In
the same manner as has here been taught relative to the epidemic disease, which
are generally of an acute character, the miasmatic chronic maladies, which, as
I have shown, always remain the same in their essential nature, especially the
psora, must be investigated, as to the whole sphere of their symptoms, in a
much more minute manner than has ever been done before, for in them also one
patient only exhibits a portion of their symptoms, a second, a third, and so
on, present some other symptoms, which also are but a (dissevered, as it were),
portion of the totality of the symptoms which constitute the entire extent of
this malady, so that the whole array of the symptoms belonging to such a
miasmatic, chronic disease, and especially to the psora, can only be
ascertained from the observation of very many single patients affected with
such a chronic disease, and without a complete survey and collective picture of
these symptoms the medicines capable of curing the whole malady
homoeopathically (to wit, the antipsorics) cannot be discovered; and these
medicines are, at the same time, the true remedies of the several patients
suffering from such chronic affections.
ஆர்கனான் மணிமொழி-103
§ 103
நாட்பட்ட நோய்களுக்கான
அடிப்படை காரணங்கள் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும் மற்றும் சொறி-சிரங்கு
நோய்மூலத்தின் தலைசிறந்த முழுமையான
உருவப்படத்தையும் காட்சிப்படுத்த வேண்டும்.
பொதுவாக
திடீரென்று தோன்றும் குணமுள்ள, பெருவாரியாக தொற்றி பரவும் கொள்ளை நோய்களைப் பற்றி கற்பித்தவாறு, நோய்மூலத்தை உள்ளடக்கிய எல்லா நாட்பட்ட
நோய்களும் , நான் ஏற்கனவே விவரித்துள்ளவாறு , அவைகளிலும் முக்கியமாக சொறி-சிரங்கு நோய்மூலத்தின் அடிப்படை இயல்புகள்
எப்போதும் மாறாத தன்மையுடனேயே இருக்கின்றன, அக்குறிகளின் மொத்தப் பரப்பையும் , இதுவரை செய்யப்பட்டதைக் காட்டிலும்
மிகவும் நுணுக்கமான முறையில் அலசி ஆராயப்பட வேண்டும். ஏனெனில் கொள்ளை நோய்களில்
காணப்படுவதைப் போலவே நீடிக்கும் வகை நோய்களிலும் ஒரு நோயாளி அந்நோய்களின் பல
குறிகளில் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார் .
இரண்டாவதுவும் , மூன்றாவதாகவும் என்று ஏனைய அடுத்தடுத்த நோயாளிகளும் அவற்றின் மற்ற சில அறிகுறிகளை
வெளிப்படுத்துகின்றனர் . அதாவது , அவை ஒட்டுமொத்தக்
குறிகளின் தனித்தனி பகுதியாக அமைந்து (ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலும், அது போல ),
அவை அனைத்துமே அந்த நோயின் முழுஉருவப்படத்தைக் கொடுக்கிறது. ஆதலால் எல்லாப்
பகுதிகளையும் ஒன்று சேர்த்துப்பார்த்தால்தான் நோய் மூலத்தினால் உண்டாக்கப்படும்,
நாட்பட்ட நோய்களின் முழு உருவத்தையும்,
குறிப்பாக சொறி-சிரங்கு மூலத்தின் பாதிப்பை, அந்த நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு
ஆளாகியுள்ள மிகப்பல நோயாளிகளையும் தனித்தனியாக ஊன்றிக் கவனித்து நாம் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும்
. மேலும்
இந்த அறிகுறிகளின் முழுமையான கணக்கெடுப்பு மற்றும் முழுமொத்தமான உருவப்படம்
இல்லாமல் முழு நோயையும் ஹோமியோபதி முறையில் நலப்படுத்தும் திறன் கொண்ட மருந்துகளை
(விவேகத்துடன் , சொறி-சிரங்கு நோயெதிர்ப்பு )
கண்டுபிடிக்கமுடியாது ; அதே நேரத்தில், இந்த மருந்துகளே , இத்தகைய
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பல
நோயாளிகளுக்கு உண்மையான நோய் தீர்க்கும் மருந்துகளாக இருக்கிறது.
No comments:
Post a Comment