Saturday, 12 September 2020

ஆர்கனான் மணிமொழி-§ 108

 § 108

 

There is, therefore, no other possible way in which the peculiar effects of medicines on the health of individuals can be accurately ascertained - there is no sure, no more natural way of accomplishing this object, than to administer the several medicines experimentally, in moderate doses, to healthy persons, in order to ascertain what changes, symptoms and signs of their influence each individually produces on the health of the body and of the mind; that is to say, what disease elements they are able and tend to produce-91, since, as has been demonstrated (§§ 24-27), all the curative power of medicines lies in this power they possess of changing the state of man's health, and is revealed by observation of the latter.

 

Foot Note- 91:  Not one single physician, as far as I know, during the previous two thousand five hundred years, thought of this so natural, so absolutely necessary and only genuine mode of testing medicines for their pure and peculiar effects in deranging the health of man, in order to learn what morbid state each medicine is capable of curing, except the great and immoral Albrecht von Haller. He alone, besides myself, saw the necessity of this (vide the Preface to the Pharmacopoeia Helvet, Basil, 1771, fol., p.12); Nempe primum in corpore sano medela tentanda est, sine peregrina ulla miscela; odoreque et sapore ejus exploratis, exigua illiu dosis ingerenda et ad ommes, quae inde contingunt, affectiones, quis pulsus, qui calor, quae respiratia, quaenam excretiones, attendum. Inde ad ductum phaenomenorum, in sano obviorum, transeas ad experimenta in corpore aegroro, etc. [In truth a remedy must first be tried on a healthy body without any foreign admixture. Once one has tested its odor and taste, one should take a small portion of the dose and pay attention to any effects which ensue: what are the pulse rate, the temperature, the respiration rate, the excretions. After observation of the succession of clear effects in a healthy body, one may proceed to trials on a sick one, etc.] But no one, not a single physician, attended to or followed up this invaluable hint.

 

ஆர்கனான் மணிமொழி-§ 108

 

ஆகையால், அங்கே, தனிநபர்களின் உடல்நலத்தில்  மருந்துகள் உண்டாக்கும் விசித்திரமான விளைவுகளைத் துல்லியமாகக் கண்டறிய வேறு எந்த வழியும் இல்லை -  இந்த நோக்கத்தை  நிறைவேற்றுவதற்காக  உடல்   மற்றும் மனநலம் ஆகியவற்றில்    அம்மருந்துகள்  ஒவ்வொன்றும் தனித்தனியாக உண்டாக்கும்  மாற்றங்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றின் அடையாளங்கள் ஆகியவற்றைக்  கண்டறியும் பொருட்டு, ஆரோக்கியமான  மனிதர்களிடத்தில்,  பல மருந்துகளை பரிசோதனையாக, நடுத்தரமான அளவில்  ,   செய்முறை ஆய்வாக தருவதை விட,  நிச்சயமாக, உறுதியானதும் , இயற்கையானதுமான வழி வேறு  எதுவுமில்லை; அதாவது, அவை எந்த நோய்க் கூறுகளை உருவாக்கக்கூடியவை மற்றும் உற்பத்தி செய்ய முனைகின்றன -91,  என்பது பற்றி ஏற்கனவே  மணிமொழிகள் 24 முதல் 27 வரை (§§ 24-27) விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது  , எனவே, மருந்துகளின் நலப்படுத்தும் ஆற்றல் அனைத்தும் அவை  மனிதனின் உடல் நலத்தில்  மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றலைப் பொறுத்தே  உள்ளன,   மற்றும் பின் கூறியவற்றை மிகவும் நுட்பமாக கவனித்துப் பார்ப்பதன் மூலம்  அது வெளிப்படுகிறது.

