§
104
When
the totality of the symptoms that specially mark and distinguish the case of
disease or, in other words, when the picture of the disease, whatever be its
kind, is once accurately sketched, -90
the most difficult part of the task is accomplished. The physician has then the
picture of the disease, especially if it be a chronic one, always before him to
guide him in his treatment; he can investigate it in all its parts and can pick
out the characteristic symptoms, in order to oppose to these, that is to say,
to the whole malady itself, a very similar artificial morbific force, in the
shape of a homoeopathically chosen medicinal substance, selected from the lists
of symptoms of all the medicines whose pure effects have been ascertained. And
when, during the treatment, he wishes to ascertain what has been the effect of
the medicine, and what change has taken place in the patient's state, at this
fresh examination of the patient he only needs to strike out of the list of the
symptoms noted down at the first visit those that have become ameliorated, to
mark what still remain, and add any new symptoms that may have supervened.
Foot Note-90: The old school physician gave himself very
little trouble in this matter in his mode of treatment. He would not listen to
any minute detail of all the circumstances of his case by the patient; indeed,
he frequently cut him short in his relation of his sufferings, in order that he
might not be delayed in the rapid writing of his prescription, composed of a
variety of ingredients unknown to him in their true effects. No allopathic
physician, as has been said, sought to learn all the circumstances of the
patient's case, and still less did he make a note in writing of them. On seeing
the patient again several days afterwards he recollected nothing concerning the
few details he had heard at the first visit (having in the meantime seen so
many other patients laboring under different affections); he had allowed
everything to go in at one ear and out at the other. At subsequent visits he
only asked a few general questions, went through the ceremony of feeling the
pulse at the wrist, looked at the tongue, and at the same moment wrote another
prescription, on equally irrational principles, or ordered the first one to be
continued (in considerable quantities several times a day), and, with a
graceful bow, he hurried off to the fiftieth or sixtieth patient he had to
visit, in this thoughtless way, in the course of that forenoon. The profession
which of all others requires actually the most reflection, a conscientious,
careful examination of the state of each individual patient and a special
treatment founded thereon, was conducted in this manner by persons who called
themselves physicians, rational practitioners. The result, as might naturally
be expected, was almost invariably bad; and yet patients had to go to them for
advise, partly because there were none better to be had, partly for fashion's
sake.
ஆர்கனான் மணிமொழி-104
§ 104
நோயாளியை
நலப்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும்
சிகிச்சையை மேலும் வழிநடத்தி
செல்வதற்கும் நோயின் படத்தை குறித்துவைத்துக் கொள்வதின் பயன்பாடு.
குறிப்பு:
நோய்வாய்ப்பட்ட நிலையின் விசாரணையைப் பற்றி பழைய பள்ளி மருத்துவர்கள் எவ்வாறு
செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நோய் வரலாற்றில் அதன்
ஒட்டுமொத்த அறிகுறிகளும் வெளிப்பட்டு அது
சரியாக அடையாளம் காணப்படும்போது அல்லது வேறுவிதமாகக் கூறினால், அது எவ்வகைப்பட்ட
நோயாக இருந்தாலும், அந்த நோயின் வடிவத்தை துல்லியமாக
கண்டறிந்து வரையப்பட்டுவிடுமாயின் , -90 நமது பணியின் மிகவும் கடினமான பகுதி
நிறைவேறிவிட்டது என்பதாகும் . அந்த மருத்துவருக்கு தன்
முன்னே உள்ள ஒரு நோயின் உருவம் , குறிப்பாக அது ஒரு நாட்பட்ட நோயாக இருக்கும் போது , எப்போதும் அவரது சிகிச்சைக்கு
வழிகாட்டியாக அமைகிறது ; அவர் அதன்
அனைத்து பகுதிகளிலும் அலசி ஆராய்ந்து
