது காரணமில்லாமல் ஏற்பட்டிருக்கும் .சிறுநீரகத்தில் வலி மற்றும் இரத்தம் தோய்ந்த சிறுநீர், சிறுநீரக செயலிழப்பு வரை செல்லும் .

 

 

Ø  சிறுநீரகச்செயலிழப்பு : காரணம்- சிறுநீரகக்கற்கள்; வலிகள் இடது பக்கம் ஆரம்பித்து , சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகளுக்கு  கீழ் நோக்கிப்பரவும்  ; சிறுநீரகப்பகுதியில் மரத்துப்போன , குமிழ்தல், விறைப்பு, அழுத்தம் , எரிச்சல் மற்றும் புண் போன்ற உணர்வுகள் இருக்கும்.

 

Ø  புத்துணர்ச்சி தராத தூக்கம்.

 

Ø  மிகக் குறைந்த உழைப்பில் இருந்தும்  எளிதாக வியர்க்கிறது.

 

Ø  மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டபிறகு , பித்தப்பைக்கற்கள் தோன்றும். சாம்பல் நிறத்தில் மலம் வெளியேறும்.

 

Ø  பித்தப்பைக்கற்கள்: கல்லீரல் பகுதியில் சுறுக்கென்றும் , திடீரென்று , குத்தும் , கீறல் ஏற்பட்டது  போன்ற வலி ஏற்படும் . வலி , துப்பாக்கியில் சுடுவது போன்றும் , கிழிப்பது போன்றும் , எரிச்சலுடன் , தைப்பது போன்றும் மற்றும் கூச்ச உணர்வுடனும் இருக்கும் , ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு புலப்பெயர்ச்சி செய்யும் .

 

Ø  வலிமிகுப்புணர்ச்சி அல்லது புணர்ச்சிச் சிக்கல் ( DYSPAREUNIA) .

 

Ø  புலப்பெயர்ச்சியடையும் அல்லது அலைந்து பாயும் கீல்வாதம் ( WANDERING ARTHRITIS).

 

Ø  இடதுபக்க மூட்டுவலி , உட்கார்ந்த நிலையிலிருந்து எழும் போது மோசமடையும்.

 

Ø  அறிகுறிகள் விரைவாக மாறி மாறி தோன்றும் , தாகம் இருக்கும் , சிலசமயம்  தாகம் இல்லாமல் மாறிவிடும்; பசியும் மற்றும் பசியின்மையும்   மாறி மாறி ஏற்படும்.

 

7.      ஆண்கள்  (Male):

 

ஆண்குறி  மற்றும் விதைப்பை சுருங்கி , இளைத்துப் போயிருக்கும். ஆண்குறியின் முன்தோல் குறுக்கம் மற்றும் விதைப்பையில் குளிர்ச்சியான  உணர்வு . உடலுறவில், இன்பஉணர்வு குறைந்திருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். ஆண்குறியில் விறைப்புத்தன்மை குறைவாக இருக்கும்; போதுமானதாக இருக்காது; வலியும் இருக்கும். விரைநாண் ( SPERMATIC CARD) மற்றும் விரைகளின்  நரம்புகளில் சுண்டியிழுக்கும் வலி.  சுக்கிலச்சுரப்பி பெருத்திருக்கும். வயதான ஆண்களுக்கு ஆண்குறி கடினத்தன்மையுடன் இருக்கும் ; இதற்கு இதுவே ஒற்றை அல்லது தனியான  ( SINGLE SYMPTOM) மருந்தாக இருக்கிறது. ஆண்குறி , முன்தோல் மற்றும் மொட்டுப்பகுதிகள்  மரத்துப்போகுதல் ; மற்றும் அரிப்பு. விரைகளில் வீக்கம், குறிப்பாக இடதுபக்கம் பாதிக்கப்படும். உடலுறவிற்குப் பிறகும், சிறுநீர் கழித்த பிறகும் பலவீனமான உணர்வு ஏற்படும்.