 

அடிக்குறிப்பு-91:


கடந்த  இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளில், எனக்குத் தெரிந்த வரை ,  ஒரு மருத்துவர் கூட, இந்த  இயற்கையை ஒத்த , மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிற ,     மருந்துகளை ஆய்வு செய்வதற்கான ஒரு உண்மையான வழியினை . மற்றும் இந்த வழியில் மட்டுமே  ஆரோக்கியமான மனிதனிடத்தில் மருந்துகளைக் கொடுத்து அது மனிதனின் உடல்நலத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மருந்தின்  தூய்மையான மற்றும் விசித்திரமான ஆற்றலை   அறிந்து கொள்ளும்  உண்மையான முறை என்று நினைத்ததில்லை. இதற்கு விதிவிலக்காக மாமனிதரும் மற்றும் அழியாப் புகழ்பெற்றவருமான  ஆல்ப்ரெக்ட்  வான் ஹேலர் [ Albrecht von Haller, Switzerland-(1708-1777)] இருக்கிறார்.   என்னைத் தவிர, அவர் மட்டுமே இம்முறையின்  அவசியத்தைக் அறிந்திருந்தார் (vide the Preface to the Pharmacopoeia Helvet, Basil, 1771, fol., p.12). அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார், " உண்மையில் ஒரு மருந்தை    வேறு எந்தவொரு கலப்பு மருந்தும் இல்லாமல்  ஆரோக்கியமான உடலில் முதலில் கொடுத்துப்பார்க்க வேண்டும். ஒருவர் அதன் வாசனையையும் சுவையையும் சோதித்தவுடன், ஒருவர் மருந்தின் ஒரு சிறிய பகுதியை உட்க்கொண்டு , அதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்: குறிப்பாக நாடித்துடிப்பின் விகிதம், உடலின் வெப்பநிலை, சுவாச விகிதம் , உடலின் கழிவுகள் வெளியேறுதல் ஆகியவற்றைக் கவனித்து வரவேண்டும் . ஆரோக்கியமான உடலில் ஏற்படும் தெளிவான விளைவுகளின் தொடர்ச்சியைக் கவனித்தபின், ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் பற்றிய சோதனைகளுக்குச் செல்லலாம், மற்றும் சில  .  ஆனால்,  இந்த விலைமதிப்பற்ற குறிப்பை யாரும், ஒரு மருத்துவர் கூட கவனத்தில் எடுத்துக்  கொள்ளவில்லை அல்லது பின்பற்றவில்லை

Wednesday, 9 September 2020

ஆர்கனான் மணிமொழி-§ 107

 

§ 107

 

If, in order to ascertain this, medicines be given to sick persons only, even though they be administered singly and alone, then little or nothing precise is seen of their true effects, as those peculiar alterations of the health to be expected from the medicine are mixed up with the symptoms of the disease and can seldom be distinctly observed.

 

ஆர்கனான் மணிமொழி-§ 107

 

ஒரு மருந்தின் ஆற்றலை  ஆராய்ந்து அறிந்து கொள்ள   , நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அம்மருந்துகள் கொடுக்கப்பட்டு ,  அதாவது அம்மருந்தினை  தனியாகவும் மற்றும் ஒரே மருந்தாகவும் தரப்பட்டபோதும்    , அம்மருந்துகளின் உண்மையான விளைவுகளைப் பற்றி சிறிதளவு அல்லது துல்லியமாக எதுவும் காணப்படுவதில்லை, ஏனெனில் அம்மருந்துகள் ஆரோக்கியமான உடலில்  உண்டாக்கக்கூடிய  விசித்திரமான மாற்றங்கள் எல்லாம் அந்த நோயாளியின்  நோயின் அறிகுறிகளுடன்  சேர்ந்து கலந்து விடுகின்றன  மற்றும் அவற்றை அரிதாகவே  வேறுபடுத்தி  அவதானிக்க (உற்று நோக்கி அறிந்து கொள்ள)  முடியும் .

Monday, 7 September 2020

ஆர்கனான் மணிமொழி-§ 106

 

§ 106

 

The whole pathogenetic effect of the several medicines must be known; that is to say, all the morbid symptoms and alterations in the health that each of them is specially capable of developing in the healthy individual must first have been observed as far as possible, before we can hope to be able to find among them, and to select, suitable homoeopathic remedies for most of the natural disease.


