Only for
natural diseases has the beneficent Deity granted us, in Homoeopathy, the means
of affording relief; but those devastations and maimings of the human organism
exteriorly and interiorly, effected by years, frequently, of the unsparing exercise of a false art,75
with its hurtful drugs and treatment, must be remedied by the vital force
itself (appropriate aid being given for the eradication of any chronic miasm
that may happen to be lurking in the background), if it has not already been
too much weakened by such mischievous acts, and can devote several years to
this huge operation undisturbed. A human healing art, for the restoration to
the normal state of those innumerable abnormal conditions so often produced by
the allopathic non-healing art, there is not and cannot be.
Foot Note-75:
If the patient succumbs, the practiser of such a treatment is in the habit of
pointing out to the sorrowing relatives, at the post-mortem examination, these
internal organic disfigurements, which are due to his pseudo-art, but which he
artfully maintains to be the original incurable disease (see my book, Allopathy: A word of warning to All sick
persons , Leipzig,
Baumgartner [translated in Lesser Writings]).
Those deceitful records, the illustrated works on pathological anatomy, exhibit
the products of such lamentable bungling. Deceased people from the country and
those from the poor of cities who have died without such bungling with hurtful
measures are not opened up through pathological anatomy as a rule. Such
corruption and deformities would not be found in their corpses. From this fact
can be judged the value of the evidence drawn from these beautiful
illustrations as well as of the honesty of these authors and book makers.
ஆர்கனான் மணிமொழி-76
§ 76
§ 76
உயிராற்றல் போதுமான வலிமையுடன்
இருக்கும் போது, அதுவே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை போராடி அடிக்கடி நலப்படுத்துகிறது. அப்போது உண்மையான நோய் ஹோமியோபதி விதிகளுக்கு இணங்க வெளியேற்றப்படுகிறது .
ஹோமியோபதி மருத்துவத்தின் மூலமாக ,
இயற்கை நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும் வழிகளை , நலம் செய்கிற தெய்வம் (இயற்கை ) நமக்கு
கொடுத்துள்ளது ; ஆனால் ஒரு தவறான கலையின்
(அலோபதி
மருத்துவ) இடைவிடாத செயல்களால் , 75 அதன் தீங்கு விளைவிக்கும் மருந்துகளும்
மற்றும் சிகிச்சையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து , மனித உறுப்பமைவின் வெளிப்புறத்திலும் மற்றும்
வெளிப்புறத்திலும் ஏற்படுத்தியுள்ள அழிவுகளையும் மற்றும் உறுப்புப் பாதிப்புகளையும்
உயிராற்றல் தானாகவே போராடி நீக்க வேண்டும்
என்ற நிலை உள்ளது ( பின்னணியில் பதுங்கியிருக்கக் கூடிய எந்தவொரு நாள்பட்ட மியாசத்தையும் முற்றிலும் அழிப்பதற்கு
பொருத்தமான உதவிகளைத் தரவும் வேண்டும் ), இதுபோன்ற
விஷமம் நிறைந்த சிகிச்சையினால் உயிராற்றல்
ஏற்கனவே மிக அதிகமாக
பலவீனமடையவில்லை என்றால், பல ஆண்டுகளாக எந்தப் பாதிப்புமின்றி நலமாக
இயங்கியிருக்கக்கூடும் . குணப்படுத்த இயலாத அந்த அலோபதி சிகிச்சை முறையினால் உருவாக்கப்படும் எண்ணற்ற அசாதாரண நிலைமைகளைப் போக்கி , உடலை
மீண்டும் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்க உரியதாக உள்ள , மனித குலத்தை நலப்படுத்தும் ஒரு மருத்துவக்கலை எதுவும் இல்லை மற்றும்
இருக்க முடியாது.
அடிக்குறிப்பு-75:
சிகிசைக்குப்பின் நோயாளி இறந்துவிட்டால், அத்தகைய சிகிச்சையின் பயிற்சியாளர்
, அந்தப் போலி மருத்துவக்கலையின் விளைவாக இறந்த நோயாளியின் பிரேத பரிசோதனையின்
மூலம் இறந்தவரின் உடலின் உள்ளே ஏற்பட்ட
உள்ளுறுப்புச் சிதைவுகளை சுட்டிக்காட்டி ,
அது தொடக்கத்தில் இருந்தே குணப்படுத்த
முடியாத நோயாக இருந்தது என்று அந்த நோயாளியின் உறவினர்களை நோக்கி திறம்பட கூறுகின்றனர்
{ ஹானிமன் புத்தகத்தை பார்க்கவும் : அலோபதி, எல்லா நோயுற்ற மனிதர்களுக்கும் ஒரு
எச்சரிக்கை வார்த்தை ( லீப்ஜிக், பாம்கார்ட்னர்) [குறைந்த எழுத்துக்களில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது]} . அந்த வஞ்சக பதிவுகள்,
நோயியல் உடற்கூறியல் பற்றிய விளக்கப்படங்கள், இதுபோன்ற புலம்பக்கூடிய அலங்கோலமான
அல்லது குளறுபடியான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. கிராமப்பகுதி அல்லது
நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர்கள்
இறந்தாலும் மற்றும் நகர்புறத்தில் வாழ்பவர்களில் ஏழைகளாக இருப்பவர்கள் இதுபோன்ற குளறுபடிக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகி
இறந்துவிட்டாலும் , அவர்களது உடலை
நோயியல் உடற்கூறியல் மூலம் ஆய்வு செய்வதை விலக்கி விடுவது என்பது ஒரு
விதியாக பின்பற்றப்படுகிறது. இத்தகைய ஊழல்களும் குறைபாடுகளும் அவர்களின்
சடலங்களில் காணப்படாது. இந்த உண்மையிலிருந்து இந்த
அழகான எடுத்துக்காட்டுகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மதிப்பு மற்றும் இந்த
ஆசிரியர்கள் மற்றும் புத்தக தயாரிப்பாளர்களின் நேர்மை ஆகியவற்றை தீர்மானிக்க
முடியும்.
No comments:
Post a Comment