Those
diseases are inappropriately named chronic, which persons incur who expose
themselves continually to avoidable noxious influences, who are in the habit of
indulging in injurious liquors or aliments, are addicted to dissipation of many
kinds which undermine the health, who undergo prolonged abstinence from things
that are necessary for the support of life, who reside in unhealthy localities,
especially marshy districts, who are housed in cellars or other confined
dwellings, who are deprived of exercise or of open air, who ruin their health by
overexertion of body or mind, who live in a constant state of worry, etc. These
states of ill-health, which persons bring upon themselves, disappear
spontaneously, provided no chronic miasm lurks in the body, under an improved
mode of living, and they cannot be called chronic diseases.
ஆர்கனான் மணிமொழி-77
§ 77
நாள்பட்ட நோய்கள் என்று தவறாக
அழைக்கப்படும் நோய்கள்
தவிர்க்கக்கூடிய நச்சுத்தன்மை
வாய்ந்த தாக்கங்களுக்கு ஒருவர் தொடர்ந்து
தம்மைத் தாமே ஆட்படுத்திக் கொள்ளுதல் ,
தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் அல்லது குடிப்பழக்கத்திற்கு தம்மைத் தாமே
ஈடுபடுத்திக் கொள்ளுதல் , உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பல வகையான ஒழுக்கம் கெட்ட வாழ்க்கைக்கு அடிமையாகி விடுதல் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத துணையாக உள்ள பொருள்களை நீண்டகாலமாக விலக்கிவிடுதல் , ஆரோக்கியமற்ற இடங்களில் , குறிப்பாக
சதுப்புநில மாவட்டங்கள் , பாதாள அறைகள் (நிலவறை)
அல்லது காற்றோட்டம் இல்லாத குடியிருப்புகள்
போன்ற இடங்களில் குடியிருந்து வருதல் , உடற்பயிற்சி அல்லது திறந்த வெளிக்காற்று இல்லாமை
, உடல் அல்லது மனதை மிகைப்படுத்தி உழைத்து தங்கள் ஆரோக்கியத்தை அழித்துக் கொள்ளுதல்
, மற்றும் நிலையான தீராத கவலையுடன் வாழ்ந்து வருதல் முதலியவற்றிற்கு தம்மை ஆட்படுத்திக் கொள்வதால்
தேடிக்கொள்கிற நோய்கள்
பொருத்தமற்ற முறையில் நாட்பட்ட நோய்கள் என்று
பெயரிடப்பட்டுள்ளன. மக்கள்
தாங்களாகவே தேடிக் கொள்கிற
இத்தகைய உடல்நலக் கேடான இந்த
நிலைகள், அவர்களது மேம்பட்ட வாழ்க்கை
முறையின் கீழ் , அவரது உடலில் வேறெந்த நாட்பட்ட மியாசங்கள் ( நோய் மூலங்கள்)
மறைந்து கிடைக்கவில்லையென்றால் , தன்னிச்சையாக மறைந்துவிடுகின்றன, ஆகவே அவற்றை
நாட்பட்ட நோய்கள் என்று அழைக்க முடியாது.
No comments:
Post a Comment