ஆர்கனான் மணிமொழி-§ 106

 

 

பல மருந்துகளின் முழுமையான நோய் உருவாக்கும்  ஆற்றலையும் அதன்  விளைவுகளையும் நாம்  கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும்; அதாவது, ஆரோக்கியமாக  உள்ள தனிப்பட்ட  மனிதர்களிடத்தில்  அம்மருந்துகள் ஒவ்வொன்றும் உண்டாக்கியுள்ள  அனைத்து நோய்க்குறிகளையும்  மற்றும்   உடல்நலத்தில் ஏற்படுத்தும்  மாற்றங்களையும்  முடிந்தவரை முதலிலேயே  நன்கு கவனித்து அவதானிக்கப்பட்டிருக்க வேண்டும், அப்போது தான் அவற்றிலிருந்து   பெரும்பாலான இயற்கை நோய்களுக்கு பொருத்தமான ஹோமியோபதி மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் ,  தேர்ந்தெடுக்கவும் முடியும்.

 

ஆர்கனான் மணிமொழி-§ 105

 

§ 105 to § 114 : Preliminaries to be attended to in investgating the pure effects of the medicine on healthy individuals. Primary action. Secondary action.

§ 105

 

The second point of the business of a true physician related to acquiring a knowledge of the instruments intended for the cure of the natural diseases, investigating the pathogenetic power of the medicines, in order, when called on to cure, to be able to select from among them one, from the list of whose symptoms an artificial disease may be constructed, as similar as possible to the totality of the principal symptoms of the natural disease sought to be cured.

 

§ 105 முதல் § 114 வரை: ஆரோக்கியமான நபர்கள் மீது மருந்தின் தூய்மையான விளைவுகளை ஆராய்வதற்கான முன்னேற்பாடுகள் . முதல் நிலை செயல்பாடு . இரண்டாம் நிலை செயல்பாடு .

 

 

 

ஆர்கனான் மணிமொழி-§ 105

 

ஒரு உண்மையான மருத்துவரின் தொழில்முறையான  இரண்டாவது பணியாக இருப்பது  யாதெனில்  இயற்கையான நோய்களை நலப்படுத்துவதற்கான கருவிகளாக ( மருந்துகள்) உள்ளவை  பற்றிய அறிவைப் பெறுதல், மருந்துகளின் நோயுண்டாக்கும் ஆற்றலை ஆராய்வது  ஆகும்,  முறைப்படி , நோயை நலப்படுத்துவதற்கு அவர்  அழைக்கப்படும்போது,  அறிகுறிகளின் அடிப்படையில் செயற்கையாக நோயை உருவாக்கும் பட்டியலிலிருந்து , நலமாக்கப்படவேண்டிய இயற்கையான நோயின் ஒட்டுமொத்தமான  முக்கிய அறிகுறிகளுக்கு  முடிந்தவரை ஒத்திருக்கிற ஒரு மருந்தை தேர்ந்தெடுக்க இயலும்.

 

Friday, 4 September 2020

ஆர்கனான் மணிமொழி-104

 

§ 104

 

When the totality of the symptoms that specially mark and distinguish the case of disease or, in other words, when the picture of the disease, whatever be its kind, is once accurately sketched, -90 the most difficult part of the task is accomplished. The physician has then the picture of the disease, especially if it be a chronic one, always before him to guide him in his treatment; he can investigate it in all its parts and can pick out the characteristic symptoms, in order to oppose to these, that is to say, to the whole malady itself, a very similar artificial morbific force, in the shape of a homoeopathically chosen medicinal substance, selected from the lists of symptoms of all the medicines whose pure effects have been ascertained. And when, during the treatment, he wishes to ascertain what has been the effect of the medicine, and what change has taken place in the patient's state, at this fresh examination of the patient he only needs to strike out of the list of the symptoms noted down at the first visit those that have become ameliorated, to mark what still remain, and add any new symptoms that may have supervened.

 

Foot Note-90:  The old school physician gave himself very little trouble in this matter in his mode of treatment. He would not listen to any minute detail of all the circumstances of his case by the patient; indeed, he frequently cut him short in his relation of his sufferings, in order that he might not be delayed in the rapid writing of his prescription, composed of a variety of ingredients unknown to him in their true effects. No allopathic physician, as has been said, sought to learn all the circumstances of the patient's case, and still less did he make a note in writing of them. On seeing the patient again several days afterwards he recollected nothing concerning the few details he had heard at the first visit (having in the meantime seen so many other patients laboring under different affections); he had allowed everything to go in at one ear and out at the other. At subsequent visits he only asked a few general questions, went through the ceremony of feeling the pulse at the wrist, looked at the tongue, and at the same moment wrote another prescription, on equally irrational principles, or ordered the first one to be continued (in considerable quantities several times a day), and, with a graceful bow, he hurried off to the fiftieth or sixtieth patient he had to visit, in this thoughtless way, in the course of that forenoon. The profession which of all others requires actually the most reflection, a conscientious, careful examination of the state of each individual patient and a special treatment founded thereon, was conducted in this manner by persons who called themselves physicians, rational practitioners. The result, as might naturally be expected, was almost invariably bad; and yet patients had to go to them for advise, partly because there were none better to be had, partly for fashion's sake.

