§
57
In
order to carry into practice this antipathic method, the ordinary physician
gives, for a single troublesome symptom from among the many other symptoms of
the disease which he passes by unheeded, a medicine concerning which it is
known that it produces the exact opposite of the morbid symptom sought to be
subdued, from which, agreeably to the fifteen - centuries - old traditional rule
of the antiquated medical school (contraria contrariis) he can expect the
speediest (palliative) relief. He gives large doses of opium for pains of all
sorts, because this drug soon benumbs the sensibility, and administers the same
remedy for diarrhoeas, because it speedily puts a stop to the peristaltic
motion of the intestinal canal and makes it insensible; and also for
sleeplessness, because opium rapidly produces a stupefied, comatose sleep; he
gives purgatives when the patient has suffered long from constipation and
costiveness; he causes the burnt hand to be plunged into cold water, which,
from its low degree of temperature, seems instantaneously to remove the burning
pain, as if by magic; he puts the patient who complains of chilliness and deficiency
of vital heat into warm baths, which warm him immediately; he makes him who is
suffering from prolonged debility drink wine, whereby he is instantly enlivened
and refreshed; and in like manner he employs other opposite (antipathic)
remedial means, but he has very few besides those just mentioned, as it is only
of very few substances that some peculiar (primary) action is known to the
ordinary medical school.
நோயின் குறிகளுக்கு நேர் எதிரான மருந்துகளைக் கொண்ட
அலோபதி மருத்துவமுறையில் சிகிச்சை அளிப்பதற்கு , ஒவ்வொரு நோயிலும் உள்ள பல குறிகளில் ஏராளமான குறிகளைப் புறக்கணித்துவிட்டு
, அதிக வேதனையைத் தரும் ஒரே ஒரு குறியை மட்டும் இலக்காக வைத்து , அதற்கு நேர் எதிரான
செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் குணமுள்ள மருந்தைக் கொடுக்கிறார்கள் இந்த சாதாரண
மருத்துவர்கள் . அதனால், பதினைந்து நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வரும் மூலாதாரமான
விதிகளைக் கொண்ட இந்த பழமையான அலோபதி சிகிச்சையினால் ( எதிருக்கு எதிர் மருத்துவம்) நோய்க்குறிகள் மிக விரைவில் நீங்குமென்று ( வலி தணிக்கும் மருத்துவ முறை) அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உடல் உணர்ச்சிகளைச்
விரைவாக மழுங்கச் செய்யும் சக்தி ஒபியத்திற்கு
இருப்பதைக் தெரிந்து கொண்டு அவர் (அலோபதி மருத்துவர்) எல்லாவித வலிகளுக்கும் அம்மருந்தை அதிக அளவுகளில்
கொடுக்கிறார், அதே மருந்தையே வயிற்றுப்போக்கிற்கும் (பேதி) கொடுக்கிறார் , ஏனென்றால்
குடலின் இயற்கையான முன்னோக்கிச் தள்ளும் சக்தியை மிக விரைவில் போக்கடித்து அதன் உணர்ச்சியை
அடக்கும் குணம் அம்மருந்திற்கு இருப்பதே காரணம்; மற்றும் தூக்கம் இல்லாதவர்களுக்கும்
ஓபியம் கொடுக்கப்படுகிறது, ஏனென்றால் ஓபியம் கொடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் நோயாளிக்கு
உணர்வு மழுக்கம் ஏற்படுகிறது , அதனால் நோயாளி
மயக்கமான தூக்கத்திற்குச் செல்கிறார்; மேலும் அவர்கள் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் மற்றும்
மலத்தை வெளியேற்ற இயலாதவர்களுக்கு பேதி மருந்தைத்
தருகிறார்கள், நெருப்பினால் சூடுபட்ட கையைக் குளிர்ந்த தண்ணீரில்
வைக்கச் சொல்கிறார், அந்த, குளிர்ந்த தண்ணீரின் தட்பவெட்ப அளவு குறைவாக இருப்பதால்
, கையை வைத்தவுடனே மாயாஜாலம் போல் உடனடியாக அந்த எரிச்சல் வலி நீங்கிகிறது; உடல் சில்லென்று
குளிர்ச்சியாக இருப்பதாகவும் மற்றும்
தேவையான சூடும் இல்லை என்றும் முறையீடு செய்யும்
நோயாளிகளை , அவர் சூடான தண்ணீரில் குளிக்கச் சொல்கிறார் , அதனால் நோயாளிகளுக்கு உடனடியாக
உடலில் சூடு உண்டாகிறது; நீண்ட நாட்களாக உடல்
பலவீனமாக ( தளர்ச்சி) இருந்து வரும் நோயாளிக்கு
ஒயினை
(திராட்சைச் சாராயம்) உட்கொள்ளச் சொல்கிறார்,
ஒயினைக் குடித்தவுடனே அந்த நோயாளிக்கு விறுவிறுப்பாகவும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட
உணர்ச்சியும் ஏற்படுகிறது; மற்றும் இவைகளை போன்றே பல நோய்களுக்கு அவற்றிற்கு எதிரான மருந்துகளையே (நேர் எதிர் குணமுள்ள மருந்துகள்)
கொடுக்கிறார், இங்கு கூறப்பட்டவைகளைத் தவிர , தனிச்சிறப்பான ( முக்கியமான ) ஒரு சில
மருந்துப் பொருள்களையே அந்த சாதாரண மருத்துவர்கள் ( அலோபதியர்கள்) உபயோகப்படுத்துகின்றனர்