 

8.      பெண்கள் (Female):

 

பெண்களுக்கு உடலுறவின் மீது  விருப்பம் குறைந்திருக்கும். மாதவிடாய் உள்ளமுக்கம். மாதவிடாய் போக்கு வழக்கமான நாளிற்குப் பதிலாக ,  2 நாட்களுக்கு முன்பு அல்லது 7 நாட்களுக்கு முன்பு ஏற்படும். அல்லது 21 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். மாதவிடாய் குறைவு, மாதவிடாய்ப் போக்கு ஏற்படுவதற்கு முன்பு வலிகள் ஏற்படும். மாதவிலக்கிற்குப் பிறகு பெண்ணின் யோனிக்குழாய் வறட்சியாக இருக்கும்.  சினைப்பைகளில் பாதிப்பு அல்லது வலி இருக்கும் போது உடலுறவில் இன்பஉணர்வு இருக்காது. கருப்பை  உட்புறக் சவ்வுகளில் அல்லது திசுக்களில் வீக்கம் இருக்கும் (ENDOMETRIOSIS) . பேறுகாலத்தின் போது வலிப்பு ஏற்படும் (ECLAMPSIA) . மாதவிடாயிற்கு முன்பும், பின்பும் வெள்ளைப்பாடு இருக்கும்; வெண்புரதம் வெளியாகும் ; வெண்மையாக இருக்கும்.  வெள்ளைப்பாடு  கார்பாக , அரிக்கும் தன்மையுடன் வெளிப்படும்.  உடலுறவின் போது யோனிக்குழாய் மரத்துப்போகும். உடலுறவில்  உச்சக்கட்டம் தாமதம் ஆகும் . உடலுறவின் போது  யோனியில் வெட்டு வலி ஏற்படும். பிரசவத்திற்குப்  பிறகு கருப்பைச் சுருங்கி தன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருக்கும் ( SUBINVOLUTION) . கட்டிகள் (TUMORS) , நரம்புத்திசுக்கட்டி (FIBROMA) , தசைநார்க்கட்டிகள் (MYOMA) தோன்றும். உடலுறவின் போது யோனியில் விட்டுவிட்டுத் தாக்கும் வலி ( VAGINISMUS) ஏற்படும் . யோனியில் எரிச்சல் மற்றும் புண்.

 

9.      குழந்தைகள் (Children): குழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலத்தில் , வாய்ப் பகுதியில் , கடுமையான வலிகள் தோன்றும்.

 

10. உணவு (விருப்பம், வெறுப்பு) மற்றும் தாகம் (Food and Drinks)

 

பொதுவாக, உணவின் மீது இவர்களுக்கு வெறுப்பு இருக்கும். மது பானங்கள் (WINE) , மீன் மற்றும் மாவுப்பொருள்கள் இவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. தாகம் இருக்காது; தண்ணீர் குடிக்க வெறுப்பு இருக்கும். காய்ச்சலின் போது மட்டும் தாகம் ஏற்படும்.

 

11. மாறுமைகள் : (Modalities):


நோய்க்குறி அதிகரித்தல் (Aggravation): அசைவுகள் அல்லது இயக்கம் (MOTION) ; நடக்கும் போது (WALKING) ; வண்டி-பயணத்தின் மூலம் ( CARRIAGE-RIDING)  ; எந்தவொரு  திடீர், மெல்லிய (JAR) அசைவுகளில் மூலமும்  ; படுத்து இருக்கும் போதும் ; மற்றும் ஆழமான அழுத்தத்தின் மூலமும் தொல்லைகள் அதிகரிக்கும். பித்தப்பைக்கற்களின் வலி மற்றும் சிறுநீர் தொல்லைகள் ஆகியவை அசைவுகளினால் அதிகரிக்கும். களைப்பு அல்லது பெரும் சோர்வு ( FATIGUE). அந்திவெளிச்சம்  (TWILIGHT).