 

ஆர்கனான் மணிமொழி-104

§ 104

 

நோயாளியை நலப்படுத்தும் நோக்கத்திற்காகவும்  மற்றும் சிகிச்சையை மேலும்  வழிநடத்தி செல்வதற்கும்   நோயின் படத்தை  குறித்துவைத்துக் கொள்வதின் பயன்பாடு.

குறிப்பு: நோய்வாய்ப்பட்ட நிலையின் விசாரணையைப் பற்றி பழைய பள்ளி மருத்துவர்கள் எவ்வாறு செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

 

ஒரு நோய்  வரலாற்றில் அதன் ஒட்டுமொத்த  அறிகுறிகளும் வெளிப்பட்டு அது சரியாக அடையாளம் காணப்படும்போது அல்லது வேறுவிதமாகக் கூறினால், அது எவ்வகைப்பட்ட நோயாக  இருந்தாலும், அந்த நோயின் வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து வரையப்பட்டுவிடுமாயின் , ​​-90 நமது பணியின் மிகவும் கடினமான பகுதி நிறைவேறிவிட்டது என்பதாகும் . அந்த மருத்துவருக்கு தன் முன்னே  உள்ள ஒரு நோயின் உருவம்   , குறிப்பாக அது  ஒரு நாட்பட்ட நோயாக  இருக்கும் போது , எப்போதும் அவரது சிகிச்சைக்கு வழிகாட்டியாக அமைகிறது ; அவர்  அதன் அனைத்து பகுதிகளிலும் அலசி ஆராய்ந்து  அவற்றின் தனிச்சிறப்பான  அறிகுறிகளைத் தனியே  குறித்து வைத்துக் கொண்டு  , அவற்றை  எதிர்ப்பதற்காக, அதாவது, முழு நோயிற்கும்  பொருத்தமான   ஒரு  மருந்தை , மருந்துகளின் தூய்மையான விளைவுகளை ஏற்கனவே   கண்டறியப்பட்ட அனைத்து மருந்துகளின் அறிகுறிகளின் பட்டியலிலிருந்து , ஹோமியோபதி முறைக்கு ஏற்றவாறு  தேர்ந்தெடுக்கப்படும் அம்மருந்துப் பொருளே  அந்த நோயிற்கு மிகவும் ஒத்துள்ள  செயற்கை நோயாற்றல் (நலமாக்கும் மருந்து) ஆகிறது. அதன் பிறகு , அந்த நோயாளி மீண்டும்  சிகிச்சைக்கு வரும் போது , ​​மருந்தின் விளைவு என்ன, நோயாளியின் நிலையில் என்னென்ன   மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளது, என்னென்ன உடல் குறிகள் தணிந்துள்ளன  என்பதை  அவர் அறிந்து கொள்ள வேண்டும்  , இந்த புதிய பரிசோதனையில் நோயாளி முதலில் வந்த போது  குறித்துவைத்துக் கொள்ளப்பட்ட அறிகுறிகளின் பட்டியலிலிருந்து தற்போது தணிந்து விட்டிருக்கின்றவற்றை அடித்து ஒதுக்கி விட வேண்டும் ,   இன்னும் எஞ்சியிருக்கிற அறிகுறிகளைக் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும் , மற்றும் புதியவைகளாக இடையே தோன்றியுள்ள  அறிகுறிகளையம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

 

அடிக்குறிப்பு-90:

 