அவற்றின் தனிச்சிறப்பான
அறிகுறிகளைத் தனியே குறித்து
வைத்துக் கொண்டு , அவற்றை எதிர்ப்பதற்காக, அதாவது, முழு நோயிற்கும் பொருத்தமான
ஒரு மருந்தை , மருந்துகளின்
தூய்மையான விளைவுகளை ஏற்கனவே
கண்டறியப்பட்ட அனைத்து மருந்துகளின் அறிகுறிகளின் பட்டியலிலிருந்து ,
ஹோமியோபதி முறைக்கு ஏற்றவாறு
தேர்ந்தெடுக்கப்படும் அம்மருந்துப் பொருளே
அந்த நோயிற்கு மிகவும் ஒத்துள்ள
செயற்கை நோயாற்றல் (நலமாக்கும் மருந்து) ஆகிறது. அதன் பிறகு , அந்த நோயாளி மீண்டும்
சிகிச்சைக்கு வரும் போது , மருந்தின் விளைவு என்ன, நோயாளியின் நிலையில்
என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, என்னென்ன உடல் குறிகள்
தணிந்துள்ளன என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும் , இந்த புதிய பரிசோதனையில் நோயாளி முதலில் வந்த
போது குறித்துவைத்துக் கொள்ளப்பட்ட அறிகுறிகளின்
பட்டியலிலிருந்து தற்போது தணிந்து விட்டிருக்கின்றவற்றை அடித்து ஒதுக்கி விட
வேண்டும் , இன்னும் எஞ்சியிருக்கிற
அறிகுறிகளைக் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும் , மற்றும் புதியவைகளாக இடையே
தோன்றியுள்ள அறிகுறிகளையம் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
அடிக்குறிப்பு-90:
பழைய மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் தனது சிகிச்சையின் போது இந்த விஷயத்தில் சற்றும் அலட்டிக் கொள்வதில்லை
. அவருடைய நோயாளி , தான் நோயுற்ற நிலையில் சில நுணுக்கமான விபரங்களைக் கூறும் போதும் அவர் அதை காது கொடுத்துக் கேட்க
மாட்டார்; உண்மையில், அவர் தனது துன்பங்களை விளக்கிக் கூற முற்படும் போது ,
அம்மருத்துவர் அதைத் தடுத்து நிறுத்தியும் விடுவார், ஏனென்றால் , அவருக்குத் தெரியாத உண்மையான
விளைவுகளைக் கொண்ட மருந்துப்பொருள்களை உள்ளடக்கியதும் பலவகையான மூலப்பொருள்களை
கொண்டதுமான ஒரு மருத்துவக்குறிப்பை
விரைவாக எழுதுவதில் தாமதிக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறார். எந்தவொரு ஆங்கில (அல்லியல்) மருத்துவரும், நோயாளியின் நோய்வரலாற்றின் அனைத்து சூழ்நிலைகளிலும் நுணுக்கமான செய்திகள்
எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முற்படுவதில்லை
, அல்லது பல்வேறு வகைப்பட்ட அக்குறிப்புகளை அவர் மிகக் குறைவாகவே எழுதிக்
கொள்கிறார், என்று சொல்லலாம். அவர் அந்த நோயாளியைப் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்த்தபோது,
முதல் வருகையின் போது அவர் கூறிய சில
விவரங்களைப் பற்றி அவர் எதுவும் நினைவுபடுத்திக்
கொள்வதில்லை (இதற்கிடையில்
வெவ்வேறு தொல்லைகள் கொண்ட பல்வேறு நோயாளிகளை
பார்க்க வெண்டோயிருந்ததால் ); அவை எல்லாவற்றையும் ஒரு காதில் வாங்கி
மற்றொன்றின் வழியாக வெளியே செல்லவிட்டு
முற்றிலும் மறந்து விடுபவராக இருக்கிறார் . அதற்குப் பிறகு
அடுத்தடுத்த வருகைகளில் அவர் சில பொதுவான கேள்விகளை மட்டுமே கேட்பதும் ,
மணிக்கட்டைப் பிடித்து நாடித்துடிப்பை பார்ப்பதும் , நாக்கை நீட்டச்சொல்லிப்
பார்ப்பதும் , அதே நேரத்தில் முன்பு
எழுதிய மருத்துவக் குறிப்பைப் போலவே ,
பகுத்தறிவிற்கு ஒவ்வாத கொள்கையின் படி
, அல்லது முதல் மருத்துவக்குறிப்பையே தொடர்ந்து பின்பற்றுமாறு
கூறுவதும் (கணிசமான அளவுகளில் ஒரு
நாளைக்கு பல முறை சாப்பிடுமாறு ), மற்றும்,
வழக்கமான செயலுக்குப் பின்பு வணங்கி விடைபெறும் அம்மருத்துவர் , அந்த முற்பகல்
வேளையில் , சிறிதும் சிந்தனையற்ற
வழியில் அவர் பார்வையிட வேண்டிய ஐம்பதாவது
அல்லது அறுபதாவது நோயாளியைப் பார்க்க
விரைந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் .
ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளியின் நிலையை மனசாட்சியுடன், கவனமாக பரிசோதித்து
பார்த்தும் மற்றும் அதன்படி ஒரு தனிச்சிறப்பான மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும் ஆகிய
மருத்துவத்தொழில் இவ்வாறு நடந்து கொள்பவர்களால் நடத்தப்படுவதாக உள்ளது.
அவர்கள் தங்களைத் தாங்களே மருத்துவர்கள் என்றும் , பகுத்தறிவு
பயிற்சியாளர்கள் என்றும் அழைத்துக்
கொள்கிறார்கள் . இதன் விளைவாக, அவர்கள் தரும் சிகிச்சையின் பலன்
இயற்கையாகவே, எப்போதும் போல் பெரும்பாலும் கெடுதலாகவே முடிகிறது ; ஆயினும்
நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்காக அவர்களையே நாடிச் செல்கிறார்கள் ,
ஏனென்றால் அவர்களை விட்டால் வேறு
சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பது ஒரு பகுதியான காரணமாகவும் , பகட்டான
நாகரீக வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பது இன்னொரு பகுதியான காரணமாகவும் இருக்கிறது .
No comments:
Post a Comment