 

 

நோய்க்குறி குறைதல் (Amelioration):  உணவுக்குப்பின், காலை உணவிற்குப் பின் தொல்லைகள் குறையும். ஏப்பம் மற்றும் வாயு பிரிந்தால் தொல்லைகள் குறையும். மலம் மற்றும் சிறுநீர் கழித்தபிறகு வலிகள் குறையும்.

 

12. வீரியம்  ( POTENCY):

 

உறுப்புக்கள் சார்ந்த  பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது , தாய்த்திரவம் (Q) மற்றும் 6 C வீரியம் பயன்படுத்தலாம்.  சிறப்பியல்பு குறிகள்/ திறவுகோல் குறிகள் மேலோங்கியிருக்கும் போது உயர்ந்த வீரியங்களைப் பயன்படுத்தலாம்.

 

மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) :

 

குறிப்பிட்ட உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது , தாய்த்திரவம் (Q) மற்றும் 6 C வீரியங்களை திரும்ப திரும்பக் கொடுக்கலாம்.   சிறப்பியல்பு குறிகள் / திறவுகோல் குறிகள் மேலோங்கியிருக்கும் போது,  உயர்ந்த வீரியங்களில் ஒரு தடவை மட்டும் கொடுக்க வேண்டும் .

 

மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF ACTION):  20 முதல் 30 நாட்கள் வரை வேலை செய்யும்.

 

நிறைவு செய்யும் மருந்து (COMPLEMANTORY) :  MAG-M

 

இந்த மருந்து  கொடுத்தபிறகு , தேவை ஏற்படும் நிலையில்  லைகோபோடியம்(LYC)  மருந்தைக் கொடுத்தால் , பெர்பெரிஸ் வல்காரிஸ் நன்றாக வேலை செய்யும்.

 

இந்த மருந்துடன் தொடர்புடைய மருந்துகள்: Benz-ac; Coc-c; Kali-bi; Lyc; Pul.

13. மருந்துகளுக்குள் உறவு/ஒற்றுமை (Relationship):

 

Ø  குறைந்த அளவிலான இருமல் மற்றும் இதயக்கோளாறுகள் , குறிப்பாக புரையோடிய புண்ணின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் : Calc-P., Sil.

 

Ø  மூட்டுவலி மற்றும் வாத நோய் பாதிப்புகள், குறிப்பாக சிறுநீர் பிரச்சனைகளுடன் இருக்கும்: Benz-Ac., Calc., Colch., Graph., Led., Lyc., Nit-Ac., Sep., Sulph.

 

Ø  சிறுநீர் கழிக்காதபோது சிறுநீர் வெளியேறும் குழாயில் எரிச்சல் ஏற்படும்: Asaf., Bry., Clem., Graph., Merc., Staph., Sulph., Thuj.

 

Ø  சிறுநீரக வலி ( RENAL COLIC) : Lyc., Nux-V., Ocim., Puls., Sars., Thuj.

 

Ø  இடுப்பு வாத நோய் ( LUMBAGO): Calc., Calc-F., Kali-P., Lyc., Nat-M., Nux-V., Rhus-T., Sulph.

 

Ø  சிறுநீரகத்தின் பகுதியில் முதுகுவலி; உட்கார்ந்து இருக்கும் போதும்  அல்லது படுத்திருக்கும் போதும் மற்றும் காலையில் படுக்கையில் இருக்கும் போதும் மோசமடையும்: Calc., Lyc., Sars.

 

Ø  விரைநாண் மற்றும் விரைகளின்  நரம்புகளில் சுண்டியிழுக்கும் வலி: Clem., Dios., Ox-Ac., Puls.

 

Ø  பெண்களுக்கு உடலுறவின் மீது  விருப்பம் குறைந்திருக்கும்: Agn., Bar-C., Caust., Ferr., Graph., Helon., Lyc., Nat-M.