பழைய மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த  மருத்துவர் தனது சிகிச்சையின் போது  இந்த விஷயத்தில் சற்றும் அலட்டிக் கொள்வதில்லை . அவருடைய நோயாளி , தான் நோயுற்ற நிலையில் சில நுணுக்கமான விபரங்களைக்  கூறும் போதும் அவர் அதை காது கொடுத்துக் கேட்க மாட்டார்; உண்மையில், அவர் தனது துன்பங்களை விளக்கிக் கூற முற்படும் போது , அம்மருத்துவர் அதைத் தடுத்து நிறுத்தியும் விடுவார்,  ஏனென்றால் , அவருக்குத் தெரியாத உண்மையான விளைவுகளைக் கொண்ட மருந்துப்பொருள்களை உள்ளடக்கியதும் பலவகையான மூலப்பொருள்களை கொண்டதுமான ஒரு மருத்துவக்குறிப்பை  விரைவாக எழுதுவதில் தாமதிக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறார். எந்தவொரு ஆங்கில (அல்லியல்) மருத்துவரும், நோயாளியின் நோய்வரலாற்றின்  அனைத்து சூழ்நிலைகளிலும் நுணுக்கமான செய்திகள் எல்லாவற்றையும்  கற்றுக்கொள்ள முற்படுவதில்லை , அல்லது பல்வேறு வகைப்பட்ட அக்குறிப்புகளை அவர் மிகக் குறைவாகவே எழுதிக் கொள்கிறார், என்று சொல்லலாம். அவர் அந்த நோயாளியைப்  பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்த்தபோது, ​​முதல் வருகையின் போது அவர் கூறிய  சில விவரங்களைப் பற்றி அவர் எதுவும் நினைவுபடுத்திக்  கொள்வதில்லை  (இதற்கிடையில் வெவ்வேறு தொல்லைகள் கொண்ட பல்வேறு   நோயாளிகளை  பார்க்க வெண்டோயிருந்ததால் ); அவை எல்லாவற்றையும் ஒரு காதில் வாங்கி மற்றொன்றின் வழியாக  வெளியே செல்லவிட்டு முற்றிலும் மறந்து விடுபவராக இருக்கிறார் . அதற்குப் பிறகு அடுத்தடுத்த வருகைகளில் அவர் சில பொதுவான கேள்விகளை மட்டுமே கேட்பதும் , மணிக்கட்டைப் பிடித்து நாடித்துடிப்பை பார்ப்பதும் , நாக்கை நீட்டச்சொல்லிப் பார்ப்பதும்  , அதே நேரத்தில் முன்பு எழுதிய மருத்துவக் குறிப்பைப் போலவே ,  பகுத்தறிவிற்கு ஒவ்வாத கொள்கையின் படி   , அல்லது முதல் மருத்துவக்குறிப்பையே தொடர்ந்து பின்பற்றுமாறு கூறுவதும்   (கணிசமான அளவுகளில் ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுமாறு ), மற்றும், வழக்கமான செயலுக்குப் பின்பு வணங்கி விடைபெறும் அம்மருத்துவர் , அந்த முற்பகல் வேளையில்  , சிறிதும் சிந்தனையற்ற வழியில்  அவர் பார்வையிட வேண்டிய ஐம்பதாவது அல்லது அறுபதாவது நோயாளியைப் பார்க்க  விரைந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் .  ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளியின் நிலையை மனசாட்சியுடன், கவனமாக பரிசோதித்து பார்த்தும்  மற்றும் அதன்படி  ஒரு தனிச்சிறப்பான மருத்துவச்  சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும் ஆகிய மருத்துவத்தொழில் இவ்வாறு நடந்து கொள்பவர்களால் நடத்தப்படுவதாக உள்ளது. அவர்கள்  தங்களைத் தாங்களே  மருத்துவர்கள் என்றும் , பகுத்தறிவு பயிற்சியாளர்கள் என்றும்  அழைத்துக் கொள்கிறார்கள் . இதன் விளைவாக, அவர்கள் தரும் சிகிச்சையின் பலன் இயற்கையாகவே, எப்போதும் போல் பெரும்பாலும் கெடுதலாகவே முடிகிறது ;  ஆயினும்  நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்காக அவர்களையே நாடிச் செல்கிறார்கள் , ஏனென்றால் அவர்களை விட்டால் வேறு  சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பது ஒரு பகுதியான காரணமாகவும் , பகட்டான நாகரீக வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பது   இன்னொரு பகுதியான காரணமாகவும் இருக்கிறது .

ஆர்கனான் மணிமொழி-103

 

§ 103

 

In the same manner as has here been taught relative to the epidemic disease, which are generally of an acute character, the miasmatic chronic maladies, which, as I have shown, always remain the same in their essential nature, especially the psora, must be investigated, as to the whole sphere of their symptoms, in a much more minute manner than has ever been done before, for in them also one patient only exhibits a portion of their symptoms, a second, a third, and so on, present some other symptoms, which also are but a (dissevered, as it were), portion of the totality of the symptoms which constitute the entire extent of this malady, so that the whole array of the symptoms belonging to such a miasmatic, chronic disease, and especially to the psora, can only be ascertained from the observation of very many single patients affected with such a chronic disease, and without a complete survey and collective picture of these symptoms the medicines capable of curing the whole malady homoeopathically (to wit, the antipsorics) cannot be discovered; and these medicines are, at the same time, the true remedies of the several patients suffering from such chronic affections.

 

ஆர்கனான் மணிமொழி-103

§ 103

 

நாட்பட்ட நோய்களுக்கான அடிப்படை காரணங்கள் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும் மற்றும் சொறி-சிரங்கு நோய்மூலத்தின் தலைசிறந்த முழுமையான  உருவப்படத்தையும் காட்சிப்படுத்த வேண்டும்.

 

 

பொதுவாக திடீரென்று தோன்றும் குணமுள்ள,  பெருவாரியாக தொற்றி பரவும் கொள்ளை நோய்களைப் பற்றி கற்பித்தவாறு,  நோய்மூலத்தை உள்ளடக்கிய எல்லா நாட்பட்ட நோய்களும் , நான் ஏற்கனவே விவரித்துள்ளவாறு , அவைகளிலும் முக்கியமாக சொறி-சிரங்கு நோய்மூலத்தின்  அடிப்படை இயல்புகள் எப்போதும் மாறாத தன்மையுடனேயே இருக்கின்றன, அக்குறிகளின்  மொத்தப் பரப்பையும் , இதுவரை செய்யப்பட்டதைக் காட்டிலும் மிகவும் நுணுக்கமான முறையில் அலசி ஆராயப்பட வேண்டும்.  ஏனெனில் கொள்ளை நோய்களில் காணப்படுவதைப் போலவே நீடிக்கும் வகை நோய்களிலும் ஒரு நோயாளி அந்நோய்களின் பல குறிகளில் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார் . இரண்டாவதுவும் , மூன்றாவதாகவும் என்று  ஏனைய அடுத்தடுத்த  நோயாளிகளும் அவற்றின் மற்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர் . அதாவது , அவை ஒட்டுமொத்தக் குறிகளின் தனித்தனி பகுதியாக அமைந்து (ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலும், அது போல ), அவை அனைத்துமே அந்த நோயின் முழுஉருவப்படத்தைக் கொடுக்கிறது. ஆதலால் எல்லாப் பகுதிகளையும் ஒன்று சேர்த்துப்பார்த்தால்தான் நோய் மூலத்தினால் உண்டாக்கப்படும், நாட்பட்ட  நோய்களின் முழு உருவத்தையும், குறிப்பாக சொறி-சிரங்கு மூலத்தின் பாதிப்பை, அந்த நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள மிகப்பல நோயாளிகளையும் தனித்தனியாக ஊன்றிக் கவனித்து   நாம் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் . மேலும் இந்த அறிகுறிகளின் முழுமையான கணக்கெடுப்பு மற்றும் முழுமொத்தமான உருவப்படம் இல்லாமல் முழு நோயையும் ஹோமியோபதி முறையில் நலப்படுத்தும் திறன் கொண்ட மருந்துகளை (விவேகத்துடன் , சொறி-சிரங்கு நோயெதிர்ப்பு )  கண்டுபிடிக்கமுடியாது ; அதே நேரத்தில், இந்த மருந்துகளே , இத்தகைய நாட்பட்ட நோயினால்  பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு உண்மையான நோய் தீர்க்கும் மருந்துகளாக இருக்கிறது.