 

Ø  யோனியில் எரிச்சல் மற்றும் புண்: Apis, Canth., Kreos., Merc-C., Nit-Ac., Sulph.

 

Ø  உடலுறவின் போது யோனியில் விட்டுவிட்டுத் தாக்கும் வலி ( VAGINISMUS): Acon., Bell., Cact., Canth., Ferr-P., Ham., Ign., Lyc., Mag-P., Nat-M., Nux-V., Plat., Plb., Puls., Sil.

 

Ø  உடலுறவின் போது  யோனியில் வெட்டு வலி ஏற்படும்: FERR.

 

Ø  புத்துணர்ச்சி தராத தூக்கம்: NUX-V.

 

Ø  மிகக் குறைந்த உழைப்பில் இருந்தும்  எளிதாக வியர்க்கிறது : Agar., Calc., Chin., Ferr., Graph., Iod., Kali-C., Kali-P., Lyc., Nat-C., Psor.

 

Ø  புலப்பெயர்ச்சியடையும் அல்லது அலைந்து பாயும் கீல்வாதம்: PULS., FORM., KALI-BI.

 

14.  முக்கியமான ஒற்றை அல்லது தனியான குறிமொழிகள்.

 

Mind; ambition; ambitious; suppression, from sexual

Mind; aversion; oneself, to; woman, being a

Mind; death; desires; menses, during

Mind; delusions, imaginations; dirt, dirty; he is, she is; sexuality, about his

Mind; delusions, imaginations; enlarged; objects are; twilight agg.

Mind; delusions, imaginations; enlarged; persons are; twilight, at

Mind; delusions, imaginations; prostitute; mother is a

Mind; delusions, imaginations; pulled, he is; directions, in all

Mind; work; impossible; interruption, by least

Abdomen; pain; burning, smarting; every day returning

Abdomen; pain; electric, like; spleen region

Abdomen; pain; liver region; extending to; directions, all

Rectum; fistulae; itching

Stool; watery; jaundice, in

Kidneys; calculi, stones; gallstones, with

Kidneys; pain; extending; directions, in all

Kidneys; pain; radiating; extending; bladder, to

Kidneys; pain; stitching; region of; extending to; directions, all

Kidneys; pain; tearing; left

Kidneys; pain; tearing; right

Kidneys; pain; tearing; rising from stooping agg.

Kidneys; pain; tearing; standing amel.

Urethra; bubbling sensation; sitting, while

Urine; sediment; mealy; red

Male; coition; enjoyment; feeble and too short, too

Male; enlarged; prostate gland; pressure in perineum, with

Male; hardness; penis; old men, in

Male; numbness, insensibility; penis; prepuce

Male; numbness, insensibility; urination, after

Female; pain; burning, smarting; vagina; extending to; labia

Female; pain; cutting; coition, during

Female; pain; stitching; vagina; coition, during

Back; bubbles, as of; lumbar region; lying and rising from a seat agg.

Generalities; inflammation; kidney complaints, in

Generalities; joints; kidney complaints, in

Generalities; lie down; inclination to; riding agg.

 

( Rubrics source: complete dynamics -web repertory)

 

 

மற்றும் சில மனம் சம்பந்தமான குறிமொழிகள்:

 

Mind; delusions, imaginations; dirt, dirty; he is, she is

Mind; delusions, imaginations; pregnant, is

Mind; delusions, imaginations; prostitute; she is a

Mind; interruption; ailments from, agg.

Mind; introverted

Mind; malicious, vindictive

Mind; quarreling; ailments from, agg.

Mind; raped, being, agg., ailments from

Mind; sentimental

Mind; suicidal disposition; menses; during

Mind; thoughts; vanishing, unable to think; interrupted, when

Mind; work; mental; impossible

 

( Rubrics source: complete dynamics -web repertory)

 

சு.கருப்பையா

மதுரை.

No comments:

Post a Comment